கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீ 6
நீக்கப்பட்டார் 1
நீக்கி 7
நீக்கியார் 1
நீக்கின் 1
நீக்கும் 2
நீங்க 1
நீங்கலர்-மன் 1
நீங்கா 1
நீங்காமை 2
நீங்கான் 1
நீங்கி 8
நீங்கிய 1
நீங்கியான் 1
நீங்கிவிடும் 1
நீங்கின் 3
நீங்கும் 4
நீட்டம் 1
நீட்டலும் 1
நீட்டி 1
நீடு 4
நீடுக-மன்னோ 1
நீடுவது 1
நீத்த 1
நீத்தார் 2
நீத்தாருள் 1
நீத்து 1
நீந்தல் 1
நீந்தல-மன்னோ 1
நீந்தார் 1
நீந்தி 1
நீந்தும் 1
நீந்துவர் 1
நீப்பர் 1
நீப்பின் 3
நீப்பினும் 1
நீர் 26
நீர்த்து 4
நீர்மை 3
நீர 4
நீரது 2
நீரர் 1
நீரவர் 1
நீரள் 1
நீரார் 1
நீரார்க்கே 1
நீரான் 1
நீரினும் 1
நீரும் 4
நீழலவர் 1
நீழலும் 1
நீள் 2
நீள 1
நீளும் 2
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நீ (6)
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3
நீக்கப்பட்டார் (1)
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10
நீக்கி (7)
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள் 44:6
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10
நீக்கியார் (1)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள் 33:10
நீக்கின் (1)
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும் – குறள் 86:3
நீக்கும் (2)
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
நீங்க (1)
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
நீங்கலர்-மன் (1)
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6
நீங்கா (1)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3
நீங்காமை (2)
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும் – குறள் 16:4
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2
நீங்கான் (1)
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள் 87:4
நீங்கி (8)
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25:6
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51:2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
நீங்கிய (1)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் 10:8
நீங்கியான் (1)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் – குறள் 35:1
நீங்கிவிடும் (1)
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும் – குறள் 60:2
நீங்கின் (3)
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனை பிற – குறள் 50:5
நீங்கின் தெறூஉம் குறுகும்-கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள் 111:4
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5
நீங்கும் (4)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
நீட்டம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5
நீட்டலும் (1)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – குறள் 28:10
நீட்டி (1)
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6
நீடு (4)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2
நீடுக-மன்னோ (1)
ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா – குறள் 133:9
நீடுவது (1)
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7
நீத்த (1)
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்த கடை – குறள் 115:9
நீத்தார் (2)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – குறள் 3:1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10
நீத்தாருள் (1)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33:5
நீத்து (1)
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2
நீந்தல் (1)
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8
நீந்தல-மன்னோ (1)
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
நீந்தார் (1)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10
நீந்தி (1)
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
நீந்தும் (1)
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4
நீந்துவர் (1)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10
நீப்பர் (1)
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9
நீப்பின் (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் – குறள் 37:10
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4
நீப்பினும் (1)
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
நீர் (26)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு – குறள் 22:5
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள் 28:8
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10
கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் – குறள் 107:6
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – குறள் 113:1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7
மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும் – குறள் 117:1
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3
நீர்த்து (4)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து – குறள் 44:1
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3
நீர்மை (3)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2
நீர (4)
மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற – குறள் 4:4
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
நீரது (2)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5
நீரர் (1)
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9
நீரவர் (1)
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
நீரள் (1)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112:1
நீரார் (1)
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5
நீரார்க்கே (1)
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7
நீரான் (1)
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
வாய்மையான் காணப்படும் – குறள் 30:8
நீரினும் (1)
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8
நீரும் (4)
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின் – குறள் 89:1
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது – குறள் 131:9
நீழலவர் (1)
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – குறள் 104:4
நீழலும் (1)
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – குறள் 104:4
நீள் (2)
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2
நீள (1)
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2
நீளும் (2)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7