கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோட்கப்படாத 1
தோட்டார் 1
தோட்டியான் 1
தோணி 1
தோய்வர் 1
தோய்வு 1
தோயாதவர் 1
தோயார் 3
தோல் 2
தோல்வி 1
தோலும் 1
தோழி 1
தோள் 18
தோளும் 1
தோற்றத்தான் 1
தோற்றம் 4
தோற்றவர் 1
தோன்றல் 1
தோன்றலின் 1
தோன்றா 1
தோன்றாமை 1
தோன்றிய 1
தோன்றிவிடும் 1
தோன்றின் 4
தோன்றுக 1
தோன்றும் 4
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தோட்கப்படாத (1)
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள் 42:8
தோட்டார் (1)
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5
தோட்டியான் (1)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
தோணி (1)
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – குறள் 107:8
தோய்வர் (1)
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7
தோய்வு (1)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8
தோயாதவர் (1)
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9
தோயார் (3)
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6
தோல் (2)
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3
தோல்வி (1)
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6
தோலும் (1)
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3
தோழி (1)
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – குறள் 129:4
தோள் (18)
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள் 92:7
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – குறள் 111:3
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6
துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5
தோளும் (1)
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9
தோற்றத்தான் (1)
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
தோற்றம் (4)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – குறள் 13:4
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள் 28:2
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9
தோற்றவர் (1)
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும் – குறள் 133:7
தோன்றல் (1)
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
தோன்றலின் (1)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
தோன்றா (1)
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9
தோன்றாமை (1)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
தோன்றிய (1)
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8
தோன்றிவிடும் (1)
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3
தோன்றின் (4)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96:8
தோன்றுக (1)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
தோன்றும் (4)
ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – குறள் 133:4