கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈக 2
ஈகலான் 1
ஈகை 3
ஈட்டம் 1
ஈட்டலும் 1
ஈட்டிய 1
ஈண்டிய 1
ஈண்டு 7
ஈண்டும் 2
ஈத்து 2
ஈத்தும் 1
ஈதல் 5
ஈதலின் 1
ஈதலே 2
ஈந்தது 1
ஈயப்படும் 1
ஈயாது 1
ஈயும் 1
ஈர் 2
ஈரம் 1
ஈரும் 1
ஈவதே 1
ஈவர் 1
ஈவார் 1
ஈவார்-கண் 1
ஈவாரை 1
ஈன் 1
ஈன்ற 2
ஈன்றல் 1
ஈன்றாள் 2
ஈன்று 2
ஈனும் 10
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஈக (2)
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8
ஈகலான் (1)
அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3
ஈகை (3)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3
ஈட்டம் (1)
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3
ஈட்டலும் (1)
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5
ஈட்டிய (1)
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9
ஈண்டிய (1)
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
ஈண்டு (7)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள் 2:8
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும் – குறள் 27:5
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3
ஈண்டும் (2)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9
ஈத்து (2)
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7
ஈத்தும் (1)
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10
ஈதல் (5)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – குறள் 23:3
சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையா-கடை – குறள் 23:10
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6
ஈதலின் (1)
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
ஈதலே (2)
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4
ஈந்தது (1)
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2
ஈயப்படும் (1)
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2
ஈயாது (1)
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2
ஈயும் (1)
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1
ஈர் (2)
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
ஈரம் (1)
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
ஈரும் (1)
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
ஈவதே (1)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1
ஈவர் (1)
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5
ஈவார் (1)
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2
ஈவார்-கண் (1)
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9
ஈவாரை (1)
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7
ஈன் (1)
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வ செவிலியால் உண்டு – குறள் 76:7
ஈன்ற (2)
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7
ஈன்றல் (1)
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன் சொல் வழங்குவது – குறள் 10:9
ஈன்றாள் (2)
ஈன்றாள் பசி காண்பான்-ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – குறள் 66:6
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – குறள் 93:3
ஈன்று (2)
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள் 10:7
ஈனும் (10)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4:1
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு – குறள் 18:10
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4