Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புகர் 4
புகல் 1
புகல்வது 1
புகல்வதுவே 1
புகல்வோர் 1
புகல 1
புகலிடம் 1
புகவே 1
புகழ் 27
புகழ்தரும் 1
புகழ்ந்து 1
புகழ 1
புகழான் 1
புகழின் 1
புகழுடையான் 1
புகழும் 1
புகழே 1
புகன்ற 1
புகன்று 1
புகுந்தால் 1
புகும் 1
புகை 1
புகையா 1
புடை 2
புடைப்பு 1
புடைபெயர்ந்து 1
புண் 2
புண்ணும் 1
புண்பட்ட 1
புணர் 3
புணர்ந்த 1
புணர்ந்தனமே 1
புணர்ந்து 5
புணரா 1
புணை 2
புணையா 1
புதல்வன் 2
புதல்வியை 1
புதியேன் 1
புது 2
புதை 1
புதைத்துவே 1
புதையார் 1
புய 5
புயத்தான் 1
புயத்து 1
புயம் 1
புயல் 11
புயலாம் 1
புயலே 2
புயலேறு 1
புயற்கு 1
புயன் 6
புரக்கின்ற 3
புரக்கும் 6
புரத்து 1
புரந்தருளார் 1
புரந்தவன் 1
புரந்து 2
புரந்தே 1
புரப்பான் 1
புரம் 2
புரமான 1
புரவலர் 1
புரவலரே 1
புரவலன் 1
புரவலனே 2
புரவி 2
புரவே 1
புராந்தகர் 1
புரி 1
புரிசை 1
புரிசையும் 1
புரிந்த 1
புருவ 3
புரை 5
புரையும் 1
புல் 1
புல்ல 1
புல்லி 1
புல்லினையாக 1
புல்லும் 1
புலம்ப 2
புலம்பர் 2
புலம்பி 1
புலம்புதி 1
புலம்புவது 1
புலம்புற 1
புலர் 1
புலர்த்தி 1
புலர்வது 1
புலர 1
புலராது 1
புலரினுமே 1
புலரும் 1
புலவாநிற்றிர் 1
புலவி 1
புலவியுறாள் 1
புலவியை 1
புலவோர் 2
புலன் 2
புலனான 1
புலியும் 1
புலையா 1
புவனத்து 1
புவி 4
புவிக்கும் 1
புள் 4
புள்ளி 1
புள்ளினங்காள் 1
புள்ளும் 2
புறங்கடையே 1
புறங்கொடுத்த 1
புறத்து 1
புறம் 3
புறம்கண்ட 1
புன் 1
புன்கண் 1
புன்மை 1
புன்னாகமும் 1
புன்னை 2
புன்னையின் 1
புன 1
புனத்திற்கு 1
புனத்து 2
புனம் 9
புனமும் 2
புனமே 2
புனல் 15
புனலால் 1
புனலே 2
புனை 18
புனை_இழை 1
புனைந்ததுவே 1
புனைந்தால் 1
புனையாவிடில் 1
புனையின் 1

புகர் (4)

தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1

மேல்

புகல் (1)

மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3

மேல்

புகல்வது (1)

புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4

மேல்

புகல்வதுவே (1)

பொறை ஆர் தவம்செய்திலேம் நெஞ்சமே என் புகல்வதுவே – தஞ்-வா-கோவை:1 2 14/4

மேல்

புகல்வோர் (1)

ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/4

மேல்

புகல (1)

ஆயம் புகல அடைந்தருள் நீ அடையாத மன்னர்-வாய் – தஞ்-வா-கோவை:1 10 136/2

மேல்

புகலிடம் (1)

நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1

மேல்

புகவே (1)

ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/4

மேல்

புகழ் (27)

மண்ணில் சிறந்த புகழ் தஞ்சைவாணன் மலைய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 1 4/1
மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 22/1
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/3
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3
விளைக்கும் புகழ் போல் விளங்குதலால் செக்கர் விண் பிறை கார் – தஞ்-வா-கோவை:1 9 64/3
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 74/1
தக்கார் புகழ் தஞ்சைவாணர் பிரான் தமிழ்நாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:1 10 83/2
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1
வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன் – தஞ்-வா-கோவை:1 11 142/3
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 181/1
மண்-பால் புகழ் வைத்த வாணன் தென்மாறை நம் மன்னர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:1 14 206/2
வறியார் புகழ் தஞ்சைவாணன் தென்மாறை மடந்தை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 15 213/1
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/4
பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 219/3
உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே – தஞ்-வா-கோவை:1 16 234/4
மண்ணும் புகழ் தஞ்சைவாணன் ஒன்னார் என மை குவளை – தஞ்-வா-கோவை:1 17 256/2
வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால் – தஞ்-வா-கோவை:2 19 287/2
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு – தஞ்-வா-கோவை:2 20 297/3
பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/2
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3
சேணினும் சார் புகழ் வாணன் தென்மாறை மன் சேரலரை – தஞ்-வா-கோவை:2 22 348/3
பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி – தஞ்-வா-கோவை:2 24 355/3
தன் மேல் அடுத்த புகழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நுண் – தஞ்-வா-கோவை:3 27 367/3
பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 31 415/1

மேல்

புகழ்தரும் (1)

சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

புகழ்ந்து (1)

குன்றாகிய பொன்னும் வேழ குழாமும் கொடை புகழ்ந்து
சென்றார் முகக்கும் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 149/1,2

மேல்

புகழ (1)

தனை யாவரும் புகழ தரும் வாணன் தமிழ் தஞ்சை மான்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 14 199/1

மேல்

புகழான் (1)

தன் ஆகம் மெய் புகழான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 10 139/4

மேல்

புகழின் (1)

அளி போல் குளிர்ந்த இள மர காவும் அவன் புகழின்
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/2,3

மேல்

புகழுடையான் (1)

அன்பால் பரவும் புகழுடையான் அருளே_அனையாய் – தஞ்-வா-கோவை:3 28 388/3

மேல்

புகழும் (1)

வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 18 261/1

மேல்

புகழே (1)

மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே
போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/1,2

மேல்

புகன்ற (1)

புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1

மேல்

புகன்று (1)

புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/3

மேல்

புகுந்தால் (1)

நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 13 188/4

மேல்

புகும் (1)

வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும்
கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/1,2

மேல்

புகை (1)

ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல் – தஞ்-வா-கோவை:2 22 335/2

மேல்

புகையா (1)

நவ்வி தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையா
செவ்வி தகை மலர் தூய் தெய்வம் வாழ்த்தும் திரு தகவே – தஞ்-வா-கோவை:2 19 287/3,4

மேல்

புடை (2)

பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/3
ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான் – தஞ்-வா-கோவை:1 10 115/1

மேல்

புடைப்பு (1)

புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2

மேல்

புடைபெயர்ந்து (1)

பொலம் காமவல்லி கடைந்த அப்போது புடைபெயர்ந்து
கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/3,4

மேல்

புண் (2)

புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4

மேல்

புண்ணும் (1)

புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4

மேல்

புண்பட்ட (1)

புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4

மேல்

புணர் (3)

புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல் – தஞ்-வா-கோவை:1 15 214/1
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/3
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4

மேல்

புணர்ந்த (1)

வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/2

மேல்

புணர்ந்தனமே (1)

பொழில் நீழல் உம்பர் அமுது_அனையாரை புணர்ந்தனமே – தஞ்-வா-கோவை:1 13 180/4

மேல்

புணர்ந்து (5)

பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2
பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
பொழி நான மன்றல் அம் பூம் குழல் நீங்கள் புணர்ந்து செல்லும் – தஞ்-வா-கோவை:2 21 315/1
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3

மேல்

புணரா (1)

புணரா விரகமும் போகா இரவும் புணர் முலை மேல் – தஞ்-வா-கோவை:1 15 214/1

மேல்

புணை (2)

நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/4
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1

மேல்

புணையா (1)

நெய் தோய்ந்து அன தழையே புணையா கொண்டு நீந்தினனே – தஞ்-வா-கோவை:3 27 370/4

மேல்

புதல்வன் (2)

ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1
போயே தெருவில் தனி விளையாடும் புதல்வன் புல்ல – தஞ்-வா-கோவை:3 28 400/1

மேல்

புதல்வியை (1)

புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1

மேல்

புதியேன் (1)

புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும் – தஞ்-வா-கோவை:1 9 70/1

மேல்

புது (2)

புயற்கு அண்ணிய தலை பூக மென் பாளை புது மது நீர் – தஞ்-வா-கோவை:1 14 205/1
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலா புது நீர் – தஞ்-வா-கோவை:1 17 255/1

மேல்

புதை (1)

பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3

மேல்

புதைத்துவே (1)

புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே – தஞ்-வா-கோவை:1 2 12/4

மேல்

புதையார் (1)

புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே – தஞ்-வா-கோவை:1 2 12/4

மேல்

புய (5)

அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும் – தஞ்-வா-கோவை:1 10 130/1
போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:1 13 186/3
மெய் ஆதல் தேறி அழுங்கல் மின்னே புய வெற்பு இரண்டால் – தஞ்-வா-கோவை:1 14 196/2
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 32 417/3
தார் தட மேரு எனும் புய வாணன் தஞ்சாபுரி-நின்று – தஞ்-வா-கோவை:3 33 422/3

மேல்

புயத்தான் (1)

அணங்கி திரள் புயத்தான் மலயாசலத்து ஆரணங்கே – தஞ்-வா-கோவை:2 22 327/4

மேல்

புயத்து (1)

செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1

மேல்

புயம் (1)

புயம் காதல்கொண்டு அணைந்தாள் அயனார் தந்த பூமகளே – தஞ்-வா-கோவை:2 22 342/4

மேல்

புயல் (11)

தான களிறு தரும் புயல் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 2 17/3
புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
பயில் காள பந்தி புயல் அன்ன ஓதியை பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 11 152/1
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
மாக புயல் மண்ணில் வந்து அன வாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:2 20 293/1
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1
உயங்காது ஒழி அஃது உலகு இயல்பால் உலவும் புயல் தோய் – தஞ்-வா-கோவை:2 22 342/2
ஆதற்கு அணங்கு_அனையாய் புயல் ஏது அறிந்தருளே – தஞ்-வா-கோவை:3 29 410/4

மேல்

புயலாம் (1)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3

மேல்

புயலே (2)

புயலே சுமந்து பிறையே அணிந்து பொரு விலுடன் – தஞ்-வா-கோவை:1 1 1/1
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1

மேல்

புயலேறு (1)

புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1

மேல்

புயற்கு (1)

புயற்கு அண்ணிய தலை பூக மென் பாளை புது மது நீர் – தஞ்-வா-கோவை:1 14 205/1

மேல்

புயன் (6)

மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
மல் ஆர் புயன் தமிழ்வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 215/3
தாரோ வளரும் புயன் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 306/3
சைய திரள் புயன் சந்திரவாணன் தனி புரக்கும் – தஞ்-வா-கோவை:2 21 319/1
வரி ஓர் தொடை புயன் வாணன் தென்மாறை மலர் திருவே – தஞ்-வா-கோவை:3 28 397/3
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள் – தஞ்-வா-கோவை:3 28 406/3

மேல்

புரக்கின்ற (3)

புரக்கின்ற கோன் தஞ்சைவாணன் பொதியிலில் பொய்த்து என்னை நீ – தஞ்-வா-கோவை:1 10 121/3
தன் போல் உலகம் புரக்கின்ற வாணன் தமிழ் தஞ்சையார் – தஞ்-வா-கோவை:2 20 295/1
வயங்கு ஏழ் உலகும் புரக்கின்ற வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 392/1

மேல்

புரக்கும் (6)

தா ஏதும் இல்லா தமனியம் மீது தலம் புரக்கும்
கோவே அழுத்துவரோ வறியோரும் குருவிந்தமே – தஞ்-வா-கோவை:1 10 82/3,4
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும்
மல் ஆர் புயன் தமிழ்வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 215/2,3
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும்
மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும் – தஞ்-வா-கோவை:2 19 284/2,3
சைய திரள் புயன் சந்திரவாணன் தனி புரக்கும்
வையத்து உறைகின்ற மானிடரோ அன்றி வானவரோ – தஞ்-வா-கோவை:2 21 319/1,2
இடு சிலை பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருக – தஞ்-வா-கோவை:2 22 345/3
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும்
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள் – தஞ்-வா-கோவை:3 28 406/2,3

மேல்

புரத்து (1)

கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/3

மேல்

புரந்தருளார் (1)

பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை புரந்தருளார்
நலிகின்ற முன்பனி நாளில் நண்ணார் முனை நண்ணினரே – தஞ்-வா-கோவை:3 31 415/3,4

மேல்

புரந்தவன் (1)

மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2

மேல்

புரந்து (2)

வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/3
இவள் ஆருயிர் புரந்து யான் இருந்தேன் செக்கர் இந்து அன்ன – தஞ்-வா-கோவை:1 17 259/1

மேல்

புரந்தே (1)

நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3

மேல்

புரப்பான் (1)

வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 31 416/3

மேல்

புரம் (2)

மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/2
ஆகவம் புகல்வோர் இகலார் தம் புரம் புகவே – தஞ்-வா-கோவை:3 31 414/4

மேல்

புரமான (1)

புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2

மேல்

புரவலர் (1)

எம்மாதிரமும் புரவலர் தேடி இரந்து உழல்வோர்-தம் – தஞ்-வா-கோவை:3 28 379/1

மேல்

புரவலரே (1)

போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/4

மேல்

புரவலன் (1)

புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1

மேல்

புரவலனே (2)

புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4
புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே – தஞ்-வா-கோவை:1 10 114/4

மேல்

புரவி (2)

புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான் – தஞ்-வா-கோவை:2 21 320/3

மேல்

புரவே (1)

புரவே எதிர்ந்த நமக்கு விருந்து இன்று போல என்றும் – தஞ்-வா-கோவை:3 28 396/1

மேல்

புராந்தகர் (1)

புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1

மேல்

புரி (1)

புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3

மேல்

புரிசை (1)

சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை
வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து – தஞ்-வா-கோவை:1 17 251/2,3

மேல்

புரிசையும் (1)

கிடங்கும் புரிசையும் சூழ்ந்து எதிர் தோன்றும் கிளைத்த பைம் தார் – தஞ்-வா-கோவை:2 21 321/3

மேல்

புரிந்த (1)

தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த
கொடியோர் துணிந்து செய்தார் குறியாத குறி நமக்கே – தஞ்-வா-கோவை:1 14 192/3,4

மேல்

புருவ (3)

வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள் – தஞ்-வா-கோவை:2 20 296/1
வில்லின் கொடிய புருவ மின்னே என் விளம்புதி நீ – தஞ்-வா-கோவை:2 21 313/2
இரு வில் புருவ இளம்_கொடியே எய்தும் எய்தல் இல்லா – தஞ்-வா-கோவை:3 28 386/3

மேல்

புரை (5)

புரை யானை அம்பொடு போந்தது உண்டோ என்பர் பூங்கொடியீர் – தஞ்-வா-கோவை:1 9 74/3
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3
பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

புரையும் (1)

புரையும் மென் கொங்கை பிரிந்திருந்தீர் முன் பொருப்பு எடுத்தே – தஞ்-வா-கோவை:3 27 371/2

மேல்

புல் (1)

புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4

மேல்

புல்ல (1)

போயே தெருவில் தனி விளையாடும் புதல்வன் புல்ல
நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/1,2

மேல்

புல்லி (1)

என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி
பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில் – தஞ்-வா-கோவை:1 18 274/2,3

மேல்

புல்லினையாக (1)

பூண் ஆகம் மெல்_இயல் புல்லினையாக அ பொய்யை மெய்யா – தஞ்-வா-கோவை:1 16 246/2

மேல்

புல்லும் (1)

புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3

மேல்

புலம்ப (2)

பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில் – தஞ்-வா-கோவை:1 18 274/3
ஆயம் புலம்ப அகன்றனளோ கல்லகம் குழைய – தஞ்-வா-கோவை:2 22 331/2

மேல்

புலம்பர் (2)

பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4
பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக – தஞ்-வா-கோவை:2 20 293/3

மேல்

புலம்பி (1)

போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2

மேல்

புலம்புதி (1)

பூரணத்து ஆர் மதி போல் முகத்தாய் என் புலம்புதி நின் – தஞ்-வா-கோவை:1 18 265/3

மேல்

புலம்புவது (1)

புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4

மேல்

புலம்புற (1)

புலம்புற மாதர் எங்கே மகளே தனி போயினளே – தஞ்-வா-கோவை:2 22 323/4

மேல்

புலர் (1)

புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4

மேல்

புலர்த்தி (1)

என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/2,3

மேல்

புலர்வது (1)

பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3

மேல்

புலர (1)

புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4

மேல்

புலராது (1)

புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/4

மேல்

புலரினுமே (1)

புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/4

மேல்

புலரும் (1)

புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/4

மேல்

புலவாநிற்றிர் (1)

இ நாள் மிக உவர்த்தீர் புலவாநிற்றிர் எங்களையே – தஞ்-வா-கோவை:3 28 403/4

மேல்

புலவி (1)

தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம் – தஞ்-வா-கோவை:3 28 388/2

மேல்

புலவியுறாள் (1)

உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4

மேல்

புலவியை (1)

மன்னும் புலவியை மாற்றியும் தேற்றியும் வல்ல வண்ணம் – தஞ்-வா-கோவை:3 28 399/1

மேல்

புலவோர் (2)

துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர்
வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை – தஞ்-வா-கோவை:1 16 232/2,3
தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர்
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/1,2

மேல்

புலன் (2)

மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1
பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/2

மேல்

புலனான (1)

அகழ் ஆர்கலி உலகில் புலனான அணங்கு அவளே – தஞ்-வா-கோவை:1 10 86/4

மேல்

புலியும் (1)

மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும்
செண்டும் கொடுத்து அகல் செம்பியர் போல் அன்பர் சென்றுழி முள் – தஞ்-வா-கோவை:1 18 266/1,2

மேல்

புலையா (1)

புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4

மேல்

புவனத்து (1)

இணங்கி புவனத்து எவரும் இல்லா என் இளம்_கொடியாள் – தஞ்-வா-கோவை:2 22 327/1

மேல்

புவி (4)

பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும் – தஞ்-வா-கோவை:1 13 175/2
ஆழி அகல் புவி உள்ளன யாவும் அடங்கி நள்ளென்று – தஞ்-வா-கோவை:1 14 202/1
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/2
நல் வித்து அகன் புவி நாவில் வைத்தோன் வையைநாடு_அனையாய் – தஞ்-வா-கோவை:3 29 408/2

மேல்

புவிக்கும் (1)

ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும்
தான் அலங்காரம்_அன்னான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 11 153/3,4

மேல்

புள் (4)

பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள்
இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/1,2
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4

மேல்

புள்ளி (1)

நாக புகர் செய்ய புள்ளி பைம் கால் ஞெண்டு நாகு இளம் தண் – தஞ்-வா-கோவை:2 20 293/2

மேல்

புள்ளினங்காள் (1)

போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள்
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ – தஞ்-வா-கோவை:1 15 221/2,3

மேல்

புள்ளும் (2)

ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும்
தோகையும் போல் நின்றவா தனியே இந்த சோலையிலே – தஞ்-வா-கோவை:1 8 58/3,4
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும்
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/3,4

மேல்

புறங்கடையே (1)

புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4

மேல்

புறங்கொடுத்த (1)

போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த
கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே – தஞ்-வா-கோவை:2 25 365/3,4

மேல்

புறத்து (1)

போது அளவா விழி என்னும் என் ஆசை புறத்து அளவா – தஞ்-வா-கோவை:1 8 46/3

மேல்

புறம் (3)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1
புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/4

மேல்

புறம்கண்ட (1)

மன்னை புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் – தஞ்-வா-கோவை:2 24 359/3

மேல்

புன் (1)

புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4

மேல்

புன்கண் (1)

புன்கண் அடையலை நீ இனி வாடல் புரவலனே – தஞ்-வா-கோவை:1 10 114/4

மேல்

புன்மை (1)

பூ அலர் வாவியின் நீர் அற்ற போது உற்ற புன்மை அல்லால் – தஞ்-வா-கோவை:1 11 146/1

மேல்

புன்னாகமும் (1)

புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2

மேல்

புன்னை (2)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/2
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3

மேல்

புன்னையின் (1)

அயல் நின்ற புன்னையின் அன்னம் எலாம் அடல் ஆழி அங்கை – தஞ்-வா-கோவை:1 14 190/2

மேல்

புன (1)

புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும் – தஞ்-வா-கோவை:3 28 394/3

மேல்

புனத்திற்கு (1)

புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும் – தஞ்-வா-கோவை:1 9 70/1

மேல்

புனத்து (2)

புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4
புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/2

மேல்

புனம் (9)

தரு-வாய் தழை கொய்து தண் புனம் காத்து தடம் குடைந்து – தஞ்-வா-கோவை:1 7 35/2
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/3
புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு – தஞ்-வா-கோவை:1 9 73/2
காக்கும் புனம் மருங்கே தனியே வர கண்டிலமே – தஞ்-வா-கோவை:1 9 78/4
புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான் – தஞ்-வா-கோவை:1 9 80/1
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 12 162/2
கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/4

மேல்

புனமும் (2)

புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1
இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/3

மேல்

புனமே (2)

புனமே இடம் இங்ஙனே என்னை வாட்டிய பூங்கொடிக்கே – தஞ்-வா-கோவை:1 8 49/4
தானே இவள் இதுவே இடமாகிய தண் புனமே – தஞ்-வா-கோவை:1 8 52/4

மேல்

புனல் (15)

மல்குற்ற தண் புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 98/1
நண்ணும் புனல் இன்றி அங்குரியாது உங்கள் நல்வினையால் – தஞ்-வா-கோவை:1 10 112/2
தண்ணென் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 203/1
சேல் ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:2 26 366/1
ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4
புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4
நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உற – தஞ்-வா-கோவை:3 28 395/3
பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4
தழங்கு ஆர் புனல் வையை சூழ் தஞ்சைவாணன்-தனது அருள் போல் – தஞ்-வா-கோவை:3 28 402/1
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4
திரு மயிலே_அனையாய் புனல் ஊரனை தேருடனே – தஞ்-வா-கோவை:3 28 405/4
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

புனலால் (1)

அருள் புனலால் அனங்கானலம் ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:1 8 39/4

மேல்

புனலே (2)

தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/4
சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனை புனலே – தஞ்-வா-கோவை:1 9 65/4

மேல்

புனை (18)

புயலாம் எனிம் புயல் போது கொள்ளாது இ புனை இழையார் – தஞ்-வா-கோவை:1 6 31/3
புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
உலம் புனை தோளும் நின் உள்ளமும் வாடி உருகிநின்று – தஞ்-வா-கோவை:1 8 40/3
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
பூந்தழை யாது மலை மலர் யாது புனை இழையும் – தஞ்-வா-கோவை:1 13 166/1
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/3
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
புரவி புனை நெடும் தேர் அண்ணலே நின் பொருட்டு அணங்கை – தஞ்-வா-கோவை:2 19 286/3
நலம் புனை ஆயமும் நீயும் நற்றாயொடு நானும் நல் பொன் – தஞ்-வா-கோவை:2 22 323/1
ஒரு மகளே என்று உனை அயிர்த்தேன் புனை ஓவியம் போல் – தஞ்-வா-கோவை:2 22 343/2
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய் – தஞ்-வா-கோவை:2 23 351/1
போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/3
புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர் – தஞ்-வா-கோவை:3 28 381/1
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான் – தஞ்-வா-கோவை:3 33 420/1

மேல்

புனை_இழை (1)

போது அலர்ந்து அல்லை முனியும் மெல் ஓதி புனை_இழை தன் – தஞ்-வா-கோவை:2 23 352/1

மேல்

புனைந்ததுவே (1)

பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4

மேல்

புனைந்தால் (1)

புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/2

மேல்

புனையாவிடில் (1)

போற்றும் கொடுவினையேன் புனையாவிடில் போந்து அலரே – தஞ்-வா-கோவை:1 10 128/3

மேல்

புனையின் (1)

மாற்றும் புனையின் மயில்_அனையாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 128/2

மேல்