Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏக 1
ஏகல் 1
ஏகா 1
ஏகிய 1
ஏகினள் 1
ஏகுகின்றீர் 1
ஏகுகின்றேன் 1
ஏங்க 1
ஏடு 2
ஏத்தி 1
ஏதம் 3
ஏதமுமே 1
ஏதிலர் 2
ஏதிலரே 1
ஏதிலன் 1
ஏதிலை 1
ஏது 9
ஏது-கொல் 1
ஏதும் 1
ஏந்தி 3
ஏந்து 4
ஏந்து_இழையாய் 1
ஏந்தும் 2
ஏய் 27
ஏய்ந்த 1
ஏய்ந்து 1
ஏய 1
ஏயும் 2
ஏயே 1
ஏர் 10
ஏவல் 1
ஏவலினால் 1
ஏவி 1
ஏவும் 1
ஏழ் 7
ஏழினுக்கும் 1
ஏழினும் 2
ஏற்ப 1
ஏற்பது 1
ஏற்பன 1
ஏற்ற 5
ஏற்றவர்க்கு 1
ஏற்றவர்க்கே 1
ஏற்றவள் 1
ஏற்றாது 1
ஏற்று 1
ஏறி 2
ஏறு 6
ஏறுவதே 1
ஏன் 1
ஏனல் 5

ஏ (2)

ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1

மேல்

ஏக (1)

வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2

மேல்

ஏகல் (1)

இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை – தஞ்-வா-கோவை:1 13 189/1

மேல்

ஏகா (1)

ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4

மேல்

ஏகிய (1)

யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என் – தஞ்-வா-கோவை:2 22 347/1

மேல்

ஏகினள் (1)

இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1

மேல்

ஏகுகின்றீர் (1)

துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 351/4

மேல்

ஏகுகின்றேன் (1)

என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/3

மேல்

ஏங்க (1)

இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1

மேல்

ஏடு (2)

ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
ஏடு ஆர் மலர் குழல் வல்லியை அன்னை இ தீவினையேன் – தஞ்-வா-கோவை:2 23 349/1

மேல்

ஏத்தி (1)

இரும்பா மனம் கொண்டவாறு என்னை நீ தன்னை ஏத்தி என்றும் – தஞ்-வா-கோவை:2 22 337/1

மேல்

ஏதம் (3)

வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/2

மேல்

ஏதமுமே (1)

இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/4

மேல்

ஏதிலர் (2)

இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1
புனை அலர் ஏதிலர் காதலர் தாயர் பொறாமையில் போய் – தஞ்-வா-கோவை:2 23 351/1

மேல்

ஏதிலரே (1)

எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே – தஞ்-வா-கோவை:1 10 123/4

மேல்

ஏதிலன் (1)

இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1

மேல்

ஏதிலை (1)

நீ ஏதிலை அல்லை நின் மகனே இவன் நீயும் அவன் – தஞ்-வா-கோவை:3 28 400/2

மேல்

ஏது (9)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4
பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2
ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3
ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2
இடை ஏது என தெரியாது உரை ஆணியிட அரிதே – தஞ்-வா-கோவை:1 10 104/4
மற்று ஏது அவர் நினைவார் தஞ்சைவாணன் வரையின் மு நாள் – தஞ்-வா-கோவை:1 10 127/1
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே – தஞ்-வா-கோவை:1 15 209/4
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ – தஞ்-வா-கோவை:1 15 221/3
ஆதற்கு அணங்கு_அனையாய் புயல் ஏது அறிந்தருளே – தஞ்-வா-கோவை:3 29 410/4

மேல்

ஏது-கொல் (1)

கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான் – தஞ்-வா-கோவை:1 14 190/1

மேல்

ஏதும் (1)

தா ஏதும் இல்லா தமனியம் மீது தலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:1 10 82/3

மேல்

ஏந்தி (3)

அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை – தஞ்-வா-கோவை:1 5 27/1
துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1

மேல்

ஏந்து (4)

அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை – தஞ்-வா-கோவை:1 5 27/1
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 5 27/3
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/4
என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2

மேல்

ஏந்து_இழையாய் (1)

என் உயிர் காவலர் ஏந்து_இழையாய் இதயம் புலர்த்தி – தஞ்-வா-கோவை:3 30 412/2

மேல்

ஏந்தும் (2)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1

மேல்

ஏய் (27)

வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1
தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3
மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 70/3
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/4
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த – தஞ்-வா-கோவை:1 10 104/2
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1
மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே – தஞ்-வா-கோவை:1 11 155/4
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 12 161/3
நிலவு ஏய் தரளம் நிரைத்து அன்ன வாள் நகை நீல நிற – தஞ்-வா-கோவை:1 17 252/1
வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1
கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/3
வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே – தஞ்-வா-கோவை:1 18 263/4
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு – தஞ்-வா-கோவை:2 21 307/1
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு – தஞ்-வா-கோவை:2 21 307/1
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/3
பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும் – தஞ்-வா-கோவை:2 22 329/2
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1
இரவு ஏய் குழலி இன்று ஏதிலன் பின் செல்லல் என்று சொல்லா – தஞ்-வா-கோவை:2 22 344/1
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 23 353/1
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2
மனவு ஏய் அகல் அல்குல் வல்லி_அன்னாள் மறையோர் முதலாம் – தஞ்-வா-கோவை:3 27 373/2
குரவு ஏய் கரு முகில் கொந்தளபாரம் குரும்பை கொங்கை – தஞ்-வா-கோவை:3 28 396/3
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4

மேல்

ஏய்ந்த (1)

ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1

மேல்

ஏய்ந்து (1)

என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1

மேல்

ஏய (1)

முழவு ஏய முந்நீர் முழங்கு இரும் கானல் முழுது உலகும் – தஞ்-வா-கோவை:2 20 292/2

மேல்

ஏயும் (2)

செரு மகள் ஏயும் புயத்து அயலான் பின் செல விடுத்து என் – தஞ்-வா-கோவை:2 22 343/1
இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு – தஞ்-வா-கோவை:3 28 405/1

மேல்

ஏயே (1)

ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/4

மேல்

ஏர் (10)

நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர்
நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி – தஞ்-வா-கோவை:1 8 43/2,3
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/3
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/3
செப்பு ஏர் இளம் கொங்கை மங்கை செப்பாது அன்பர் சென்றதுவே – தஞ்-வா-கோவை:1 18 264/4
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
ஏர் ஆர் புதல்வன் பிறந்தனன் வாழிய என்னும் முன்னே – தஞ்-வா-கோவை:3 28 391/1
தயங்கு ஏர் அகம் முழுதும் பழுதாம் அதுதான் நினக்கே – தஞ்-வா-கோவை:3 28 392/4

மேல்

ஏவல் (1)

கொண்டவாறும் நின் ஏவல் கொண்டு யான் இ கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:3 33 424/3

மேல்

ஏவலினால் (1)

யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால்
சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/2,3

மேல்

ஏவி (1)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2

மேல்

ஏவும் (1)

ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2

மேல்

ஏழ் (7)

ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/3
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/2
வயங்கு ஏழ் உலகும் புரக்கின்ற வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 392/1
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும் – தஞ்-வா-கோவை:3 28 406/2

மேல்

ஏழினுக்கும் (1)

பொன்னே எதிர்கொள போதுகம் வா புவி ஏழினுக்கும்
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 175/2,3

மேல்

ஏழினும் (2)

ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான் – தஞ்-வா-கோவை:1 10 115/1
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1

மேல்

ஏற்ப (1)

இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2

மேல்

ஏற்பது (1)

இவ்வண்ணம் நீ சொல்வது ஏற்பது அன்றால் நின் இடை என தாம் – தஞ்-வா-கோவை:1 10 120/2

மேல்

ஏற்பன (1)

சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3

மேல்

ஏற்ற (5)

போய் யான் அளித்தலும் கைகுவித்து ஏற்ற பின் போற்றி அன்பால் – தஞ்-வா-கோவை:1 10 129/1
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/2
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண் – தஞ்-வா-கோவை:1 16 247/3
நீர் ஏற்ற செங்கழுநீர் மலர் போன்றது நின் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 247/4

மேல்

ஏற்றவர்க்கு (1)

ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு
மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 10 126/2,3

மேல்

ஏற்றவர்க்கே (1)

வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 171/1

மேல்

ஏற்றவள் (1)

பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை – தஞ்-வா-கோவை:1 16 246/3

மேல்

ஏற்றாது (1)

ஏற்றாது ஒழி எனை எம்பெருமாட்டி சென்று ஏற்றவர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 126/2

மேல்

ஏற்று (1)

பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4

மேல்

ஏறி (2)

கொம்பு ஏறி நள்ளிருள்-வாய் குழறாநின்ற கூகைகளே – தஞ்-வா-கோவை:1 14 207/4
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2

மேல்

ஏறு (6)

இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/3
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/3
என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2

மேல்

ஏறுவதே (1)

இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே – தஞ்-வா-கோவை:1 10 106/4

மேல்

ஏன் (1)

துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2

மேல்

ஏனல் (5)

இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3
ஏனல் அம் காவலும் இன்றே ஒழிந்தனம் ஏழ் புவிக்கும் – தஞ்-வா-கோவை:1 11 153/3
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1
எங்கே இனி தங்குவார் ஏனல் காத்து இங்கு இருந்தவரே – தஞ்-வா-கோவை:1 12 161/4
முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று – தஞ்-வா-கோவை:1 15 224/3

மேல்