ஞாண் (1)
ஞாண் என் மஞ்சனம் என்-கொல் காரணம் நாரணாதிகள் நாசமே – தக்கயாகப்பரணி:8 621/2
ஞாயில் (1)
ஞாயில் கொண்ட மதிற்புறம் பர சமய கோளரி நண்ணியே – தக்கயாகப்பரணி:6 172/1
ஞாயிற்றையும் (1)
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
ஞால (1)
ஞால நேமி திரை நேமி வரை நேமி இவையே நடை சுழன்று இடை சுழன்றன சுழன்றிலது தம் – தக்கயாகப்பரணி:8 707/1
ஞாலம் (1)
ஞாலம் உண்ட வயிற்று இரைப்பை அடக்கும்-மின்கள் நடக்கவே – தக்கயாகப்பரணி:9 762/2
ஞாலமும் (1)
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2
ஞான (1)
சுத்த ஞான போதர் கழல் சுட்டி யானை-தோறும் இடு தொட்டி-தோறும் ஏறி இடை தொட்ட கார்முகாசனியர் – தக்கயாகப்பரணி:8 468/1