Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 2
மெச்சல் 2
மெச்சிய 1
மெச்சு 1
மெச்சும் 1
மெட்டு 1
மெத்தை 5
மெய் 17
மெய்க்கவசம் 1
மெய்காப்பாளர் 1
மெய்கோட்டி 1
மெய்ஞ்ஞானம் 1
மெய்ந்நலம் 1
மெய்ந்நூல் 1
மெய்ப்படு 1
மெய்ப்பே 1
மெய்ப்பை 1
மெய்ம்மை 4
மெய்மை 1
மெய்யர் 2
மெய்யன் 1
மெய்யுடனே 1
மெய்யும் 1
மெய்யுரை 1
மெய்யுறையே 1
மெய்யெனலோடு 1
மெய்யே 2
மெய்யை 1
மெல்கோல் 1
மெல்ல 1
மெல்லடி 1
மெல்லணையே 1
மெல்லம்புலம்பன் 1
மெல்லவே 1
மெல்லிய 4
மெல்லியர் 1
மெல்லியல் 2
மெல்லியலார் 1
மெல்லிலையும் 1
மெல்லென்றல் 1
மெல்லென 1
மெலிவு 1
மெலிவுஇல் 1
மெலிவொடு 1
மெழுக்கு 1
மெழுகு 1
மென் 3
மென்சொல் 1
மென்பால் 1
மென்புகை 1
மென்மை 4

மெச்ச (2)

இவை யாரும் மெச்ச பாடுவோன் கவி என்றாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
அடுத்திடும் எப்போது அப்போது அசைவின்றி யாரும் மெச்ச
எடுத்து இயல்பாக பாடும் எவன் அவன் ஆசு சொல்வான் – 12.பல்பொருள்கூட்டம்:12 24/2,3

மேல்

மெச்சல் (2)

படி பாராட்டுதல் குலாவல் பரிந்து கொண்டாடல் மெச்சல் – 9.செயல்:9 3/4
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 4/2

மேல்

மெச்சிய (1)

மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் – 9.செயல்:9 13/3

மேல்

மெச்சு (1)

மெச்சு அமிழ்து அவியினோடு பலி சரு விண்ணோர் ஊண் ஆம் – 6.பல்பொருள்:6 23/1

மேல்

மெச்சும் (1)

வெளில் தயிர்கடைதறி பேர் மெச்சும் பாவாற்றி குச்சு ஆம் – 7.செயற்கைவடிவ:7 57/3

மேல்

மெட்டு (1)

துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

மெத்தை (5)

தவிசு அணை தளிமம் மெத்தை உபதானம் தலையணை பேர் – 7.செயற்கைவடிவ:7 74/1
அசம் மூ ஆண்டு உறு நெல் ஆடு ஆம் அணை என்ப கரையே மெத்தை
சசி என்ப கர்ப்பூரம் சந்திரன் அயிராணி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3,4
சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/4
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3
தவிசு என்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/1

மேல்

மெய் (17)

கலவைச்சேறே காலேகவண்ணமே களபமே மெய்
குலவிய விரையே சாந்து ஆம் குங்கும பேர் செஞ்சாந்து ஆம் – 6.பல்பொருள்:6 14/1,2
அலைத்து மெய் பூசும் பூச்சின் அபிதானம் அங்கராகம் – 6.பல்பொருள்:6 15/4
நீதியாம் நிலைமை உண்மை நிச்சயம் சரதம் மெய் பேர் – 10.ஒலிப்பெயர்:10 6/2
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 22/1
ஒற்றின் பேர் உடல் உடம்போடு உறுப்பு மெய் புள்ளி ஆமே – 10.ஒலிப்பெயர்:10 31/4
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்று செந்நிறம் குறிஞ்சி என்ப – 10.ஒலிப்பெயர்:10 33/4
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
படுவி கள்விற்பாள் குண்டம் பரம் என்ப கவசம் மெய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/1
புரம் என்ப புரி முன் மெய் பேர் புரவலன் வள்ளல் வேந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/3
கறை அற மெய் அவர்க்கு காட்டல் ஐவகைவினா ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/3
அலமர ஒடுங்கி நட்டு விழுதல் மெய் அவத்தை ஐந்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/4
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய் பரிசங்கள் எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/2
உறும் உறுப்பு இல்லா பிண்டம் ஓதிய எண் மெய் எச்சம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/2
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3

மேல்

மெய்க்கவசம் (1)

ஆசு என்ப விரைவு குற்றம் அற்பம் மெய்க்கவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/1

மேல்

மெய்காப்பாளர் (1)

காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 36/3

மேல்

மெய்கோட்டி (1)

குடமே மெய்கோட்டி கையை குவித்தலின் நாமம்தானே – 9.செயல்:9 36/1

மேல்

மெய்ஞ்ஞானம் (1)

ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3

மேல்

மெய்ந்நலம் (1)

மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் – 8.பண்பு:8 28/1

மேல்

மெய்ந்நூல் (1)

பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல்
வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் வரை அற தரையில் வந்து – 1.தேவப்பெயர்:1 4/3,4

மேல்

மெய்ப்படு (1)

மெய்ப்படு பவளம் என்ப வித்துருமம்தானும் பேர் – 6.பல்பொருள்:6 7/2

மேல்

மெய்ப்பே (1)

தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் – 10.ஒலிப்பெயர்:10 15/1

மேல்

மெய்ப்பை (1)

விஞ்சு கஞ்சுகமே மெய்ப்பை மிளிரும் வாரணமே சட்டை – 7.செயற்கைவடிவ:7 73/2

மேல்

மெய்ம்மை (4)

குருகுல பாண்டுமைந்தன் குந்திதன் புதல்வன் மெய்ம்மை
விரதமா கொள்வோன் மேன்மை தருமன் பேர் எட்டும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 14/3,4
பழித்திடல் புகழ்தல் மெய்ம்மை பயக்கும் மும்மொழி பேர் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 8/1
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
தானமே தவமே மெய்ம்மை தருமம் பேணுதலினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 10/1

மேல்

மெய்மை (1)

மேழகம் கவசம் ஆடாம் வேளாண்மை கொடையே மெய்மை
காழியர் வண்ணார் உப்புவாணிகர் இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/2,3

மேல்

மெய்யர் (2)

துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர்
அறவர் மாதவர் கடிந்தோர் அந்தணர் அடிகள் ஐயர் – 2.மக்கள்பெயர்:2 2/1,2
மெய்யர் விப்பிரரே வேதபாரகர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 5/4

மேல்

மெய்யன் (1)

சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன்
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 80/1,2

மேல்

மெய்யுடனே (1)

ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4

மேல்

மெய்யும் (1)

போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3

மேல்

மெய்யுரை (1)

விரித்துரை அதனினோடு மெய்யுரை உரை பொருள் பேர் – 10.ஒலிப்பெயர்:10 27/3

மேல்

மெய்யுறையே (1)

பருமம் மெய்யுறையே கச்சை பரம் பத்தும் கவச பல் பேர் – 7.செயற்கைவடிவ:7 17/4

மேல்

மெய்யெனலோடு (1)

மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் – 9.செயல்:9 40/4

மேல்

மெய்யே (2)

சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் – 2.மக்கள்பெயர்:2 85/2
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 105/2

மேல்

மெய்யை (1)

குடந்தம் கைகூப்பி மெய்யை கோப்பொடு கோட்டி நிற்றல் – 9.செயல்:9 53/1

மேல்

மெல்கோல் (1)

கொட்டை ஆம் குடை பற்சீவும்கோல் மெல்கோல் வளிசம் தூண்டில் – 7.செயற்கைவடிவ:7 62/2

மேல்

மெல்ல (1)

மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 52/4

மேல்

மெல்லடி (1)

பஞ்சார் மெல்லடி நல்லாய் கேள் பஞ்சபாதகத்தின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/4

மேல்

மெல்லணையே (1)

வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3

மேல்

மெல்லம்புலம்பன் (1)

கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லம்புலம்பன்
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 73/1,2

மேல்

மெல்லவே (1)

மெல்லவே சுவைத்தல் ஆகும் வினவில் ஐந்து உணவுதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 42/4

மேல்

மெல்லிய (4)

மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப – 2.மக்கள்பெயர்:2 33/3
மெல்லிய பரலும் காழும் பீசமும் விதை வித்தும் பேர் – 4.மரப்பெயர்:4 51/4
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே – 4.மரப்பெயர்:4 64/4
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3

மேல்

மெல்லியர் (1)

விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 45/4

மேல்

மெல்லியல் (2)

மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை – 1.தேவப்பெயர்:1 49/2
மெல்லியல் இளங்கொம்பின் பேர் மேவிய கவரே கப்பு ஆம் – 4.மரப்பெயர்:4 47/1

மேல்

மெல்லியலார் (1)

உப்பு மெல்லியலார் ஆடல் உவர் கடல் இனிமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/1

மேல்

மெல்லிலையும் (1)

செறிதரும் இலை கொடி பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 37/2

மேல்

மெல்லென்றல் (1)

மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் – 9.செயல்:9 40/4

மேல்

மெல்லென (1)

விடுத்திடல் இறத்தல் போகல் மெல்லென வழங்கல் நீங்கல் – 9.செயல்:9 37/2

மேல்

மெலிவு (1)

நாம்பலே பழங்கணோடு நாட்டிய மெலிவு ஞொள்கல் – 9.செயல்:9 61/1

மேல்

மெலிவுஇல் (1)

மெலிவுஇல் மைதுனம் புணர்ச்சி விழைச்சொடு விழைவு தல்லே – 9.செயல்:9 17/1

மேல்

மெலிவொடு (1)

மா மலிவுடனே மற்றை மெலிவொடு சமனும் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 11/4

மேல்

மெழுக்கு (1)

கல் உலோகம் மண் செங்கல் கண்டசர்க்கரை மெழுக்கு
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/3,4

மேல்

மெழுகு (1)

அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/3

மேல்

மென் (3)

வேழமே கன்னல் இக்கு மென் கழை கரும்பு நாற்பேர் – 4.மரப்பெயர்:4 12/4
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 130/3

மேல்

மென்சொல் (1)

மழலையே ஒற்று நீங்கி வழுப்பட நிரம்பா மென்சொல்
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு – 10.ஒலிப்பெயர்:10 9/2,3

மேல்

மென்பால் (1)

நிறையும் மென்பால் ஆம் வெற்பில் நீரினில் வெவ் வனத்தில் – 5.இடப்பெயர்:5 33/3

மேல்

மென்புகை (1)

வெடி அச்சம் பரிமளிக்கும் மென்புகை வெளி இ முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2

மேல்

மென்மை (4)

மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை
மருவிய இலகு நொவ்வோடு இலேச இசை வகுக்கும் நொய்மை – 8.பண்பு:8 16/1,2
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/4
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை
அழுவமே பரப்பும் நாடும் அழுங்கலே இரங்கல் கேடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1,2

மேல்