Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகம் 1
நுகர்ச்சி 12
நுகர்தல் 1
நுகர்ந்திருத்தல் 1
நுகர்வே 5
நுகர 1
நுகரும் 1
நுங்கட்கு 1
நுசுப்பினள் 1
நுசுப்பினை 1
நுசுப்பு 2
நுசுப்போடு 1
நுடங்க 2
நுடங்கி 2
நுடங்கு 1
நுடங்கும் 1
நுண் 14
நுண்_தொடர் 1
நுண்ணிதின் 1
நுண்பொருள் 1
நுணுகலும் 1
நுதல் 19
நுதலோன் 1
நுந்தை 2
நும் 17
நும்மை 1
நும்மொடு 1
நுமக்கு 1
நுரை 1
நுவலப்படுவன 1
நுவலும் 1
நுவறல் 1
நுழை 5
நுழைகல்லா 1
நுழைந்த 1
நுழைந்து 2
நுழைபு 1
நுழையா 1
நுளையர் 1
நுனித்த 1
நுனித்தனர் 1
நுனிப்போர் 1
நுனை 2

நுகம் (1)

படு நுகம் பூணாய் பகடே மன்னர் – சிலப்.வஞ்சி 27/228

மேல்


நுகர்ச்சி (12)

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி 30/91
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி 30/109
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி 30/110
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி
பேதைமை மீள செய்கை மீளும் – மணி 30/118,119
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி 30/124
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் – மணி 30/125
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன – மணி 30/139
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி 30/143
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி 30/149
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/173
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி 30/189
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/210,211

மேல்


நுகர்தல் (1)

நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை – மணி 30/90,91

மேல்


நுகர்ந்திருத்தல் (1)

ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி 14/38,39

மேல்


நுகர்வே (5)

வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 24/106
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 30/46
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி 30/90
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி 30/164
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி 30/180

மேல்


நுகர (1)

இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/103,104

மேல்


நுகரும் (1)

தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/196,197

மேல்


நுங்கட்கு (1)

முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – சிலப்.புகார் 0/45

மேல்


நுசுப்பினள் (1)

கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – சிலப்.புகார் 8/91

மேல்


நுசுப்பினை (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி 10/30

மேல்


நுசுப்பு (2)

நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/88
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/7

மேல்


நுசுப்போடு (1)

இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/38

மேல்


நுடங்க (2)

இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – சிலப்.மது 17/93
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175

மேல்


நுடங்கி (2)

நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/88
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/93,94

மேல்


நுடங்கு (1)

குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – சிலப்.மது 14/70

மேல்


நுடங்கும் (1)

ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – சிலப்.மது 15/217,218

மேல்


நுண் (14)

கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – சிலப்.புகார் 5/17
நுண் வினை கம்மியர் காணா மரபின – சிலப்.புகார் 5/106
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – சிலப்.புகார் 10/120
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – சிலப்.மது 14/182
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – சிலப்.மது 16/106
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/39
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/25
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – சிலப்.மது 22/21
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/57
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் – மணி 3/121
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி 5/81
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி 28/52

மேல்


நுண்_தொடர் (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99

மேல்


நுண்ணிதின் (1)

நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி 29/46

மேல்


நுண்பொருள் (1)

நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி 29/42

மேல்


நுணுகலும் (1)

தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/17

மேல்


நுதல் (19)

பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/41
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து – சிலப்.புகார் 2/55
பவள வாள் நுதல் திலகம் இழப்ப – சிலப்.புகார் 4/54
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – சிலப்.புகார் 8/96
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – சிலப்.மது 11/214
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – சிலப்.மது 12/55
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/77
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – சிலப்.மது 14/7
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – சிலப்.மது 14/143
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – சிலப்.மது 23/35
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/79,80
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – சிலப்.வஞ்சி 25/109
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி 1/54
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/119,120
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி 20/43
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி 21/180
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/89
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி 23/62
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி 25/233

மேல்


நுதலோன் (1)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/109

மேல்


நுந்தை (2)

கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/85,86
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – சிலப்.வஞ்சி 30/174

மேல்


நும் (17)

செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – சிலப்.புகார் 10/239
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/125
நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/17
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – சிலப்.மது 16/73,74
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – சிலப்.வஞ்சி 25/152
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/92
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/94
சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி 5/52
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி 11/137
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/66
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி 14/39
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி 25/100
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி 26/8

மேல்


நும்மை (1)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/98

மேல்


நும்மொடு (1)

நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – சிலப்.வஞ்சி 25/152

மேல்


நுமக்கு (1)

தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139

மேல்


நுரை (1)

நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – சிலப்.மது 22/21

மேல்


நுவலப்படுவன (1)

நுவலப்படுவன நோய் ஆகும்மே – மணி 30/182

மேல்


நுவலும் (1)

கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – சிலப்.புகார் 6/132,133

மேல்


நுவறல் (1)

அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது – மணி 29/166,167

மேல்


நுழை (5)

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – சிலப்.மது 14/182
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – சிலப்.மது 14/205
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – சிலப்.வஞ்சி 28/18
சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி 3/86
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி 4/5

மேல்


நுழைகல்லா (1)

கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி 28/52

மேல்


நுழைந்த (1)

சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி 12/66

மேல்


நுழைந்து (2)

கோல சாளர குறும் கண் நுழைந்து
வண்டொடு புக்க மண வாய் – சிலப்.புகார் 2/23,24
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்தி பள்ளி – சிலப்.புகார் 10/35,36

மேல்


நுழைபு (1)

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி 4/5

மேல்


நுழையா (1)

விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா
பசும் கொடி படாகை பந்தர் நீழல் – சிலப்.மது 14/215,216

மேல்


நுளையர் (1)

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – சிலப்.புகார் 7/207

மேல்


நுனித்த (1)

நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி 27/180

மேல்


நுனித்தனர் (1)

நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி 19/38

மேல்


நுனிப்போர் (1)

நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர்
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் – மணி 19/80,81

மேல்


நுனை (2)

கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – சிலப்.மது 14/129
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி 18/163,164

மேல்