கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூ 5
மூ_வகை 1
மூ_அறு 1
மூ_உலகும் 2
மூங்கிலும் 1
மூட்டிய 1
மூடையொடு 1
மூத்தோர் 1
மூதறிவு 1
மூதறிவு_ஆட்டி 1
மூதில் 1
மூதூர் 31
மூதூர்க்கு 1
மூதை 1
மூரல் 1
மூரலர் 1
மூரலும் 1
மூவர்க்கும் 1
மூவரும் 1
மூவருள்ளும் 3
மூவா 5
மூழ்க 2
மூழ்கி 3
மூழ்கும் 1
மூன்றின் 2
மூன்று 6
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மூ (5)
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – புகார்:5/176
மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – புகார்:8/42
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – மது:13/110
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – மது:17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – மது:17/143
மூ_வகை (1)
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – மது:13/110
மூ_அறு (1)
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – புகார்:5/176
மூ_உலகும் (2)
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – மது:17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – மது:17/143
மூங்கிலும் (1)
பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும்
வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – மது:11/76,77
மூட்டிய (1)
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – மது:16/33
மூடையொடு (1)
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு
கூலம் குவித்த கூல வீதியும் – மது:14/210,211
மூத்தோர் (1)
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – மது:21/54
மூதறிவு (1)
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – மது:12/51
மூதறிவு_ஆட்டி (1)
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – மது:12/51
மூதில் (1)
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – புகார்:5/75
மூதூர் (31)
ஆரம் கண்ணி சோழன் மூதூர்
பேரா சிறப்பின் புகார் நகரத்து – புகார்:0/12,13
அதிரா சிறப்பின் மதுரை மூதூர்
கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – புகார்:0/39,40
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – புகார்:4/20
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – புகார்:6/34
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – புகார்:6/111
மதுரை மூதூர் யாது என வினவ – புகார்:10/41
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – புகார்:10/51
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – புகார்:10/252
மதுரை மூதூர் மா நகர் போந்தது – மது:11/188
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – மது:13/66
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – மது:13/133,134
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – மது:13/196
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – மது:14/82
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – மது:15/6
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – மது:15/8
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – மது:15/116
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – மது:23/208
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – வஞ்சி:25/77
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – வஞ்சி:27/61
செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – வஞ்சி:27/87
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – வஞ்சி:27/131,132
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – வஞ்சி:28/4,5
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – வஞ்சி:28/49
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – வஞ்சி:28/85
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – வஞ்சி:28/196
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – வஞ்சி:28/206
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – வஞ்சி:28/218
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – வஞ்சி:30/109
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – வஞ்சி:30/127
வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை – வஞ்சி:30/173
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – வஞ்சி:30/207
மூதூர்க்கு (1)
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – வஞ்சி:28/40
மூதை (1)
மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை
வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல் – புகார்:9/81,82
மூரல் (1)
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – மது:12/53
மூரலர் (1)
முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – புகார்:1/61,62
மூரலும் (1)
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – வஞ்சி:28/24,25
மூவர்க்கும் (1)
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – புகார்:0/61
மூவரும் (1)
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – வஞ்சி:29/67
மூவருள்ளும் (3)
முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – புகார்:10/249,250
முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – மது:23/205,206
முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – வஞ்சி:30/203,204
மூவா (5)
மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – புகார்:2/46
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – புகார்:9/35
முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – மது:17/127
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – வஞ்சி:30/86
முலை_முகம் திருகிய மூவா மேனி – வஞ்சி:30/150
மூழ்க (2)
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – மது:18/34,35
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – மது:18/42,43
மூழ்கி (3)
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – புகார்:9/59,60
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – மது:18/39
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – மது:19/44
மூழ்கும் (1)
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – மது:18/43
மூன்றின் (2)
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – புகார்:3/9
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – மது:11/126,127
மூன்று (6)
மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – புகார்:3/151
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – புகார்:10/194
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – மது:11/1
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – மது:11/97
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – வஞ்சி:27/165
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136