கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 11
தூ_மொழி 1
தூஉய் 3
தூக்காது 1
தூக்கி 1
தூக்கும் 3
தூக்கே 1
தூங்க 1
தூங்கு 4
தூசும் 1
தூண் 5
தூண்_அகத்து 1
தூண்டிலும் 1
தூதர் 1
தூதன் 2
தூது 3
தூபம் 1
தூம 1
தூய் 1
தூய 1
தூர்க்கும் 1
தூரத்து 1
தூவி 4
தூவியின் 1
தூவு-மின் 1
தூற்ற 4
தூற்றும் 2
தூற்றுவதை 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தூ (11)
தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – புகார்:5/155
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – புகார்:6/90
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – புகார்:6/101
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – புகார்:8/70
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – புகார்:10/6
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/83
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – மது:15/134
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – மது:16/50
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – மது:17/45
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – மது:22/126
தூ_மொழி (1)
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – புகார்:9/36,37
தூக்காது (1)
தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – புகார்:7/220
தூக்கி (1)
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – வஞ்சி:26/235,236
தூக்கும் (3)
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்தும்-காலை – புகார்:3/16,17
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – புகார்:10/258
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும்
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – மது:14/150,151
தூக்கே (1)
பண்ணே பாணி தூக்கே முடமே – புகார்:3/46
தூங்க (1)
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – வஞ்சி:26/235
தூங்கு (4)
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – புகார்:9/20
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – வஞ்சி:25/17
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – வஞ்சி:27/220
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136
தூசும் (1)
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – புகார்:5/18
தூண் (5)
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – புகார்:1/50
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:3/108
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – புகார்:3/132
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – புகார்:3/133
மல்லின் காண மணி தூண் காட்டி – மது:16/198
தூண்_அகத்து (1)
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து
நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – புகார்:1/50,51
தூண்டிலும் (1)
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – மது:15/211
தூதர் (1)
தூதர் கோலத்து வாயிலின் இருந்து – மது:16/190
தூதன் (2)
இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – புகார்:8/9
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/115
தூது (3)
நடந்த அடி பஞ்சவர்க்கு தூது ஆக நடந்த அடி – மது:17/141
படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – மது:17/155,156
சிதர் அரி பரந்த செழும் கடை தூது
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – வஞ்சி:28/20,21
தூபம் (1)
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – மது:20/23
தூம (1)
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – புகார்:2/91
தூய் (1)
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – வஞ்சி:24/25
தூய (1)
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – புகார்:9/28,29
தூர்க்கும் (1)
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/138
தூரத்து (1)
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – வஞ்சி:30/181,182
தூவி (4)
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – புகார்:1/64,65
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – மது:12/33
தூவி துறைபடிய போயினாள் மேவி – மது:18/5
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – வஞ்சி:28/62
தூவியின் (1)
துணை புணர் அன்ன தூவியின் செறித்த – புகார்:4/66
தூவு-மின் (1)
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின்
ஒரு முலை இழந்த நங்கைக்கு – வஞ்சி:24/20,21
தூற்ற (4)
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – புகார்:4/18,19
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – மது:18/36
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – மது:19/45
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – மது:19/49
தூற்றும் (2)
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – மது:19/28
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – மது:23/34
தூற்றுவதை (1)
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/132
தூஉய் (3)
நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – புகார்:9/2
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – புகார்:9/43
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய்
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – வஞ்சி:28/5,6