நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஞெகிழ்ந்தனனாய் (1)
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய்
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/227,228
ஞெகிழ்பு (1)
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – புகார்:10/122
ஞெகிழம் (1)
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – மது:18/25,26
ஞெகிழாமல் (1)
காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/63,64
ஞெமிர் (1)
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – வஞ்சி:28/157

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)