Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞாட்பும் (1)

கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – வஞ்சி:26/237

TOP


ஞாயிலும் (1)

ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – மது:15/217

TOP


ஞாயிற்று (3)

செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – மது:11/2
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – மது:15/203
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – வஞ்சி:29/3,4

TOP


ஞாயிறு (2)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – புகார்:1/4
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – புகார்:1/4

TOP


ஞாயிறும் (1)

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – மது:11/43

TOP


ஞாலத்து (4)

மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – புகார்:5/163
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – புகார்:7/234
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – வஞ்சி:28/151
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/202

TOP


ஞாலம் (14)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – புகார்:2/3
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – புகார்:2/30
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – மது:19/31
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – மது:22/52
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/42
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – வஞ்சி:26/52
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/105
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – வஞ்சி:26/155
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – வஞ்சி:26/173
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – வஞ்சி:27/10
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – வஞ்சி:27/51,52
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – வஞ்சி:27/143
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – வஞ்சி:28/66
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – வஞ்சி:28/127

TOP


ஞாலமோ (1)

ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – புகார்:7/218

TOP


ஞாழல் (1)

கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – புகார்:7/50

TOP


ஞான் (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – புகார்:6/99

TOP


ஞான்று (2)

மணிமேகலை என வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு – மது:15/39,40
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – மது:23/134,135

TOP


ஞான (3)

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – புகார்:10/194,195
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – மது:12/102
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – மது:15/42

TOP