Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடக்கும் 1
கிடக்கை 2
கிடக்கையின் 2
கிடக்கையும் 1
கிடங்கும் 1
கிடந்த 18
கிடந்து 1
கிடந்தேன் 1
கிடந்தோர் 1
கிடந்தோன் 2
கிடப்பதோ 3
கிடுகின் 1
கிடையினும் 1
கிணற்று 1
கிணை 2
கிணை_நிலை 1
கிம்புரி 1
கிரியின் 1
கிழங்கு 1
கிழத்தி 6
கிழத்தியர் 1
கிழத்தியும் 1
கிழத்தீ 1
கிழமையான் 1
கிழமையின் 1
கிழமையும் 1
கிழவன் 3
கிழவனும் 1
கிழவனொடு 1
கிழவோற்கு 1
கிழாரும் 1
கிழான் 1
கிழித்த 4
கிழித்து 2
கிழியினும் 1
கிள்ளியொடு 1
கிள்ளையும் 1
கிளர் 14
கிளர்ந்து 1
கிளவி 1
கிளவிக்கு 1
கிளவியர் 1
கிளவியால் 1
கிளவியின் 2
கிளவியும் 2
கிளி 2
கிளிச்சிறை 1
கிளியும் 1
கிளியே 1
கிளை 6
கிளைகட்கு 1
கிளைகட்கும் 1
கிளைகள்-தம்மொடு 1
கிளைஞரின் 1
கிளையில் 2
கிளையும் 2
கிளையுள் 1
கிளையை 1
கிளைவழி 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிடக்கும் (1)

மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – மது:11/147

TOP


கிடக்கை (2)

பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – புகார்:10/87,88
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/218

TOP


கிடக்கையின் (2)

நீடி கிடந்த கேள்வி கிடக்கையின்
இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு – புகார்:3/89,90
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின்
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – மது:15/70,71

TOP


கிடக்கையும் (1)

வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும்
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – மது:11/77,78

TOP


கிடங்கும் (1)

மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – மது:15/207

TOP


கிடந்த (18)

சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – புகார்:2/28
வன்மையின் கிடந்த தார பாகமும் – புகார்:3/72
மென்மையின் கிடந்த குரலின் பாகமும் – புகார்:3/73
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – புகார்:3/89
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – புகார்:3/113
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – புகார்:10/95
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – புகார்:10/261
ஒரு பரிசா நோக்கி கிடந்த
புகார் காண்டம் முற்றிற்று – புகார்:10/267,268
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – மது:11/40
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – மது:11/69
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – மது:11/74
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – மது:11/90
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – மது:11/168
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – மது:14/62,63
நோக்கி கிடந்த
மதுரை காண்டம் முற்றிற்று – மது:23/220,221
காசறை திலக கரும் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – வஞ்சி:28/27,28
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று – வஞ்சி:30/217
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – வஞ்சி:30/229,230

TOP


கிடந்து (1)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – மது:16/141

TOP


கிடந்தேன் (1)

வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன்
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – புகார்:0/41,42

TOP


கிடந்தோர் (1)

தலையும் தோளும் விலைபெற கிடந்தோர்
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – வஞ்சி:27/28,29

TOP


கிடந்தோன் (2)

ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன்
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/51,52
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன்
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – வஞ்சி:30/134,135

TOP


கிடப்பதோ (3)

பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – மது:19/40,41
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – மது:19/44,45
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – மது:19/48,49

TOP


கிடுகின் (1)

ஏன படமும் கிடுகின் படமும் – மது:14/172

TOP


கிடையினும் (1)

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – புகார்:5/33

TOP


கிணற்று (1)

மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/18,19

TOP


கிணை (2)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – புகார்:10/138
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – மது:13/148

TOP


கிணை_நிலை (1)

கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – மது:13/148

TOP


கிம்புரி (1)

கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – புகார்:5/150

TOP


கிரியின் (1)

நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – வஞ்சி:26/85

TOP


கிழங்கு (1)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – புகார்:10/68

TOP


கிழத்தி (6)

வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி
மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – புகார்:2/84,85
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – மது:15/165,166
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – மது:23/13
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – வஞ்சி:27/101
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – வஞ்சி:28/183
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – வஞ்சி:29/51

TOP


கிழத்தியர் (1)

பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – மது:22/133

TOP


கிழத்தியும் (1)

இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – மது:13/57,58

TOP


கிழத்தீ (1)

மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – மது:15/173

TOP


கிழமையான் (1)

கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – புகார்:1/39

TOP


கிழமையின் (1)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – புகார்:2/89

TOP


கிழமையும் (1)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும்
கோடி விளரி மேல்_செம்பாலை என – புகார்:3/87,88

TOP


கிழவன் (3)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – புகார்:1/34
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன்
முந்தை நில்லா முனிவு இகந்தனனா – மது:16/75,76
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – மது:22/86

TOP


கிழவனும் (1)

இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – மது:13/57

TOP


கிழவனொடு (1)

வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – மது:11/62

TOP


கிழவோற்கு (1)

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – வஞ்சி:27/171

TOP


கிழாரும் (1)

ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – புகார்:10/110

TOP


கிழான் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11

TOP


கிழித்த (4)

பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – மது:20/52
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – வஞ்சி:28/12
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – வஞ்சி:28/13
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – வஞ்சி:28/14

TOP


கிழித்து (2)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – மது:12/55
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – மது:23/188

TOP


கிழியினும் (1)

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – புகார்:5/33

TOP


கிள்ளியொடு (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – வஞ்சி:27/118

TOP


கிள்ளையும் (1)

கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும்
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – வஞ்சி:25/54,55

TOP


கிளர் (14)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/4
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – புகார்:5/150
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – புகார்:6/88
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – புகார்:6/96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – புகார்:6/96
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – புகார்:8/101
அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – புகார்:10/9
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – புகார்:10/21
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – மது:11/49
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – மது:14/204
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – மது:22/86
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – வஞ்சி:24/13
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – வஞ்சி:27/33
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – வஞ்சி:30/19

TOP


கிளர்ந்து (1)

கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – புகார்:8/101

TOP


கிளவி (1)

வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – மது:13/88

TOP


கிளவிக்கு (1)

மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும் – புகார்:2/59

TOP


கிளவியர் (1)

அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – வஞ்சி:27/250

TOP


கிளவியால் (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால்
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – புகார்:7/220,221

TOP


கிளவியின் (2)

புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – புகார்:8/98,99
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – புகார்:10/40

TOP


கிளவியும் (2)

கிளி புரை கிளவியும் மட அன நடையும் – புகார்:8/86
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – மது:14/139,140

TOP


கிளி (2)

கிளி புரை கிளவியும் மட அன நடையும் – புகார்:8/86
குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – வஞ்சி:24/1

TOP


கிளிச்சிறை (1)

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – மது:14/201

TOP


கிளியும் (1)

பாவையும் கிளியும் தூவி அம் சிறை – மது:12/33

TOP


கிளியே (1)

அளிய தாமே சிறு பசும் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – புகார்:2/57,58

TOP


கிளை (6)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – புகார்:3/74
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – புகார்:3/78
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – புகார்:7/11
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – புகார்:8/33
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – மது:12/68,69
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு – மது:22/141

TOP


கிளைகட்கு (1)

என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – புகார்:8/103

TOP


கிளைகட்கும் (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து – மது:15/88,89

TOP


கிளைகள்-தம்மொடு (1)

கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – வஞ்சி:27/33

TOP


கிளைஞரின் (1)

பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து – மது:15/89

TOP


கிளையில் (2)

இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – புகார்:7/208
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – புகார்:7/209

TOP


கிளையும் (2)

கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும்
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – புகார்:3/77,78
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் – மது:14/166

TOP


கிளையுள் (1)

நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – வஞ்சி:27/29

TOP


கிளையை (1)

குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/74

TOP


கிளைவழி (2)

கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும் – புகார்:3/77
ஏனை மகளிரும் கிளைவழி சேர – புகார்:3/79

TOP