Select Page

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

மோக்கலும் (1)

விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/8
TOP


மோகூர் (4)

பழையன் மோகூர் அவை_அகம் விளங்க – மது 508
மோகூர் மன்னன் முரசம் கொண்டு – பதி 44/14
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்/வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/8,9
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்/பணியாமையின் பகை தலைவந்த – அகம் 251/10,11
TOP


மோசி (1)

மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று – புறம் 158/13
TOP


மோசை (1)

மெல் விரல் மோசை போல காந்தள் – நற் 188/4
TOP


மோட்ட (1)

பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38
TOP


மோட்டு (13)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு/உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 50,51
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு/துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு – பெரும் 458,459
மோட்டு எருமை முழு_குழவி – பட் 14
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/5
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை – நற் 159/3
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி – அகம் 10/11
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை – அகம் 130/4
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை – புறம் 399/5
TOP


மோதகம் (1)

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்/தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 626,627
TOP


மோதி (1)

மத்திகை மாலையா மோதி அவையத்து – பரி 20/61
TOP


மோதிரம் (2)

மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் – கலி 84/23
TOP


மோந்தனன் (1)

விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்/நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/8,9
TOP


மோந்து (1)

திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து – மது 567
TOP


மோயினள் (1)

மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/24
TOP


மோர் (4)

நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து – பெரும் 306
இன் புளி கலந்து மா மோர் ஆக – மலை 179
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11
TOP


மோரியர் (4)

விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்/பொன் புனை திகிரி திரிதர குறைத்த – அகம் 69/10,11
மா கெழு தானை வம்ப மோரியர்/புனை தேர் நேமி உருளிய குறைத்த – அகம் 251/12,13
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்/தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/8,9
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்/திண் கதிர் திகிரி திரிதர குறைத்த – புறம் 175/6,7
TOP


மோரோடமொடு (1)

நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய – நற் 337/5
TOP


மோரோடமோடு (1)

பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/2
TOP


மோரோடு (1)

மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் – கலி 109/7
TOP


மோவாய் (3)

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/2
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்/செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு – புறம் 257/3,4
TOP


மோழைமை (1)

கூழை உளர்ந்து மோழைமை கூறவும் – அகம் 207/15
TOP