சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
அறாஅ
யாணர் அகன் தலை பேர் ஊர் | இடையறாத
(செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து, |
சாறு
கழி வழி நாள் சோறு நசையுறாது | விழாக்கழிந்த
அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது, |
வேறு
புலம் முன்னிய விரகு அறி பொருந | வேற்றுப்புலத்தை
எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே, |
குளப்பு
வழி அன்ன கவடு படு பத்தல் | (மானின்)குளம்பு
(பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து
நடுவுயர்ந்த)பத்தலினையும்; |
விளக்கு
அழல் உருவின் விசியுறு பச்சை 5 | விளக்குப்
பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய
தோல், 5 |
எய்யா
இளம் சூல் செய்யோள் அம் வயிற்று | (பிறரால்
நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல் |
ஐது
மயிர் ஒழுகிய தோற்றம் போல | மென்மையாகிய
மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல, |
பொல்லம்
பொத்திய பொதியுறு போர்வை | இரண்டு
தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்; |
அளை
வாழ் அலவன் கண் கண்டு அன்ன | வளையில்
வாழ்கின்ற நண்டின் கண்னைக் கண்டது போன்ற |
துளை
வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி 10 | (பத்தலிரண்டும்
சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்; 10 |
எண்
நாள் திங்கள் வடிவிற்று ஆகி | (உவாவிற்கு)எட்டாம்
நாள் (தோன்றும்)திங்களின் வடிவினையுடையது ஆகி, |
அண்நா
இல்லா அமைவரு வறு வாய் | உள்நாக்கு
இல்லாத (நன்றாக)அமைதல் பொருந்திய வறிய வாயினையும்; |
பாம்பு
அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் | பாம்பு
தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்; |
மாயோள்
முன்கை ஆய் தொடி கடுக்கும் | கருநிறப்பெண்ணின்
முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும், |
கண்கூடு
இருக்கை திண் பிணி திவவின் 15 | (ஒன்றோடொன்று)நெருங்கின
இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்; 15 |
ஆய்
தினை அரிசி அவையல் அன்ன | ஆய்ந்தெடுத்த
தினை அரிசியின் குற்றலைப் போன்ற |
வேய்வை
போகிய விரல் உளர் நரம்பின் | (யாழ்
நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின் |
கேள்வி
போகிய நீள் விசி தொடையல் | இசை
முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும், |
மணம்
கமழ் மாதரை மண்ணீ அன்ன | (புது)மணக்கோலம்
பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற, |
அணங்கு
மெய் நின்ற அமைவரு காட்சி 20 | (யாழ்க்குரிய)தெய்வம்
நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய, 20 |
ஆறலை
கள்வர் படை விட அருளின் | வழி(ப்போவாரை)
அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின் |
மாறு
தலைபெயர்க்கும் மருவு இன் பாலை | மாறாகிய
மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை – |
வாரியும்
வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் | (நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும்,
(பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும், |
சீர்
உடை நன் மொழி நீரொடு சிதறி | சீர்களை
உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி – |
அறல்
போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் 25 | (ஆற்றின்)அறல்
போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும், 25 |
கொலை
வில் புருவத்து கொழும் கடை மழை கண் | கொலை
செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடையையுடைய குளிர்ச்சியுள்ள
கண்ணினையும், |
இலவு
இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் | இலவின்
இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும், |
பல
உறு முத்தின் பழி தீர் வெண் பல் | பலவும்
சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும், |
மயிர்
குறை கருவி மாண் கடை அன்ன | மயிரைக்
குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும், |
பூ
குழை ஊசல் பொறை சால் காதின் 30 | பொலிவினையுடைய
மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும், 30 |
நாண்
அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் | நாணம்
(தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும், |
ஆடு
அமை பணை தோள் அரி மயிர் முன்கை | அசைகின்ற
மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும், |
நெடு
வரை மிசைய காந்தள் மெல் விரல் | நெடிய
மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும், |
கிளி
வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் | கிளியின்
வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும், |
அணங்கு
என உருத்த சுணங்கு அணி ஆகத்து 35 | (பிறர்க்கு)வருத்தம்
எனத் தோற்றின தேமல் அணிந்த மார்பினில் 35 |
ஈர்க்கு
இடை போகா ஏர் இள வன முலை | ஈர்க்கு(ம்)
நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலையினையும், |
நீர்
பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் | நீரிடத்துப்
பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும், |
உண்டு
என உணரா உயவும் நடுவின் | உண்டென்று
பிறரால் உணரப்படாத வருந்துகின்ற இடையினையும், |
வண்டு
இருப்பு அன்ன பல் காழ் அல்குல் | (பல)வண்டினங்களின்
இருப்பை ஒத்த பலமணி (கோத்த வடங்களையுடைய மேகலை அணிந்த)அல்குலையும், |
இரும்
பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்
40 | பெரிய பெண்
யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும், 40 |
பொருந்து
மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப | பொருந்தின
மயிர் ஒழுங்குபட்ட திருத்தமான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த |
வருந்து
நாய் நாவின் பெரும் தகு சீறடி | ஓடியிளைத்த
நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில்
ஏற்பட்ட)- |
அரக்கு
உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் | சாதிலிங்கத்தை
உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால் |
பரல்
பகை உழந்த நோயொடு சிவணி | பரல்
கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி, |
மரல்
பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் 45 | மரல்
பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும், 45 |
நன்
பகல் அந்தி நடை இடை விலங்கலின் | நல்ல
உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால் |
பெடை
மயில் உருவின் பெரும் தகு பாடினி | பெடை
மயிலின் சாயலினையும் உடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி |
பாடின
பாணிக்கு ஏற்ப நாள்தொறும் | பாடின
தாளத்திற்கு ஏற்ப, நாள்தோறும் |
களிறு
வழங்கு அதர கானத்து அல்கி | யானை
உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி, |
இலை
இல் மராத்த எவ்வம் தாங்கி 50 | இலையில்லாத
மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50 |
வலை
வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில் | வலையைப்
போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில், |
காடு
உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை | காட்டில்
தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு – |
பீடு
கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் | பெருமை
பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும், |
முரசு
முழங்கு தானை மூவரும் கூடி | முரசு
முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து |
அரசவை
இருந்த தோற்றம் போல 55 | (திருவோலக்க
மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல – 55 |
பாடல்
பற்றிய பயன் உடை எழாஅல் | (பல்வேறுவகைப்)பாடல்களையும்
பற்றி(த் தோன்றும்) இசைப்பயனையுடைய யாழை உடைய |
கோடியர்
தலைவ கொண்டது அறிந | கூத்தர்கட்குத்
தலைவனே, (பிறர் மனத்துக்)கொண்டதை(க் குறிப்பால்) அறிய வல்லோய், |
அறியாமையின்
நெறி திரிந்து ஒராஅது | (வழி)அறியாமையினால்
(இவ்)வழியைத் தப்பி (வேறொரு வழியில்) போகாமல், |
ஆற்று
எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே | இவ்வழிக்கண்
(என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே, |
போற்றி
கேள்மதி புகழ் மேம்படுந 60 | விரும்பிக்
கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய், 60 |
ஆடு
பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு | கொல்லுகின்ற
பசியால் வருந்தின உன் கரிய பெரிய சுற்றத்தோடு, |
நீடு
பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று | நீடித்த
நாட்களாய் இருக்கும் பசி (உன்னை)விட்டு நீங்குதலை விரும்பினால், கால நீட்டித்தல்
இன்றி |
எழுமதி
வாழி ஏழின் கிழவ | எழுவாயாக,
நீ வாழ்வாயாக, (நரம்பு)ஏழின் கண்ணும் உரிமை உடையோய், |
பழு
மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் | பழுத்த
மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல, யானும், அவனுடைய |
இழுமென்
சும்மை இடன் உடை வரைப்பின் 65 | இழுமென்றெழும்
ஓசையினையுடைய (அகலமான)வெளியை உடைய மதிலில், 65 |
நசையுநர்
தடையா நன் பெரு வாயில் | விரும்பி
வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள் |
இசையேன்
புக்கு என் இடும்பை தீர | (வாயிலோனுக்குக்)கூறாமற்
புகுந்து, என்னுடைய துன்பம் தீர, |
எய்த்த
மெய்யேன் எய்யேன் ஆகி | இளைத்த
உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி, |
பைத்த
பாம்பின் துத்தி ஏய்ப்ப | படம்
விரித்த பாம்பினது பொறியை ஒப்ப, |
கை
கசடு இருந்த என் கண் அகன் தடாரி 70 | கை அழுக்கு
இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் (தோற்றுவித்த) 70 |
இரு
சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் | இரட்டைத்
தாளத்திற்கு ஏற்ப, விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய |
வெள்ளி
முளைத்த நள் இருள் விடியல் | வெள்ளி
எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே, |
ஒன்று
யான் பெட்டா அளவையின் ஒன்றிய | ஒரு
பாட்டினை யான் பேணிப் பாடி முடிக்கும் முன்னே – (தன்னோடு)பொருந்திய |
கேளிர்
போல கேள் கொளல் வேண்டி | உறவினரைப்
போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி, |
வேளாண்
வாயில் வேட்ப கூறி
75 | (தன்)உபசரிப்பிற்கு
வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து, 75 |
கண்ணில்
காண நண்ணு வழி இரீஇ | (தன்)கண்ணில்
படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி, |
பருகு
அன்ன அருகா நோக்கமோடு | (என்னைக்)கண்ணால்
விழுங்குவது போன்ற குறையாத பார்வையால், |
உருகுபவை
போல் என்பு குளிர் கொளீஇ | உருக்கக்கூடிய(வெண்ணெய்
முதலிய)வை போன்று (என்)எலும்பு(ம்) (நெகிழும்படி)குளிர் மூட்டி, |
ஈரும்
பேனும் இருந்து இறைகூடி | ஈரும்
பேனும் இருந்து ஆட்சிசெய்து, |
வேரொடு
நனைந்து வேற்று இழை நுழைந்த 80 | வேர்வையால்
நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு 80 |
துன்னல்
சிதாஅர் துவர நீக்கி | தைத்தல்
(உடைய)கந்தையை முழுதும் போக்கி, |
நோக்கு
நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து | பார்வை
நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும், |
அரவு
உரி அன்ன அறுவை நல்கி | (மென்மையால்)பாம்பின்
தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி, |
மழை
என மருளும் மகிழ் செய் மாடத்து | முகில்களோ
என்று மருளுதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில், |
இழை
அணி வனப்பின் இன் நகை மகளிர் 85 | இழைகளை
அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர், 85 |
போக்கு
இல் பொலம் கலம் நிறைய பல் கால் | குற்றம்
அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும் |
வாக்குபு
தரத்தர வருத்தம் வீட | வார்த்துத்
தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி, |
ஆர
உண்டு பேர் அஞர் போக்கி | நிறைய
உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி, |
செருக்கொடு
நின்ற காலை மற்று அவன் | மகிழ்ச்சியோடே
(யான்)நின்ற போது – மேலும், அம் மன்னனுடைய |
திரு
கிளர் கோயில் ஒரு சிறை தங்கி
90 | செல்வம்
விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, 90 |
தவம்
செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது | (மிக்க)தவத்தைச்
செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே |
அதன்
பயம் எய்திய அளவை மான | (இம்மை
உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப, |
ஆறு
செல் வருத்தம் அகல நீக்கி | வழிபோன
வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி, |
அனந்தர்
நடுக்கம் அல்லது யாவதும் | கள்ளின்
செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு |
மனம்
கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
95 | மனக்கவர்ச்சி
(சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து, 95 |
மாலை
அன்னதோர் புன்மையும் காலை | (முந்திய)மாலையில்
(என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில் |
கண்டோர்
மருளும் வண்டு சூழ் நிலையும் | கண்டோர்
மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், |
கனவு
என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப | கனவோ என்று
கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி, |
வல்
அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப | வலிய
வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும், |
கல்லா
இளைஞர் சொல்லி காட்ட 100 | (அரச
முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற,
100 |
கதுமென
கரைந்து வம் என கூஉய் | விரைவாக
அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி, |
அதன்
முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து | அரசனைக்
காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், காலமறிந்து, |
துராஅய்
துற்றிய துருவை அம் புழுக்கின் | அறுகம்
புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய
புழுக்கப்பட்ட(இறைச்சியின்) |
பராஅரை
வேவை பருகு என தண்டி | பெரிய
(மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி, |
காழின்
சுட்ட கோழ் ஊன் கொழு குறை 105 | இரும்புக்
கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத்
துண்டுகளை 105 |
ஊழின்ஊழின்
வாய் வெய்து ஒற்றி | மாற்றி
மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து, |
அவையவை
முனிகுவம் எனினே சுவைய | புழுக்கினவும்
சுட்டனவும் ஆகிய அவற்றை(த் திகட்டிப்போய்) வெறுக்கிறோம் என்கையில், இனிமையுடைய |
வேறு
பல் உருவின் விரகு தந்து இரீஇ | வெவ்வேறான
பல வடிவினையுடைய தின்பண்டங்களைக் கொணர்ந்து (எங்களை)இருத்தி, |
மண்
அமை முழவின் பண் அமை சீறியாழ் | மார்ச்சனை
அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய |
ஒள்
நுதல் விறலியர் பாணி தூங்க 110 | ஒளிவிடும்
நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட, 110 |
மகிழ்
பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் | (இவ்விதமாய்)மகிழ்கின்ற
செவ்வியைப் பலநாளும் பெற்றுக்கழித்து, ஒருநாள், |
அவிழ்
பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை | ‘சோற்று
உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட, (முல்லை)அரும்பின் தன்மையையுடைய |
முரவை
போகிய முரியா அரிசி | (தீட்டப்படாத
அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின் |
விரல்
என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் | விரல்
என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும், |
பரல்
வறை கருனை காடியின் மிதப்ப 115 | பருக்கைக்
கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி 115 |
அயின்ற
காலை பயின்று இனிது இருந்து | உண்டபொழுதின்,
இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து, |
கொல்லை
உழு கொழு ஏய்ப்ப பல்லே | கொல்லை
நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள் |
எல்லையும்
இரவும் ஊன் தின்று மழுங்கி | பகலும்
இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி, |
உயிர்ப்பிடம்
பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் | மூச்சு
விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து, ஒருநாள், |
செயிர்த்து
எழு தெவ்வர் திறை துறைபோகிய 120 | ‘குற்றத்தைச்
செய்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற 120 |
செல்வ
சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என | செல்வனே,
(யாங்கள்)செல்வேம் – எம்முடைய (பழைய)சுற்றத்தாரிடம், (உம்மை)விட்டு’ என்று |
மெல்லென
கிளந்தனம் ஆக வல்லே | மெதுவாகச்
சொன்னேமாக, ‘(இவ்வளவு)சீக்கிரம் |
அகறிரோ
எம் ஆயம் விட்டு என | போகின்றீரோ
(எம்)கூட்டத்தைவிட்டு’ என்று கூற |
சிரறியவன்
போல் செயிர்த்த நோக்கமொடு | வெகுண்டவனைப்
போன்று (எமக்கு)வருத்தத்தைச் செய்த பார்வையுடன், |
துடி
அடி அன்ன தூங்கு நடை குழவியொடு 125 | ‘துடி
போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், 125 |
பிடி
புணர் வேழம் பெட்டவை கொள்க என | பிடிகளைக்
கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று |
தன்
அறி அளவையின் தரத்தர யானும் | தான்
அறிந்த அளவால் தரத்தர, யானும் |
என்
அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு | யான்
அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு, |
இன்மை
தீர வந்தனென் வென் வேல் | (என்)இல்லாமை
(முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும் |
உருவ
பல் தேர் இளையோன் சிறுவன் 130 | அழகினையும்
பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன், 130 |
முருகன்
சீற்றத்து உரு கெழு குரிசில் | முருகனது
(சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன், |
தாய்
வயிற்று இருந்து தாயம் எய்தி | (தன்)தாய்
வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து), |
எய்யா
தெவ்வர் ஏவல் கேட்ப | (தன்
வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய, |
செய்யார்
தேஎம் தெருமரல் கலிப்ப | (ஏவல்)செய்யாத
பகைவர் நாடு மனக்கவற்சி பெருக, |
பவ்வமீமிசை
பகல் கதிர் பரப்பி 135 | கடல்
மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி, 135 |
வெவ்
வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு | (எல்லோராலும்)விரும்பப்படும்
வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று, |
பிறந்து
தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல் | பிறந்து
தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல |
நாடு
செகில் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப | நாட்டை(த்
தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால், |
ஆளி
நன் மான் அணங்கு உடை குருளை | சிங்கம்
(ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது – |
மீளி
மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140 | இளமை(பொங்கும்)
தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி, 140 |
முலை
கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென | முலையுண்டலைக்
கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து, |
தலை
கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு | (தன்)கன்னிவேட்டையிலேயே
களிற்றியானையைக் கொன்றாற் போன்று, |
இரும்
பனம் போந்தை தோடும் கரும் சினை | கரிய
பனையாகிய போந்தையின் மாலையினையும், கரிய கொம்பினையுடைய, |
அர
வாய் வேம்பின் அம் குழை தெரியலும் | அர(த்தின்)
வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும், |
ஓங்கு
இரும் சென்னி மேம்பட மிலைந்த 145 | உயர்ந்த
பெரிய தலையில் சிறப்பாகச் சூடிய
145 |
இரு
பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய | இரு பெரிய
மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி, |
வெண்ணி
தாக்கிய வெருவரு நோன் தாள் | வெண்ணி
என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும், |
கண்
ஆர் கண்ணி கரிகால்வளவன் | கண்-நிறைந்த
ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின், |
தாள்
நிழல் மருங்கின் அணுகுபு குறுகி | திருவடி
நிழலின் பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி |
தொழுது
முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று
150 | வணங்கி
(அவன்)முன்னே நிற்பீராயின், (உம்)வறுமை நீங்க 150 |
ஈற்று
ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் | ஈன்ற பசு
(அதன் கன்றை நோக்கும்)விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து,
உம் |
கையது
கேளா அளவை ஒய்யென | கைத்திறனை(கலையை)(த்
தான்) கேட்டு முடிவதற்கு முன்னரே, விரைந்து |
பாசி
வேரின் மாசொடு குறைந்த | பாசியின்
வேர் போல் அழுக்குடன் சுருங்கிப்போன, |
துன்னல்
சிதாஅர் நீக்கி தூய | தையலையுடைய
துணிகளை நீக்கி, தூய |
கொட்டை
கரைய பட்டு உடை நல்கி 155 | (பட்டுக்)குஞ்சம்
(உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து, 155 |
பெறல்
அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என | ‘பெறுதற்கரிய
(பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று, |
பூ
கமழ் தேறல் வாக்குபு தரத்தர | பூ
மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர, |
வைகல்வைகல்
கை கவி பருகி | தினம்
தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து, |
எரி
அகைந்து அன்ன ஏடு இல் தாமரை | நெருப்புத்
தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை, |
சுரி
இரும் பித்தை பொலிய சூட்டி 160 | சுருண்ட
கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,
160 |
நூலின்
வலவா நுணங்கு அரில் மாலை | நூலால்
கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை |
வால்
ஒளி முத்தமொடு பாடினி அணிய | வெண்மையான
ஒளியையுடைய முத்தத்தோடு பாடினி சூடத் தந்து, |
கோட்டின்
செய்த கொடுஞ்சி நெடும் தேர் | (யானைக்)கொம்பாற்
செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில், |
ஊட்டு
உளை துயல்வர ஓரி நுடங்க | (சாதிலிங்கம்)ஊட்டின
தலைச்சிறகுகள் அலையாட, பிடரி மயிர் அசையப், |
பால்
புரை புரவி நால்கு உடன் பூட்டி 165 | பாலை ஒத்த
(நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி, 165 |
காலின்
ஏழ் அடி பின் சென்று கோலின் | (தன்)காலால்
ஏழு அடி பின்னே வந்து, தார்க்குச்சியில் |
தாறு
களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு | முள்ளை
அகற்றி, ‘(இவ்வாறு)ஏறுவாயாக’ என(க்காட்டி) ஏறச்செய்து, வீறுபெற்ற |
பேர்
யாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் | யாழ்ப்பாணர்க்குக்
கொடுக்கும் முறைகளை (உனக்குத்)தந்துவிட்டு, நீர் (நன்கு)வாய்க்கப்பெற்ற |
தண்
பணை தழீஇய தளரா இருக்கை | குளிர்ந்த
வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய |
நன்
பல் ஊர நாட்டொடு நன் பல் 170 | நல்ல பல
ஊர்களையுடைய நாடுகளுடனே, நல்ல பல,
170 |
வெரூஉ
பறை நுவலும் பரூஉ பெரும் தட கை | வெருட்டும்
பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும், |
வெருவரு
செலவின் வெகுளி வேழம் | அச்சம்
தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை |
தரவு
இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை | (இவன்
பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு
வந்த)வரவின் போது |
பெற்றவை
பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென | பெற்ற
பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக |
செலவு
கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து 175 | (உமது
இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு, 175 |
நில்லா
உலகத்து நிலைமை தூக்கி | (ஒன்றும்
நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து, |
செல்க
என விடுக்குவன் அல்லன் ஒல்லென | ‘(நீயிர்)செல்வீராக’
என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத் |
திரை
பிறழிய இரும் பௌவத்து | திரை
முரிந்த கரிய கடலின் |
கரை
சூழ்ந்த அகன் கிடக்கை | கரைகள்
சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில், |
மாமாவின்
வயின்வயின் நெல் 180 | ஒவ்வொரு மா
அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் – 180 |
தாழ்
தாழை தண் தண்டலை | தாழ்ந்த
தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிடத்தே, |
கூடு
கெழீஇய குடி வயினான் | – கூடு
பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில், |
செம்
சோற்ற பலி மாந்திய | (உதிரத்தால்)சிவந்த
சோற்றையுடைய படையலை விழுங்கின |
கரும்
காக்கை கவவு முனையின் | கரிய
காக்கை அகத்தீடான உணவை வெறுத்ததாயின், |
மனை
நொச்சி நிழல் ஆங்கண் 185 | மனை(யைச்
சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,
185 |
ஈற்று
யாமை தன் பார்ப்பு ஓம்பவும் | (மணலுக்குள்
முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பின்னர் தின்பதற்காக பாதுகாத்து
வைப்பவும், |
இளையோர்
வண்டல் அயரவும் முதியோர் | இளையோர்
மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர் |
அவை
புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் | (நீதி
வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும், |
முட
காஞ்சி செம் மருதின் | முடக்காஞ்சி
மரத்திலும், செம்மருத மரத்திலும் இருந்த, |
மட
கண்ண மயில் ஆல 190 | மடப்பம்
பொருந்திய கண்ணையுடைய மயில்கள் ஆரவாரிக்க – 190 |
பைம்
பாகல் பழம் துணரிய | பசிய
பாகலான பலாப்பழத்தினுள் கொத்தாகவுள்ள, |
செம்
சுளைய கனி மாந்தி | சிவந்த
சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று – (இந்த ஆரவாரத்துடன்) |
அறை
கரும்பின் அரி நெல்லின் | அறைத்தலைச்
செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும், |
இன
களமர் இசை பெருக | திரண்ட
உழவருடைய பண்ணொலி மிகுதியாய் ஒலிப்பதால் – |
வறள்
அடும்பின் இவர் பகன்றை 195 | நீரற்ற
இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும், 195 |
தளிர்
புன்கின் தாழ் காவின் | தளிரையுடைய
புன்கினையும், தாழ்ந்த சோலைகளும், |
நனை
ஞாழலொடு மரம் குழீஇய | தளிர்விட்ட
ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள |
அவண்
முனையின் அகன்று மாறி | அந்நாட்டை
வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய், |
அவிழ்
தளவின் அகன் தோன்றி | மலர்கின்ற
செம்முல்லையினையும், பரந்த காந்தள் மலரினையும், |
நகு
முல்லை உகு தேறு வீ 200 | மலர்ந்து
சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும், 200 |
பொன்
கொன்றை மணி காயா | பொன்னிறம்
போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய, |
நல்
புறவின் நடை முனையின் | நல்ல
முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின், |
சுற
வழங்கும் இரும் பௌவத்து | சுறாமீன்
திரியும் கரிய கடலில் |
இறவு
அருந்திய இன நாரை | இறவினைத்
தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்) |
பூ
புன்னை சினை சேப்பின் 205 | பூக்களையுடைய
புன்னையின் கொம்புகளில் தங்கின்,
205 |
ஓங்கு
திரை ஒலி வெரீஇ | உயர்ந்த
அலையின் ஆரவாரத்திற்கு வெருவி, |
தீம்
பெண்ணை மடல் சேப்பவும் | இனிய
பனையின் மடலில் தங்கவும், |
கோள்
தெங்கின் குலை வாழை | கொத்துக்கொத்தான
(காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும், |
கொழும்
காந்தள் மலர் நாகத்து | கொழுவிய
காந்தளினையும், மலர்ந்த சுரபுன்னையினையும், |
துடி
குடிஞை குடி பாக்கத்து 210 | துடி(யின்
ஓசை போன்ற ஓசையையுடைய) பேராந்தையையுடைய குடி(யிருப்பை உடைய) பாக்கத்தில், 210 |
யாழ்
வண்டின் கொளைக்கு ஏற்ப | யாழ்(ஓசை
போலும்) வண்டின் பாட்டுக்கேற்ப, |
கலவம்
விரித்த மட மஞ்ஞை | தோகையை
விரித்த மடப்பத்தையுடைய மயில் (இருக்கும்) |
நிலவு
எக்கர் பல பெயர | நிலவு
(போலும்) இடுமணல் பலவற்றில் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து செல்ல, |
தேன்
நெய்யொடு கிழங்கு மாறியோர் | தேனாகிய
நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள் |
மீன்
நெய்யொடு நறவு மறுகவும் 215 | மீனின்
நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும், 215 |
தீம்
கரும்போடு அவல் வகுத்தோர் | இனிய
கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர், |
மான்
குறையொடு மது மறுகவும் | மானின்
தசையோடு கள்ளையும் மாறாகக் கொள்ளவும், |
குறிஞ்சி
பரதவர் பாட நெய்தல் | குறிஞ்சிப்பண்ணைப்
பரதவர் பாடவும், நெய்தலாகிய |
நறும்
பூ கண்ணி குறவர் சூட | நறிய
பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும், |
கானவர்
மருதம் பாட அகவர் 220 | முல்லை
நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள் 220 |
நீல்
நிற முல்லை பல் திணை நுவல | நீல
நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும், |
கானக்கோழி
கதிர் குத்த | காட்டுக்
கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும், |
மனை
கோழி தினை கவர | வீட்டுக்
கோழிகள் தினையைத் தின்னவும், |
வரை
மந்தி கழி மூழ்க | மலையின்
மந்திகள் கழியில் மூழ்கவும், |
கழி
நாரை வரை இறுப்ப 225 | கழியில்
திரியும் நாரைகள் மலையில் கிடக்கவும்,
225 |
தண்
வைப்பின் நால் நாடு குழீஇ | குளிர்ந்த
நிலப்பகுதிகளையுடைய நான்கு கூறாகிய நாடுகள் திரண்டு, |
மண்
மருங்கினான் மறு இன்றி | (இம்)மண்ணுலகத்தே,
குற்றமின்றி, |
ஒரு
குடையான் ஒன்று கூற | ஒரு
குடைக்கீழ்(ஒரே ஆட்சியில்) ஒன்றெனச் சாற்ற, |
பெரிது
ஆண்ட பெரும் கேண்மை | நெடுங்காலம்
ஆண்ட பெரிய நட்பையும், |
அறனொடு
புணர்ந்த திறன் அறி செங்கோல் 230 | அறத்தோடு
பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய, 230 |
அன்னோன்
வாழி வென் வேல் குரிசில் | அத்
தன்மையையுடையோனே (நீ)வாழ்வாயாக, வெல்கின்ற வேலையுடைய தலைவனே, |
மன்னர்
நடுங்க தோன்றி பல் மாண் | (பகை)அரசர்
நடுங்கும்படி விளங்கி, பல்வேறு மாண்புகளையுடைய |
எல்லை
தருநன் பல் கதிர் பரப்பி | பகற்பொழுதைத்
தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால், |
குல்லை
கரியவும் கோடு எரி நைப்பவும் | கஞ்சங்
குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும், |
அருவி
மா மலை நிழத்தவும் மற்று அ 235 | அருவிகள்
— பெரிய மலைகளில் — கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த 235 |
கருவி
வானம் கடல் கோள் மறப்பவும் | கூட்டமான
மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும், |
பெரு
வறன் ஆகிய பண்பு இல் காலையும் | பெரும்
பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும் – |
நறையும்
நரந்தமும் அகிலும் ஆரமும் | நறைக்கொடியும்,
நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும், |
துறைதுறைதோறும்
பொறை உயிர்த்து ஒழுகி | துறைகள்தோறும்
துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து – |
நுரை
தலை குரை புனல் வரைப்பகம் புகுதொறும் 240 | நுரையைத்
தலையில் உடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும், 240 |
புனல்
ஆடு மகளிர் கதுமென குடைய | நீராடும்
மகளிர் கடுகக் குடைந்து விளையாட – |
கூனி
குயத்தின் வாய் நெல் அரிந்து | குனிந்துநின்று,
அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச், |
சூடு
கோடு ஆக பிறக்கி நாள்தொறும் | சூட்டை
மலையாக அடுக்கி, நாள்தோறும் |
குன்று
என குவைஇய குன்றா குப்பை | மலை
என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி |
கடும்
தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் 245 | உலுக்கிக்
குலுக்கிக் கட்டிய மூடைகள் வெற்றிடம் இல்லையாகும்படி (எங்கும்)கிடக்கும், 245 |
சாலி
நெல்லின் சிறை கொள் வேலி | செந்நெல்
விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம், |
ஆயிரம்
விளையுட்டு ஆக | ஓராயிரம்
கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக – (இவ்வாறான) |
காவிரி
புரக்கும் நாடு கிழவோனே | காவிரியாறு
பாதுகாக்கும் நாட்டை உரித்தவன். |
| |