Select Page
  
# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்வெள்ளம் பெருகுமானால் அதனைத் தடுக்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தெழுந்தால்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லைஉலகத்து உயிர்களை நிழல்செய்யும் நிழலும் இல்லை;
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்குகாற்று மிகுந்தால் அதனைத் தாங்கும் வலிமையும் இல்லை; பெருமை மிகுந்து
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதிஅவற்றைப் போன்ற சினம் பொருந்திய போரையுடைய வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து        5குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று சொல்வதைப் பொறுக்கமாட்டான், போரை மேற்கொண்டு
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க எனதிறையை விரும்புவான் என்றால், எடுத்துக்கொள்க என்று
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரேதாமாகவே கொடுத்த மன்னர் நடுக்கம் அற்றவரானார்;
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரேமிகவும் இரங்கத்தக்கவர் அவனுடைய இரக்கத்தை இழந்தவர்கள்,
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்தநுண்ணிய பல கறையான்கள் மிகவும் முயன்று கட்டிய
செம் புற்று ஈயல் போல                    10சிவந்த புற்றிலிருந்து புறப்பட்ட ஈசல் போல
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரேஒரு பகல்பொழுது மட்டுமே வாழும் வாழ்க்கைக்காகத் தடுமாறித்திரிவோர்.
  
# 52 மருதன் இளநாகனார்# 52 மருதன் இளநாகனார்
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇதெய்வங்களை உடைய நெடிய சிகரங்களைக் கொண்ட மலையின் குகையில் தங்குவதை வெறுத்து
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல்சோம்பல் முறித்து எழுந்த நிரம்பிய வலிமை கொண்ட ஆண் புலி
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்துஊனை விரும்பும் உள்ளம் ஏவுதலால், இரையைத் தேடி
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்குதான் வேண்டிய பக்கத்தில் விரும்பிச் செல்வதைப் போல
வட புல மன்னர் வாட அடல் குறித்து         5வடநாட்டு வேந்தர் மனம்வருந்த, அவரைக் கொல்வதற்காக
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதிஇன்னாத கொடிய போரைச் செய்ய தேரைச் செலுத்திய வழுதியே!
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்துநீ கருதியது இந்தப் போரானால், பெரிய உலகத்தில்
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்யார்தாம் இரங்கத்தக்கவர்? ஊர்கள்தோறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடிமீனைச் சுடுவதால் எழும்பும் புகையின் புலால் நாறும் நெடிய சுருள்
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும்   10வயல் அருகிலுள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழுகின்ற
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியேபெரிய நல்ல புதுவருவாயினை இழந்து, இப்பொழுது
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடஆரவார இசை பொருந்திய தெய்வங்கள் தாம் உறையும் தூண்களைவிட்டு நீங்கித்
பலி கண்மாறிய பாழ்படு பொதியில்தாம் பலிபெறும் இடங்களை மாற்றிக்கொள்ளும் பாழ்பட்ட அம்பலங்களில்
நரை மூதாளர் நாய் இட குழிந்தநரையையுடைய முதியோர் சூதாடும்காய்களை வைத்ததால் குழிவாய்ப்போன
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி         15சூதாடுமிடம் நிறைய, பல பொறிகளைக் கொண்ட
கான வாரணம் ஈனும்காட்டுக்கோழி முட்டையிடும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரேகாடாய்ப்போய்க் கெடும் நாட்டினையுடையோரில் – (யார்தாம் இரங்கத்தக்கவர்?)
  
# 53 பொருந்தில் இளங்கீரனார்# 53 பொருந்தில் இளங்கீரனார்
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்முற்றிய நீண்ட சிப்பியின் முத்துப்போன்ற வெண்மையான ஒழுங்குபட்ட மணல் முற்றத்தைக்கொண்ட
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்துஒளிவிடுகின்ற மணிகளால் கண்ணைப் பறிக்கும் மாடத்தில்
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்பளபளக்கும் வளையல்களை அணிந்த மகளிர் திண்ணையில் விளையாடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்றபுகழால் விளங்கும் விளங்கில் என்ற ஊருக்குப் பகைவரால் வந்த தீங்கினை அகற்றிய,
களம் கொள் யானை கடு மான் பொறைய           5போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரையும் குதிரையையும் உடைய பொறையனே!
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்விரித்துச்சொன்னால் பெருகுகிறதே, தொகுத்துச்சொன்னால் குறைவுபடுகிறதே என்று
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலைமனமயக்கம் உள்ள நெஞ்சினைக்கொண்ட எங்களுக்கு, நிச்சயமாகச்
கைம்முற்றல நின் புகழே என்றும்சொல்லி முடியாதது உனது புகழ் எந்நாளும்,
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்துகல்வியில் சிறந்தவர் பிறந்த இந்த பெரிய இடத்தையுடைய உலகத்தில்
வாழேம் என்றலும் அரிதே தாழாது            10வாழமாட்டோம் என்று இருப்பது அரிது, நேரம் தாழ்க்காமல்
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செம்மையான நாவினையும்,
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்மிகுந்த அறிவினையும், சிறந்த புகழினையும் கொண்ட கபிலன்
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின்இன்றைக்கு இருந்தால் நலமாயிருக்குமே என்று சொன்ன உன்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பவெற்றி கொண்ட சிறப்பினுக்கு ஏற்றவாறு
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே           15பாடுவேன் நான், நீ பகைவரை வென்ற வெற்றியை.
  
# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்# 54 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்எங்கள் தலைவன் இருந்த ஆரவாரம் மிகுந்த பழைய ஊரில்
உடையோர் போல இடை இன்று குறுகிஅதற்கு உரிமையாளர் போல நேரம் பார்க்காமல் அணுகி,
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல்எம் தலைவனின் காலையில் கூடும் அரசவையில் தலை நிமிர்ந்து நுழைவது
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதேஎம்மைப் போன்ற வாழ்க்கையையுடைய இரவலர்க்கு எளிதான செயலாகும்;
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து         5அவ்வாறு இரவலர்க்கு எளிமையானது அல்லாமல், குடிமக்களைப் பாதுகாப்பதைத் தனதாக்கிக்கொண்டு
வானம் நாண வரையாது சென்றோர்க்குமழை நாணும்படியாக, அளவின்றி, இரவலர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைநிற்காமல் கொடுக்கும் கவிந்த கையையுடைய வள்ளன்மையும்,
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்தவிரையும் குதிரையையும் உடைய கோதையின் வலிமையோடு முரண்பட்டு எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும்_காலைவஞ்சினம் கூறிய மன்னர்களை நினைக்கும்போது
பாசிலை தொடுத்த உவலை கண்ணி               10பசுமையான இலைகளாலும் தழைகளாலும் தொடுக்கப்பெற்ற தலைமாலையையும்,
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன்அழுக்குப்படிந்த உடையையும், சீழ்க்கையடிக்கும் வாயையும் உடைய இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லாசிறிய தலையையுடைய ஆட்டு மந்தையுடன் கிட்ட நெருங்காத
புலி துஞ்சு வியன் புலத்து அற்றேபுலி வாழும் அகன்ற நிலத்தைப் போன்றதாகும்
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே          14வலிமை தங்கிய பெரிய கையையுடைய அவனுடைய நாடு.
  
# 55 மதுரை மருதன் இளநாகனார்# 55 மதுரை மருதன் இளநாகனார்
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇஉயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணினால் கட்டி,
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றிஒப்பில்லாத ஓர் அம்பை இழுத்து, அதனால் மூன்று கோட்டைகளை அழித்து
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்தபெரிய ஆற்றல் மிக்க தேவர்களுக்கு வெற்றியைத் தந்த
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னிகருமை படர்ந்த தொண்டையையுடைய இறைவனின் அழகிய திருமுடியில் சூடிய
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல                5பிறை சேர்ந்த நெற்றியில் விளங்கும் ஒரு கண்ணைப் போல
வேந்து மேம்பட்ட பூ தார் மாறமூவேந்தருள்ளும் உயர்ந்த பூமாலை அணிந்த மாறனே!
கடும் சினத்த கொல் களிறும்கொடும் கோபம்கொண்டு கொல்லுகின்ற யானைப்படை,
கதழ் பரிய கலி_மாவும்விரைந்த ஓட்டமும், மனச்செருக்கும் கொண்ட குதிரைப்படை,
நெடும் கொடிய நிமிர் தேரும்நெடிய கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை,
நெஞ்சு உடைய புகல் மறவரும் என            10நெஞ்சுரம் கொண்ட போரை விரும்பும் காலாட்படை என்று
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்டநான்கு படைகளுடன் சிறந்துவிளங்குவதாயினும், சிறந்த
அற நெறி முதற்றே அரசின் கொற்றம்அறநெறியை முதலாவதாகக் கொண்டதுவே ஆளுவோர் வெற்றி,
அதனால் நமர் என கோல் கோடாதுஅதனால், நம்மவர் என்று நடுநிலை தவறாமல்
பிறர் என குணம் கொல்லாதுமற்றவர் என்று அவர் நற்குணங்களைப் பழிக்காமல்
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்              15சூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலையுடைய வீரமும்,
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்மழையைப் போன்ற ஈகையும், ஆகிய இந்த மூன்றனையும்
உடையை ஆகி இல்லோர் கையறஉடையவன் ஆகி, இல்லாதவர்களே இல்லையெனும்படி
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்நீ நெடுங்காலம் வாழ்வாயாக நெடுந்தகையே! ஆழமான நீர்ப்பரப்பையும்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்               20வெண்மையான மேற்பரப்பையுடைய அலைகள் வந்து மோதும் செந்தில் பதியில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறைமுருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற கடல்துறையில்
கடு வளி தொகுப்ப ஈண்டியகடுங்காற்று கொண்டுவந்து திரளாகக் குவித்த  
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவேகால்சுவடுகள் பதிகின்ற மேட்டு மணலினும் பல ஆண்டுகள் – (நீ நீடு வாழிய நெடுந்தகை)
  
# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்# 56 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்# மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடைகாளையை வெற்றிக்கொடியாக உயர்த்திய, எரிகின்ற தீயைப் போன்று விளங்கும் சடையை உடைய,
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்தடுப்பதற்கு அரிய கோடரியையுடைய, நீலமணி போலும் கரிய கழுத்தினையுடைய சிவபெருமானும்,
கடல் வளர் புரி வளை புரையும் மேனிகடலில் வளரும் முறுக்குண்ட சங்கினைப் போன்ற மேனியை உடைய,
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும்கொலையை விரும்பும் கலப்பையையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
மண்_உறு திரு மணி புரையும் மேனி          5கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற திருமேனியை உடைய,
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும்வானளாவ ஓங்கிய கருடக்கொடியை உடைய, வெற்றியை விரும்புவோனாகிய கண்ணனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிநீலமணி போன்ற நிறத்தையுடைய மயில் கொடியை உடைய, மாறாத வெற்றியையுடைய,
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் எனபிணிமுகம் என்ற யானையை ஊர்தியாகக் கொண்ட ஒளியையுடைய செய்யோனாகிய முருகவேளும், என்ற
ஞாலம் காக்கும் கால முன்பின்உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும்
தோலா நல் இசை நால்வருள்ளும்                      10தோல்வியில்லாத நல்ல புகழையும் உடைய நான்கு கடவுளர்க்குள்ளும்
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்தடுக்கமுடியாத சீற்றத்தில் நீ எமனைப் போன்றவன்;
வலி ஒத்தீயே வாலியோனைவலிமையில் நீ வெண்மையான பலராமனைப் போன்றவன்;
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனைபுகழில் நீ தன்னை இகழ்ந்தவரை அழிக்கும் கண்ணனைப் போன்றவன்;
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்நினைத்ததைச் செய்துமுடிப்பதில் முருகனைப் போன்றவன்;
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்              15அவ்வவ்வாறு நீ அவரவர்களைப் போன்று இருப்பதால், எங்கும்
அரியவும் உளவோ நினக்கே அதனால்செய்யமுடியாதது ஒன்று உண்டோ உனக்கு? அதனால்
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயாஇரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறைவுபடாமல் ஈந்து,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்யவனர்கள் நல்ல சாடிகளில் தந்த குளிர்ந்த நறுமணமுடைய மதுவை
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்பொன்னாலான அழகிய கிண்ணங்களில் ஏந்தி, நாள்தோறும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து            20ஒளிரும் வளையல்கள் அணிந்த மகளிர் ஊற்றிக்கொடுக்க, மகிழ்ச்சி மிக்கு
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாறஅப்படி இனிதாக நடப்பாயாக வெற்றியால் உயர்ந்த வாளையுடைய மாறனே!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்அழகிய இடத்தையுடைய வானத்தில் நிறைந்திருக்கும் இருளை அகற்றும்
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசைவெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு போலவும், மேற்குத்திசையில் தோன்றும்
தண் கதிர் மதியம் போலவும்குளிர்ந்த கதிர்களையுடைய திங்களின் வளர்பிறையைப் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே            25நின்று நிலைபெறுவாயாக இவ்வுலகத்தோடு கூடச் சேர்ந்து.
  
# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்# 57 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்கல்வியில் வல்லவர்களாய் இராதவர்கள் என்றாலும், வல்லவர்கள் என்றாலும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்னஉன்னைப் புகழ்வோருக்கு மாயோனைப் போன்று பாதுகாப்பளிக்கும்,
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாறமற்றவர் பாராட்டிப் பேசும் சிறப்பினையுடைய புகழ் மிக்க மாறனே!
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்உனக்கு ஒன்று சொல்லுவேன், அது என்னவெனில்
நீயே பிறர் நாடு கொள்ளும்_காலை அவர் நாட்டு       5நீதான் பிறர் நாட்டைக் கொள்ளும்போது, அவர் நாட்டின்
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்கவளைந்த கதிர்களையுடைய வயல்களை உன் வீரரும் கொள்ளையிடட்டும்;
நனம் தலை பேரூர் எரியும் நைக்கஅகன்ற இடத்தையுடைய பெரிய ஊரைத் தீயும் சுடட்டும்;
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்நிமிர்ந்து நிற்கும் மின்னலைப் போன்ற உன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் நீண்ட வேல்
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்பகைவரை அழித்தாலும் அழிக்கட்டும்; என்ன ஆனாலும்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின்                      10பகைவரின் காவல் மரத்தை வெட்டுவதை மட்டும் செய்யவேண்டாம், உனது
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவேநெடிய நல்ல யானைகளைக் கட்டுவதற்கு அவை கம்பங்களாக ஆகமாட்டா.
  
# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்# 58 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார்
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனேசோழனாகிய நீதான், குளிர்ந்த நீரையுடைய காவிரிக்கு உரியவன், பாண்டியனாகிய இவனோ
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்துபருத்த அடிமரம் இற்றுப்போன கோளி என்னும் ஆலமரத்தின்
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்குஅடர்ந்த நிழல் தரும் நெடிய கிளைகளை விழுதுகள் தாங்கிக்கொள்வது போன்று
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாதுதனக்கு முன்னுள்ளோர் இறந்துபட, தான் சோர்ந்துபோகாமல்
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ               5நல்ல புகழ்பெற்ற தன் பழைய குடி தடுமாறாதபடி அணைத்து,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்தான் சிறியதாய் இருந்தாலும் கூட்டத்துடன் பாம்பைக் கொல்லும்
அரு நரை உருமின் பொருநரை பொறாஅபொறுப்பதற்கு அரிய வெண்மையுருக்கொண்ட இடியினைப் போல, பகைவரைக் காணப் பொறுக்காத
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயேபோரில் சிறந்த பாண்டியர் குடியில் காளை போன்றவன்; நீதான்
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனேஅறம் வாழும் உறையூர் அரசன்; இவனோ
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என           10நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிதில் கிடைக்கூடியது என்று எண்ணி,
வரைய சாந்தமும் திரைய முத்தமும்எளிதில் கிடைப்பதல்லாத மலையின் சந்தனமும், கடலின் முத்தும் என்ற  இவற்றின்
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்பெருமையை ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே ஆளுகின்ற
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தேதமிழ் நிலவும் மதுரையின் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்;
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்பால் போன்ற நிறத்தையுடைய பனைக்கொடியோனாகிய பலராமனும்,
நீல் நிற உருவின் நேமியோனும் என்று               15நீல நிற மேனியைக்கொண்ட சக்கரத்தையுடைய திருமாலும் என்ற
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்குஇரண்டு பெரும் தெய்வங்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்றதைப் போல
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கிஅச்சம் விளைவிக்கும் உங்களின் பெருமை மிக்க தோற்றத்துடன், உள்ளத்தை நடுக்கும் அச்சம் வர விளங்கி
இ நீர் ஆகலின் இனியவும் உளவோஇத்தன்மையுடையவராக நீங்கள் விளங்கினால் இதைக்காட்டிலும் இனியது வேறு உண்டோ?
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவேஇன்னமும் கேளுங்கள், உம் புகழ் நெடுங்காலம் வாழ்ந்திருக்கட்டும்,
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்         20உமக்குள் ஒருவர் ஒருவர்க்கு உதவிசெய்யுங்கள், இருவரும்
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரைஒன்றுபட்டிருக்கும் இந்நிலையிலிருந்து மாறுபடாமல் இருப்பீர்களென்றால் ஒலிக்கும் அலைகளையுடைய
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம்பெருங்கடல்கள் சூழ்ந்த இந்தப் பயன் பொருந்திய பெரிய நிலவுலகம்
கையகப்படுவது பொய் ஆகாதேஉங்கள் கைவசமிருக்கும் என்பது பொய்யாகாது;
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்அதனால், நல்லவை போன்றும், நியாயமானவை போன்றும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்          25முன்னோர் காட்டிச்சென்ற முறைகளில் நடப்பவர் போன்றும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்அன்புகொண்ட உள்ளங்களையுடைய உமக்கு இடையே புகுந்து பிளவை ஏற்படுத்த அல்லாந்துதிரியும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாதுஅயலாருடைய அற்பமொழிகளை ஏற்றுக்கொள்ளாமல் 
இன்றே போக நும் புணர்ச்சி வென்று_வென்றுஇன்று இருப்பதைப் போலவே இருக்கட்டும் உங்கள் நட்பு, மேலும் மேலும் வென்று
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரிபோர்க்களத்தில் உயர்ந்துவிளங்கட்டும் உமது வேல்கள், வளைந்த கோடுகளையுடைய
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி  30புலிச் சின்னத்தைச் செதுக்கிய தொலைவிடத்துக்கும் தெரியுமாறு கட்டிவைக்கப்பட்ட இலாஞ்சனை
நெடு நீர் கெண்டையொடு பொறித்தநெடிய நீரில் வாழும் கெண்டைமீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்ட
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடேசிகரங்களை உடையன ஆகுக பிறர் குன்றுகள் பொருந்திய நாடுகள்.
  
# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்# 59 மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்முத்துமாலை தொங்கும் அழகு மிக்க மார்பினையும்,
தாள் தோய் தட கை தகை மாண் வழுதிமுழங்காலைத்தொடும் அளவிற்கு நீண்ட கையினையும் உடைய அழகில் சிறந்த வழுதியே!
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்நீ அருளுடன் அளிப்பதில் வல்லவன் ஆவாய்,
தேற்றாய் பெரும பொய்யே என்றும்எது பொய் என்பதைத் தெளிந்து அறிவாயாக, எப்பொழுதும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்          5கடும் வெம்மை நீங்காமல், கடலிலிருந்து கிளர்ந்து எழுகின்ற
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குஞாயிறு போன்றவன் உன் பகைவர்க்கு,
திங்கள் அனையை எம்மனோர்க்கேதிங்களைப் போன்றவன் எங்களைப்போன்றவர்க்கு.
  
# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்# 60 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலகடலின் நடுவே இருக்கும் தோணியில் இடப்பட்ட விளக்கின் சுடரைப் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்செவ்வாய் என்ற சிவந்த கோள் கண்சிமிட்டும் திசைகளைக்கொண்ட ஆகாயத்தின்
உச்சி நின்ற உவவு மதி கண்டுஉச்சியில் நின்ற முழுமதியினைக் கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்தகாட்டில் வாழும் மயிலைப் போல அரிய காட்டுவழியின் தொடக்கத்தை அடைந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து  5சிலவாகிய வளையல்களையுடைய விறலியும் நானும் மிக வேகமாக
தொழுதனம் அல்லமோ பலவே கானல்தொழுதோம் அல்லவா பலமுறை! கடற்கரையில்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்கழியின் நீரால் கிடைத்த உப்பை முகந்துகொண்டு, மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்ஆரங்களையுடைய வண்டிச்சக்கரம் பள்ளத்தில் சிக்கிக்கொண்டதை எளிதில் மீட்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன்வலிமையுடைய பாரம் பொறுக்கும் காளையைப் போன்ற எமது அரசனாகிய
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்             10வெற்றி முழக்கமிடும் முரசையும், குறிதப்பாத வாளினையும் உடைய வளவனின்
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்வெயில் மறைப்பதற்குத் தூக்கிநிறுத்திய பார்ப்பதற்கு அச்சத்தைத்தரும் சிறப்பினையுடைய
மாலை வெண்குடை ஒக்குமால் எனவேமாலை அணிந்த வெண்கொற்றக்குடையைப் போல இருக்கின்றது என்பதனால் – (உவவு மதி — தொழுதனம்)
  
  
  
  
  
  
# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்# 61 கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார்
கொண்டை கூழை தண் தழை கடைசியர்கொண்டையாக முடிந்த கூந்தலில் குளிர்ந்த தழையைச் சூடிய உழவர் வீட்டுப்பெண்கள்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்சிறிய, அழகிய நெய்தல் மலரை ஆம்பல்மலருடன் களையாகப் பறிக்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்டவிலாங்கு மீன் புரளும் வயலில் சேறுகுத்தியால் துண்டாக்கப்பட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல்பொய்கை வாளையின் பெரிய துண்டத்தை
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக                5புதுநெல்லை அரிசியாக்கிச் சமைத்த வெண்மையான சோற்றுக்கு வியஞ்சனமாக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்திவிலாப்புடைக்க, வயிற்றின் பக்கங்கள் விம்ம உண்டு,
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்நீண்ட கதிர்களையுடைய வயல்களில் அறுத்த நெற்கதிகர்களை இடுமிடம் தெரியாமல் தடுமாறுகின்ற
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர்வலிமையான கைகளையுடைய கதிரறுப்போரின் புல்லிய தலையையுடைய சிறுவர்கள்
தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர்தென்னையில் விளையும் பெரிய இளநீர்க்காய்களை உண்டு வெறுத்தால், தம் தந்தையரின்
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து 10குறைந்த தலை இடத்தையுடைய உயரமான நெற்போரின் மீது ஏறி, உயரத் தாவிக் குதித்து
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும்அதிகமாகக் காய்த்துத்தொங்கும் பனையின் காய்களைத் தொட முயலுகின்ற
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன்நாள்தோறும் புதுவரவினையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனான
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னிவேல் விளங்கும் பெரிய கையினையும், நன்கு புனையப்பட்ட தேரினையும் உடைய சென்னியின்
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்வானவில் போன்ற மாலையையுடைய மார்பினைப் பகைத்தெழுகின்றவர்கள் இருப்பார்களேயானால்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன்            15தமக்கு என்ன நேரும் என்பதைத் தாமே அறிவார்கள், நாங்கள், சென்னியின்
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர்கணையமரத்தைப் போன்ற திண்மையான தோள்களைத் தவறுகள் இல்லாமல் எதிர்த்துப்போரிட்டோர்
வாழ கண்டன்றும் இலமே தாழாதுவாழக் கண்டதும் இல்லை, நேரம் தாழ்க்காமல்
திருந்து அடி பொருந்த வல்லோர்அவனுடைய திருத்தமான அடிகளைச் சேர வல்லவர்கள்
வருந்த காண்டல் அதனினும் இலமேவருந்துவதைக் காணுவது அதனிலும் இல்லை.
  
# 62 கழா தலையார்# 62 கழா தலையார்
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவதுவருகின்ற முன்னணிப் படையைத் தடுத்துப் போரில் ஒருவரையொருவர் வெல்வோம் என்பது எப்படியாகும்?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுபோரிட்டு, போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் புண்களைத் தோண்டி
குருதி செம் கை கூந்தல் தீட்டிகுருதி படிந்த தம் சிவந்த கைகளைக் கூந்தலில் தடவி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்நிறம் மிக்க வடிவத்தையுடைய பேய் மகளிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க              5மேலும் மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையையுடைய பறையின் தாளத்துடன் ஆட
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்துபருந்துகள் ஊனைத் தின்னும் படையுடன், போரினால் வெகுண்டு
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர்படையினர் மாண்டபின்னும் தாமாகப் போரிடும் வீரமிக்க போரையுடைய இருபெரு வேந்தரும்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவேஇறந்துபோனார்கள், அவர்களின் கொற்றக்குடைகள் குடைசாய்ந்தன,
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவேபுகழுக்குரிய சிறப்பினையுடைய முரசங்களும் விழுந்துவிட்டன,
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்           10பல நூறுகளாக அடுக்கப்பட்ட பல்வேறு மொழிகள் பேசும் படைத்தொகுதி பசிய நிலத்தில்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைஇடமில்லை என்று சொல்லும்படி செறிவாக இருந்த அகன்ற இடத்தையுடைய பாசறையில்
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவரபோரிடுவதற்குரியோர் இல்லாமல், பார்ப்பவர்க்கு அச்சம் தோன்ற
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்உடனே நின்றது போர்; மாண்ட வீரரின் மனைவியரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்பச்சை இலையைத் தின்று, குளிர்ந்த நீரில் குளித்துக் கைம்மை நோன்பு ஏற்காதவராய்
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே           15வீரர்களின் மார்புகளைக் கட்டியணைத்துக் களத்திலேயே கிடந்தனர்
வாடா பூவின் இமையா நாட்டத்துவாடாத கற்பக மாலையினையும், இமைக்காத கண்களையும்
நாற்ற_உணவினோரும் ஆற்றவேள்வியில் கிடைக்கும் உணவையும் உடைய தேவர்களும் மிகவும்
அரும்_பெறல்_உலகம் நிறையபெறுவதற்கு அரிய உலகம் நிரம்ப
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழேவிருந்தினர்களைப் பெற்றவர்கள் ஆனார்கள், ஒங்குக உமது புகழ்.
  
# 63 பரணர்# 63 பரணர்
எனை பல் யானையும் அம்பொடு துளங்கிமிகப்பலவான அத்தனை யானைகளும், அம்பினால் நிலைகுலைந்து
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவேபோரில் இனிமேல் ஆற்றவேண்டிய செயல்கள் இல்லாமல் படையினர் இருப்பிடத்துக்குத் திரும்பின;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்வெற்றிப்புகழினால் சிறந்த குதிரைகள் எல்லாம்
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவேவீரப்பொலிவு மிக்க குதிரைவீரருடன் அங்கேயே விழுந்து மடிந்தன;
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்           5தேர் மேல் வந்த வீரர்கள் எல்லாரும்
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரேதாம் பிடித்த கேடயமே தமது கண்களை மறைக்க ஒன்றாய் மாண்டுபோனார்கள்;
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம்வாரினால் இழுத்துக்கட்டப்பட்ட, ஒலிப்பதில் சிறந்த மயிர் சீவாத தோலினால் போர்க்கப்பட்ட முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவேதம்மைச் சுமப்பவர்கள் யாரும் இல்லாததினால் இருந்து ஓய்ந்தன;
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து எனசந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல்கள் பாய்ந்ததினால்
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே 10வேந்தர்களும் போரிட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர்; இனிமேல்,
என் ஆவது-கொல் தானே கழனிஎன்னதான் ஆகுமோ? வயல்வெளிகளிலுள்ள
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்ஆம்பல் தண்டினால் செய்த வளையல்களைக் கையிலணிந்த மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும்பச்சை அவலை நிறையத்தின்று, குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும்
யாணர் அறாஅ வைப்பின்புதுவரவுகள் அற்றுப்போகாத ஊர்களையுடைய
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே                15அழகிய இருப்பிடங்கள் கொண்ட அவர்களின் அகன்ற இடத்தையுடைய நாடுகள் – (என்னதான் ஆகுமோ?)
  
# 64 நெடும்பல்லியத்தனார்# 64 நெடும்பல்லியத்தனார்
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிநல்ல யாழ், ஆகுளி என்ற சிறுபறை, பதலை என்ற ஒருதலை மாக்கிணை ஆகியவற்றைக் கட்டிக்கொண்டு
செல்லாமோ தில் சில் வளை விறலிசெல்லலாமோ, ஒருசில வளையல்களை அணிந்த விறலியே!
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலைபெரிய யானைப்படை போரிட்ட இடம் அகன்ற படைவீட்டில்
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்பஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைப் பச்சை ஊனின் துண்டங்கள் தடுத்து நிறுத்தும்
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின்            5மாற்றார் நாட்டில் தான் பெற்ற அழகிய பெரிய செல்வத்தினையுடைய
குடுமி கோமான் கண்டுமுதுகுடுமி என்னும் அரசனைக் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கேநீரே மிகுதியாக உள்ள கஞ்சியைக் குடிக்கும் இந்த வாழ்வை விட்டுவிட்டு வருவதற்காக 
  
# 65 கழாஅ தலையார்# 65 கழாஅ தலையார்
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்பமுழவு மண்சாந்து இடுதலை மறக்க, யாழ் பண்ணை மறக்க,
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பபெரிய இடத்தையுடைய பானை கவிழ்ந்து நெய் கடைதலை மறக்க,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்பசுரும்புகள் மொய்க்கும் மதுவைச் சுற்றத்தார் மறக்க,
உழவர் ஓதை மறப்ப விழவும்உழவர் ஆரவாரத்துடன் செய்யும் உழவுத்தொழிலை மறக்க, விழாக்கொண்டாடுதலை
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப                      5அகன்ற உட்பகுதியினையுடைய சிறிய ஊர்கள் மறக்க,
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்துமுழுமதி வந்து கூடிய பெரிய நாட்பொழுதில்
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்ஞாயிறு மேற்கிலும், திங்கள் கிழக்கிலும் இருக்க தம்முள் எதிர்நின்று பார்த்து, அவற்றில் ஞாயிறு
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்குபுல்லிய மாலைப்பொழுதில் மலையில் மறைவதைப் போல்
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்ததன்னைப் போன்ற ஒரு வேந்தன் மார்பினை நோக்கி எறிந்த (வேல் துளைத்து)
புறப்புண் நாணி மற தகை மன்னன்            10முதுகிலும் ஏற்பட்ட புண்ணினால் வெட்கப்பட்டு வீரம் பொருந்திய மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ஈங்குவாளை ஊன்றி வடக்குநோக்கி அமர்ந்துவிட்டான், இங்கு
நாள் போல் கழியல ஞாயிற்று பகலேஞாயிறு இருக்கும் பகற்பொழுது இனிமேல் முன்பு இருந்த நாட்களைப் போல் இனிதாகக் கழியாது.
  
# 66 வெண்ணி குயத்தியார்# 66 வெண்ணி குயத்தியார்
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டிநீர் செறிந்த பெரிய கடலில் கப்பல்களை ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருககாற்றும் தனக்குப் பணியாற்றும்படிசெய்து அதனையும் ஆண்ட வலிமை மிக்கவனின் மரபில் வந்தவனே!
களி இயல் யானை கரிகால்வளவமதம்பிடிக்கும் இயல்பையுடைய யானையை உடைய கரிகால்வளவனே!
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்றஎதிர்சென்று போரினில் அழிவையேற்படுத்திய உனது ஆற்றல் வெளிப்படும்படி
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே                5வெற்றியடைந்தவனே! உன்னைக்காட்டிலும் நல்லவன் அல்லவா!
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலைபெருகுகின்ற புதுவருவாயையுடைய வெண்ணி என்ற இடத்தில் உள்ள போர்க்களத்தில்
மிக புகழ் உலகம் எய்திஉலகத்தில் மிகவும் புகழை அடைந்து (தனக்கேற்பட்ட)
புறப்புண் நாணி வடக்கிருந்தோனேமுதுகுப்புண்ணுக்காக வெட்கப்பட்டு வடக்கிருந்தவனான சேரலாதன் – (நின்னினும் நல்லன் அன்றே)
  
# 67 பிசிராந்தையார்# 67 பிசிராந்தையார்
அன்ன சேவல் அன்ன சேவல்   அன்னச் சேவலே! அன்னச் சேவலே!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று, கொல்லுகின்ற போரில் அண்ணலாக விளங்குகின்ற சோழன்
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போலதன் நாட்டு மக்களைக் கருணையோடு நோக்கும் பிரகாசமான முகத்தினைப் போல
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்இரண்டு முனைகளும் கூடிவருகின்ற திங்களின் அரும்புகின்ற பிறைநிலா ஒளிரும்
மையல் மாலை யாம் கையறுபு இனைய            5மயக்கத்தைத் தரும் மாலை நேரத்தில் நான் செயலிழந்து வருந்த,
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்திகுமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீனை மேய்ந்து
வட_மலை பெயர்குவை ஆயின் இடையதுவடமலையாகிய இமயமலைக்குச் செல்லுவாயென்றால், இடையிலிருக்கும்
சோழ நன் நாட்டு படினே கோழிநல்ல சோழநாட்டு வழியே சென்றால், உறையூரில்
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇஉயர்ந்து நிற்கும் மாடத்தில் குறுகிய சிறகுகளையுடைய உன் பேடையுடன் இளைப்பாறி,
வாயில் விடாது கோயில் புக்கு எம்         10வாயில் காவலரிடம் ஏதும் சொல்லாமல் அரண்மனைக்குள் சென்று, எம்முடைய
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்பேரரசனாகிய கிள்ளி கேட்கும்படியாக, பெரிய பிசிர் என்னும் ஊரில் வாழும்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்ஆந்தை என்பவரின் அடியவன் என்று சொன்னால், பெருமை மிக்க உன்
இன்புறு பேடை அணிய தன்இன்பமுடைய பெடை அணிந்துகொள்ள தனது
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கேவிருப்பமுறும் நல்ல அணிகலன்களை அளிப்பான் உனக்கு.
  
# 68 கோவூர் கிழார்# 68 கோவூர் கிழார்
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்உடும்பின் தோலை உரித்தது போல எலும்புகள் வெளித்தெரியும் விலாவினையுடைய
கடும்பின் கடும் பசி களையுநர் காணாதுசுற்றத்தாரின் கடுமையான பசியைப் போக்குபவர்களைக் காணாமல்,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்துகேட்பதற்கு மிகச் சிலரே உள்ளனர் என்ற நிலைமையுடைய யாழால் என்ன பயன் என்று மிகவும் நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்துஇங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? பாணனே! நகைகளைத் தாங்கி
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து              5அழகிய பெருமையையுடைய எழில்பெற்ற சிவந்த பொறிகளைக் கொண்ட மார்பினையுடைய
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்மென்மையான பெண்களுக்குப் பணிந்து, வன்மையான
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகைவீரரை அகப்படுத்தும் பெருமை பொருந்திய நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலஈன்று அணிமை தீர்ந்த குழந்தைக்காகச் சுரக்கும் முலையைப் போன்று
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்சிறியதாய்ச் சுரந்து தொடங்கிய காவிரியின் மரத்தையே சாய்க்கும் மிகுந்த வெள்ளம்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன்             10உலகத்தையே காக்கின்ற நல்ல சோழநாட்டுக்கு வேந்தன்,
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்குஉள்நாட்டுப்பகையை ஒருவழியாய்த் தீர்த்து, பறவைகளால் உண்டாகும் தீய சகுனங்களினால்
ஏவான் ஆகலின் சாவேம் யாம் எனபோருக்கு அனுப்பமாட்டான் என்பதினால், நமக்குள் போரிட்டுச் சாவோம் என்று
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பநீங்காத வீரமுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழிஅவர்களின் வீர உணர்வு தணியும்படியாக பறைகளைக் கொட்டும் அழகு பொருந்திய தேர் வரும் வழிகளில்
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த             15கடுமையான கள்ளைப் பருகுபவர்களின் நடுங்குகின்ற கைகளிலிருந்து சிந்தியதால் உண்டான
நறும் சேறு ஆடிய வறும் தலை யானைமணம் மிக்க சேற்றினை மிதித்த பாகன் ஓட்டாத யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும்நெடிய நகரின் எல்லைகளில் ஒலிக்கும் முழவின் ஓசையை உற்றுக்கேட்கும்
உறந்தையோனே குருசில்உறையூரில் இருப்பவனே எம் இறைவன்,
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினேஅவனிடம் சென்றால், பிறர் வாயிலை நினைக்கத் தேவையில்ல என்னும் அளவுக்கு அவன் கொடுப்பான்.
  
# 69 ஆலந்தூர் கிழார்# 69 ஆலந்தூர் கிழார்
கையது கடன் நிறை யாழே மெய்யதுகையிலே இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; உடம்பிலே
புரவலர் இன்மையின் பசியே அரையதுகாப்பார் இல்லாததினால் பசி; இடுப்பிலே
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்துணியில் இருக்கும் இழையுடன் தையல் போட்ட இழை நுழைந்த வேர்ப்பதால் நனைந்த கந்தலாடை;
ஓம்பி உடுத்த உயவல் பாணஅதனை மிகக் கவனத்துடன் மறைத்துக்கட்டிய வருத்தத்தையுடைய பாணனே!
பூட்கை இல்லோன் யாக்கை போல               5எடுத்த காரியத்தை முடிக்கும் மனவுறுதி இல்லாதவனின் உடம்பைப் போல
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலைபெரிதாகப் பொலிவிழந்த மிகப் பெரிய சுற்றத்தையுடையவனே!
வையகம் முழுதுடன் வளைஇ பையெனஉலகம் முழுவதையும் சுற்றிவந்து, பின்னர் மெதுவாக
என்னை வினவுதி ஆயின் மன்னர்என்னிடம் (உன் வறுமை தீர்ப்பார் யார் என்று) கேட்டால், மன்னர்களின்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறைகொல்கின்ற யானைகள் புண்பட்டு வருந்திக்கிடக்கும் கொடிகளைக் கொண்ட பாசறையில்
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி              10குருதி படர்ந்த பரப்பில் யானைகளைக் கொன்று
புலா களம் செய்த கலாஅ தானையன்புலாலை உடைய போர்க்களத்தை உண்டாக்கிய போர்செய்யும் படையை உடையவன்,
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனேஉயர்ந்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூரில் இருப்பவன்,
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைபோரிடும் பகைவரை எதிர்க்க உயர்த்திய வேலையுடையவன், சிலவேளைகளில்
பகை புலம் படர்தலும் உரியன் தகை தார்பகைவர் நாட்டிற்குள் செல்லவும் செய்வான், சுற்றப்பட்ட மாலையையும்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்            15ஒளி பொருந்திய நெருப்புப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூண்களையுடைய
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்கிள்ளிவளவன், அவனிடம் சென்றால்,
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல்அவனது நெடிய வாயிலில் காத்துக்கிடப்பது இல்லை, உச்சிப்பொழுதில்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கிஇரவலர்க்குத் தேர்களை வழங்கும் ஓலக்கத்தினைக் கண்ணாரக் கண்டு
நீ அவன் கண்ட பின்றை பூவின்நீ அவனைப் பார்த்த பின்னால் பூவில்
ஆடு வண்டு இமிரா தாமரை                   20மொய்க்கும் வண்டுகள் ஊதாத பொன்னாலான தாமரையைச்
சூடாய் ஆதல் அதனினும் இலையேசூடாது இருத்தல் அதைக்காட்டிலும் இல்லை;
  
# 70 கோவூர் கிழார்# 70 கோவூர் கிழார்
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாணதேன் போல இனிய இசையை எழுப்பும் நரம்பினால் தொடுத்த சிறிய யாழையுடைய பாணனே!
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்னகுளத்தில் வாழும் ஆமையைக் கம்பியால் குத்தித் தூக்கியதைப் போன்ற
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணைநுண்ணிய கோலால் கட்டப்பட்ட தெளிந்த முகப்பினையுடைய பெரிய கிணையின் ஓசையை
இனிய காண்க இவண் தணிக என கூறிஇனிமையாகக் கேட்டுக்கொண்டு இங்கே சிறிது தங்கிச் செல்வாயாக என்று கூறி
வினவல் ஆனா முது வாய் இரவல               5ஓயாது என்னைக் கேட்கும் முதிய வாய்மையையுடைய இரவலனே!
தைஇ திங்கள் தண் கயம் போலதை மாதத்துக் குளிர்ந்த தடாகம் போன்ற
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர்எடுக்க எடுக்கக் குறையாத உணவினையுடைய அகன்ற மனைகளில்
அடு தீ அல்லது சுடு தீ அறியாதுசமைக்கின்ற தீயே அன்றி, பகைவர் வந்து ஊரைச் சுடுகின்ற தீயினை அறியாமல்,
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன்சோறும், நீரும் ஆகிய இரண்டு பிணிதீர்க்கும் மருந்துகளை விளைவிக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தனாகிய
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி                       10கிள்ளிவளவனின் நல்ல புகழை நினைத்து,
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவைநல்ல மணத்தைத் தேடிச்செல்லும் வண்டு
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்சிறிய வெண்மையான ஆம்பலின் மீது ஊதும்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடிஅள்ளிக்கொடுக்கும் ஈகையையுடைய பண்ணன் என்பவனின் சிறுகுடியிலுள்ள
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல்பாதிரிப்பூ மணக்கின்ற கூந்தலினையும், பளிச்சென்ற நெற்றியையும்,
இன் நகை விறலியொடு மென்மெல இயலி          15இனிய முறுவலையும் உடைய விறலியுடனே மெல்லமெல்ல நடந்து
செல்வை ஆயின் செல்வை ஆகுவைசெல்வாயென்றால் மிகுந்த செல்வத்தையுடையவன் ஆவாய்
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்காட்டில் விறகு வெட்டி ஊருக்குக் கொண்டுவருவோர், காட்டில் புதையலைப் பெற்றாற்போல
தலைப்பாடு அன்று அவன் ஈகைஐயத்திற்கிடமான எதிர்பாரா நிகழ்ச்சி அல்ல அவனது ஈகை,
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளேஅது கிடைக்குமோ என்று நினைக்கவேண்டாம், அவனது அடி வாழ்க.
  
  
  
  
  
  
# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்# 71 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்துசிங்கம் போலச் சினந்து, திரும்பிப்பார்க்காத உள்ளத்துடன்,
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்துஅளவில் அடங்காத பெரும்படையையுடைய வேந்தர்கள் ஒன்று கூடி
என்னொடு பொருதும் என்ப அவரைஎன்னோடு போரிடுவோம் என்கின்றனர், அவர்களைப்
ஆர் அமர் அலற தாக்கி தேரோடுதாங்கமுடியாத போரில் அலறும்படி தாக்கி, தேருடன்
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த           5திரும்பிப் பாராமல் ஓடச்செய்வேன், இல்லையெனில், சிறந்த
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிகபெரிய அமர்த்த மைதீட்டிய கண்களைக் கொண்ட இவளைவிட்டுப் பிரிவேன் ஆகுக,
அறன் நிலை திரியா அன்பின் அவையத்துஅறமானது தனது நிலையிலிருந்து தவறாத அன்பினையுடைய என்னுடைய அரசவைக்குத்
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்துதிறமை இல்லாத ஒருவனைத் தலைவனாக ஆக்கி, நெறி பிறழ்ந்து
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ்கொடுங்கோல் ஆட்சி புரிந்தவன் ஆகுக, மிகுந்த புகழையுடைய
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்         10வையை ஆற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில்
பொய்யா யாணர் மையல் கோமான்குறையாத புதுவருவாயை உடைய மையல் என்னும் ஊரின் தலைவன்
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால்மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரைச் சார்ந்த ஆந்தையும், புகழ்மிக்க
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்அந்துவன் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்கடும் கோபம் கொள்ளும் இயக்கனும் உள்ளிட்ட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த         15எனது கண் போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிய
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோஇனிய செருக்கு மிக்க மகிழ்ச்சியை இழந்து, நான் இத்துடன்
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்தபல உயிரையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்தென்புலமான பாண்டியநாட்டைக் காக்கும் காவலிலிருந்து நீங்கி, மற்றவர்தம்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கேவன்புலங்களைக் காக்கும் காவலுக்கு மாறி நான் பிறப்பேனாகுக.
  
# 72 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்# 72 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர்சிரிப்புக்குரியவர்கள் இவனது நாட்டைச் சிறப்பித்துக்கூறுபவர்கள்,
இளையன் இவன் என உளைய கூறிசிறுவன் இவன் என்று நான் வெறுக்கும்படி சொல்லி,
படு மணி இரட்டும் பா அடி பணை தாள்ஓசையிடும் மணிகள் மாறிமாறி ஒலிக்கும் பரந்த அடியினையும், பெரிய காலினையும் உடைய
நெடு நல் யானையும் தேரும் மாவும்உயர்ந்த நல்ல யானையினையும், தேரையும், குதிரையையும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று       5படைக்கலங்களைக் கொண்ட வீரர்களையும் உடையவர் நாம் என்று
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிஎனது மிகுந்த வலிமைக்கு அஞ்சாமல், பகைத்துச் சினம் பெருகி
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரைசிறுபிள்ளைத்தனமான சொற்களைச் சொன்ன சினம் பொருந்திய வேந்தர்களைத்
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடுதாங்க முடியாத போரில் அவர்கள் சிதறியோடும்படி தாக்கி, அவரின் முரசுகளோடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்தியசேர்த்துக் கைப்பற்றுவேன், அப்படிச் செய்யாவிட்டால் மனத்துக்கு இசைவான
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது             10என்னுடைய ஆட்சியில் வாழ்பவர்கள் வேறு புகலிடம் இல்லாமல்
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பிகொடியவன் எம் அரசன் என்று கண்ணீர் விட்டுக்
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுககுடிமக்கள் பழிதூற்றும் கொடுங்கோலன் ஆவேன் ஆகுக,
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விஓங்கிய சிறப்பு, உயர்ந்த அறிவு ஆகியவை உடைய
மாங்குடி மருதன் தலைவன் ஆகமாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்             15உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய 
புலவர் பாடாது வரைக என் நிலவரைபுலவர்கள் பாடாமல் நீங்குக என் நிலத்தின் எல்லையை,
புரப்போர் புன்கண் கூரஎன்னால் காக்கப்படும் எளியோரின் துயரம் அதிகமாக,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவேஎன்னிடம் இரந்துவருவோர்க்குக் கொடுக்கமுடியாத வறுமையை நான் அடைவேனாக.
  
# 73 சோழன் நலங்கிள்ளி# 73 சோழன் நலங்கிள்ளி
மெல்ல வந்து என் நல் அடி பொருந்திமெல்ல வந்து என் நல்ல அடியை அடைந்து
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை‘கொடுங்கள்’என்று பணிந்து கேட்டால், சிறப்புடைய
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்முரசு பொருந்திய தொன்றுதொட்டு ஆளும் உரிமையை உடைய எனது அரசைக் கொடுப்பதுதானா பெரிது?
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்துஎனது இனிய உயிரையானாலும் கொடுப்பேனே! இவ்வுலகத்தில்
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்              5ஆற்றலுடையவர்களின் ஆற்றலை எண்ணிப்பார்க்காமல்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்என் உள்ளத்தை இகழ்ந்த அறிவில்லாதவன், தெள்ளத்தெளிவாக
துஞ்சு புலி இடறிய சிதடன் போலதூங்குகிற புலியை இடறிய கண்ணில்லாதவன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடைபிழைத்துப்போவது கடினம், வலிமையுடைய,
கழை தின் யானை கால் அகப்பட்டமூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல சென்று அவண்      10வலிய, திண்ணிதான நீண்ட முளையைப்போல, படையெடுத்துச் சென்று அங்கே
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்தியஅவர்கள் வருந்தும்படி போரிடாமல் போவேன் என்றால், உள்ளம் பொருந்திய
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளாதீது இல்லாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத
பல் இரும் கூந்தல் மகளிர்பலவான கரிய கூந்தலையுடைய மகளிரின்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரேபொருத்தமற்ற அணைத்தலில் துவண்டுபோகட்டும் என் மாலை.
  
# 74 சேரமான் கணைக்கா லிரும்பொறை# 74 சேரமான் கணைக்கா லிரும்பொறை
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்மன்னர் குடியில், குழந்தை இறந்து பிறந்தாலும், தசைப் பிண்டமாகப் பிறந்தாலும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்அவற்றை ஆள் அல்ல என்று சொல்லி வாளினால் கீறாமல் புதைக்கமாட்டார்,
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயசங்கிலியால் கட்டப்பட்ட நாய் போல, துன்பப்படுத்தி இருக்கவைத்த
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்உறவே இல்லாத சுற்றத்தாரின் உபகாரத்தால் கிடைத்த தண்ணீரை,
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய                     5மனவலிமை இன்றி வயிற்றுத்தீயைத் தணிக்க
தாம் இரந்து உண்ணும் அளவைதாமே கெஞ்சிக்கேட்டு உண்ணுகின்ற அளவுக்கு
ஈன்மரோ இ உலகத்தானேஒருவரைப் பெற்றெடுப்பார்களோ, இவ்வுலகத்தில்?
  
# 75 சோழன் நலங்கிள்ளி# 75 சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து எனமூத்தோர் ஒவ்வொருவரையும் கூற்றம் கொண்டுப்போய்விட,
பால் தர வந்த பழ விறல் தாயம்விதி வசத்தால் கிடைத்த பழைய வெற்றியால் உண்டான அரசுரிமை
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனகிடைக்கப்பெற்றோமானால் சிறப்படைந்தோம் என்று
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைகுடிமக்களிடம் வரியினை வேண்டி இரந்துகேட்கும் அறிவுநுட்பம் இல்லாத ஆண்மையையுடைய
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே            5சிறுமை படைத்த உள்ளமுடைய ஒருவன் பெற்றால் அது அவனுக்கு மிகுந்த பாரமுள்ளது ஆகும்;
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள்உக்கிரமான போரையும் தாங்க வல்ல மனவெழுச்சியுடன் கூடிய வலிய முயற்சியையுடைய
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்சிறப்புக்குரியவன் ஒருவன் பெற்றால், சிறிதளவு நீரே உள்ள
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடைவற்றிய குளத்தோரத்தின் சிறிய தண்டாகிய வெண்மையான நெட்டியின்
என்றூழ் வாடு வறல் போல நன்றும்கோடைக்காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல, பெரிதும்
நொய்தால் அம்ம தானே மை அற்று             10இலேசானதாகும், குற்றமற்று
விசும்பு உற ஓங்கிய வெண்குடைவானளாவ உயர்ந்த வெண்கொற்றக்குடையினையும்
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவேமுரசினையும் உடைய அரசரின் அரசாட்சியோடு சேர்ந்த செல்வம்.