| | |
| # 376
புறத்திணை நன்னாகனார் | # 376 புறத்திணை
நன்னாகனார் |
| விசும்பு
நீத்தம் இறந்த ஞாயிற்று | விசும்பு நீத்தம்
இறந்த ஞாயிற்று |
| பசும் கதிர்
மழுகிய சிவந்து வாங்கு அந்தி | பசும் கதிர் மழுகிய
சிவந்து வாங்கு அந்தி |
| சிறு நனி
பிறந்த பின்றை செறி பிணி | சிறு நனி பிறந்த
பின்றை செறி பிணி |
| சிதாஅர்
வள்பின் என் தடாரி தழீஇ | சிதாஅர் வள்பின் என்
தடாரி தழீஇ |
| பாணர் ஆரும்
அளவை யான் தன் | பாணர் ஆரும் அளவை யான்
தன் |
| யாணர் நன் மனை
கூட்டு முதல் நின்றனென் | யாணர் நன் மனை கூட்டு
முதல் நின்றனென் |
| இமைத்தோர்
விழித்த மாத்திரை ஞெரேரென | இமைத்தோர் விழித்த
மாத்திரை ஞெரேரென |
| குணக்கு எழு
திங்கள் கனை இருள் அகற்ற | குணக்கு எழு திங்கள்
கனை இருள் அகற்ற |
| பண்டு அறி வாரா
உருவோடு என் அரை | பண்டு அறி வாரா
உருவோடு என் அரை |
| தொன்றுபடு
துளையொடு பரு இழை போகி | தொன்றுபடு துளையொடு
பரு இழை போகி |
| நைந்து கரை
பறைந்த என் உடையும் நோக்கி | நைந்து கரை பறைந்த என்
உடையும் நோக்கி |
| விருந்தினன்
அளியன் இவன் என பெருந்தகை | விருந்தினன் அளியன்
இவன் என பெருந்தகை |
| நின்ற முரற்கை
நீக்கி நன்றும் | நின்ற முரற்கை நீக்கி
நன்றும் |
| அரவு வெகுண்டு
அன்ன தேறலொடு சூடு தருபு | அரவு வெகுண்டு அன்ன
தேறலொடு சூடு தருபு |
| நிரயத்து அன்ன
என் வறன் களைந்தன்றே | நிரயத்து அன்ன என்
வறன் களைந்தன்றே |
| இரவினானே
ஈத்தோன் எந்தை | இரவினானே ஈத்தோன்
எந்தை |
| அன்றை
ஞான்றினோடு இன்றின் ஊங்கும் | அன்றை ஞான்றினோடு
இன்றின் ஊங்கும் |
| இரப்ப
சிந்தியேன் நிரப்பு அடு புணையின் | இரப்ப சிந்தியேன்
நிரப்பு அடு புணையின் |
| உளத்தின்
அளக்கும் மிளிர்ந்த தகையேன் | உளத்தின் அளக்கும்
மிளிர்ந்த தகையேன் |
| நிறை குள
புதவின் மகிழ்ந்தனென் ஆகி | நிறை குள புதவின்
மகிழ்ந்தனென் ஆகி |
| ஒரு நாள்
இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை | ஒரு நாள் இரவலர் வரையா
வள்ளியோர் கடை தலை |
| ஞாங்கர்
நெடுமொழி பயிற்றி | ஞாங்கர் நெடுமொழி
பயிற்றி |
| தோன்றல்
செல்லாது என் சிறு கிணை குரலே | தோன்றல் செல்லாது என்
சிறு கிணை குரலே |
| | |
| # 377
உலோச்சனார் | # 377 உலோச்சனார் |
| பனி பழுநிய பல்
யாமத்து | பனி பழுநிய பல்
யாமத்து |
| பாறு தலை மயிர்
நனைய | பாறு தலை மயிர் நனைய |
| இனிது துஞ்சும்
திரு நகர் வரைப்பின் | இனிது துஞ்சும் திரு
நகர் வரைப்பின் |
| இனையல் அகற்ற
என் கிணை தொடா குறுகி | இனையல் அகற்ற என் கிணை
தொடா குறுகி |
| அவி உணவினோர்
புறம்காப்ப | அவி உணவினோர்
புறம்காப்ப |
| அற நெஞ்சத்தோன்
வாழ நாள் என்று | அற நெஞ்சத்தோன் வாழ
நாள் என்று |
| அதன் கொண்டு
வரல் ஏத்தி | அதன் கொண்டு வரல்
ஏத்தி |
| கரவு இல்லா கவி
வண் கையான் | கரவு இல்லா கவி வண்
கையான் |
| வாழ்க என பெயர்
பெற்றோர் | வாழ்க என பெயர்
பெற்றோர் |
| பிறர்க்கு
உவமம் தான் அல்லது | பிறர்க்கு உவமம் தான்
அல்லது |
| தனக்கு உவமம்
பிறர் இல் என | தனக்கு உவமம் பிறர்
இல் என |
| அது நினைத்து
மதி மழுகி | அது நினைத்து மதி
மழுகி |
| அங்கு நின்ற
என் காணூஉ | அங்கு நின்ற என் காணூஉ |
| சேய் நாட்டு
செல் கிணைஞனை | சேய் நாட்டு செல்
கிணைஞனை |
| நீ புரவலை
எமக்கு என்ன | நீ புரவலை எமக்கு என்ன |
| மலை பயந்த
மணியும் கடறு பயந்த பொன்னும் | மலை பயந்த மணியும்
கடறு பயந்த பொன்னும் |
| கடல் பயந்த
கதிர் முத்தமும் | கடல் பயந்த கதிர்
முத்தமும் |
| வேறு பட்ட
உடையும் சேறுபட்ட தசும்பும் | வேறு பட்ட உடையும்
சேறுபட்ட தசும்பும் |
| கனவில் கண்டு
ஆங்கு வருந்தாது நிற்ப | கனவில் கண்டு ஆங்கு
வருந்தாது நிற்ப |
| நனவின்
நல்கியோன் நகை சால் தோன்றல் | நனவின் நல்கியோன் நகை
சால் தோன்றல் |
| நாடு என
மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் | நாடு என மொழிவோர் அவன்
நாடு என மொழிவோர் |
| வேந்து என
மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் | வேந்து என மொழிவோர்
அவன் வேந்து என மொழிவோர் |
| புகர் நுதல்
அவிர் பொன் கோட்டு யானையர் | புகர் நுதல் அவிர்
பொன் கோட்டு யானையர் |
| கவர் பரி கச்சை
நன் மான் | கவர் பரி கச்சை நன்
மான் |
| வடி மணி வாங்கு
உருள | வடி மணி வாங்கு உருள |
| கொடி மிசை நல்
தேர் குழுவினர் | கொடி மிசை நல் தேர்
குழுவினர் |
| கதழ் இசை
வன்கணினர் | கதழ் இசை வன்கணினர் |
| வாளின் வாழ்நர்
ஆர்வமொடு ஈண்டி | வாளின் வாழ்நர்
ஆர்வமொடு ஈண்டி |
| கடல் ஒலி கொண்ட
தானை | கடல் ஒலி கொண்ட தானை |
| அடல் வெம்
குருசில் மன்னிய நெடிதே | அடல் வெம் குருசில்
மன்னிய நெடிதே |
| | |
| # 378 ஊன்பொதி
பசுங்குடையார் | # 378 ஊன்பொதி
பசுங்குடையார் |
| தென் பரதவர்
மிடல் சாய | தென் பரதவர் மிடல் சாய |
| வட வடுகர் வாள்
ஓட்டிய | வட வடுகர் வாள் ஓட்டிய |
| தொடை அமை கண்ணி
திருந்து வேல் தட கை | தொடை அமை கண்ணி
திருந்து வேல் தட கை |
| கடு மா கடைஇய
விடு பரி வடிம்பின் | கடு மா கடைஇய விடு பரி
வடிம்பின் |
| நல் தார்
கள்ளின் சோழன் கோயில் | நல் தார் கள்ளின்
சோழன் கோயில் |
| புது பிறை அன்ன
சுதை செய் மாடத்து | புது பிறை அன்ன சுதை
செய் மாடத்து |
| பனி கயத்து
அன்ன நீள் நகர் நின்று என் | பனி கயத்து அன்ன நீள்
நகர் நின்று என் |
| அரி கூடு மா
கிணை இரிய ஒற்றி | அரி கூடு மா கிணை இரிய
ஒற்றி |
| எஞ்சா மரபின்
வஞ்சி பாட | எஞ்சா மரபின் வஞ்சி
பாட |
| எமக்கு என
வகுத்த அல்ல மிக பல | எமக்கு என வகுத்த அல்ல
மிக பல |
| மேம்படு
சிறப்பின் அரும் கல வெறுக்கை | மேம்படு சிறப்பின்
அரும் கல வெறுக்கை |
| தாங்காது
பொழிதந்தோனே அது கண்டு | தாங்காது பொழிதந்தோனே
அது கண்டு |
| இலம்பாடு உழந்த
என் இரும் பேர் ஒக்கல் | இலம்பாடு உழந்த என்
இரும் பேர் ஒக்கல் |
| விரல் செறி
மரபின செவி தொடக்குநரும் | விரல் செறி மரபின செவி
தொடக்குநரும் |
| செவி தொடர்
மரபின விரல் செறிக்குநரும் | செவி தொடர் மரபின
விரல் செறிக்குநரும் |
| அரைக்கு அமை
மரபின மிடற்று யாக்குநரும் | அரைக்கு அமை மரபின
மிடற்று யாக்குநரும் |
| மிடற்று அமை
மரபின அரைக்கு யாக்குநரும் | மிடற்று அமை மரபின
அரைக்கு யாக்குநரும் |
| கடும் தெறல்
இராமன் உடன்புணர் சீதையை | கடும் தெறல் இராமன்
உடன்புணர் சீதையை |
| வலி தகை
அரக்கன் வௌவிய ஞான்றை | வலி தகை அரக்கன் வௌவிய
ஞான்றை |
| நிலம் சேர்
மதர் அணி கண்ட குரங்கின் | நிலம் சேர் மதர் அணி
கண்ட குரங்கின் |
| செம் முக
பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு | செம் முக பெரும் கிளை
இழை பொலிந்து ஆஅங்கு |
| அறாஅ அரு நகை
இனிது பெற்றிகுமே | அறாஅ அரு நகை இனிது
பெற்றிகுமே |
| இரும் கிளை
தலைமை எய்தி | இரும் கிளை தலைமை
எய்தி |
| அரும் படர்
எவ்வம் உழந்ததன் தலையே | அரும் படர் எவ்வம்
உழந்ததன் தலையே |
| | |
| # 379
புறத்திணை நன்னாகனார் | # 379 புறத்திணை
நன்னாகனார் |
| யானே பெறுக
அவன் தாள் நிழல் வாழ்க்கை | யானே பெறுக அவன் தாள்
நிழல் வாழ்க்கை |
| அவனே பெறுக என்
நா இசை நுவறல் | அவனே பெறுக என் நா இசை
நுவறல் |
| நெல் அரி
தொழுவர் கூர் வாள் மழுங்கின் | நெல் அரி தொழுவர் கூர்
வாள் மழுங்கின் |
| பின்னை
மறத்தோடு அரிய கல் செத்து | பின்னை மறத்தோடு அரிய
கல் செத்து |
| அள்ளல் யாமை
கூன் புறத்து உரிஞ்சும் | அள்ளல் யாமை கூன்
புறத்து உரிஞ்சும் |
| நெல் அமல்
புரவின் இலங்கை கிழவோன் | நெல் அமல் புரவின்
இலங்கை கிழவோன் |
| வில்லியாதன்
கிணையேம் பெரும | வில்லியாதன் கிணையேம்
பெரும |
| குறும் தாள்
ஏற்றை கொளும் கண் அம் விளர் | குறும் தாள் ஏற்றை
கொளும் கண் அம் விளர் |
| நறு நெய்
உருக்கி நாள்_சோறு ஈயா | நறு நெய் உருக்கி
நாள்_சோறு ஈயா |
| வல்லன் எந்தை
பசி தீர்த்தல் என | வல்லன் எந்தை பசி
தீர்த்தல் என |
| கொன் வரல்
வாழ்க்கை நின் கிணைவன் கூற | கொன் வரல் வாழ்க்கை
நின் கிணைவன் கூற |
| கேட்டதன்
கொண்டும் வேட்கை தண்டாது | கேட்டதன் கொண்டும்
வேட்கை தண்டாது |
| விண் தோய் தலைய
குன்றம் பிற்பட | விண் தோய் தலைய
குன்றம் பிற்பட |
| வந்தனென் யானே | வந்தனென் யானே |
| தாய் இல் தூவா
குழவி போல ஆங்கு அ | தாய் இல் தூவா குழவி
போல ஆங்கு அ |
| திரு உடை திரு
மனை ஐது தோன்று கமழ் புகை | திரு உடை திரு மனை ஐது
தோன்று கமழ் புகை |
| வரு மழை
மங்குலின் மறுகு உடன் மறைக்கும் | வரு மழை மங்குலின்
மறுகு உடன் மறைக்கும் |
| குறும்பு அடு
குண்டு அகழ் நீள் மதில் ஊரே | குறும்பு அடு குண்டு
அகழ் நீள் மதில் ஊரே |
| | |
| # 380 | # 380 |
| தென் பவ்வத்து
முத்து பூண்டு | தென் பவ்வத்து முத்து
பூண்டு |
| வட_குன்றத்து
சாந்தம் உரீஇ | வட_குன்றத்து சாந்தம்
உரீஇ |
| கடல் தானை | கடல் தானை |
| இன் இசைய விறல்
வென்றி | இன் இசைய விறல் வென்றி |
| தென்னவர் வய
மறவன் | தென்னவர் வய மறவன் |
| மிசை பெய்த
நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து | மிசை பெய்த நீர் கடல்
பரந்து முத்து ஆகுந்து |
| நாறு இதழ்
குளவியொடு கூதளம் குழைய | நாறு இதழ் குளவியொடு
கூதளம் குழைய |
| தீம் சுளை
பலவின் நாஞ்சில் பொருநன் | தீம் சுளை பலவின்
நாஞ்சில் பொருநன் |
| துப்பு
எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன் | துப்பு
எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன் |
| நட்பு
எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் | நட்பு எதிர்ந்தோர்க்கே
அங்கை நண்மையன் |
| வல் வேல்
கந்தன் நல் இசை அல்ல | வல் வேல் கந்தன் நல்
இசை அல்ல |
| சிலத்தார்
பிள்ளை அம் சிறாஅர் | சிலத்தார் பிள்ளை அம்
சிறாஅர் |
| அன்னன் ஆகன்
மாறே இ நிலம் | அன்னன் ஆகன் மாறே இ
நிலம் |
| இலம்படு காலை
ஆயினும் | இலம்படு காலை ஆயினும் |
| புலம்பல்
போயின்று பூத்த என் கடும்பே | புலம்பல் போயின்று
பூத்த என் கடும்பே |
| | |
| # 381
புறத்திணை நன்னகனாரி | # 381 புறத்திணை
நன்னகனாரி |
| ஊனும் ஊணும்
முனையின் இனிது என | ஊனும் ஊணும் முனையின்
இனிது என |
| பாலின்
பெய்தவும் பாகின் கொண்டவும் | பாலின் பெய்தவும்
பாகின் கொண்டவும் |
| அளவுபு கலந்து
மெல்லிது பருகி | அளவுபு கலந்து
மெல்லிது பருகி |
| விருந்து_உறுத்து
ஆற்ற இருந்தெனம் ஆக | விருந்து_உறுத்து ஆற்ற
இருந்தெனம் ஆக |
| சென்மோ பெரும
எம் விழவு உடை நாட்டு என | சென்மோ பெரும எம்
விழவு உடை நாட்டு என |
| யாம் தன்
அறியுநம் ஆக தான் பெரிது | யாம் தன் அறியுநம் ஆக
தான் பெரிது |
| அன்பு
உடைமையின் எம் பிரிவு அஞ்சி | அன்பு உடைமையின் எம்
பிரிவு அஞ்சி |
| துணரியது கொளாஅ
ஆகி பழம் ஊழ்த்து | துணரியது கொளாஅ ஆகி
பழம் ஊழ்த்து |
| பயம் பகர்வு
அறியா மயங்கு அரில் முது பாழ் | பயம் பகர்வு அறியா
மயங்கு அரில் முது பாழ் |
| பெயல் பெய்து
அன்ன செல்வத்து ஆங்கண் | பெயல் பெய்து அன்ன
செல்வத்து ஆங்கண் |
| ஈயா மன்னர்
புறங்கடை தோன்றி | ஈயா மன்னர் புறங்கடை
தோன்றி |
| சிதாஅர்
வள்பின் சிதர் புற தடாரி | சிதாஅர் வள்பின் சிதர்
புற தடாரி |
| ஊன் சுகிர்
வலந்த தெண் கண் ஒற்றி | ஊன் சுகிர் வலந்த தெண்
கண் ஒற்றி |
| விரல் விசை
தவிர்க்கும் அரலை இல் பாணியின் | விரல் விசை
தவிர்க்கும் அரலை இல் பாணியின் |
| இலம்பாடு
அகற்றல் யாவது புலம்பொடு | இலம்பாடு அகற்றல்
யாவது புலம்பொடு |
| தெருமரல்
உயக்கமும் தீர்க்குவெம் அதனால் | தெருமரல் உயக்கமும்
தீர்க்குவெம் அதனால் |
| இரு நிலம்
கூலம் பாற கோடை | இரு நிலம் கூலம் பாற
கோடை |
| வரு மழை
முழக்கு இசைக்கு ஓடிய பின்றை | வரு மழை முழக்கு
இசைக்கு ஓடிய பின்றை |
| சேயை ஆயினும்
இவணை ஆயினும் | சேயை ஆயினும் இவணை
ஆயினும் |
| இதன் கொண்டு
அறிநை வாழியோ கிணைவ | இதன் கொண்டு அறிநை
வாழியோ கிணைவ |
| சிறு நனி ஒரு
வழி படர்க என்றோனே எந்தை | சிறு நனி ஒரு வழி
படர்க என்றோனே எந்தை |
| ஒலி வெள் அருவி
வேங்கட நாடன் | ஒலி வெள் அருவி வேங்கட
நாடன் |
| உறுவரும்
சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் | உறுவரும் சிறுவரும்
ஊழ் மாறு உய்க்கும் |
| அறத்துறை
அம்பியின் மான மறப்பு இன்று | அறத்துறை அம்பியின்
மான மறப்பு இன்று |
| இரும் கோள் ஈரா
பூட்கை | இரும் கோள் ஈரா பூட்கை |
| கரும்பனூரன்
காதல் மகனே | கரும்பனூரன் காதல்
மகனே |
| | |
| # 382 கோவூர்
கிழார் | # 382 கோவூர் கிழார் |
| கடல் படை அடல்
கொண்டி | கடல் படை அடல் கொண்டி |
| மண்டு உற்ற
மலிர் நோன் தாள் | மண்டு உற்ற மலிர் நோன்
தாள் |
| தண் சோழ நாட்டு
பொருநன் | தண் சோழ நாட்டு
பொருநன் |
| அலங்கு உளை அணி
இவுளி | அலங்கு உளை அணி இவுளி |
| நலங்கிள்ளி நசை
பொருநரேம் | நலங்கிள்ளி நசை
பொருநரேம் |
| பிறர் பாடி
பெறல் வேண்டேம் | பிறர் பாடி பெறல்
வேண்டேம் |
| அவன் பாடுதும்
அவன் தாள் வாழிய என | அவன் பாடுதும் அவன்
தாள் வாழிய என |
| நெய் குய்ய ஊன்
நவின்ற | நெய் குய்ய ஊன் நவின்ற |
| பல் சோற்றான்
இன் சுவைய | பல் சோற்றான் இன்
சுவைய |
| நல்குரவின் பசி
துன்பின் நின் | நல்குரவின் பசி
துன்பின் நின் |
| முன்_நாள்
விட்ட மூது அறி சிறாஅரும் | முன்_நாள் விட்ட மூது
அறி சிறாஅரும் |
| யானும் ஏழ் மணி
அம் கேழ் அணி உத்தி | யானும் ஏழ் மணி அம்
கேழ் அணி உத்தி |
| கண் கேள்வி
சுவை நாவின் | கண் கேள்வி சுவை
நாவின் |
| நிறன் உற்ற
அராஅ போலும் | நிறன் உற்ற அராஅ
போலும் |
| வறன் ஒரீஇ
வழங்கு வாய்ப்ப | வறன் ஒரீஇ வழங்கு
வாய்ப்ப |
| விடு-மதி அத்தை
கடு மான் தோன்றல் | விடு-மதி அத்தை கடு
மான் தோன்றல் |
| நினதே முந்நீர்
உடுத்த இ வியன் உலகு அறிய | நினதே முந்நீர் உடுத்த
இ வியன் உலகு அறிய |
| எனதே கிடை காழ்
அன்ன தெண் கண் மா கிணை | எனதே கிடை காழ் அன்ன
தெண் கண் மா கிணை |
| கண்_அகத்து
யாத்த நுண் அரி சிறு கோல் | கண்_அகத்து யாத்த நுண்
அரி சிறு கோல் |
| எறி-தொறும்
நுடங்கி ஆங்கு நின் பகைஞர் | எறி-தொறும் நுடங்கி
ஆங்கு நின் பகைஞர் |
| கேள்-தொறும்
நடுங்க ஏத்துவென் | கேள்-தொறும் நடுங்க
ஏத்துவென் |
| வென்ற தேர்
பிறர் வேத்தவையானே | வென்ற தேர் பிறர்
வேத்தவையானே |
| | |
| # 383
மாறோக்கத்து நப்பசலையார் | # 383 மாறோக்கத்து
நப்பசலையார் |
| ஒண் பொறி சேவல்
எடுப்ப ஏற்றெழுந்து | ஒண் பொறி சேவல் எடுப்ப
ஏற்றெழுந்து |
| தண் பனி
உறைக்கும் புலரா ஞாங்கர் | தண் பனி உறைக்கும்
புலரா ஞாங்கர் |
| நுண் கோல் சிறு
கிணை சிலம்ப ஒற்றி | நுண் கோல் சிறு கிணை
சிலம்ப ஒற்றி |
| நெடும் கடை
நின்று பகடு பல வாழ்த்தி | நெடும் கடை நின்று
பகடு பல வாழ்த்தி |
| தன் புகழ்
ஏத்தினென் ஆக ஊன் புலந்து | தன் புகழ் ஏத்தினென்
ஆக ஊன் புலந்து |
| அரும் கடி
வியன் நகர் குறுகல் வேண்டி | அரும் கடி வியன் நகர்
குறுகல் வேண்டி |
| கூம்பு விடு
மென் பிணி அவிழ்த்த ஆம்பல் | கூம்பு விடு மென் பிணி
அவிழ்த்த ஆம்பல் |
| தேம் பாய் உள்ள
தம் கமழ் மடர் உள | தேம் பாய் உள்ள தம்
கமழ் மடர் உள |
| பாம்பு உரி
அன்ன வடிவின காம்பின் | பாம்பு உரி அன்ன
வடிவின காம்பின் |
| கழை படு
சொலியின் இழை அணி வாரா | கழை படு சொலியின் இழை
அணி வாரா |
| ஒண் பூ
கலிங்கம் உடீஇ நுண் பூண் | ஒண் பூ கலிங்கம் உடீஇ
நுண் பூண் |
| வசிந்து வாங்கு
நுசுப்பின் அம் வாங்கு உந்தி | வசிந்து வாங்கு
நுசுப்பின் அம் வாங்கு உந்தி |
| கற்பு உடை
மடந்தை தன் புறம் புல்ல | கற்பு உடை மடந்தை தன்
புறம் புல்ல |
| என் பெயர்ந்த
நோக்கி | என் பெயர்ந்த நோக்கி |
| கல் கொண்டு | கல் கொண்டு |
| அழித்து
பிறந்தனென் ஆகி அ வழி | அழித்து பிறந்தனென்
ஆகி அ வழி |
| பிறர் பாடு
புகழ் பாடி படர்பு அறியேனே | பிறர் பாடு புகழ் பாடி
படர்பு அறியேனே |
| குறு முலைக்கு
அலமரும் பால் ஆர் வெண்மறி | குறு முலைக்கு அலமரும்
பால் ஆர் வெண்மறி |
| நரை முக ஊகமொடு
உகளும் வரை அமல் | நரை முக ஊகமொடு உகளும்
வரை அமல் |
| குன்று பல
கெழீஇய | குன்று பல கெழீஇய |
| கான் கெழு
நாடன் கடும் தேர் அவியன் என | கான் கெழு நாடன் கடும்
தேர் அவியன் என |
| ஒருவனை
உடையேன்-மன்னே யானே | ஒருவனை உடையேன்-மன்னே
யானே |
| அறான் எவன்
பரிகோ வெள்ளியது நிலையே | அறான் எவன் பரிகோ
வெள்ளியது நிலையே |
| | |
| # 384
புறத்திணை நன்னாகனார் | # 384 புறத்திணை
நன்னாகனார் |
| மென்_பாலான்
உடன் அணைஇ | மென்_பாலான் உடன் அணைஇ |
| வஞ்சி கோட்டு
உறங்கும் நாரை | வஞ்சி கோட்டு உறங்கும்
நாரை |
| அறை கரும்பின்
பூ அருந்தும் | அறை கரும்பின் பூ
அருந்தும் |
| வன்_பாலான்
கரும் கால் வரகின் | வன்_பாலான் கரும் கால்
வரகின் |
| அம் கண் குறு
முயல் வெருவ அயல | அம் கண் குறு முயல்
வெருவ அயல |
| கரும் கோட்டு
இருப்பை பூ உறைக்குந்து | கரும் கோட்டு இருப்பை
பூ உறைக்குந்து |
| விழவு இன்று
ஆயினும் உழவர் மண்டை | விழவு இன்று ஆயினும்
உழவர் மண்டை |
| இரும் கெடிற்று
மிசையொடு பூ கள் வைகுந்து | இரும் கெடிற்று
மிசையொடு பூ கள் வைகுந்து |
| கரும்பனூரன்
கிணையேம் பெரும | கரும்பனூரன் கிணையேம்
பெரும |
| நெல் என்னா
பொன் என்னாம் | நெல் என்னா பொன்
என்னாம் |
| கனற்ற கொண்ட
நறவு என்னும் | கனற்ற கொண்ட நறவு
என்னும் |
| மனை என்னா அவை
பலவும் | மனை என்னா அவை பலவும் |
| யான் தண்டவும்
தான் தண்டான் | யான் தண்டவும் தான்
தண்டான் |
| நிணம் பெருத்த
கொழும் சோற்று இடை | நிணம் பெருத்த கொழும்
சோற்று இடை |
| மண் நாண புகழ்
வேட்டு | மண் நாண புகழ் வேட்டு |
| நீர் நாண நெய்
வழங்கி | நீர் நாண நெய் வழங்கி |
| புரந்தோன்
எந்தை யாம் எவன் தொலைவதை | புரந்தோன் எந்தை யாம்
எவன் தொலைவதை |
| அன்னோனை
உடையேம் என்ப இனி வறட்கு | அன்னோனை உடையேம் என்ப
இனி வறட்கு |
| யாண்டு நிற்க
வெள்ளி மாண்ட | யாண்டு நிற்க வெள்ளி
மாண்ட |
| உண்ட நன் கலம்
பெய்து நுடக்கவும் | உண்ட நன் கலம் பெய்து
நுடக்கவும் |
| தின்ற நன் பல்
ஊன் தோண்டவும் | தின்ற நன் பல் ஊன்
தோண்டவும் |
| வந்த வைகல்
அல்லது | வந்த வைகல் அல்லது |
| சென்ற எல்லை
செலவு அறியேனே | சென்ற எல்லை செலவு
அறியேனே |
| | |
| # 385
கல்லாடனார் | # 385 கல்லாடனார் |
| வெள்ளி தோன்ற
புள்ளு குரல் இயம்ப | வெள்ளி தோன்ற புள்ளு
குரல் இயம்ப |
| புலரி விடியல்
பகடு பல வாழ்த்தி | புலரி விடியல் பகடு பல
வாழ்த்தி |
| தன் கடை
தோன்றினும் இலனே பிறன் கடை | தன் கடை தோன்றினும்
இலனே பிறன் கடை |
| அகன் கண் தடாரி
பாடு கேட்டு அருளி | அகன் கண் தடாரி பாடு
கேட்டு அருளி |
| வறன் யான்
நீங்கல் வேண்டி என் அரை | வறன் யான் நீங்கல்
வேண்டி என் அரை |
| நிலம் தின
சிதைந்த சிதாஅர் களைந்து | நிலம் தின சிதைந்த
சிதாஅர் களைந்து |
| வெளியது உடீஇ
என் பசி களைந்தோனே | வெளியது உடீஇ என் பசி
களைந்தோனே |
| காவிரி அணையும்
தாழ் நீர் படப்பை | காவிரி அணையும் தாழ்
நீர் படப்பை |
| நெல் விளை கழனி
அம்பர் கிழவோன் | நெல் விளை கழனி அம்பர்
கிழவோன் |
| நல் அருவந்தை
வாழியர் புல்லிய | நல் அருவந்தை வாழியர்
புல்லிய |
| வேங்கட விறல்
வரைப்பட்ட | வேங்கட விறல்
வரைப்பட்ட |
| ஓங்கல் வானத்து
உறையினும் பலவே | ஓங்கல் வானத்து
உறையினும் பலவே |
| | |
| # 386 கோவூர்
கிழார் | # 386 கோவூர் கிழார் |
| நெடு நீர நிறை
கயத்து | நெடு நீர நிறை கயத்து |
| படு மாரி துளி
போல | படு மாரி துளி போல |
| நெய் துள்ளிய
வறை முகக்கவும் | நெய் துள்ளிய வறை
முகக்கவும் |
| சூடு கிழித்து
வாடூன் மிசையவும் | சூடு கிழித்து வாடூன்
மிசையவும் |
| ஊன் கொண்ட வெண்
மண்டை | ஊன் கொண்ட வெண் மண்டை |
| ஆன் பயத்தான்
முற்று அழிப்பவும் | ஆன் பயத்தான் முற்று
அழிப்பவும் |
| வெய்து உண்ட
வியர்ப்பு அல்லது | வெய்து உண்ட வியர்ப்பு
அல்லது |
| செய் தொழிலான்
வியர்ப்பு அறியாமை | செய் தொழிலான்
வியர்ப்பு அறியாமை |
| ஈத்தோன் எந்தை
இசை தனது ஆக | ஈத்தோன் எந்தை இசை
தனது ஆக |
| வயலே நெல்லின்
வேலி நீடிய கரும்பின் | வயலே நெல்லின் வேலி
நீடிய கரும்பின் |
| பாத்தி பன்
மலர் பூ ததும்பின | பாத்தி பன் மலர் பூ
ததும்பின |
| புறவே புல்
அருந்து பல் ஆயத்தான் | புறவே புல் அருந்து
பல் ஆயத்தான் |
| வில் இருந்த
வெம் குறும்பின்று | வில் இருந்த வெம்
குறும்பின்று |
| கடலே கால் தந்த
கலம் எண்ணுவோர் | கடலே கால் தந்த கலம்
எண்ணுவோர் |
| கானல் புன்னை
சினை நிலைக்குந்து | கானல் புன்னை சினை
நிலைக்குந்து |
| கழியே சிறு
வெள் உப்பின் கொள்ளை சாற்றி | கழியே சிறு வெள்
உப்பின் கொள்ளை சாற்றி |
| பெரும் கல் நன்
நாட்டு உமண் ஒலிக்குந்து | பெரும் கல் நன் நாட்டு
உமண் ஒலிக்குந்து |
| அன்ன நன்
நாட்டு பொருநம் யாமே | அன்ன நன் நாட்டு
பொருநம் யாமே |
| பொராஅ
பொருநரேம் | பொராஅ பொருநரேம் |
| குண திசை
நின்று குட முதல் செலினும் | குண திசை நின்று குட
முதல் செலினும் |
| குட திசை
நின்று குண முதல் செலினும் | குட திசை நின்று குண
முதல் செலினும் |
| வட திசை நின்று
தென்_வயின் செலினும் | வட திசை நின்று
தென்_வயின் செலினும் |
| தென் திசை
நின்று குறுகாது நீடினும் | தென் திசை நின்று
குறுகாது நீடினும் |
| யாண்டும் நிற்க
வெள்ளி யாம் | யாண்டும் நிற்க வெள்ளி
யாம் |
| வேண்டியது
உணர்ந்தோன் தாள் வாழியவே | வேண்டியது உணர்ந்தோன்
தாள் வாழியவே |
| | |
| # 387
குண்டுகட் பாலியாதனார் | # 387 குண்டுகட்
பாலியாதனார் |
| வள் உகிர வயல்
ஆமை | வள் உகிர வயல் ஆமை |
| வெள் அகடு
கண்டு அன்ன | வெள் அகடு கண்டு அன்ன |
| வீங்கு விசி
புது போர்வை | வீங்கு விசி புது
போர்வை |
| தெண் கண் மா
கிணை இயக்கி என்றும் | தெண் கண் மா கிணை
இயக்கி என்றும் |
| மாறுகொண்டோர்
மதில் இடறி | மாறுகொண்டோர் மதில்
இடறி |
| நீறு ஆடிய
நறும் கவுள | நீறு ஆடிய நறும் கவுள |
| பூம் பொறி பணை
எருத்தின | பூம் பொறி பணை
எருத்தின |
| வேறு_வேறு
பரந்து இயங்கி | வேறு_வேறு பரந்து
இயங்கி |
| வேந்து உடை
மிளை அயல் பரக்கும் | வேந்து உடை மிளை அயல்
பரக்கும் |
| ஏந்து கோட்டு
இரும் பிணர் தட கை | ஏந்து கோட்டு இரும்
பிணர் தட கை |
| திருந்து
தொழில் பல பகடு | திருந்து தொழில் பல
பகடு |
| பகை புல மன்னர்
பணி திறை தந்து நின் | பகை புல மன்னர் பணி
திறை தந்து நின் |
| நகை_புல_வாணர்
நல்குரவு அகற்றி | நகை_புல_வாணர்
நல்குரவு அகற்றி |
| மிக பொலியர்
தன் சேவடி அத்தை என்று | மிக பொலியர் தன் சேவடி
அத்தை என்று |
| யாஅன்
இசைப்பின் நனி நன்று எனா | யாஅன் இசைப்பின் நனி
நன்று எனா |
| பல பிற வாழ்த்த
இருந்தோர்_தம் கோன் | பல பிற வாழ்த்த
இருந்தோர்_தம் கோன் |
| மருவ இன் நகர்
அகன் கடை தலை | மருவ இன் நகர் அகன்
கடை தலை |
| திருந்து கழல்
சேவடி குறுகல் வேண்டி | திருந்து கழல் சேவடி
குறுகல் வேண்டி |
| வென்று
இரங்கும் விறல் முரசினோன் | வென்று இரங்கும் விறல்
முரசினோன் |
| என் சிறுமையின்
இழித்து நோக்கான் | என் சிறுமையின்
இழித்து நோக்கான் |
| தன் பெருமையின்
தகவு நோக்கி | தன் பெருமையின் தகவு
நோக்கி |
| குன்று உறழ்ந்த
களிறு என்கோ | குன்று உறழ்ந்த களிறு
என்கோ |
| கொய் உளைய மா
என்கோ | கொய் உளைய மா என்கோ |
| மன்று நிறையும்
நிரை என்கோ | மன்று நிறையும் நிரை
என்கோ |
| மனை களமரொடு
களம் என்கோ | மனை களமரொடு களம்
என்கோ |
| ஆங்கு அவை கனவு
என மருள வல்லே நனவின் | ஆங்கு அவை கனவு என
மருள வல்லே நனவின் |
| நல்கியோனே நகை
சால் தோன்றல் | நல்கியோனே நகை சால்
தோன்றல் |
| ஊழி வாழி
பூழியர் பெருமகன் | ஊழி வாழி பூழியர்
பெருமகன் |
| பிணர் மருப்பு
யானை செரு மிகு நோன் தாள் | பிணர் மருப்பு யானை
செரு மிகு நோன் தாள் |
| செல்வக்கடுங்கோ
வாழியாதன் | செல்வக்கடுங்கோ
வாழியாதன் |
| ஒன்னா தெவ்வர்
உயர் குடை பணித்து இவன் | ஒன்னா தெவ்வர் உயர்
குடை பணித்து இவன் |
| விடுவர் மாதோ
நெடிதோ நில்லா | விடுவர் மாதோ நெடிதோ
நில்லா |
| புல் இளை வஞ்சி
புற மதில் அலைக்கும் | புல் இளை வஞ்சி புற
மதில் அலைக்கும் |
| கல்லென் பொருநை
மணலினும் ஆங்கண் | கல்லென் பொருநை
மணலினும் ஆங்கண் |
| பல் ஊர்
சுற்றிய கழனி | பல் ஊர் சுற்றிய கழனி |
| எல்லாம்
விளையும் நெல்லினும் பலவே | எல்லாம் விளையும்
நெல்லினும் பலவே |
| | |
| # 388 மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | # 388 மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மள்ளனார் |
| வெள்ளி தென்
புலத்து உறைய விளை வயல் | வெள்ளி தென் புலத்து
உறைய விளை வயல் |
| பள்ளம் வாடிய
பயன் இல் காலை | பள்ளம் வாடிய பயன் இல்
காலை |
| இரும் பறை
கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் | இரும் பறை கிணை_மகன்
சென்றவன் பெரும் பெயர் |
| சிறுகுடி
கிழான் பண்ணன் பொருந்தி | சிறுகுடி கிழான்
பண்ணன் பொருந்தி |
| தன் நிலை
அறியுநன் ஆக அ நிலை | தன் நிலை அறியுநன் ஆக
அ நிலை |
| இடுக்கண்
இரியல்_போக உடைய | இடுக்கண் இரியல்_போக
உடைய |
| கொடுத்தோன்
எந்தை கொடை மேம் தோன்றல் | கொடுத்தோன் எந்தை கொடை
மேம் தோன்றல் |
| நுண் நூல் தட
கையின் நா மருப்பு ஆக | நுண் நூல் தட கையின்
நா மருப்பு ஆக |
| வெல்லும்
வாய்மொழி புல் உடை விளை நிலம் | வெல்லும் வாய்மொழி
புல் உடை விளை நிலம் |
| பெயர்க்கும்
பண்ணன் கேட்டிரோ அவன் | பெயர்க்கும் பண்ணன்
கேட்டிரோ அவன் |
| வினை பகடு ஏற்ற
மேழி கிணை தொடா | வினை பகடு ஏற்ற மேழி
கிணை தொடா |
| நாள்-தொறும்
பாடேன் ஆயின் ஆனா | நாள்-தொறும் பாடேன்
ஆயின் ஆனா |
| மணி கிளர்
முன்றில் தென்னவன் மருகன் | மணி கிளர் முன்றில்
தென்னவன் மருகன் |
| பிணி முரசு
இரங்கும் பீடு கெழு தானை | பிணி முரசு இரங்கும்
பீடு கெழு தானை |
| அண்ணல் யானை
வழுதி | அண்ணல் யானை வழுதி |
| கண்மாறு இலியர்
என் பெரும் கிளை புரவே | கண்மாறு இலியர் என்
பெரும் கிளை புரவே |
| | |
| # 389 கள்ளில்
ஆத்திரையனாரி | # 389 கள்ளில்
ஆத்திரையனாரி |
| நீர் நுங்கின்
கண் வலிப்ப | நீர் நுங்கின் கண்
வலிப்ப |
| கான வேம்பின்
காய் திரங்க | கான வேம்பின் காய்
திரங்க |
| கயம் களியும்
கோடை ஆயினும் | கயம் களியும் கோடை
ஆயினும் |
| ஏலா வெண்பொன்
போகு_உறு_காலை | ஏலா வெண்பொன்
போகு_உறு_காலை |
| எம்மும்
உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் | எம்மும் உள்ளுமோ
பிள்ளை அம் பொருநன் |
| என்று ஈத்தனனே
இசை சால் நெடுந்தகை | என்று ஈத்தனனே இசை
சால் நெடுந்தகை |
| இன்று சென்று
எய்தும் வழியனும் அல்லன் | இன்று சென்று எய்தும்
வழியனும் அல்லன் |
| செலினே காணா
வழியனும் அல்லன் | செலினே காணா வழியனும்
அல்லன் |
| புன் தலை மட
பிடி இனைய கன்று தந்து | புன் தலை மட பிடி இனைய
கன்று தந்து |
| குன்றக நல் ஊர்
மன்றத்து பிணிக்கும் | குன்றக நல் ஊர்
மன்றத்து பிணிக்கும் |
| கல் இழி அருவி
வேங்கடம் கிழவோன் | கல் இழி அருவி
வேங்கடம் கிழவோன் |
| செல்வு_உழி
எழாஅ நல் ஏர் முதியன் | செல்வு_உழி எழாஅ நல்
ஏர் முதியன் |
| ஆதனுங்கன் போல
நீயும் | ஆதனுங்கன் போல நீயும் |
| பசித்த ஒக்கல்
பழங்கண் வீட | பசித்த ஒக்கல் பழங்கண்
வீட |
| வீறு சால் நன்
கலம் நல்கு-மதி பெரும | வீறு சால் நன் கலம்
நல்கு-மதி பெரும |
| ஐது அகல்
அல்குல் மகளிர் | ஐது அகல் அல்குல்
மகளிர் |
| நெய்தல்
கேளல்-மார் நெடும் கடையானே | நெய்தல் கேளல்-மார்
நெடும் கடையானே |
| | |
| # 390 ஔவையார் | # 390 ஔவையார் |
| அறவை நெஞ்சத்து
ஆயர் வளரும் | அறவை நெஞ்சத்து ஆயர்
வளரும் |
| மறவை நெஞ்சத்து
ஆய் இலாளர் | மறவை நெஞ்சத்து ஆய்
இலாளர் |
| அரும்பு அலர்
செருந்தி நெடும் கான் மலர் கமழ் | அரும்பு அலர் செருந்தி
நெடும் கான் மலர் கமழ் |
| விழவு அணி
வியன் களம் அன்ன முற்றத்து | விழவு அணி வியன் களம்
அன்ன முற்றத்து |
| ஆர்வலர்
குறுகின் அல்லது காவலர் | ஆர்வலர் குறுகின்
அல்லது காவலர் |
| கனவினும்
குறுகா கடி உடை வியன் நகர் | கனவினும் குறுகா கடி
உடை வியன் நகர் |
| மலை கணத்து
அன்ன மாடம் சிலம்ப என் | மலை கணத்து அன்ன மாடம்
சிலம்ப என் |
| அரி குரல்
தடாரி இரிய ஒற்றி | அரி குரல் தடாரி இரிய
ஒற்றி |
| பாடி நின்ற பன்
நாள் அன்றியும் | பாடி நின்ற பன் நாள்
அன்றியும் |
| சென்ற ஞான்றை
சென்று படர் இரவின் | சென்ற ஞான்றை சென்று
படர் இரவின் |
| வந்ததன் கொண்டு
நெடும் கடை நின்ற | வந்ததன் கொண்டு நெடும்
கடை நின்ற |
| புன் தலை
பொருநன் அளியன் தான் என | புன் தலை பொருநன்
அளியன் தான் என |
| தன் உழை
குறுகல் வேண்டி என் அரை | தன் உழை குறுகல்
வேண்டி என் அரை |
| முது நீர் பாசி
அன்ன உடை களைந்து | முது நீர் பாசி அன்ன
உடை களைந்து |
| திரு மலர் அன்ன
புது மடி கொளீஇ | திரு மலர் அன்ன புது
மடி கொளீஇ |
| மகிழ் தரல்
மரபின் மட்டே அன்றியும் | மகிழ் தரல் மரபின்
மட்டே அன்றியும் |
| அமிழ்து அன
மரபின் ஊன் துவை அடிசில் | அமிழ்து அன மரபின் ஊன்
துவை அடிசில் |
| வெள்ளி வெண்
கலத்து ஊட்டல் அன்றி | வெள்ளி வெண் கலத்து
ஊட்டல் அன்றி |
| முன் ஊர்
பொதியில் சேர்ந்த மென் நடை | முன் ஊர் பொதியில்
சேர்ந்த மென் நடை |
| இரும் பேர்
ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற | இரும் பேர் ஒக்கல்
பெரும் புலம்பு அகற்ற |
| அகடு நனை
வேங்கை வீ கண்டு அன்ன | அகடு நனை வேங்கை வீ
கண்டு அன்ன |
| பகடு தரு
செந்நெல் போரொடு நல்கி | பகடு தரு செந்நெல்
போரொடு நல்கி |
| கொண்டி பெறுக
என்றோனே உண்துறை | கொண்டி பெறுக என்றோனே
உண்துறை |
| மலை அலர்
அணியும் தலை நீர் நாடன் | மலை அலர் அணியும் தலை
நீர் நாடன் |
| கண்டால் கொண்டு
மனை திருந்து அடி வாழ்த்தி | கண்டால் கொண்டு மனை
திருந்து அடி வாழ்த்தி |
| வான் அறியல என்
பாடு பசி போக்கல் | வான் அறியல என் பாடு
பசி போக்கல் |
| அண்ணல் யானை
வேந்தர் | அண்ணல் யானை வேந்தர் |
| உண்மையோ
அறியலர் காண்பு அறியலரே | உண்மையோ அறியலர்
காண்பு அறியலரே |
| | |
| # 391
கல்லாடனார் | # 391 கல்லாடனார் |
| தண் துளி பல
பொழிந்து எழிலி இசைக்கும் | தண் துளி பல பொழிந்து
எழிலி இசைக்கும் |
| விண்டு அனைய
விண் தோய் பிறங்கல் | விண்டு அனைய விண் தோய்
பிறங்கல் |
| முகடு உற
உயர்ந்த நெல்லின் மகிழ் வர | முகடு உற உயர்ந்த
நெல்லின் மகிழ் வர |
| பகடு தரு பெரு
வளம் வாழ்த்தி பெற்ற | பகடு தரு பெரு வளம்
வாழ்த்தி பெற்ற |
| திருந்தா மூரி
பரந்து பட கெண்டி | திருந்தா மூரி பரந்து
பட கெண்டி |
| அரியல்
ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் | அரியல் ஆர்கையர் உண்டு
இனிது உவக்கும் |
| வேங்கட
வரைப்பின் வட புலம் பசித்து என | வேங்கட வரைப்பின் வட
புலம் பசித்து என |
| ஈங்கு வந்து
இறுத்த என் இரும் பேர் ஒக்கல் | ஈங்கு வந்து இறுத்த
என் இரும் பேர் ஒக்கல் |
| தீர்கை
விடுக்கும் பண்பின முதுகுடி | தீர்கை விடுக்கும்
பண்பின முதுகுடி |
| நனம் தலை
மூதூர் வினவலின் | நனம் தலை மூதூர்
வினவலின் |
| முன்னும்
வந்தோன் மருங்கிலன் இன்னும் | முன்னும் வந்தோன்
மருங்கிலன் இன்னும் |
| அளியன் ஆகலின்
பொருநன் இவன் என | அளியன் ஆகலின் பொருநன்
இவன் என |
| நின் உணர்ந்து
அறியுநர் என் உணர்ந்து கூற | நின் உணர்ந்து
அறியுநர் என் உணர்ந்து கூற |
| காண்கு
வந்திசின் பெரும மாண் தக | காண்கு வந்திசின்
பெரும மாண் தக |
| இரு நீர்
பெரும் கழி நுழை மீன் அருந்தும் | இரு நீர் பெரும் கழி
நுழை மீன் அருந்தும் |
| துதைந்த தூவி
அம் புதாஅம் சேக்கும் | துதைந்த தூவி அம்
புதாஅம் சேக்கும் |
| ததைந்த புன்னை
செழு நகர் வரைப்பின் | ததைந்த புன்னை செழு
நகர் வரைப்பின் |
| நெஞ்சு அமர்
காதல் நின் வெய்யோளொடு | நெஞ்சு அமர் காதல்
நின் வெய்யோளொடு |
| இன் துயில்
பெறுக தில் நீயே வளம் சால் | இன் துயில் பெறுக தில்
நீயே வளம் சால் |
| துளி பதன்
அறிந்து பொழிய | துளி பதன் அறிந்து
பொழிய |
| வேலி ஆயிரம்
விளைக நின் வயலே | வேலி ஆயிரம் விளைக
நின் வயலே |
| | |
| # 392 ஔவையார் | # 392 ஔவையார் |
| மதி ஏர்
வெண்குடை அதியர் கோமான் | மதி ஏர் வெண்குடை
அதியர் கோமான் |
| கொடும் பூண்
எழினி நெடும் கடை நின்று யான் | கொடும் பூண் எழினி
நெடும் கடை நின்று யான் |
| பசலை நிலவின்
பனி படு விடியல் | பசலை நிலவின் பனி படு
விடியல் |
| பொரு களிற்று
அடி வழி அன்ன என் கை | பொரு களிற்று அடி வழி
அன்ன என் கை |
| ஒரு கண் மா
கிணை ஒற்றுபு கொடாஅ | ஒரு கண் மா கிணை
ஒற்றுபு கொடாஅ |
| உரு கெழு
மன்னர் ஆர் எயில் கடந்து | உரு கெழு மன்னர் ஆர்
எயில் கடந்து |
| நிணம் படு
குருதி பெரும் பாட்டு ஈரத்து | நிணம் படு குருதி
பெரும் பாட்டு ஈரத்து |
| அணங்கு உடை
மரபின் இரும் களம்-தோறும் | அணங்கு உடை மரபின்
இரும் களம்-தோறும் |
| வெள் வாய்
கழுதை புல்_இனம் பூட்டி | வெள் வாய் கழுதை
புல்_இனம் பூட்டி |
| வெள்ளை வரகும்
கொள்ளும் வித்தும் | வெள்ளை வரகும்
கொள்ளும் வித்தும் |
| வைகல் உழவ
வாழிய பெரிது என | வைகல் உழவ வாழிய
பெரிது என |
| சென்று யான்
நின்றனென் ஆக அன்றே | சென்று யான் நின்றனென்
ஆக அன்றே |
| ஊர் உண் கேணி
பகட்டு இலை பாசி | ஊர் உண் கேணி பகட்டு
இலை பாசி |
| வேர் புரை
சிதாஅர் நீக்கி நேர் கரை | வேர் புரை சிதாஅர்
நீக்கி நேர் கரை |
| நுண் நூல்
கலிங்கம் உடீஇ உண்ம் என | நுண் நூல் கலிங்கம்
உடீஇ உண்ம் என |
| தேள் கடுப்பு
அன்ன நாட்படு தேறல் | தேள் கடுப்பு அன்ன
நாட்படு தேறல் |
| கோள்_மீன் அன்ன
பொலம் கலத்து அளைஇ | கோள்_மீன் அன்ன பொலம்
கலத்து அளைஇ |
| ஊண் முறை
ஈத்தல் அன்றியும் கோள் முறை | ஊண் முறை ஈத்தல்
அன்றியும் கோள் முறை |
| விருந்து இறை
நல்கியோனே அந்தரத்து | விருந்து இறை
நல்கியோனே அந்தரத்து |
| அரும் பெறல்
அமிழ்தம் அன்ன | அரும் பெறல் அமிழ்தம்
அன்ன |
| கரும்பு இவண்
தந்தோன் பெரும் பிறங்கடையே | கரும்பு இவண் தந்தோன்
பெரும் பிறங்கடையே |
| | |
| # 393
நல்லிறையனார் | # 393 நல்லிறையனார் |
| பதி முதல் பழகா
பழங்கண் வாழ்க்கை | பதி முதல் பழகா
பழங்கண் வாழ்க்கை |
| குறு நெடும்
துணையொடும் கூமை வீதலின் | குறு நெடும்
துணையொடும் கூமை வீதலின் |
| குடி முறை பாடி
ஒய்யென வருந்தி | குடி முறை பாடி ஒய்யென
வருந்தி |
| அடல் நசை மறந்த
எம் குழிசி மலர்க்கும் | அடல் நசை மறந்த எம்
குழிசி மலர்க்கும் |
| கடன் அறியாளர்
பிற நாட்டு இன்மையின் | கடன் அறியாளர் பிற
நாட்டு இன்மையின் |
| வள்ளன்மையின்
எம் வரைவோர் யார் என | வள்ளன்மையின் எம்
வரைவோர் யார் என |
| உள்ளிய
உள்ளமொடு உலை நசை துணையா | உள்ளிய உள்ளமொடு உலை
நசை துணையா |
| உலகம் எல்லாம்
ஒரு_பால் பட்டு என | உலகம் எல்லாம்
ஒரு_பால் பட்டு என |
| மலர் தார்
அண்ணல் நின் நல் இசை உள்ளி | மலர் தார் அண்ணல் நின்
நல் இசை உள்ளி |
| ஈர்ம் கை மறந்த
என் இரும் பேர் ஒக்கல் | ஈர்ம் கை மறந்த என்
இரும் பேர் ஒக்கல் |
| கூர்ந்த எவ்வம்
விட கொழு நிணம் கிழிப்ப | கூர்ந்த எவ்வம் விட
கொழு நிணம் கிழிப்ப |
| கோடை பருத்தி
வீடு நிறை பெய்த | கோடை பருத்தி வீடு
நிறை பெய்த |
| மூடை பண்டம்
மிடை நிறைந்து அன்ன | மூடை பண்டம் மிடை
நிறைந்து அன்ன |
| வெண் நிண மூரி
அருள நாள் உற | வெண் நிண மூரி அருள
நாள் உற |
| ஈன்ற அரவின் நா
உரு கடுக்கும் என் | ஈன்ற அரவின் நா உரு
கடுக்கும் என் |
| தொன்றுபடு
சிதாஅர் துவர நீக்கி | தொன்றுபடு சிதாஅர்
துவர நீக்கி |
| போது விரி
பகன்றை புது மலர் அன்ன | போது விரி பகன்றை புது
மலர் அன்ன |
| அகன்று மடி
கலிங்கம் உடீஇ செல்வமும் | அகன்று மடி கலிங்கம்
உடீஇ செல்வமும் |
| கேடு இன்று
நல்கு-மதி பெரும மாசு இல் | கேடு இன்று நல்கு-மதி
பெரும மாசு இல் |
| மதி புரை மா
கிணை தெளிர்ப்ப ஒற்றி | மதி புரை மா கிணை
தெளிர்ப்ப ஒற்றி |
| ஆடு_மகள்
அல்குல் ஒப்ப வாடி | ஆடு_மகள் அல்குல் ஒப்ப
வாடி |
| கோடை ஆயினும்
கோடி | கோடை ஆயினும் கோடி |
| காவிரி
புரக்கும் நன் நாட்டு பொருந | காவிரி புரக்கும் நன்
நாட்டு பொருந |
| வாய் வாள்
வளவன் வாழ்க என | வாய் வாள் வளவன் வாழ்க
என |
| பீடு கெழு நோன்
தாள் பாடுகம் பலவே | பீடு கெழு நோன் தாள்
பாடுகம் பலவே |
| | |
| # 394 கோனாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் | # 394 கோனாட்டு
எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் |
| சிலை உலாய்
நிமிர்ந்த சாந்து படு மார்பின் | சிலை உலாய் நிமிர்ந்த
சாந்து படு மார்பின் |
| ஒலி கதிர் கழனி
வெண்குடை கிழவோன் | ஒலி கதிர் கழனி
வெண்குடை கிழவோன் |
| வலி துஞ்சு தட
கை வாய் வாள் குட்டுவன் | வலி துஞ்சு தட கை வாய்
வாள் குட்டுவன் |
| வள்ளியன் ஆதல்
வையகம் புகழினும் | வள்ளியன் ஆதல் வையகம்
புகழினும் |
| உள்ளல்
ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் | உள்ளல் ஓம்பு-மின்
உயர் மொழி புலவீர் |
| யானும் இருள்
நிலா கழிந்த பகல் செய் வைகறை | யானும் இருள் நிலா
கழிந்த பகல் செய் வைகறை |
| ஒரு கண் மா
கிணை தெளிர்ப்ப ஒற்றி | ஒரு கண் மா கிணை
தெளிர்ப்ப ஒற்றி |
| பாடு இமிழ்
முரசின் இயல் தேர் தந்தை | பாடு இமிழ் முரசின்
இயல் தேர் தந்தை |
| வாடா வஞ்சி
பாடினேன் ஆக | வாடா வஞ்சி பாடினேன்
ஆக |
| அகம் மலி
உவகையொடு அணுகல் வேண்டி | அகம் மலி உவகையொடு
அணுகல் வேண்டி |
| கொன்று சினம்
தணியா புலவு நாறு மருப்பின் | கொன்று சினம் தணியா
புலவு நாறு மருப்பின் |
| வெம் சின வேழம்
நல்கினன் அஞ்சி | வெம் சின வேழம்
நல்கினன் அஞ்சி |
| யான் அது
பெயர்த்தனென் ஆக தான் அது | யான் அது பெயர்த்தனென்
ஆக தான் அது |
| சிறிது என
உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் | சிறிது என உணர்ந்தமை
நாணி பிறிதும் ஓர் |
| பெரும் களிறு
நல்கியோனே அதன் கொண்டு | பெரும் களிறு
நல்கியோனே அதன் கொண்டு |
| இரும் பேர்
ஒக்கல் பெரும் புலம்பு உறினும் | இரும் பேர் ஒக்கல்
பெரும் புலம்பு உறினும் |
| துன் அரும்
பரிசில் தரும் என | துன் அரும் பரிசில்
தரும் என |
| என்றும்
செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே | என்றும் செல்லேன் அவன்
குன்று கெழு நாட்டே |
| | |
| # 395 மதுரை
நக்கீரர் | # 395 மதுரை நக்கீரர் |
| மென்_புலத்து
வயல் உழவர் | மென்_புலத்து வயல்
உழவர் |
| வன்_புலத்து
பகடு விட்டு | வன்_புலத்து பகடு
விட்டு |
| குறு முயலின்
குழை சூட்டொடு | குறு முயலின் குழை
சூட்டொடு |
| நெடு வாளை பல்
உவியல் | நெடு வாளை பல் உவியல் |
| பழம் சோற்று
புக வருந்தி | பழம் சோற்று புக
வருந்தி |
| புதல் தளவின்
பூ சூடி | புதல் தளவின் பூ சூடி |
| அரி_பறையால்
புள் ஓப்பி | அரி_பறையால் புள்
ஓப்பி |
| அவிழ் நெல்லின்
அரியல் ஆருந்து | அவிழ் நெல்லின் அரியல்
ஆருந்து |
| மனை கோழி பைம்
பயிரின்னே | மனை கோழி பைம்
பயிரின்னே |
| கான கோழி கவர்
குரலொடு | கான கோழி கவர் குரலொடு |
| நீர்க்கோழி
கூய் பெயர்க்குந்து | நீர்க்கோழி கூய்
பெயர்க்குந்து |
| வேய் அன்ன மென்
தோளால் | வேய் அன்ன மென் தோளால் |
| மயில் அன்ன
மென் சாயலார் | மயில் அன்ன மென்
சாயலார் |
| கிளி கடியின்னே | கிளி கடியின்னே |
| அகல் அள்ளல்
புள் இரீஇயுந்து | அகல் அள்ளல் புள்
இரீஇயுந்து |
| ஆங்கு அ பல
நல்ல புலன் அணியும் | ஆங்கு அ பல நல்ல புலன்
அணியும் |
| சீர் சான்ற
விழு சிறப்பின் | சீர் சான்ற விழு
சிறப்பின் |
| சிறு கண் யானை
பெறல் அரும் தித்தன் | சிறு கண் யானை பெறல்
அரும் தித்தன் |
| செல்லா நல் இசை
உறந்தை குணாது | செல்லா நல் இசை உறந்தை
குணாது |
| நெடும் கை
வேண்மான் அரும் கடி பிடவூர் | நெடும் கை வேண்மான்
அரும் கடி பிடவூர் |
| அற பெயர்
சாத்தன் கிளையேம் பெரும | அற பெயர் சாத்தன்
கிளையேம் பெரும |
| முன்_நாள்
நண்பகல் சுரன் உழந்து வருந்தி | முன்_நாள் நண்பகல்
சுரன் உழந்து வருந்தி |
| கதிர் நனி
சென்ற கனை இருள் மாலை | கதிர் நனி சென்ற கனை
இருள் மாலை |
| தன் கடை தோன்றி
என் உறவு இசைத்தலின் | தன் கடை தோன்றி என்
உறவு இசைத்தலின் |
| தீம் குரல் அரி
குரல் தடாரியொடு | தீம் குரல் அரி குரல்
தடாரியொடு |
| ஆங்கு நின்ற
என் கண்டு | ஆங்கு நின்ற என் கண்டு |
| சிறிதும்
நில்லான் பெரிதும் கூறான் | சிறிதும் நில்லான்
பெரிதும் கூறான் |
| அரும் கலம்
வரவே அருளினன் வேண்டி | அரும் கலம் வரவே
அருளினன் வேண்டி |
| ஐயென
உரைத்தன்றி நல்கி தன் மனை | ஐயென உரைத்தன்றி நல்கி
தன் மனை |
| பொன் போல்
மடந்தையை காட்டி இவனை | பொன் போல் மடந்தையை
காட்டி இவனை |
| என் போல்
போற்று என்றோனே அதன் கொண்டு | என் போல் போற்று
என்றோனே அதன் கொண்டு |
| அவன் மறவலேனே
பிறர் உள்ளலேனே | அவன் மறவலேனே பிறர்
உள்ளலேனே |
| அகன் ஞாலம்
பெரிது வெம்பினும் | அகன் ஞாலம் பெரிது
வெம்பினும் |
| மிக வானுள் எரி
தோன்றினும் | மிக வானுள் எரி
தோன்றினும் |
| குள_மீனோடும்
தாள் புகையினும் | குள_மீனோடும் தாள்
புகையினும் |
| பெரும் செய்
நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் | பெரும் செய் நெல்லின்
கொக்கு உகிர் நிமிரல் |
| பசும் கண்
கருனை சூட்டொடு மாந்தி | பசும் கண் கருனை
சூட்டொடு மாந்தி |
| விளைவு ஒன்றோ
வெள்ளம் கொள்க என | விளைவு ஒன்றோ வெள்ளம்
கொள்க என |
| உள்ளதும்
இல்லதும் அறியாது | உள்ளதும் இல்லதும்
அறியாது |
| ஆங்கு
அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே | ஆங்கு அமைந்தன்றால்
வாழ்க அவன் தாளே |
| | |
| # 396 மாங்குடி
கிழார் | # 396 மாங்குடி கிழார் |
| கீழ் நீரால்
மீன் வழங்குந்து | கீழ் நீரால் மீன்
வழங்குந்து |
| மீ நீரான் கண்
அன்ன மலர் பூக்குந்து | மீ நீரான் கண் அன்ன
மலர் பூக்குந்து |
| கழி சுற்றிய
விளை கழனி | கழி சுற்றிய விளை கழனி |
| அரி_பறையான்
புள் ஓப்புந்து | அரி_பறையான் புள்
ஓப்புந்து |
| நெடு நீர்
கூஉம் மணல் தண் கான் | நெடு நீர் கூஉம் மணல்
தண் கான் |
| மென் பறையான்
புள் இரியுந்து | மென் பறையான் புள்
இரியுந்து |
| நனை கள்ளின்
மனை கோசர் | நனை கள்ளின் மனை கோசர் |
| தீம் தேறல்
நறவு மகிழ்ந்து | தீம் தேறல் நறவு
மகிழ்ந்து |
| தீம் குரவை
கொளை தாங்குந்து | தீம் குரவை கொளை
தாங்குந்து |
| உள் இலோர்க்கு
வலி ஆகுவன் | உள் இலோர்க்கு வலி
ஆகுவன் |
| கேள் இலோர்க்கு
கேள் ஆகுவன் | கேள் இலோர்க்கு கேள்
ஆகுவன் |
| கழுமிய வென்
வேல் வேளே | கழுமிய வென் வேல் வேளே |
| வள நீர்
வாட்டாற்று எழினியாதன் | வள நீர் வாட்டாற்று
எழினியாதன் |
| கிணையேம் பெரும | கிணையேம் பெரும |
| கொழும் தடிய
சூடு என்கோ | கொழும் தடிய சூடு
என்கோ |
| வள நனையின்
மட்டு என்கோ | வள நனையின் மட்டு
என்கோ |
| குறு முயலின்
நிணம் பெய்தந்த | குறு முயலின் நிணம்
பெய்தந்த |
| நறு நெய்ய சோறு
என்கோ | நறு நெய்ய சோறு என்கோ |
| திறந்து மறந்து
கூட்டு முதல் | திறந்து மறந்து கூட்டு
முதல் |
| முகந்து
கொள்ளும் உணவு என்கோ | முகந்து கொள்ளும் உணவு
என்கோ |
| அன்னவை பல_பல | அன்னவை பல_பல |
| வருந்திய | வருந்திய |
| இரும் பேர்
ஒக்கல் அருந்தி எஞ்சிய | இரும் பேர் ஒக்கல்
அருந்தி எஞ்சிய |
| அளித்து உவப்ப
ஈத்தோன் எந்தை | அளித்து உவப்ப ஈத்தோன்
எந்தை |
| எம்மோர் ஆக்க
கங்கு உண்டே | எம்மோர் ஆக்க கங்கு
உண்டே |
| மாரி வானத்து
மீன் நாப்பண் | மாரி வானத்து மீன்
நாப்பண் |
| விரி கதிர வெண்
திங்களின் | விரி கதிர வெண்
திங்களின் |
| விளங்கி
தோன்றுக அவன் கலங்கா நல் இசை | விளங்கி தோன்றுக அவன்
கலங்கா நல் இசை |
| யாமும் பிறரும்
வாழ்த்த நாளும் | யாமும் பிறரும்
வாழ்த்த நாளும் |
| நிரை சால் நன்
கலன் நல்கி | நிரை சால் நன் கலன்
நல்கி |
| உரை செல சுரக்க
அவன் பாடல் சால் வளனே | உரை செல சுரக்க அவன்
பாடல் சால் வளனே |
| | |
| # 397 | # 397 |
| வெள்ளியும் இரு
விசும்பு ஏர்தரும் புள்ளும் | வெள்ளியும் இரு
விசும்பு ஏர்தரும் புள்ளும் |
| உயர் சினை
குடம்பை குரல் தோற்றினவே | உயர் சினை குடம்பை
குரல் தோற்றினவே |
| பொய்கையும்
போடு கண் விழித்தன பைபய | பொய்கையும் போடு கண்
விழித்தன பைபய |
| சுடரும்
சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து | சுடரும் சுருங்கின்று
ஒளியே பாடு எழுந்து |
| இரங்கு குரல்
முரசமொடு வலம்புரி ஆர்ப்ப | இரங்கு குரல் முரசமொடு
வலம்புரி ஆர்ப்ப |
| இரவு புறங்கண்ட
காலை தோன்றி | இரவு புறங்கண்ட காலை
தோன்றி |
| எஃகு இருள்
அகற்றும் ஏம பாசறை | எஃகு இருள் அகற்றும்
ஏம பாசறை |
| வைகறை அரவம்
கேளியர் பல கோள் | வைகறை அரவம் கேளியர்
பல கோள் |
| செய் தார்
மார்ப எழு-மதி துயில் என | செய் தார் மார்ப
எழு-மதி துயில் என |
| தெண் கண் மா
கிணை தெளிர்ப்ப ஒற்றி | தெண் கண் மா கிணை
தெளிர்ப்ப ஒற்றி |
| நெடும் கடை
தோன்றியேனே அது நயந்து | நெடும் கடை தோன்றியேனே
அது நயந்து |
| உள்ளி வந்த
பரிசிலன் இவன் என | உள்ளி வந்த பரிசிலன்
இவன் என |
| நெய் உற
பொரித்த குய் உடை நெடும் சூடு | நெய் உற பொரித்த குய்
உடை நெடும் சூடு |
| மணி கலன்
நிறைந்த மணம் நாறு தேறல் | மணி கலன் நிறைந்த மணம்
நாறு தேறல் |
| பாம்பு உரித்து
அன்ன வான் பூ கலிங்கமொடு | பாம்பு உரித்து அன்ன
வான் பூ கலிங்கமொடு |
| மாரி அன்ன
வண்மையின் சொரிந்து | மாரி அன்ன வண்மையின்
சொரிந்து |
| வேனில் அன்ன
என் வெப்பு நீங்க | வேனில் அன்ன என்
வெப்பு நீங்க |
| அரும் கலம்
நல்கியோனே என்றும் | அரும் கலம் நல்கியோனே
என்றும் |
| செறுவில் பூத்த
சே இதழ் தாமரை | செறுவில் பூத்த சே
இதழ் தாமரை |
| அறு தொழில்
அந்தணர் அறம் புரிந்து எடுத்த | அறு தொழில் அந்தணர்
அறம் புரிந்து எடுத்த |
| தீயொடு
விளங்கும் நாடன் வாய் வாள் | தீயொடு விளங்கும்
நாடன் வாய் வாள் |
| வலம் படு
தீவின் பொலம் பூண் வளவன் | வலம் படு தீவின் பொலம்
பூண் வளவன் |
| எறி திரை
பெரும் கடல் இறுதி கண் செலினும் | எறி திரை பெரும் கடல்
இறுதி கண் செலினும் |
| தெறு கதிர்
கனலி தென் திசை தோன்றினும் | தெறு கதிர் கனலி தென்
திசை தோன்றினும் |
| என் என்று
அஞ்சலம் யாமே வென் வெல் | என் என்று அஞ்சலம்
யாமே வென் வெல் |
| அரும் சமம்
கடக்கும் ஆற்றல் அவன் | அரும் சமம் கடக்கும்
ஆற்றல் அவன் |
| திருந்து கழல்
நோன் தாள் தண் நிழலேமே | திருந்து கழல் நோன்
தாள் தண் நிழலேமே |
| | |
| # 398
திருத்தாமனார் | # 398 திருத்தாமனார் |
| மதி நிலா கரப்ப
வெள்ளி ஏர்தர | மதி நிலா கரப்ப வெள்ளி
ஏர்தர |
| வகை மாண் நல்
இல் | வகை மாண் நல் இல் |
| பொறி மயிர்
வாரணம் பொழுது அறிந்து இயம்ப | பொறி மயிர் வாரணம்
பொழுது அறிந்து இயம்ப |
| பொய்கை பூ முகை
மலர பாணர் | பொய்கை பூ முகை மலர
பாணர் |
| கைவல் சீறியாழ்
கடன் அறிந்து இயக்க | கைவல் சீறியாழ் கடன்
அறிந்து இயக்க |
| இரவு
புறம்பெற்ற ஏம வைகறை | இரவு புறம்பெற்ற ஏம
வைகறை |
| பரிசிலர் வரையா
விரை செய் பந்தர் | பரிசிலர் வரையா விரை
செய் பந்தர் |
| வரிசையின்
இறுத்த வாய்மொழி வஞ்சன் | வரிசையின் இறுத்த
வாய்மொழி வஞ்சன் |
| நகைவர்
குறுகின் அல்லது பகைவர்க்கு | நகைவர் குறுகின்
அல்லது பகைவர்க்கு |
| புலி_இனம்
மடிந்த கல் அளை போல | புலி_இனம் மடிந்த கல்
அளை போல |
| துன்னல் போகிய
பெரும் பெயர் மூதூர் | துன்னல் போகிய பெரும்
பெயர் மூதூர் |
| மதியத்து அன்ன
என் அரி குரல் தடாரி | மதியத்து அன்ன என் அரி
குரல் தடாரி |
| இரவுரை
நெடுவார் அரிப்ப வட்டித்து | இரவுரை நெடுவார்
அரிப்ப வட்டித்து |
| உள்ளி வருநர்
கொள்கலம் நிறைப்போய் | உள்ளி வருநர் கொள்கலம்
நிறைப்போய் |
| தள்ளா நிலையை
ஆகியர் எமக்கு என | தள்ளா நிலையை ஆகியர்
எமக்கு என |
| என் வரவு அறீஇ | என் வரவு அறீஇ |
| சிறிதிற்கு
பெரிது உவந்து | சிறிதிற்கு பெரிது
உவந்து |
| விரும்பிய
முகத்தன் ஆகி என் அரை | விரும்பிய முகத்தன்
ஆகி என் அரை |
| துரும்பு படு
சிதாஅர் நீக்கி தன் அரை | துரும்பு படு சிதாஅர்
நீக்கி தன் அரை |
| புகை விரிந்து
அன்ன பொங்கு துகில் உடீஇ | புகை விரிந்து அன்ன
பொங்கு துகில் உடீஇ |
| அழல் கான்று
அன்ன அரும் பெறல் மண்டை | அழல் கான்று அன்ன
அரும் பெறல் மண்டை |
| நிழல் காண்
தேறல் நிறைய வாக்கி | நிழல் காண் தேறல்
நிறைய வாக்கி |
| யான் உண அருளல்
அன்றியும் தான் உண் | யான் உண அருளல்
அன்றியும் தான் உண் |
| மண்டைய கண்ட
மான் வறை கருனை | மண்டைய கண்ட மான் வறை
கருனை |
| கொக்கு உகிர்
நிமிரல் ஒக்கல் ஆர | கொக்கு உகிர் நிமிரல்
ஒக்கல் ஆர |
| வரை உறழ்
மார்பின் வையகம் விளக்கும் | வரை உறழ் மார்பின்
வையகம் விளக்கும் |
| விரவு மணி
ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு | விரவு மணி ஒளிர்வரும்
அரவு உறழ் ஆரமொடு |
| புரையோன் மேனி
பூ துகில் கலிங்கம் | புரையோன் மேனி பூ
துகில் கலிங்கம் |
| உரை செல
அருளியோனே | உரை செல அருளியோனே |
| பறை இசை அருவி
பாயல் கோவே | பறை இசை அருவி பாயல்
கோவே |
| | |
| # 399 ஐயூர்
முடவனார் | # 399 ஐயூர் முடவனார் |
| அடு_மகள்
முகந்த அளவா வெண்ணெல் | அடு_மகள் முகந்த அளவா
வெண்ணெல் |
| தொடி மாண்
உலக்கை பரூஉ குற்று அரிசி | தொடி மாண் உலக்கை பரூஉ
குற்று அரிசி |
| காடி வெள் உலை
கொளீஇ நீழல் | காடி வெள் உலை கொளீஇ
நீழல் |
| ஓங்கு சினை
மாவின் தீம் கனி நறும் புளி | ஓங்கு சினை மாவின்
தீம் கனி நறும் புளி |
| மோட்டு இரு
வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை | மோட்டு இரு வராஅல்
கோட்டு_மீன் கொழும் குறை |
| செறுவின் வள்ளை
சிறு கொடி பாகல் | செறுவின் வள்ளை சிறு
கொடி பாகல் |
| பாதிரி ஊழ்
முகை அவிழ் விடுத்து அன்ன | பாதிரி ஊழ் முகை அவிழ்
விடுத்து அன்ன |
| மெய் களைந்து
இனனொடு விரைஇ | மெய் களைந்து இனனொடு
விரைஇ |
| மூழ்ப்ப பெய்த
முழு அவிழ் புழுக்கல் | மூழ்ப்ப பெய்த முழு
அவிழ் புழுக்கல் |
| அழிகளின்
படுநர் களி அட வைகின் | அழிகளின் படுநர் களி
அட வைகின் |
| பழம் சோறு
அயிலும் முழங்கு நீர் படப்பை | பழம் சோறு அயிலும்
முழங்கு நீர் படப்பை |
| காவிரி கிழவன்
மாயா நல் இசை | காவிரி கிழவன் மாயா
நல் இசை |
| கிள்ளிவளவன்
உள்ளி அவன் படர்தும் | கிள்ளிவளவன் உள்ளி
அவன் படர்தும் |
| செல்லேன்
செல்லேன் பிறர் முகம் நோக்கேன் | செல்லேன் செல்லேன்
பிறர் முகம் நோக்கேன் |
| நெடும் கழை
தூண்டில் விடு மீன் நொடுத்து | நெடும் கழை தூண்டில்
விடு மீன் நொடுத்து |
| கிணை_மகள் அட்ட
பாவல் புளிங்கூழ் | கிணை_மகள் அட்ட பாவல்
புளிங்கூழ் |
| பொழுது மறுத்து
உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு | பொழுது மறுத்து
உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு |
| ஒரு சிறை
இருந்தேன் என்னே இனியே | ஒரு சிறை இருந்தேன்
என்னே இனியே |
| அறவர் அறவன்
மறவர் மறவன் | அறவர் அறவன் மறவர்
மறவன் |
| மள்ளர் மள்ளன்
தொல்லோர் மருகன் | மள்ளர் மள்ளன்
தொல்லோர் மருகன் |
| இசையின்
கொண்டான் நசை அமுது உண்க என | இசையின் கொண்டான் நசை
அமுது உண்க என |
| மீ படர்ந்து
இறந்து வன் கோல் மண்ணி | மீ படர்ந்து இறந்து
வன் கோல் மண்ணி |
| வள் பரிந்து
கிடந்த என் தெண் கண் மா கிணை | வள் பரிந்து கிடந்த
என் தெண் கண் மா கிணை |
| விசிப்பு_உறுத்து
அமைந்த புது காழ் போர்வை | விசிப்பு_உறுத்து
அமைந்த புது காழ் போர்வை |
| அலகின் மாலை
ஆர்ப்ப வட்டித்து | அலகின் மாலை ஆர்ப்ப
வட்டித்து |
| கடியும் உணவு
என்ன கடவுட்கும் தொடேன் | கடியும் உணவு என்ன
கடவுட்கும் தொடேன் |
| கடும் தேர்
அள்ளற்கு அசாவா நோன் சுவல் | கடும் தேர் அள்ளற்கு
அசாவா நோன் சுவல் |
| பகடே அத்தை
யான் வேண்டி வந்தது என | பகடே அத்தை யான்
வேண்டி வந்தது என |
| ஒன்று யான்
பெட்டா அளவை அன்றே | ஒன்று யான் பெட்டா
அளவை அன்றே |
| ஆன்று விட்டனன்
அத்தை விசும்பின் | ஆன்று விட்டனன் அத்தை
விசும்பின் |
| மீன் பூத்து
அன்ன உருவ பன் நிரை | மீன் பூத்து அன்ன உருவ
பன் நிரை |
| ஊர்தியொடு
நல்கியோனே சீர் கொள | ஊர்தியொடு நல்கியோனே
சீர் கொள |
| இழுமென
இழிதரும் அருவி | இழுமென இழிதரும் அருவி |
| வான் தோய் உயர்
சிமை தோன்றி கோவே | வான் தோய் உயர் சிமை
தோன்றி கோவே |
| | |
| # 400 கோவூர்
கிழார் | # 400 கோவூர் கிழார் |
| மாக விசும்பின்
வெண் திங்கள் | மாக விசும்பின் வெண்
திங்கள் |
| மூ_ஐந்தால்
முறை முற்ற | மூ_ஐந்தால் முறை முற்ற |
| கடல் நடுவண்
கண்டு அன்ன என் | கடல் நடுவண் கண்டு
அன்ன என் |
| இயம் இசையா
மரபு ஏத்தி | இயம் இசையா மரபு ஏத்தி |
| கடை தோன்றிய
கடை கங்குலான் | கடை தோன்றிய கடை
கங்குலான் |
| பலர் துஞ்சவும்
தான் துஞ்சான் | பலர் துஞ்சவும் தான்
துஞ்சான் |
| உலகு காக்கும்
உயர் கொள்கை | உலகு காக்கும் உயர்
கொள்கை |
| கேட்டோன் எந்தை
என் தெண் கிணை குரலே | கேட்டோன் எந்தை என்
தெண் கிணை குரலே |
| கேட்டதன்
கொண்டும் வேட்கை தண்டாது | கேட்டதன் கொண்டும்
வேட்கை தண்டாது |
| தொன்றுபடு
சிதாஅர் மருங்கு நீக்கி | தொன்றுபடு சிதாஅர்
மருங்கு நீக்கி |
| மிக பெரும்
சிறப்பின் வீறு சால் நன் கலம் | மிக பெரும் சிறப்பின்
வீறு சால் நன் கலம் |
| கலிங்கம்
அளித்திட்டு என் அரை நோக்கி | கலிங்கம் அளித்திட்டு
என் அரை நோக்கி |
| நார் அரி
நறவின் நாள்_மகிழ் தூங்குந்து | நார் அரி நறவின்
நாள்_மகிழ் தூங்குந்து |
| போது அறியேன்
பதி பழகவும் | போது அறியேன் பதி
பழகவும் |
| தன் பகை கடிதல்
அன்றியும் சேர்ந்தோர் | தன் பகை கடிதல்
அன்றியும் சேர்ந்தோர் |
| பசி பகை
கடிதலும் வல்லன் மாதோ | பசி பகை கடிதலும்
வல்லன் மாதோ |
| மறவர் மலிந்த
தன் | மறவர் மலிந்த தன் |
| கேள்வி மலிந்த
வேள்வி தூணத்து | கேள்வி மலிந்த வேள்வி
தூணத்து |
| இரும் கழி
இழிதரும் ஆர்கலி வங்கம் | இரும் கழி இழிதரும்
ஆர்கலி வங்கம் |
| தேறு நீர்
பரப்பின் யாறு சீத்து உய்த்து | தேறு நீர் பரப்பின்
யாறு சீத்து உய்த்து |
| துறை-தொறும்
பிணிக்கும் நல் ஊர் | துறை-தொறும்
பிணிக்கும் நல் ஊர் |
| உறைவு இன்
யாணர் நாடு கிழவோனே | உறைவு இன் யாணர் நாடு
கிழவோனே |
| | |
| |