| |
# 276 மதுரை
பூதன் இளநாகனார் | # 276 மதுரை பூதன்
இளநாகனார் |
நறு விரை
துறந்த நறை வெண் கூந்தல் | நல்ல மணமுள்ள
பொருள்களைத் துறந்த, நரைத்த வெண்மையான கூந்தலையும், |
இரும் காழ்
அன்ன திரங்கு கண் வறு முலை | இரவமரத்தின் விதைபோன்ற
சுருங்கிய கண்ணையுடைய வற்றிய முலையையும் உடைய, |
செம் முது
பெண்டின் காதல் அம் சிறாஅன் | செம்மையான பண்புடைய
முதியவளுடைய அன்புச் சிறுவன், |
மட பால்
ஆய்_மகள் வள் உகிர் தெறித்த | இளமைப் பான்மையையுடைய
இடைக்குலப் பெண் ஒருத்தி தன் வளமையான நகத்தால் தெளித்த |
குட பால் சில்
உறை போல 5 | ஒரு குடப்பாலுக்குச்
சிறிதளவு உறை போலப் |
படைக்கு நோய்
எல்லாம் தான் ஆயினனே | பகைவரின் படைக்குத்
தானே துன்பம் எல்லாம் தருபவன் ஆனான். |
| |
# 277
பூங்கணுத்திரையார் | # 277
பூங்கணுத்திரையார் |
மீன் உண்
கொக்கின் தூவி அன்ன | மீன் உண்ணும் கொக்கின்
இறகு போன்ற |
வால் நரை
கூந்தல் முதியோள் சிறுவன் | வெண்மையான, நரைத்த
கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் |
களிறு எறிந்து
பட்டனன் என்னும் உவகை | யானையைக் கொன்று
தானும் வீழ்ந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, |
ஈன்ற
ஞான்றினும் பெரிதே கண்ணீர் | அவள் அவனைப் பெற்றபோது
அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிது; அவள் வடித்த மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளிகள் |
நோன் கழை
துயல்வரும் வெதிரத்து 5 | வலிய கழையாய் அசைகின்ற
மூங்கிலில் |
வான் பெய
தூங்கிய சிதரினும் பலவே | மழை பெய்யும்போது
தொங்கிக்கொண்டு சொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை. |
| |
# 278
காக்கைபாடினியார் நச்செள்ளையார் | # 278
காக்கைபாடினியார் நச்செள்ளையார் |
நரம்பு எழுந்து
உலறிய நிரம்பா மென் தோள் | நரம்புகள் புடைத்து
வற்றி உலர்ந்த மெலிந்த தோள்களையும், |
முளரி
மருங்கின் முதியோள் சிறுவன் | தாமரை இலை போன்ற
அடிவயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் |
படை அழிந்து
மாறினன் என்று பலர் கூற | பகைவரின் படையைக்
கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூற, |
மண்டு அமர்க்கு
உடைந்தனன் ஆயின் உண்ட என் | கடும் போரைக் கண்டு
அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் |
முலை
அறுத்திடுவென் யான் என சினைஇ
5 | முலைகளை அறுத்திடுவேன்
நான் என்று சினந்து, |
கொண்ட வாளொடு
படு பிணம் பெயரா | கையிலேந்திய வாளோடு
சென்று, போர்க்களத்தில், இறந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப்
பார்த்துச் |
செம் களம்
துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய | சிவந்த போர்க்களம்
முழுவதும் தன் மகனின் உடலைத் தேடியவள். சிதைந்து வேறு வேறாக |
படு மகன்
கிடக்கை காணூஉ | வெட்டுப்பட்டு அவன்
உடல் கிடப்பதைக் கண்டு, |
ஈன்ற
ஞான்றினும் பெரிது உவந்தனளே | அவனைப் பெற்றபோது
அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள். |
| |
# 279 ஒக்கூர்
மாசாத்தியார் | # 279 ஒக்கூர்
மாசாத்தியார் |
கெடுக சிந்தை
கடிது இவள் துணிவே | இவளது சிந்தை கெடுக;
இவளது துணிவு மிகவும் கடுமையானது. |
மூதின் மகளிர்
ஆதல் தகுமே | முதுமையான மறக்குலப்
பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். |
மேல் நாள் உற்ற
செருவிற்கு இவள் தன்னை | முந்தாநாள் நடைபெற்ற
போரில், இவளுடைய தந்தை, |
யானை எறிந்து
களத்து ஒழிந்தனனே | யானையைக் கொன்று
தானும் வீழ்ந்து மாண்டான்; |
நெருநல் உற்ற
செருவிற்கு இவள் கொழுநன் 5 | நேற்று நடைபெற்ற
போரில், இவள் கணவன் |
பெரு நிரை
விலங்கி ஆண்டு பட்டனனே | ஆநிரைகளைக் கவர்ந்து
செல்வோரைக் குறுக்கிட்டுத்தடுத்து அப் போரில் இறந்தான்; |
இன்றும் செரு
பறை கேட்டு விருப்பு_உற்று மயங்கி | இன்றும் ஒலிக்கிற
போர்ப்பறை கேட்டு, மறப் புகழ் மேல் விருப்பம்கொண்டு அறிவு மயங்கி |
வேல் கை
கொடுத்து வெளிது விரித்து உடீஇ | வேலினைக் கையில்
கொடுத்து, வெண்ணிற ஆடையை எடுத்து விரித்து, இடுப்பில் உடுத்தி, |
பாறு மயிர்
குடுமி எண்ணெய் நீவி | பரட்டை மயிர்க்
குடுமியில் எண்ணெய் தடவி, |
ஒரு மகன்
அல்லது இல்லோள் 10 | இந்த ஒரு மகனைத் தவிர
வேறு மகன் இல்லாதவள் |
செருமுகம்
நோக்கி செல்க என விடுமே | “போர்க்களத்தை
நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள். |
| |
# 280
மாறோக்கத்து நப்பசலையார் | # 280 மாறோக்கத்து
நப்பசலையார் |
என் ஐ மார்பில்
புண்ணும் வெய்ய | என் கணவனின் மார்பில்
புண்ணும் கடுமையானதாக இருக்கிறது; |
நடுநாள் வந்து
தும்பியும் துவைக்கும் | நடுப்பகலில் வந்து
வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன; |
நெடு நகர்
வரைப்பின் விளக்கும் நில்லா | என்னுடைய பெரிய
மாளிகைப் பிரகாரங்களின் விளக்குகள் நின்று எரியாமல் அவிந்துவிடுகின்றன; |
துஞ்சா கண்ணே
துயிலும் வேட்கும் | அவன் அருகிருந்து
உறங்காத என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன; |
அஞ்சுவரு
குராஅல் குரலும் தூற்றும்
5 | அச்சத்தைத் தரும் கூகை
தன் குரலால் அலறுகிறது; |
நெல் நீர்
எறிந்து விரிச்சி ஓர்க்கும் | நெல்லும் நீரும்
சொரிந்து விரிச்சி கேட்கும் |
செம் முது
பெண்டின் சொல்லும் நிரம்பா | செம்மைப்பண்புள்ள
முதிய பெண்டிரின் சொற்களிலும் முழுமை இல்லை; |
துடிய பாண பாடு
வல் விறலி | துடியனே! பாணனே!
பாடுவதில் வல்ல விறலியே! |
என்
ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் | நீங்கள் என்ன
ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள்; உங்களுக்கும் |
இவண் உறை
வாழ்க்கையோ அரிதே யானும்
10 | இவ்விடத்து வாழும்
வாழ்க்கையோ அரிது; நானும் |
மண்_உறு மழி
தலை தெண் நீர் வார | நீராடிய பிறகு
மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக, |
தொன்று தாம்
உடுத்த அம் பகை தெரியல் | முன்பு இளமைக்
காலத்தில் உடுத்திய அழகிய மாறுபட்ட தழைமாலையாக விளங்கிய |
சிறு வெள்
ஆம்பல் அல்லி உண்ணும் | சிறிய வெள்ளாம்பலில்
உண்டாகும் அல்லியரிசியை உண்ணும் |
கழி_கல_மகளிர்
போல | அணிகலன்கள் அணியாத
கைம்பெண்கள் போலத் |
வழி
நினைந்திருத்தல் அதனினும் அரிதே
15 | இனி வாழும் வகையை
நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது. |
| |
| |
| |
| |
| |
| |
# 281 அரிசில்
கிழார் | # 281 அரிசில் கிழார் |
தீம் கனி
இரவமொடு வேம்பு மனை செரீஇ | இனிய கனியைத் தரும்
இரவமரத்தின் இலையோடு வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகி, |
வாங்கு மருப்பு
யாழொடு பல் இயம் கறங்க | வளைந்த தண்டையுடைய
யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிக்க, |
கை பய
பெயர்த்து மை இழுது இழுகி | கையால் மெல்ல எடுத்து
மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகி, |
ஐயவி சிதறி
ஆம்பல் ஊதி | வெண்சிறுகடுகுகளைத்
தூவி, ஆம்பல் தண்டை ஊதி, |
இசை மணி
எறிந்து காஞ்சி பாடி
5 | ஓசையைச் செய்யும்
மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி, |
நெடு நகர்
வரைப்பின் கடி நறை புகைஇ | நெடிய அரண்மனை
பிரகாரங்களில் முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்பி, |
காக்கம் வம்மோ
காதல் அம் தோழீ | காப்போம்., வாருங்கள்!
அன்புடைய தோழிகளே! |
வேந்து உறு
விழுமம் தாங்கிய | வேந்தனுக்கு உண்டாகிய
துன்பத்தைத் தான் தாங்கிய, |
பூம் பொறி கழல்
கால் நெடுந்தகை புண்ணே | பூ வேலைப்பாடு அமைந்த
கழல் பூண்ட பெருந்தகைக்கு உண்டாகிய புண்களை – (காப்போம்., வாருங்கள்!) |
| |
# 282 பாலை
பாடிய பெருங்கடுங்கோஇ | # 282 பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
எஃகு உளம் கழிய
இரு நில மருங்கின் | மார்பை வேல் ஊடுருவிச்
செல்ல, இப்பெரிய உலகில் |
அரும் கடன்
இறுத்த பெருஞ்செயாளனை | செய்தற்கரிய கடமைகளைச்
செய்த, மிகுந்த செயல் புரியும் சான்றோனாகிய மறவனை |
யாண்டு உளனோ என
வினவுதி ஆயின் | எவ்விடத்து உள்ளான்
என்று கேட்கின்றீரெனில் |
வரு படை
தாங்கிய கிளர் தார் அகலம் | தன்னை நோக்கி வரும்
மாற்றார் படையை எதிர்கொள்ளக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பைத் |
அரும் கடன்
இறும்-மார் வயவர் எறிய 5 | தம் அரிய கடமைகளை
நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் தாக்கியதால், |
உடம்பும்
தோன்றா உயிர் கெட்டன்றே | அம்பு, வேல் ஆகியவை
தைத்து அவன் உடல் தெரியாமல் போய், உயிரும் நீங்கியது; |
மலையுநர்
மடங்கி மாறு எதிர் கழிய | போரிடும் பகைவர்
பின்வாங்கித் தம் எதிர்ப்பு குலைந்து வலிமை தொலைதலால், |
அலகை போகி
சிதைந்து வேறு ஆகிய | காக்கக்கூடிய தன்மை
இழந்து, உருத்தெரியாமல் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய |
பலகை அல்லது
களத்து ஒழியாதே | அவனுடைய கேடயம்
கிடப்பதைத் தவிர, அவன் போர்க்களத்தில் கிடந்து ஒழியாமல் |
சேண் விளங்கு
நல் இசை நிறீஇ 10 | நெடுந்தொலைவுக்கு
விளங்கும் நல்ல புகழை நிறுவி, |
நா நவில்
புலவர் வாய் உளானே | நாவால் நல்லுரைகளைக்
கூறும் புலவர்களின் வாயிலிருந்து வரும் செய்யுளில் உள்ளான். |
| |
# 283 அடை
நெடும் கல்வியார் | # 283 அடை நெடும்
கல்வியார் |
ஒண் செங்குரலி
தண் கயம் கலங்கி | ஒளிபொருந்திய
செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, |
வாளை நீர்நாய்
நாள் இரை பெறூஉ | வாளைமீனை நீர்நாய்
தனக்கு அன்றைய உணவாகப் பெற்று உண்டு, |
பெறாஅ உறை அரா
வராஅலின் மயங்கி | உணவு இல்லாமல் அங்கே
வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி |
மாறு கொள்
முதலையொடு ஊழ் மாறு பெயரும் | தன்னிடம் பகைகொள்ளும்
முதலைகளோடு மாறிமாறிப் பகைகொண்டும் விலகியும் போகும் |
அழும்பு இலன்
அடங்கான் தகையும் என்றும் 5 | அழும்பில் என்னும்
ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடுவான் என்று எண்ணி, |
வலம்புரி கோசர்
அவை_களத்தானும் | வெற்றியை விரும்பும்
கோசருடைய அவைக்களத்திலும் |
மன்றுள் என்பது
கெட —————– தானே பாங்கற்கு | போர்க்களத்தின்
நடுவிடமும் இல்லையாக ———- தான் தோழன்பொருட்டு |
ஆர் சூழ்
குறட்டின் வேல் நிறத்து இங்க | ஆரக்கால்கள் சூழச்
செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல, வேல் மார்பில் பாய்ந்து அழுத்தித் தங்க |
உயிர்
புறப்படாஅ அளவை தெறுவர | தோழனின் உயிர்
உடலிலிருந்து நீங்குவதற்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் அளவில், கோபங்கொண்டு |
தெற்றி பாவை
திணி மணல் அயரும் 10 | திண்ணையில் வைத்து
விளையாடும் பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும் |
மென் தோள்
மகளிர் நன்று புரப்ப | மென்மையான
தோள்களையுடைய மகளிர் மிகவும் பேணி வளர்க்கத் |
இமிழ்ப்பு_உற
நீண்ட பாசிலை | துளிர்விட்டுத் தழைத்த
நீண்ட பசிய இலைகளையுடைய |
கமழ் பூ தும்பை
நுதல் அசைத்தோனே | மணக்கும் தும்பைப் பூ
மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான். |
| |
# 284 ஓரம்
போகியார் | # 284 ஓரம் போகியார் |
வருக தில்
வல்லே வருக தில் வல் என | “விரைந்து வருக,
விரைந்து வருக” என்று |
வேந்து விடு
விழு தூது ஆங்காங்கு இசைப்ப | வேந்தன் அனுப்பிய
சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, |
நூல் அரி மாலை
சூடி காலின் | நூலால் தொடுக்கப்பட்ட
மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து |
தமியன் வந்த
மூதிலாளன் | தனியனாய் வந்த
மறக்குடி மறவன், |
அரும் சமம்
தாங்கி முன் நின்று எறிந்த 5 | கடுமையான போரில்
பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்து முன்னே சென்று வெட்டி வீழ்த்தின |
ஒரு கை இரும்
பிணத்து எயிறு மிறை ஆக | யானையின் பிணத்தின்
தந்தங்களை தன் வாளின் வளைவை நிமிர்த்தும் அமைப்பாகக் கொண்டு |
திரிந்த வாய்
வாள் திருத்தா | வளைந்து கோணிய வாளை
நிமிர்த்திக்கொண்டு |
தனக்கு
இரிந்தானை பெயர் புறம் நகுமே | தன்னைக்கண்டு
பயந்தோடிய பகைவனை, அவன் திருப்பிக்காட்டிய முதுகைக் கண்டு சிரிப்பான். |
| |
# 285 அரிசில்
கிழார் | # 285 அரிசில் கிழார் |
பாசறையீரே
பாசறையீரே | பாசறையில் உள்ளவர்களே!
பாசறையில் உள்ளவர்களே! |
துடியன் கையது
வேலே அடி புணர் | துடியனின் கையில்
இருக்கிறது வேல்; அடியில் இணைக்கப்பட்ட |
வாங்கு இரு
மருப்பின் தீம் தொடை சீறியாழ் | வளைந்த கரிய தண்டோடு,
இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய |
பாணன் கையது
தோலே காண்வர | பாணனின் கையில்
இருக்கிறது கேடயம்; கண்ணுக்கு இனியதாக |
கடும் தெற்று
மூடையின் ————————- 5 | மிகவும் நெருக்கமாக
அடுக்கிய மூட்டைகள் போல ————————————– |
வாடிய மாலை
மலைந்த சென்னியன் | வாடிய மாலையைத்
தலையில் அணிந்த தலைவன், |
வேந்து தொழில்
அயரும் அரும் தலை சுற்றமொடு | வேந்தனுக்கு வேண்டிய
செயல்களைச் செய்யும் அரிய அமைச்சர் போன்ற தலைமைவாய்ந்த சுற்றத்தாரோடு |
நெடு நகர்
வந்து என விடு கணை மொசித்த | நெடிய அரண்மனைக்கு
வந்தானாக, பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த |
மூரி வெண் தோள்
——————————– | வலிய வெள்ளிய தோள்
…………………………………… |
சேறுபடு குருதி
செம்மல் உக்கு ஓஒ 10 | நிலத்தைச் சேறாக்கும்
குருதியைத் தலைவன் சொரிந்து, ஐயோ! |
மாறு செறு நெடு
வேல் மார்பு உளம் போக | பகைவர்கள் சினத்துடன்
எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நிற்க, |
நிணம் பொதி
கழலொடு நிலம் சேர்ந்தனனே | மாமிசம் படிந்த
கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். |
அது கண்டு
பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து | அவன் வீழ்ந்ததைக்
கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம் புகழ, நாணித் தலைகுனிந்து |
இறைஞ்சியோனே
குருசில் பிணங்கு கதிர் | வணங்கினான்,
குருசிலாகிய அவன்; கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு |
அலமரும் கழனி
தண்ணடை ஒழிய 15 | அசையும் கழனிகளையுடைய
மருதநிலத்து ஊர்களைத் தவிர (முன்னே இரவலர்க்குக் கொடுத்துவிட்டதால்) |
இலம்பாடு
ஒக்கல் தலைவற்கு ஓர் | வறுமையுற்ற இரவலராகிய
சுற்றத்தின் தலைவனுக்கு (எஞ்சிநின்ற) ஒரு |
கரம்பை சீறூர்
நல்கினன் எனவே | சாகுபடி செய்யக்கூடிய
கரம்பை மண்ணுள்ள நிலமுள்ள சிறிய ஊரைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று – |
| |
# 286 ஔவையார் | # 286 ஔவையார் |
வெள்ளை
வெள்யாட்டு செச்சை போல | வெண்மையான
நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத் |
தன்னோர் அன்ன
இளையர் இருப்ப | தன்னைப் போன்ற
இளைஞர்கள் பலர் இருக்கவும், |
பலர் மீது
நீட்டிய மண்டை என் சிறுவனை | அந்தப் பலருக்கும்
மேலாக என் மகனுக்கு நீட்டித் தரப்பட்ட மண்டையிலுள்ள கள், என் மகனைக் |
கால்_கழி_கட்டிலில்
கிடப்பி | கால் இல்லாத
கட்டிலாகிய பாடையில் கிடத்தி |
தூ வெள் அறுவை
போர்ப்பித்திலதே 5 | தூய வெண்ணிறப்
போர்வையால் இன்னும் போர்க்கவில்லையே. |
| |
# 287
சாத்தந்தையார் | # 287 சாத்தந்தையார் |
துடி எறியும்
புலைய | துடிப் பறையை
அடிக்கும் புலையனே! |
எறி கோல்
கொள்ளும் இழிசின | குறுந்தடியால்
பறையடிக்கும் பறையோனே! |
கால மாரியின்
அம்பு தைப்பினும் | கார்காலத்து மழைபோல்
அம்புகள் உடம்பில் தைத்தாலும், |
வயல்
கெண்டையின் வேல் பிறழினும் | வயல்களில் பிறழும்
கெண்டை மீன்கள் போல வேற்படை வந்து பாய்ந்தாலும், |
பொலம் புனை ஓடை
அண்ணல் யானை 5 | பொன்னாலான
நெற்றிப்பட்டம் அணிந்த தலைமை பொருந்திய யானைகள் |
இலங்கு வால்
மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் | விளங்குகின்ற,
வெண்மையான தந்தங்களின் நுனியை அமிழ்த்துக் குத்தினாலும், |
ஓடல் செல்லா
பீடு உடையாளர் | அஞ்சிப்
புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் |
நெடு நீர்
பொய்கை பிறழிய வாளை | ஆழமான நீருடைய
பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் |
நெல் உடை நெடு
நகர் கூட்டு முதல் புரளும் | நெல்வளமிக்க நீண்ட
வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டின் அடிப்பக்கத்தில் புரளும் |
தண்ணடை பெறுதல்
யாவது படினே 10 | மருதநிலத்து ஊர்களைப்
பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால், |
மாசு இல்
மகளிர் மன்றல் நன்றும் | அவர்கள் குற்றமற்ற
மகளிரை மணந்து மிகவும் இன்பத்தை |
உயர்_நிலை_உலகத்து
நுகர்ப அதனால் | மேலுலகத்தில்
அனுபவிப்பார்கள். அதனால், |
வம்ப வேந்தன்
தானை | குறும்பு செய்யும்
பகைவேந்தனுடைய படையின் |
இம்பர்
நின்றும் காண்டிரோ வரவே | வரவை இங்கே இருந்து
காண்பீராக. |
| |
# 288
கழாத்தலையார் | # 288 கழாத்தலையார் |
மண் கொள வரிந்த
வை நுதி மருப்பின் | மண்ணைக் குத்தியதால்
வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய |
அண்ணல் நல் ஏறு
இரண்டு உடன் மடுத்து | தலைமை பொருந்திய நல்ல
காளைகள் இரண்டைப் போரிடச் செய்து, |
வென்றதன் பச்சை
சீவாது போர்த்த | வெற்றிபெற்ற காளையின்
தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட, |
திண் பிணி
முரசம் இடை புலத்து இரங்க | இறுக்கமாகக்
கட்டப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலிக்க, |
ஆர் அமர்
மயங்கிய ஞாட்பின் தெறுவர
5 | தடுத்தற்கரிய போர்
நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற, |
நெடு வேல்
பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து | பகைவர் எறிந்த நெடிய
வேல் வந்து பாய்ந்ததால் நாணமடைந்த நெஞ்சத்துடன் |
அரு குறை ஆற்றி
வீழ்ந்தான் மன்ற | அரிய செயலைச் செய்து
மடிந்து வீழ்ந்தான், |
குருதியொடு
துயல்வரும் மார்பின் | குருதியோடு
ஏறியிறங்கும் அவனது மார்பைத் |
முயக்கு இடை
ஈயாது மொய்த்தன பருந்தே | தழுவவந்த அவன்
மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன. |
| |
# 289
கழாத்தலையாரி | # 289 கழாத்தலையாரி |
ஈர செவ்வி
உதவின ஆயினும் | ஈரமுள்ள பருவம்
மாறுவதற்குமுன் உழுவதற்கு உதவிசெய்தன என்றாலும், |
பல்
எருத்துள்ளும் நல் எருது நோக்கி | தனக்குள்ள பல
எருதுகளிலும் நல்ல எருதுகளைத் தேர்வுசெய்யும்பொருட்டு |
வீறு_வீறு
ஆயும் உழவன் போல | அவற்றை வெவ்வேறாக
ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் உழவனைனைப் போல, |
பீடு பெறு தொல்
குடி பாடு பல தாங்கிய | பெருமைபெற்ற பழமையான
குடியில் பிறந்த, வழிவழியாக வரும் நற்பண்புகளைக் காத்துவரும் |
மூதிலாளருள்ளும்
காதலின் 5 | முதுகுடி
மறவர்களுக்குள் தன்மேல் கொண்டிருக்கும் அன்பால் |
தனக்கு முகந்து
ஏந்திய பசும்_பொன் மண்டை | தனக்காக முகந்து
எடுத்துத் தந்த பசும்பொன்னாலான மண்டையிலுள்ள கள்ளை |
இவற்கு ஈக
என்னும் அதுவும் அன்றிசினே | “இவனுக்கு ஈக” என்று
அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; |
கேட்டியோ வாழி
பாண பாசறை | கேட்பாயாக வாழ்க,
பாணனே! பாசறையில் |
பூ கோள் இன்று
என்று அறையும் | இன்று போர்க்குரிய
பூக்கள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கும் |
மடி வாய்
தண்ணுமை இழிசினன் குரலே 10 | தோலை மடித்துப்
போர்த்த வாயையுடைய தண்ணுமைப் பறையை இழிசினன் முழக்கும் ஓசையை – |
| |
# 290 ஔவையார் | # 290 ஔவையார் |
இவற்கு ஈந்து
உண்-மதி கள்ளே சின போர் | ”அரசே, முதலில் கள்ளை
இவனுக்கு அளித்துப் பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், |
இன களிற்று
யானை இயல் தேர் குருசில் | கூட்டமான யானைகளையும்,
நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய தலைவனே! |
நுந்தை
தந்தைக்கு இவன் தந்தை தந்தை | உன் தந்தையின்
தந்தைக்கு இவன் தந்தையின் தந்தை |
எடுத்து எறி
ஞாட்பின் இமையான் தச்சன் | போரினில் பகைவர்கள்
எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல், தச்சனால் |
அடுத்து எறி
குறட்டின் நின்று மாய்ந்தனனே 5 | ஆரக்கால்கள்
செருகப்பட்ட வண்டியின் குடத்தைப் போல, தான் ஏற்று நின்று மாய்ந்தான்; |
மற புகழ்
நிறைந்த மைந்தினோன் இவனும் | வீரத்துடன் போர்செய்து
புகழ்பெற்ற வலிமையுடைய இவனும், |
உறைப்பு_உழி
ஓலை போல | மழை பெய்யும்பொழுது
நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடை போல |
மறைக்குவன்
பெரும நின் குறித்து வரு வேலே | உன்னை நோக்கி வரும்
வேல்களைத் தான் ஏற்றுத் தாங்குவான்.” |
| |
| |
| |
| |
| |
| |
# 291
நெடுங்கழுத்து பரணர் | # 291 நெடுங்கழுத்து
பரணர் |
சிறாஅஅர்
துடியர் பாடு வல் மகாஅஅர் | சிறுவர்களே! துடி
அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற மக்களாகிய பாணர்களே! |
தூ வெள் அறுவை
மாயோன் குறுகி | தூய வெள்ளாடை உடுத்திய
கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள |
இரும் புள்
பூசல் ஓம்பு-மின் யானும் | பெரிய பறவைக்
கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் |
விளரி கொட்பின்
வெள் நரி கடிகுவென் | விளரிப் பண்ணைப்
பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் நெருங்கவிடாமல் ஓட்டுவேன்; |
என் போல் பெரு
விதுப்பு உறுக வேந்தே 5 | என்னைப்போலவே
வேந்தனும் பெரிதும் வருந்தி நடுங்கட்டும்; |
கொன்னும் சாதல்
வெய்யோற்கு தன் தலை | எந்தப் பயனுமின்றி
வேந்தனுக்காகச் சாக விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த |
மணி மருள் மாலை
சூட்டி அவன் தலை | பல வடங்களோடு கூடிய பல
மணிகள் கலந்த மாலையை அணிவித்து, என் கணவன் அணிந்திருந்த |
ஒரு காழ் மாலை
தான் மலைந்தனனே | ஒற்றைவட மாலையைத் தான்
அணிந்துகொண்டான். |
| |
# 292
விரிச்சியூர் நன்னாகனார் | # 292 விரிச்சியூர்
நன்னாகனார் |
வேந்தற்கு
ஏந்திய தீம் தண் நறவம் | ”அரசனுக்குக்
கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த (விலையுயர்ந்த) மதுவை, |
யாம் தனக்கு
உறு முறை வளாவ விலக்கி | நாங்கள் அவனுக்குத்
தகுதியான முறைப்படி தரம் குறைந்த கள்ளைக் கலந்து கொடுக்க, அதை மறுத்துத் |
வாய் வாள்
பற்றி நின்றனென் என்று | தன் குறிதவறாத வாளைக்
கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றான்” என்று |
சினவல்
ஓம்பு-மின் சிறு புல்லாளர் | அவன் மீது சினம்
கொள்ளாதீர்கள், ஆண்மையில் அவனைவிடக் குறைந்தவர்களே! |
ஈண்டே போல
வேண்டுவன் ஆயின் 5 | இங்கே எவ்வாறு
வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல, போரிட வேண்டுமானால் |
என் முறை வருக
என்னான் கம்மென | ”எனக்குரிய முறை
வரட்டும்.” என்று சொல்லாமல், விரைந்து |
எழு தரு பெரும்
படை விலக்கி | முன்னே எழுகின்ற பெரிய
படையைத் தடுத்து விலக்கி |
ஆண்டும்
நிற்கும் ஆண்தகையன்னே | அங்கேயும் முதலில்
நிற்கும் ஆண்மை உடையவன் அவன். |
| |
# 293 நொச்சி
நியமங்கிழார் | # 293 நொச்சி
நியமங்கிழார் |
நிறப்படைக்கு
ஒல்கா யானை மேலோன் | குத்துக்கோலுக்கும்
அடங்காத யானையின் மேலே இருப்பவன் |
குறும்பர்க்கு
எறியும் ஏவல் தண்ணுமை | அரணுக்கு வெளியில்
போரிடும் பகைவரை எதிர்த்துப் போரிட வருமாறு அறையும் அழைப்புகான தண்ணுமை, |
நாண் உடை
மாக்கட்கு இரங்கும் ஆயின் | போருக்கு அஞ்சி நாணி
இருக்கும் ஆண்களுக்காக ஒலிக்கும்; ஆதலால் |
எம்மினும் பேர்
எழில் இழந்து வினை என | எங்களைக்காட்டிலும்
தன்னுடைய மிகுந்த பொலிவு வாடிப்போக, இது போரிடலால் நேர்ந்தது என்று |
பிறர் மனை
புகுவள்-கொல்லோ 5 | பூவை விற்பதற்குப்
போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; |
அளியள் தானே
பூ_விலை_பெண்டே | இரங்கத் தக்கவள்,
இந்தப் பூ விற்கும் பெண். (போருக்குச் சென்றவர்களின் வீட்டுப் பெண்கள் பூ
அணிவதில்லை) |
| |
# 294
பெருந்தலை சாத்தனார் | # 294 பெருந்தலை
சாத்தனார் |
வெண்குடை
மதியம் மேல் நிலா திகழ்தர | வெண்மையான குடைபோலத்
திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருக்க, |
கண்கூடு இறுத்த
கடல் மருள் பாசறை | வீரர்கள் ஒன்றாகத்
தங்கியிருக்கும் கடல் போன்ற பாசறையிலிருந்து சென்று |
குமரி_படை
தழீஇய கூற்று வினை ஆடவர் | புதிதாகச் செய்யப்பட்ட
படைக்கருவிகளைக் கைக்கொண்ட கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள் |
தமர் பிறர்
அறியா அமர் மயங்கு அழுவத்து | எதிர்ப்போர் நம்மவர்
என்றும் பிறர் என்றும் வேறுபாடு பாராமல் கைகலந்து போர் செய்யும் போர்க்களத்தில், |
இறையும்
பெயரும் தோற்றி நுமருள் 5 | “உங்கள் அரசனின்
பெருமையையும் உங்கள் புகழையும் தோன்றச்செய்து, உங்களுக்குள் |
நாள் முறை
தபுத்தீர் வம்-மின் ஈங்கு என | யாருக்கெல்லாம்
வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி, |
போர் மலைந்து
ஒரு சிறை நிற்ப யாவரும் | போரிட
வந்தவர்களையெல்லாம் வென்று, ஒரு பக்கமாக நிற்க, |
அரவு உமிழ்
மணியின் குறுகார் | பாம்பு உமிழ்ந்த மணியை
எடுக்க எவரும் நெருங்காததைப் போல, எவரும் நெருங்கவில்லை. |
நிரை தார்
மார்பின் நின் கேள்வனை பிறரே | வரிசையாக மாலையணிந்த
மார்பையுடைய உன் கணவனை. |
| |
# 295 ஔவையார் | # 295 ஔவையார் |
கடல் கிளர்ந்து
அன்ன கட்டூர் நாப்பண் | கடல் எழுந்தாற் போல்
அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், |
வெந்து வாய்
மடித்து வேல் தலைப்பெயரி | தீயால் சூடாக்கிக்
கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர் மீது திருப்பி, |
தோடு உகைத்து
எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் | தன் படையை முன்னால்
செலுத்தித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் பாய்ச்சிப் போரிடும் போரில் |
வரு படை
போழ்ந்து வாய் பட விலங்கி | எதிர்த்து வரும்
பகைவர் படையைப் பிளந்து, தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத்
தடுத்து, |
இடை படை
அழுவத்து சிதைந்து வேறு ஆகிய 5 | படைகளின் நடுவில்
இருக்கும் போர்க்களத்தில், துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்த, |
சிறப்பு
உடையாளன் மாண்பு கண்டு அருளி | சிறப்பிற்குரிய தன்
மகனின் மற மாண்பைக் கண்டு, அன்பு மிகுந்து, |
வாடு முலை ஊறி
சுரந்தன | வற்றிய முலைகள்
மீண்டும் பாலூறிச் சுரந்தன, |
ஓடா பூட்கை
விடலை தாய்க்கே | புறமுதுகு காட்டி ஓடாத
கொள்கையையுடைய அந்த இளைஞனின் தாய்க்கு – |
| |
# 296 வெள்ளை
மாளர் | # 296 வெள்ளை மாளர் |
வேம்பு சினை
ஒடிப்பவும் காஞ்சி பாடவும் | வேப்ப மரத்தின்
கிளைகளை ஒடிக்கவும், காஞ்சிப் பண் பாடவும், |
நெய் உடை கையர்
ஐயவி புகைப்பவும் | நெய்யுடைய கையோடு
வெண்சிறுகடுகைப் புகைக்கவும் என்று |
எல்லா மனையும்
கல்லென்றவ்வே | எல்லா வீடுகளும்
ஆரவாரமாக இருக்கின்றன; |
வெந்து உடன்று
எறிவான்-கொல்லோ | பகை வேந்தனைச் சினந்து
அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும்; |
நெடிது
வந்தன்றால் நெடுந்தகை தேரே
5 | அதனால்தான்
நெடுந்தகையாகிய இவனின் தேர் காலம் தாழ்த்தி வந்தது. |
| |
# 297 | # 297 |
பெரு நீர்
மேவல் தண்ணடை எருமை | மிகுந்த நீரில் இருக்க
விரும்பும் மெதுவான நடையையுடைய எருமையின் |
இரு மருப்பு
உறழும் நெடு மாண் நெற்றின் | பெரிய கொம்பு போன்ற
நெடிய முற்றிய நெற்றுக்களையுடைய |
பைம் பயறு
உதிர்த்த கோதின் கோல் அணை | பச்சைப் பயறு
நீக்கப்பட்ட தோட்டைத் திரட்சியான படுக்கையாகக் கொண்டு |
கன்று உடை
மரையா துஞ்சும் சீறூர் | கன்றுடன் கூடிய
காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் |
கோள் இவண்
வேண்டேம் புரவே நார் அரி 5 | கொடையாகக் கொள்வதை
விரும்பமாட்டோம்; நாரால் வடிக்கப்பட்டு |
நனை முதிர்
சாடி நறவின் வாழ்த்தி | பூக்களையிட்டு
முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, |
துறை நனி கெழீஇ
கம்புள் ஈனும் | நீரின் பக்கத்தே
பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் |
தண்ணடை
பெறுதலும் உரித்தே வை நுதி | மருதநிலத்தூர்களைப்
பெறுவதும் உரியதாகும், கூர்மையான நுனியையுடைய |
நெடு வேல்
பாய்ந்த மார்பின் | நீண்ட வேல் தைத்த
மார்புடன் |
மடல் வன்
போந்தையின் நிற்குமோர்க்கே
10 | மடல் நிறைந்த வலிய
பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு. |
| |
# 298 | # 298 |
எமக்கே கலங்கல்
தருமே தானே | முன்பெல்லாம்,
எங்களுக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் தரம் குறைந்த கலங்கிய கள்ளைக்
கொடுப்பான்; தான் |
தேறல்
உண்ணும்-மன்னே நன்றும் | களிப்பைக் குறைவாக
அளிக்கும் தரம் மிகுந்த தெளிந்த கள்ளை உண்பான்; மிகவும் |
இன்னான் மன்ற
வேந்தே இனியே | அன்பில்லாதவனாகிவிட்டான்
எம் அரசன் இப்பொழுது; |
நேரார் ஆர்
எயில் முற்றி | பகைவருடைய
கைப்பற்றுவதற்கு அரிய அரணைச் சூழ்ந்து போரிடும் நேரத்தில், |
வாய் மடித்து
உரறி நீ முந்து என்னானே 5 | வாயை மடித்துச்
சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. |
| |
# 299 பொன்
முடியார் | # 299 பொன் முடியார் |
பருத்தி வேலி
சீறூர் மன்னன் | பருத்தியை வேலியாகக்
கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய, |
உழுத்து அதர்
உண்ட ஓய் நடை புரவி | உழுந்தின் சக்கையைத்
தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடைய குதிரைகள் |
கடல் மண்டு
தோணியின் படை முகம் போழ | கடல்நீரைப்
பிளந்துகொண்டு விரையும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு செல்ல, |
நெய்ம்மிதி
அருந்திய கொய் சுவல் எருத்தின் | நெய்யூற்றி மிதித்துச்
செய்த உணவை உண்ட, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, |
தண்ணடை மன்னர்
தார் உடை புரவி 5 | மருதநிலத்தூர்களையுடைய
பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் |
அணங்கு உடை
முருகன் கோட்டத்து | தெய்வத்தன்மை வாய்ந்த
முருகன் கோட்டத்தில், |
கலம் தொடா
மகளிரின் இகந்து நின்றவ்வே | கலன்களைத் தொடாத
விலக்குடைய மகளிரைப் போல அஞ்சிப் பின்னிட்டு நின்றன. |
| |
# 300 அரிசில்
கிழார் | # 300 அரிசில் கிழார் |
தோல் தா தோல்
தா என்றி தோலொடு | “கேடயம் தா; கேடயம்
தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல் |
துறுகல்
மறையினும் உய்குவை போலாய் | பெரும்பாறையின்
பின்னால் மறைந்துகொண்டாலும் நீ தப்ப மாட்டாய்; |
நெருநல் எல்லை
நீ எறிந்தோன் தம்பி | நேற்று, பகற்பொழுதில்
நீ கொன்றவனின் தம்பி, |
அகல் பெய்
குன்றியின் சுழலும் கண்ணன் | அகலில் இட்ட குன்றிமணி
போல் சுழலும் கண்களையுடையவனாய் |
பேர் ஊர் அட்ட
கள்ளிற்கு 5 | பெரிய ஊரில்,
காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு, |
ஓர் இல் கோயின்
தேருமால் நின்னே | வீட்டில் புகுந்து,
கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.” |
| |