Select Page
  
# 26 மாங்குடி மருதனார்# 26 மாங்குடி மருதனார்
நளி கடல் இரும் குட்டத்துபெரிய கடலின் மிக ஆழமான இடத்தில்
வளி புடைத்த கலம் போலகாற்றால் தள்ளப்பட்ட மரக்கலம் (நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வது) போல
களிறு சென்று களன் அகற்றவும்களிறு உட்புகுந்து (போர்வீரர் சிதறி ஓடுவதால்) போர்க்களத்தை அகலமாக்க,
களன் அகற்றிய வியல் ஆங்கண்அவ்வாறு களத்தை அகலச்செய்த பரந்த இடத்தில்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி                   5ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கிமன்னர் மடிய போரில் கலக்கி,
உரை செல முரசு வௌவிபுகழ் மிகும்படி பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
முடி தலை அடுப்பு ஆகமணிமுடிதரித்த மன்னர் தலையை அடுப்பாகக் கொண்டு,
புனல் குருதி உலை கொளீஇநீராய் ஓடும் குருதியை உலைநீராகக் கொண்டு
தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின்           10வீரவளை அணிந்த வீரரின் வெட்டுண்ட தோளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த உணவால்
அடு_களம் வேட்ட அடு போர் செழியபோர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போரையுடைய செழியனே!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கைவிசாலமான அறிவையும், ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும்
நான்மறை முதல்வர் சுற்றம் ஆகநான்கு வேதங்களையும் உடைய அந்தணர் சுற்றியிருக்க
மன்னர் ஏவல் செய்ய மன்னியமன்னர்கள் ஏவல் செய்ய. நிலைத்த
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே         15வேள்வியைச் செய்துமுடித்த தப்பாத வாளினையுடைய வேந்தனே!
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடுதவம் செய்தவர் உன் பகைவர், உனக்கு
மாற்றார் என்னும் பெயர் பெற்றுஎதிரிகள் என்னும் பெயரினைப் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரேஉன்னுடன் போரிட இயலாதவராய் இருந்தாலும் மேலுலகத்தில் சென்று வாழ்கின்றவர் – (தவம் செய்தவர்)
  
# 27 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்# 27 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்சேற்றில் வளரும் தாமரை தந்த, ஒளிரும் நிறத்தையுடைய
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்னநூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட வரிசையைக் கண்டது போன்ற
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்துஏற்றத்தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்_காலைஅரசுகட்டில் வீற்றிருந்தோரை நினைத்துப்பார்க்கும்போது
உரையும் பாட்டும் உடையோர் சிலரே          5புகழ்ச்சியான சொற்களும், புலவர் பாடும் பாட்டுகளும் உடையோர் சிலரே,
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரேதாமரை இலையைப் போலப் பயனின்றி இறப்பவர் பலரே!
புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்புலவரால் பாடப்பெறும் புகழினை உடையோர் வானவெளியில்
வலவன் ஏவா வான ஊர்திவலவன் ஏவா வானவூர்தியை
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து எனஅடைவர், தாம் செய்யும் நற்செயல்களை முடித்த பின் என்பார்கள் என்று சொல்லக்
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி             10கேட்டிருக்கிறேன், என் தலைவனே! சேட்சென்னியே! நலங்கிள்ளியே!
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்பெருகின ஒன்று தேயும் என்பதையும், தேய்ந்த ஒன்று பெருகும் என்பதையும்,
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்பிறந்த ஒன்று மாயும் என்பதையும், மாய்ந்த ஒன்று பிறக்கும் என்பதையும்,
அறியாதோரையும் அறிய காட்டிகல்வியால் அறியாதவரும் நன்கு அறிந்துகொள்ளும்படி காட்டி
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்துதிங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில்
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்                15ஆற்றல் இல்லாதவர் என்றாலும், ஆற்றலுள்ளவர் என்றாலும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கிவறுமையால் வருந்தி வந்தவரின் வயிற்றைப் பார்த்து
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர்அவர் மீது இரக்கம்கொள்வதில் வல்லவனாக இரு, இரக்கம் இல்லாதவராய்
கொடாஅமை வல்லர் ஆகுககொடுக்காமல் இருப்பதில் வல்லவராய் இருக்கட்டும்
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரேகுறைவில்லாத ஆற்றல் மிக்க உனக்குப் பகையாக எதிர்த்துநிற்போர்.
  
# 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்# 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்மனிதப் பிறப்பில், சிறப்புகள் இல்லாத பார்வையற்றோரும், உருவமாக அமையாத தசைத்திரளும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்கூனர்களும், குட்டைவடிவினரும், பேசமுடியாதோரும், காதுகேளாதோரும்,
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்குவிலங்கு வடிவம் கொண்டவரும், புத்தி பேதலித்தவர்களும் என்று உலகத்தில் உயிர்வாழ்வார்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்எட்டுவகைப்பட்ட எச்சங்கள் எனப்படும் குறைவுகள் ஆகியவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல் என             5பேதைத்தன்மையுடைய பிறப்புக்களேயன்றி, அவற்றால் பயன் எதுவும் இல்லை என்று
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்முற்காலத்திலும் அறிந்தவர்கள் சொல்லிப்போனார்கள், மேலும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்ததுஅந்தப் பயன்களின் கூறுபாடுகளே நான் உரைக்க வந்தது,
வட்ட வரிய செம் பொறி சேவல்வட்டமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் கொண்ட காட்டுக்கோழிச்சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்தினைப்புனம் காப்போரைத் துயிலெழுப்பக் கூவும்
கானத்தோர் நின் தெவ்வர் நீயே                     10காட்டிலுள்ளோர் உன் பகைவர், நீயோ
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்கரும்புக் காட்டுக்கு வெளியேநின்று கேட்கும் மக்களுக்கு, அறம் கருதி, உள்ளே இருப்போர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைபிடுங்கி எறிகின்ற கரும்பின் தூக்கியெறியப்பட்ட கழை, தாமரையின்
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர்அழகிய பூக்கும் நிலையிலுள்ள மொட்டுக்களைச் சிதைத்து விழுந்ததாக, கூத்தர்களின்
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையேஆடுகளம் போன்று காட்சியளிக்கும் உள்நாட்டில் இருக்கிறாய்,
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்        15அதனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்
ஆற்றும் பெரும நின் செல்வம்செய்வதற்குப் பயன்படும் உன் செல்வம், பெருமானே!
ஆற்றாமை நின் போற்றாமையேபயன்படாதென்றால் அது உன்னைக் காக்காததே!
  
# 29 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்# 29 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
அழல் புரிந்த அடர் தாமரைநெருப்பினால் சுட்டு ஆக்கப்பட்ட தகடுகளால் செய்த பொற்றாமரைப் பூவுடன்,
ஐது அடர்ந்த நூல் பெய்துமெல்லிதாகத் தட்டி கம்பியாகச் செய்த நூலில் இட்டு
புனை விளை பொலிந்த பொலன் நறும் தெரியல்அலங்கரித்தல் தொழிலால் பொலிந்த பொன்னால் ஆன நறிய மாலையை
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடிகலைந்துகிடக்கும் மயிரையுடைய கரிய தலை பொலிவுபெறச் சூடி
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை            5பாணர்கள் சூழ்ந்திருப்பாராக உன் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருப்பில்,
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்பாணர்கள் சூழ்ந்திருப்பது முடிந்த பின்னால், பெண்களின்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்கதோள்கள் சூழ்ந்திருப்பதாக, உன்னுடைய சந்தனம் பூசிக் காய்ந்திருக்கும் மார்பினில், எப்போதும்
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்பவெறுப்பே இல்லாத உன் மாளிகையின் முற்றத்தில் இனிமையாக முரசுகள் முழங்க
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்கொடியவரைத் தண்டித்தல், தகுதியுடையோருக்கு அருள்செய்தல் ஆகிய
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி            10இடையறாத நீதிமுறையில் சோம்பல் இல்லாதவன் ஆகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்நல்வினையின் நன்மையும், தீவினையின் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்இல்லையென்று சொல்லுவோரை உறவாகக் கொள்ளாதிருப்பாயாக,
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர்நெல் விளையும் வயல்களில் வந்து படியும் பறவைகளை ஓட்டுவோர்
ஒழி மடல் விறகின் கழு மீன் சுட்டுதானாக விழுந்த பனங்கருக்கை விறகாக ஆக்கி, கழியிலிருக்கும் மீனைப் பிடித்துச் சுட்டு
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்  15விரும்பத்தக்க கள்ளைக் குடித்து முடித்தும் அது போதாதவராய், தென்னையின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடுஇளநீர்க் காய்களை உதிர்ப்பர், அப்படிப்பட்ட வளம் மிகுந்த நல்ல நாட்டினைப்
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள்பெற்றவர்களாய் மகிழும் உன் படையினர்,
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்துஉன் பகைவர் வாழ்வது போன்ற, இரக்கம் தோன்ற
கூவை துற்ற நால் கால் பந்தர்கூவை இலையால் மூடிய நான்கு கால்களைக் கொண்ட பந்தலாகிய
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு           20சிறிய படைவீட்டில் வாழும் வாழ்க்கையிலிருந்து நீங்கட்டும், உன்னை நாடி வருபவர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடைஉதவி செய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய 
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்முறைமையை உடைத்தாகுக உனது தொழில், விழாக்களின்போது
கோடியர் நீர்மை போல முறை_முறைகூத்தர் வேறுவேறான ஒப்பனையுடன் தோன்றும் காட்சிபோன்று, முறைமுறையே தோன்றி
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடியஇயங்கி இறந்துபோகின்ற இந்த உலகத்தில் பொருந்திய
நகை புறன் ஆக நின் சுற்றம்                       25மகிழ்ச்சியை அடையட்டும் உன் சுற்றம்,
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளேபுகழை அடையட்டும் நீ பாதுகாத்த பொருள்.
  
# 30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்# 30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
செம் ஞாயிற்று செலவும்சிவந்த ஞாயிறு செல்லும் பாதையும்,
அ ஞாயிற்று பரிப்பும்vஅந்த ஞாயிற்றின் இயக்கமும்,
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்அந்த இயக்கத்தால் சூழப்படும் வானமண்டிலமும்
வளி திரிதரு திசையும்காற்று செல்லும் திசைகளும்,
வறிது நிலைஇய காயமும் என்று இவை          5எந்த ஆதாரமும் இன்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று இவற்றை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்அங்கங்கே போய் அளந்து அறிந்தவர்கள் போல ஒவ்வொருநாளும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்இப்படி இருக்கும் என்று சொல்வோரும் இருக்கின்றனர், இவ்வனைத்தையும்
அறி அறிவு ஆக செறிவினை ஆகிஅறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தையுடையவனாக
களிறு கவுள் அடுத்த எறிகல் போலயானை தன் கன்னத்துக்குள் அடக்கிவைத்த எறியும் கல்லைப்போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட         10மறைந்திருக்கும் வலிமையை உடையவனாதலால், உனது திறம் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடுஎங்ஙனம் பாடுவர் புலவர்? பாய்மரக்கம்பத்துடன்
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாதுஅதன் மேல் கட்டப்பட்ட பாயினைச் சுருட்டாமல், அதன் மேற்பாரத்தையும் குறைக்காமல்
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர்ஆற்றுமுகத்தில் புகுந்த பெரிய மரக்கலத்தை, அதனைச் செலுத்தத் தகுதியில்லாதோர்
இடை புல பெரு வழி சொரியும்இடைப்பட்ட பெரிய வழியிலேயே இறக்கிவிட நேரும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே            15கடலால் வரும் பல பண்டங்களையுடைய நாட்டை உடையவனே! 
  
  
  
  
  
  
# 31 கோவூர்கிழார்# 31 கோவூர்கிழார்
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும்சிறப்புடைய மரபினால், பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போலஅறத்தின் பின்னே அமையும் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடைசேர பாண்டியரின் இரண்டு குடைகளும் பின்னே நிற்க, ஓங்கிய உனது ஒரு குடை
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்கநிறம் பொருந்திய மதியினைப் போல உயர்ந்து தொலைவிலும் விளங்குமாறு,
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர்                5நல்ல புகழ்மீது கொண்ட வேட்கையை விரும்பி வெற்றிதரும் போரைச் செய்ய
பாசறை அல்லது நீ ஒல்லாயேபாசறைவீட்டிலன்றி உன் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய்;
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்தம் கொம்புகளின் முனையின் முகம் மழுங்கிப்போகுமாறு பாய்ச்சி, பகைவரின்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவேகாவல் மிக்க மதிலைக் குத்தும் உன்னுடைய யானைகள் அடங்கமாட்டா;
போர் எனின் புகலும் புனை கழல் மறவர்போர் என்று சொன்னால் மிக்க விருப்புடன் கேட்கும் வீரக்கழலை அணிந்த மறவர்கள்
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய           10காடுகள் இடையே கிடக்கும் நாடுகள் மிக்க தொலைவிலுள்ளன,
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்செல்லமாட்டோம் என்று சொல்லமாட்டார், ஆரவாரம் மிக்க
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்துவிழாக்களை உடைய அங்குள்ள பகைவரின் நாட்டில் தங்கிவிட்டு,
குண கடல் பின்னது ஆக குட கடல்கிழக்குக்கடல் பின்னே இருக்க, மேற்குக்கடலின்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்பவெண்மையான நுரையினைக் கொண்ட அலைகள் உன் குதிரையின் குளம்புகளை மோத
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து    15வலப்பக்கமாக வந்தாலும் வருவாய் என்று அங்கலாய்த்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயநெஞ்சில் நடுங்கும் அவலம் பரவ
துஞ்சா கண்ண வட புலத்து அரசேதுயிலாத கண்ணையுடையன ஆயின வட புலத்து அரசுகள்.
  
# 32 கோவூர்கிழார்# 32 கோவூர்கிழார்
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடிநம் சுற்றத்தின் சமையல் கலங்களை நிறைக்கும் அளவிற்கு, அதற்கு விலையாக, நீண்ட கொடியைக் கொண்ட
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோசேரரின் வஞ்சிமாநகரையும் தருவான் (சோழவேந்தன்); அது ஒன்றுதானா?
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள்நிறமுடைய கலவை பூசிய வளைந்து இறங்குகின்ற பெரிய தோள்களைக் கொண்ட
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக எனபளிச்சிடும் நெற்றியுள்ள விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்          5மாடங்களுள்ள பாண்டியரின் மதுரையையும் தருவான்; நாம் எல்லாரும்
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள்அவனைப் பாடுவோமாக! வாருங்கள்! பரிசில் மக்களே!
தொல் நில கிழமை சுட்டின் நன் மதிதொன்மையான நில உரிமையைக் குறிப்பிட்டுச் சொன்னால், நல்ல அறிவையுடைய
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்தகுயவரின் சிறுவர்கள் பானை வனையும் சக்கரத்தின் நடுவில் வைத்த
பசு மண் குரூஉ திரள் போல அவன்பச்சை மண்ணின் கனத்த திரள் (அச் சிறுவர்களின் எண்ணம் போல உருக்கொள்வது)போல, அவன்
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே         10மனத்துள் கொண்ட முடிவையே கொண்டது இந்த குளிர்ந்த மருத நிலத்தைக் கொண்ட நாடு.
  
# 33 கோவூர்கிழார்# 33 கோவூர்கிழார்
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்காட்டில் வாழும் வாழ்க்கையையுடைய, சினம் பொருந்திய நாயையுடைய வேடன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள்மானின் தசையை எடுத்துவந்து கொடுத்த நார்ப்பெட்டியும், இடையர் பெண்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறையதயிர் கொண்டுவந்த பெரிய குடமும் நிறையும்படியாக
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர்உழுதுண்டு வாழ்பவரின் பெரிய இல்லங்களில் இருக்கும் பெண்கள்
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல்               5குளத்தின் அருகே விளைந்து களத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டுவந்த வெண்ணெல்லை
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்முகந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்தென்திசைப் பொதிகைமலையையுடைய பாண்டிய நாட்டிலுள்ள 
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்ஏழு கோட்டைக் கதவுகளை அழித்துக் கைப்பற்றி, உன்
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலைபெரிய வாயையுடைய புலிச்சின்னத்தைப் பொறிக்கும் ஆற்றல்பெற்றவனே!
பாடுநர் வஞ்சி பாட படையோர்                       10உன்னைப் பாடும் புலவர் நீ படையெடுத்துச் செல்வதைப்பாட, படைவீரர்கள்
தாது எரு மறுகின் பாசறை பொலியபூந்தாதுக்களே சாணம் தெளித்ததைப் போன்றிருக்கும் தெருக்களையுடைய பாசறையில் பொலிவுடன் விளங்க
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்தகாயாத பச்சிலையை இடையிடையே வைத்துத் தொடுத்த
மலரா மாலை பந்து கண்டு அன்னமலராத மொட்டுக்களையுடைய சரத்தின் பந்தைக் கண்டது போன்ற
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்தசையுடன் சேர்த்த பெரும் சோற்றுத் திரளைப் பாணரின் சுற்றம் உண்ணும்படி செய்யும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை   15பெருமையையுடையது உன் கடும் போர்முனையாகிய பாடிவீடுகள்,
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்றகைத்திறம் மிக்கவன் செய்த வரையப்பட்ட அழகுடைய
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்பஅல்லிப்பாவைகள் அல்லியம் என்னும் கூத்தை, ஆண்,பெண் என இருவராக ஆடும் அழகினைப் போன்ற
காம இருவர் அல்லது யாமத்துஅன்புமிக்க காதலர் இருவர் மட்டுமேயல்லாமல், நடுச்சாமத்தில்
தனி மகன் வழங்கா பனி மலர் காவின்தனியாக ஒருவன் நடமாடாத குளிர்ந்த மலர்களையுடைய சோலையில்
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி             20நடப்பதற்கு இனிய மணல் திணிந்த புதிய பூக்களையுடைய அரங்குகளின்
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்பவாயிலைக் கொண்ட மேல்தளம் இருக்கும் வீடுகள்தோறும் செம்மறியாட்டுக்கிடாயை அறுக்க,
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவேநீ அவ்விடத்தில் எடுத்த விழாக்களைக்காட்டிலும் பல – (உன் கடும் போர்முனையாகிய பாடிவீடுகள்)
  
# 34 ஆலத்தூர் கிழார்# 34 ஆலத்தூர் கிழார்
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்பசுவின் மடியை அறுத்த அறம் இல்லாதவர்க்கும்,
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும்மாட்சி மிக்க அணிகலனை அணிந்த மகளிரின் கருவினைச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்பார்ப்பனருக்குத் தீமை செய்த கொடுமையானவர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள எனஅவர் செய்த பாவத்தைப் போக்கப் பிராயச்சித்தம் உண்டு எனவும்,
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன்               5பூமி தலைகீழாய்ப் புரண்டாலும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் எனசெய்த நன்றியை அழித்தவர்க்கு உய்வு இல்லை எனவும்
அறம் பாடின்றே ஆய்_இழை கணவஅறநூல்கள் கூறுகின்றன, ஆய்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவனே!
காலை அந்தியும் மாலை அந்தியும்காலையாகிய அந்திப்பொழுதும், மாலையாகிய அந்திப்பொழுதும்
புறவு கரு அன்ன புன்_புல வரகின்புறாவின் கருமுட்டையைப் போன்ற புன்செய் நிலத்து வரகு அரிசியை
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி         10பாலை ஊற்றிச் சமைத்த சோற்றைத் தேனோடு கலந்து,
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடுகுறிய முயலின் கொழுத்த சுட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்துஇலந்தை மரம் உயர்ந்து நின்ற அகன்ற இடமுள்ள பொதுவிடத்தில்
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றிஎதையும் மறைக்காத உள்ளத்துடன், வேண்டிய சொற்களை மீண்டும்மீண்டும் கூறி
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்குதிரண்ட கொழுத்த சோற்றினை வேண்டுமளவு தின்ற பாணர்களுக்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன்         15நீங்காத செல்வம் அனைத்தையும் செய்தவனாகிய
எம் கோன் வளவன் வாழ்க என்று நின்எம்முடைய வேந்தன் வளவன் வாழ்க என்று உன்னுடைய
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்பெருமை பொருந்திய வலிய முயற்சியை நான் பாடவில்லையென்றால்
படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன்பல்கதிர்ச்செல்வனாகிய ஞாயிறு தோன்றுவதை அறியாமல்போவான்,
யானோ தஞ்சம் பெரும இ உலகத்துநான் மிக எளியவன், பெருமானே! இந்த உலகத்தில்
சான்றோர் செய்த நன்று உண்டாயின்          20நல்லவர்கள் செய்த நன்மை என்று ஒன்று இருந்தால்,
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றிஇமயமலையில் திரண்டு, இனிய ஒசையைப் பலமுறை எழுப்பி
கொண்டல் மா மழை பொழிந்தகிழக்குத்திசைக் காற்றால் பெரும் மேகம் சொரிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவேநுண்ணிய பல துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்வாயாக.
  
# 35 வெள்ளைக்குடி நாகனார்# 35 வெள்ளைக்குடி நாகனார்
நளி இரு முந்நீர் ஏணி ஆகநீர் செறிந்த பெரிய கடலே எல்லையாக
வளி இடை வழங்கா வானம் சூடியஇடையில் காற்றுப் புகாத, வானத்தைச் சூடிய
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர்மண் திணிந்த உலகத்தில், குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரிமையாளரான
முரசு முழங்கு தானை மூவருள்ளும்முரசு முழங்கும் படையினையுடைய மூவேந்தருக்குள்ளும்,
அரசு எனப்படுவது நினதே பெரும             5அரசு என்று சொல்லப்படும் சிறப்பிற்குரியது உன்னுடைய அரசு ஒன்றுதான் பெருமானே!
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும்ஒளிசெய்யும் கதிர்களைக் கொண்ட ஞாயிறு நான்கு திசைகளிலும் தோன்றினாலும்,
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும்ஒளிரும் கதிர்களையுடைய வெள்ளி தென்திசையில் சென்றாலும்
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்டஅழகிய குளிர்ந்த காவிரி நீரினைக் கொண்டுவந்து பல வாய்க்கால்களாக ஓடி நாட்டினை ஊட்டிவளர்க்க
தோடு கொள் வேலின் தோற்றம் போலதொகுதியான வேல்களை நட்டுவைத்த தோற்றத்தைப் போல
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்             10ஆடுகின்ற, கணுக்களைக்கொண்ட கரும்பின் வெள்ளையான பூக்கள் அசைகின்ற
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்கநாடு எனப்படுவது உன்னுடைய நாடு ஒன்றே! அவ்வாறாக
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தேஅந்த நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தனே!
நினவ கூறுவல் எனவ கேள்-மதிஉனக்குண்டான சில செய்திகளைக் கூறுகிறேன், என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக,
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்துஅறக்கடவுள் விரும்பி ஆராய்வதைப் போன்ற உன்னுடைய செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையுடைய
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு 15நீதியைக் கேட்கவேண்டிய காலத்தில், தகுதியில் எளியோர், இங்கு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறேதூறலை வேண்டிய பொழுதில் பெருமழையைப் பெற்றவர் ஆவர்,
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூஞாயிற்றைச் சுமப்பது போன்று பக்கமெல்லாம் திரண்ட மேகங்கள்
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்குதிசைகளைக் கொண்ட வானத்தின் நடுவில் நின்று அதன் வெயிலை மறைப்பது போன்று
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடைகண்களைக்  கூசவைக்கும் உன் விண்ணை முட்டும்படி பரந்த வெண்கொற்றக்குடை
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய     20வெயிலை மறைப்பதற்காகக் கொள்ளப்பட்டதோ? இல்லையே! வருந்தும்
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவகுடிமக்களுக்கு நிழல் தரவே, கூர்மையான வேலினைக்கொண்ட வளவனே!
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்பஉள்ளீடற்ற பனைமரத்தின் துண்டுகளைப் போல வேறுவேறாய்க் கிடக்க
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலைகளிறுகளின் கூட்டத்துடன் போரிட்ட இடம் அகன்ற போர்க்களத்தில்
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்துஎதிர்த்துவரும் படையினை எதிர்கொண்டு தடுத்து, இது இடம்பெயர்ந்து புறமுதுகிடும்போது ஆரவாரித்து
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை       25உன் போரிடும் படை தரும் வெற்றியும், உழுகின்ற கலப்பை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனேநிலத்தில் ஊன்றுகின்ற கொழு உண்டாக்கும் சாலில் விளைந்த நெல்லின் பயனே!
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்மழை பெய்யாமல்போனாலும், விளைச்சல் குறைந்துபோனாலும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்இயல்பாக அமையாதன மக்களின் தொழிலில் தோன்றினாலும்
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம்நாட்டைக் காப்பவரையே பழித்துப்பேசும், இந்த இடம் அகன்ற உலகம்
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும்         30என்பதனை நன்கு அறிந்திருப்பாயெனில், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாதுகோள்சொல்பவரின் வெற்றுவார்த்தைகளை உட்கொள்ளாமல்
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிபூட்டிய ஏரினைப் பேணுவோரின் பாரத்தைத் தாங்கி,
குடி புறந்தருகுவை ஆயின் நின்குடிமக்களைப் பாதுகாப்பாயானால், உன்
அடி புறந்தருகுவர் அடங்காதோரேபாதங்களைப் போற்றுவார்கள் உன் பகைவர்கள்.
  
# 36 ஆலத்தூர் கிழார்# 36 ஆலத்தூர் கிழார்
அடுநை ஆயினும் விடுநை ஆயினும்கொல்வது என்றாலும், கொல்லாமல் விட்டுவிடுவது என்றாலும்
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல்சீர்தூக்கி அறிந்துகொள் அதனால் உனக்குக் கிடைக்கும் பெருமையை, நீண்ட சித்திரக்கோலால் தீட்டப்பட்ட
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்செறிவான பரல்களைக்கொண்ட சிலம்புகளையும், குறிய வளையல்களையும் உடைய மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்பொன்னால் செய்த கழங்குகளை வைத்து திண்ணைபோன்ற மணல்மேட்டில் விளையாடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய           5குளிர்ந்த நீரையுடைய ஆன்பொருநை ஆற்றின் வெண்மையான மணல் சிதறும்படி
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய்வலிய கையினைக் கொண்ட கொல்லன் அரத்தால் கூர்மைசெய்யப்பட்ட அழகிய வாயையுடைய
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்துநீண்ட கைப்பிடியையுடைய கோடாரி வெட்டுதலால், நிலை தளர்ந்து
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்பூக்கள் மணக்கும் நீண்ட கிளைகள் துண்டாக, சோலைகள்தோறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர்காவல் மரங்களை வெட்டும் ஓசை, தன் ஊரில்
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப              10நீண்ட மதிலின் எல்லையில் காவலையுடைய அரண்மனைக்குள்ளும் ஒலிக்க
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின்அங்கு அதனைக் கேட்டபின்னும் இனிதாக இருக்கும் வேந்தனோடு, இங்கு உன்
சிலை தார் முரசும் கறங்கவானவில்லைப்போன்ற மாலையை அணிந்த முரசம் ஒலிக்க
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தேநீ போரில் ஈடுபட்டாய் என்பது வெட்கப்படவேண்டியது ஆகும்.
  
# 37 மாறோக்கத்து நப்பசலையார்# 37 மாறோக்கத்து நப்பசலையார்
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்தநஞ்சையுடைய வெண்மையான பல்லினைக் கொண்ட ஐந்து தலைகளைச் சுமந்த
வேக வெம் திறல் நாகம் புக்கு எனசினம் பொருந்திய கொடும் ஆற்றலையுடைய நாகம் புகுந்ததைப்போல (பகைவர் நாட்டில்)புகுந்து,
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடிவானமெங்கும் கடுமையான தீ உண்டாக(அவர் ஊர்களை எரித்து), பச்சைக் கொடிகளையுடைய
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்குபெரிய மலையின் குகைக்குள் இடி விழுந்தது போல் (அவர் நாட்டை அழித்து)-
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல்              5ஒரு பறவை அடைந்த துன்பத்தைத் தீர்த்துவைத்த ஒளிபொருந்திய வேலையும்
சினம் கெழு தானை செம்பியன் மருகசினம் பொருந்திய படையையுமுடைய செம்பியன் வழிவந்தவனே!
கராஅம் கலித்த குண்டு கண் அகழிமுதலைகள் செருக்கித்திரியும் ஆழமான இடத்தையுடைய அகழியினையும்,
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடிகரிய இடமாகிய ஆழத்தில், ஒன்று சேர்ந்து ஓடி
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்யாமத்தை அறிவிப்பவரின் விளக்கின் நிழலினைக் கவ்விப்பிடிக்க முயலும்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி               10கடும் பகைமையுணர்வு கொண்ட முதலைகளையுடைய ஆழமான நீரையுடைய நீர்நிலைகளையும்
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்செம்பினால் ஆக்கப்பட்டது போன்ற மதிலையும் உடைய தலைமைப்பண்புள்ள பழமையான ஊரில்
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்கச்சு அணிந்த யானையையுடைய வேந்தன் இருப்பதால்
நல்ல என்னாது சிதைத்தல்அவற்றை நல்லன என்று பாராமல் அழித்துப்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானேபோரிட்டு வெல்லும் ஆற்றல்படைத்தவனாய் இருக்கிறாய், நெடுந்தகையே!
  
# 38 ஆவூர் மூலம் கிழார்# 38 ஆவூர் மூலம் கிழார்
வரை புரையும் மழ களிற்றின் மிசைமலை போன்ற இளமையான யானையின் மேல்
வான் துடைக்கும் வகைய போலவானத்தைத் துடைப்பவை போல்
விரவு உருவின கொடி நுடங்கும்பல உருவங்களையுடைய கொடிகள் அசையும்
வியன் தானை விறல் வேந்தேபரந்த படையினையுடைய வெற்றிமிக்க வேந்தனே!
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ         5நீ மாறுபட்டுப் பார்க்குமிடம் தீப்பற்றும்,
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்பநீ விரும்பிப் பார்க்குமிடம் பொன் விளையும்,
செம் ஞாயிற்று நிலவு வேண்டினும்சிவந்த கதிரவனில் குளுமையை வேண்டினாலும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்வெண்ணிறமான திங்களில் வெம்மையை வேண்டினாலும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்வேண்டியதை விளைவிக்கும் ஆற்றலையுடையவன், அதனால்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த           10உனது நிழலில் பிறந்து, உனது நிழலில் வளர்ந்த
எம் அளவு எவனோ மற்றே இன் நிலைஎங்கள் நினைவின் அளவைச் சொல்லவும் வேண்டுமா? இனிய நிலையை உடையதாகிய
பொலம் பூ காவின் நன் நாட்டோரும்பொற்பூக்களையுடைய கற்பகச்சோலையுள்ள நல்ல விண்ணகத்தவரும்
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதைதாங்கள் செய்த நல்வினையால் உள்ள இன்பத்தை அடைவதன்றி
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்இருப்போர் இல்லாதவர்க்குக் கொடுத்தலும், இல்லாதோர் இருப்பரிடம் வேண்டுதலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து என       15அங்குச் செய்ய இயலாது என்பதால் அவ்வுலகம் செயலிழக்கச் செய்வது எனக் கருதி
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்அவ்வுலகத்தில் அடையும் இன்பம் இவ்வுலகத்திலும் கிடைக்குமென்பதால்,
நின் நாடு உள்ளுவர் பரிசிலர்உன் நாட்டை நினைப்பார்கள் பரிசிலர்,
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவேபகைவர் நாட்டிலிருந்தாலும் உன் நாடு உன்னை உடையது என்பதால்.
  
# 39 மாறோக்கத்து நப்பசலையார்# 39 மாறோக்கத்து நப்பசலையார்
புறவின் அல்லல் சொல்லிய கறை அடிபுறாவின் துன்பத்தைப் போக்குவதற்காக, உரல் போன்ற அடியினையுடைய
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடையானையின் வெள்ளிய கொம்பைக் கடைந்து செறிக்கப்பட்ட வெண்மையான கடைப்பகுதியைக் கொண்ட
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருககோலாகிய நிறுக்கப்படும் தராசுத் தட்டில் உட்கார்ந்தவனின் மரபில் வந்தவனே!
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல்கொடுப்பது என்பது உனக்கு இயல்பாக அமைந்ததேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; அணுகுவதற்குப்
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல்          5பகைவர்கள் அஞ்சும் நெருங்கமுடியாத மிக்க வலிமையுடைய
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்தொங்குகோட்டையை அழித்த உனது முன்னோரை நினைத்துப்பார்த்தால்
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்றுபகைவரைக் கொல்லுதல் உனக்குப் பழக்கமேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; கேடில்லாத
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்துவீரமுள்ள சோழரின் உறையூரில் உள்ள அரசவையில்
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால்அறம் நின்று நிலைபெற்றதாதலால்
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு           10நீதி வழங்குவது உனக்கு மரபேயன்றி உனக்குப் புகழைச் சேர்ப்பதாகாது; வீரம் மிகுந்து
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்எழுந்த போரினை எதிர்ந்து வென்றவனும், கணையமரத்தை ஒத்த திண்மையான தோளினையுடையவனும்,
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவகண்ணுக்கு அழகிய மாலையை அணிந்தவனும், செருக்குடைய குதிரையையுடையவனும் ஆகிய வளவனே!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கியஎவ்வாறு கூறுவேன் நான்? உயர்ந்த 
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டுஎல்லை அளந்து அறியமாட்டாத பொன் போன்ற பனி படர்ந்த நெடிய சிகரங்களையுடைய
இமையம் சூட்டிய ஏம வில் பொறி             15இமையமலையில் பொறிக்கப்பட்ட காவலாக அமைந்த வில் சின்னத்தையும்
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலையவேலைப்பாடமைந்த நெடிய தேரினையும் உடைய சேரன் அழிய
வாடா வஞ்சி வாட்டும் நின்அவனது அழிவில்லாத வஞ்சிநகரை அழிக்கும் உனது
பீடு கெழு நோன் தாள் பாடும் காலேபெருமை பொருந்திய வலிமையான முயற்சியைப் பாடும்போது – (எவ்வாறு கூறுவேன் நான்?)
  
# 40 ஆவூர் மூலங்கிழார்# 40 ஆவூர் மூலங்கிழார்
நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில்நீயோ, பகைவர் பாதுகாக்கும் மறம் நிலைபெற்ற கோட்டைகளை
ஓம்பாது கடந்து அட்டு அவர்பெரிதென்று எண்ணாமல் அவற்றை எதிர்நின்று அழித்து, அவர்களின்
முடி புனைந்த பசும்_பொன் நின்மணிமுடியில் இருந்த பசும்பொன்னை உன்
அடி பொலிய கழல் தைஇயகால்கள் பொலிவுற கழலாகச் செய்துகொண்ட
வல்லாளனை வய வேந்தே                      5ஆற்றலையுடையவன், வலிமையுள்ள வேந்தனே!
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்கநாங்களோ, உன்னை இழித்துரைப்போர் கழுத்து வணங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்றபுகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற,
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்இன்று கண்டதைப் போல என்றும் காண்போம்,
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெருமஇனிய சொற்களுடன், எளிமை உடையவனாய் இருப்பாயாக, பெருமானே!
ஒரு பிடி படியும் சீறிடம்                        10ஒரு பெண்யானை படுத்திருக்கும் சிறிய இடத்தில் விளையும் விளைச்சல்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயேஏழு ஆண்யானைகளை வளர்க்கும் நாட்டினை உடையவனே!
  
  
  
  
  
  
# 41 கோவூர் கிழார்# 41 கோவூர் கிழார்
காலனும் காலம் பார்க்கும் பாராதுகாலனும் ஓர் உயிரை எடுக்க உரிய காலம் பார்த்திருப்பான், அப்படிப் பாராமல்,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலையவேல் செறிந்த படையின் வீரர்கள் அழியும்படி
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தேவேண்டிய இடத்தில் கொல்லுகின்ற வெல்லும் போரை உடைய வேந்தனே!
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும்எட்டுத் திசைகளிலும் எரிநட்சத்திரம் எரிந்து விழவும்,
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் 5பெரிய மரத்தின் இலையில்லாத நீண்ட கிளை காய்ந்துபோகவும்,
வெம் கதிர் கனலி துற்றவும் பிறவும்வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு மிக அருகில் வந்து நெருப்பாய்ச் சுடவும், மேலும்,
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும்அஞ்சத்தகுவனவாகிய பறவைகள் தம் குரலை இசைக்கவும்,
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்நிலத்தின் மேல் பல் விழவும், தலையில் எண்ணெய் தேய்த்து நீராடவும்,
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்ஆண்பன்றி மீது ஏறுவது போலவும், ஆடையைக் களைவது போலவும்,
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்              10வெண்மையான படைக்கலம் தான் இருந்த கட்டிலோடு கவிழவும், எனக்
கனவின் அரியன காணா நனவில்கனவிலும் காணுவதற்கு அரிய காட்சிகளை நேரில் காணுமாறு
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கிபோர் செய்யும் வலிமையுடையவனே! நீ படையெடுத்து வருகின்ற தன்மையைப் பார்த்து
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்மயங்கிய பாதுகாப்பில்லாத இருக்கையினையுடைய பகைவர்,
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்குதம் மக்களின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியர்க்குத்
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு                15தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும் துன்பத்தையுடைய வீரரோடு
பெரும் கலக்கு_உற்றன்றால் தானே காற்றோடுமிகுந்த கலக்கம் அடைந்தது, காற்றுடன்
எரி நிகழ்ந்து அன்ன செலவின்தீயும் கலந்தது போன்ற படையெடுப்பையுடைய
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடேபோரில் மிகுந்து விளங்கும் வளவனே! உன்னைக் கோபமூட்டியவர்களின் நாடு -(மிகுந்த கலக்கம் அடைந்தது)
  
# 42 இடைக்காடனார்# 42 இடைக்காடனார்
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்குறையாத கொடைக்குணமும், கொல்லுகின்ற போர்க்குணமும் உடைய தலைவனே! உன்
யானையும் மலையின் தோன்றும் பெரும நின்யானையும்  மலையைப் போலத் தோன்றும், பெருமானே! உன்
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனைபடையும் கடலைப் போல முழங்கும், கூர்மையான முனையைக் கொண்ட
வேலும் மின்னின் விளங்கும் உலகத்துஉன் வேலும் மின்னலைப் போல் விளங்கும், உலகத்திலுள்ள
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின்               5வேந்தர்கள் தலை நடுங்கும்படியாகச் செய்யும் ஆற்றலையுடையவனாய் இருப்பதால்
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றேகுற்றமற்று விளங்குகிறாய், அது புதிய செய்தியும் இல்லை,
தண் புனல் பூசல் அல்லது நொந்துகுளிர்ந்த நீர் சலசலத்து ஓடும் ஓசையை அன்றி, வருந்தி
களைக வாழி வளவ என்று நின்‘எம்மை நீக்கிவிடுக, வாழ்க வளவனே!’ என்று உன்
முனை தரு பூசல் கனவினும் அறியாதுமுன்னணிப்படை எழுப்பும் சலசலப்பைக் கனவிலும் அறியமாட்டாய்,
புலி புறங்காக்கும் குருளை போல                   10புலி பாதுகாக்கும் குட்டியைப் போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்பகுறைவில்லாத நேர்மையான ஆட்சியால் நீ மக்களைக் காக்கின்றாய்,
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர்பெரும் சிறப்புள்ள புதுவரவினை உடையதாகி, நெல்லறுப்போர்
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர்கடைமடையில் பிடித்த வாளைமீனும், உழுவோர்
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர்தம் கலப்பையால் புரட்டிவிட்ட ஆமையும், கரும்பறுப்போர்
கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை              15கரும்பிலிருந்து எடுத்த தேனும், பெரிய நீர்த்துறையில்
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்தண்ணீர் எடுத்துவரும் மகளிர் பறித்த குவளையும் ஆகிய இவற்றை
வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும்குறிஞ்சி, முல்லை ஆகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருநமருதம் நெய்தல் ஆகிய மென்புல ஊர்களைக் கொண்ட நல்ல நாட்டினையுடைய வேந்தனே!
மலையின் இழிந்து மா கடல் நோக்கிமலையிலிருந்து இறங்கி, பெரிய கடலை நோக்கி
நில வரை இழிதரும் பல் யாறு போல           20நிலத்து வழியே செல்லும் பல ஆறுகளைப் போல
புலவர் எல்லாம் நின் நோக்கினரேபுலவர்கள் எல்லாரும் உன்னை நோக்கி வருகிறார்கள்,
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துநீதான், தப்பிக்கமுடியாத போர்க்கோடரி வருந்தும்படியாக அதனைச் சுழற்றி
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடுகூற்றுவன் கோபம்கொண்டதைப் போல வலிமையுடன்
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையேமாற்றாரகிய இரு பெரு வேந்தரின் நாடுகளையும் நோக்குகின்றாய்.
  
# 43 தாமப்பல் கண்ணனார்# 43 தாமப்பல் கண்ணனார்
நில மிசை வாழ்நர் அலமரல் தீரஇந்த உலகத்தில் வாழ்பவர்க்கு வெப்பத்தால் உண்டாகும் துன்பம் நீங்க,
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கிசுடும் கதிரையுடைய கதிரவனின் வெம்மையைத் தாங்கி,
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும்காற்றே உணவாகக்கொண்டு, அந்தக் கதிரவனுடன் திரிந்து வரும்
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறைஒளிரும் சடையினைக் கொண்ட முனிவர்களும் வியப்பால் மயங்க, வளைந்த சிறகையும்
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ          5கூர்மையான நகத்தையும் கொண்ட பருந்தின் தாக்குதலிலிருந்து தப்பி,
தன் அகம் புக்க குறு நடை புறவின்தன்னை அடைந்த குறுகிய நடையையுடைய புறாவினது
தபுதி அஞ்சி சீரை புக்கஅழிவுக்கு அஞ்சி தராசுத்தட்டில் ஏறி அமர்ந்த
வரையா ஈகை உரவோன் மருகஎல்லையற்ற ஈகையையுடைய வலிமையையுடைவனின் வழியில் வந்தவனே!
நேரார் கடந்த முரண் மிகு திருவின்பகைவரை வென்ற வலிமை மிக்கவனும், செல்வ நலம் உடையவனும்,
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல்         10தேரினை வழங்கும் வண்மையானுமாகிய கிள்ளியின் தம்பியே!, நீண்ட அம்பினையும்
கொடு மர மறவர் பெரும கடு மான்வளைந்த வில்லினையும் உடைய வீரர்களின் பெருமானே! விரையும் குதிரையையுடைய
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்கைவண்மை மிக்க தலைவனே! உன் பிறப்பில் எனக்கு ஓர் ஐயம் ஏற்படுகிறது,
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்ஆத்தியால் புனையப்பட்ட மாலையையுடைய உன் முன்னோர் எல்லாரும்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இதுபார்ப்பனர் நோகும்படியான செயல்களைச் செய்யமாட்டார், இச்செயல்
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி                15சிறப்புத்தருமோ உனக்கு என்று மனம்வெறுத்துக் கூறி
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்உனக்கு நான் தவறிழைத்தது பற்றி நீ மனம் நோகவில்லை, என்னைக்காட்டிலும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையேநீதான் தவறுசெய்தவன் போல மிகவும் வெட்கப்பட்டாய்,
தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்தமக்குத் தவறிழைத்தவரைப் பொறுக்கக்கூடிய நல்ல உள்ளம்
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் எனஇந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிமையானதாய்க் காணப்படும் என்று
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்                20காட்டினாய், காணத்தக்க வலிமையையுடையவனே! எனவே,
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்நானே தவறிழைத்தேன், உன் வாழ்நாள் சிறந்துவிளங்கட்டும்,
மிக்கு வரும் இன் நீர் காவிரிபெருகிவரும் இனிய நீரையுடைய காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவேகொண்டுவந்து குவித்த மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள்.
  
# 44 கோவூர் கிழார்# 44 கோவூர் கிழார்
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியாகரிய பெண்யானைக் கூட்டத்துடன் பெரிய குளத்தில் மூழ்கிநீராடாமல்,
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅநெல்லரிசியையுடைய கவளத்துடன், நெய்யூற்றி மிதித்த கவளமும் பெறாமல்,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றிதிருத்தமான அடிப்பகுதியைக் கொண்ட உறுதியான கம்பம் வருந்த அதனைச் சாய்த்து
நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்துநிலத்தின் மேல் புரளும் கையுடன் பெருமூச்செறிந்து
அலமரல் யானை உரும் என முழங்கவும்         5அங்குமிங்கும் சுழன்று திரியும் யானைகள் இடி போல் முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும் மகளிர்பால் இல்லாத பச்சைக்குழந்தை அலறி அழவும்,  மகளிர்
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல்பூ இல்லாத வெறும் தலையை அள்ளி முடிக்கவும், தண்ணீர் இல்லாமல்
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்வேலைப்பாடமைந்த நல்ல இல்லங்களில் உள்ளவர்கள் வருந்திக்கூவும் கூக்குரல் கேட்கவும்,
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்நல்லதல்ல, இங்கு இனிதாக இருப்பது,
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல்             10நெருங்க முடியாத வலிமை படைத்த ஆற்றல் மிக்க குதிரையின் தலைவனே!
அறவை ஆயின் நினது என திறத்தல்நீ அறம் சார்ந்தவன் என்றால், இந்தக் கோட்டை உன்னுடையது என்று சொல்லிக் கதவைத் திற,
மறவை ஆயின் போரொடு திறத்தல்நீ வீரமுள்ளவன் என்றால் போரிடுவதற்காகக் கதவைத் திற,
அறவையும் மறவையும் அல்லை ஆகஅறமுள்ளவனாகவும் இராமல், மறமுள்ளவனாகவும் இராமல்
திறவாது அடைத்த திண் நிலை கதவின்திறக்காமல் அடைத்துக்கிடக்கும் திண்ணிய நிலைகளையுடைய கதவுகளையுடைய
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்                  15நீண்ட கோட்டைமதிலின் ஒரு பக்கத்தில் பதுங்கியிருத்தல்
நாணு_தகவு உடைத்து இது காணும்_காலேயோசித்துப்பார்த்தால் வெட்கப்படத்தக்கது.
  
# 45 கோவூர் கிழார்# 45 கோவூர் கிழார்
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்பெரிய பனையின் வெண்மையான தோட்டைச் சூடிய சேரன் அல்லன்,
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலையைச் சூடிய பாண்டியன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடுஉன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது, உன்னுடன்
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றேபோரிடுபவனின் மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது,
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே            5உமக்குள் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழர் குடியே,
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்இருவரும் வெல்லுதல் உலக இயல்பன்று, அதனால்
குடி பொருள் அன்று நும் செய்தி கொடி தேர்உமது குடிக்குப் பெருமைசேர்ப்பது அன்று உம் செய்கை, கொடியால் பொலிந்த தேரையுடைய
நும் ஓர் அன்ன வேந்தர்க்குஉம்மைப் போன்ற வேந்தர்களுக்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலேஉடல் பூரிக்கும் உவகையைச் செய்யும் இந்தப் போர்.
  
# 46 கோவூர் கிழார்# 46 கோவூர் கிழார்
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்நீதான், புறாவின் துன்பத்தை மட்டுமல்லாமல், மற்றவையும் உற்ற
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனைஇடுக்கண் பலவற்றையும் நீக்கினவனுடைய வழியில் வந்தவன்;
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சிஇவர்களோ, தம் அறிவைக்கொண்டு உழுது உண்ணும் கற்றவர்களின் வறுமைக்கு அஞ்சி
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்தம்முடையதை அவர்களுடன் பகிர்ந்து உண்ணும் குளிர்ந்த நிழலில் வாழ்பவர்கள்;
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த         5களிற்றினைக் கண்டு முதலில் அழுது, பின்னர் தம் அழுகையை மறந்துபோன
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கிபுல்லிய தலையையுடைய இந்தச் சிறுவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த மன்றத்தை மருட்சியுடன் பார்த்து
விருந்தின் புன்கண் நோவு உடையர்இதுவரை அறியாத புதியதொரு துயரத்தை உடையவர்;
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மேநான் சொல்வதைக் கேட்டுக்கொண்டாய், இனி உன் விருப்பப்படி செய்
  
# 47 கோவூர் கிழார்# 47 கோவூர் கிழார்
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகிஈகைக்குணமுடையோரை எண்ணிப்பார்த்து, பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகளைப்போலச் சென்று
நெடிய என்னாது சுரம் பல கடந்துநீண்டு கிடக்கின்றன என்று நினைக்காமல் அரிய வழிகள் பலவற்றையும் கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடிதிருத்தமில்லாத நாவினால், திறமுள்ளபடி பாடி,
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்திபெற்ற பரிசிலால் மகிழ்ந்து, சுற்றத்திற்கும் கொடுத்து
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி                     5இனி வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் உண்டு, மனம் வருந்தாமல் கொடுத்து
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கைதம்மைக் காப்போரால் கிடைக்கும் சிறப்புக்காக வருந்தியிருக்கும் இந்தப் பரிசிலால் வாழும் வாழ்க்கை
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்படபிறருக்குக் கெடுதல் நினைப்பதில்லை, அறிவு மேம்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகிதமக்கு மாறானவர் வெட்கப்பட, தலை நிமிர்ந்து சென்று,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்சென்றவிடத்தும் இனிமையாக நடப்பதைத் தவிர, உயர்ந்த புகழையுடைய
மண் ஆள் செல்வம் எய்திய                  10நிலத்தை ஆளும் செல்வத்தையுடைய 
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தேஉம்மைப்போன்ற தலைமைப்பண்பும் உடையது.(உம்மைப்போன்ற சிறந்தவர்களையும் காப்பாளராக உடையது)
  
# 48 பொய்கையார்# 48 பொய்கையார்
கோதை மார்பின் கோதையானும்சேரமான் கோக்கோதைமார்பன் தன் மார்பினில் அணிந்த மாலையாலும்,
கோதையை புணர்ந்தோர் கோதையானும்அந்தச் சேரமன்னனை மணந்தவர்கள் சூடியுள்ள மாலையினாலும்
மா கழி மலர்ந்த நெய்தலானும்கரிய கழியில் மலர்ந்த நெய்தல் மலராலும்
கள் நாறும்மே கானல் அம் தொண்டிதேன் மணம் வீசுகின்றது கடற்கரைச்சோலையையுடைய தொண்டி நகரம்,
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்            5அது எம்முடைய ஊர், அவன் எமது தலைவன்,
அன்னோன் படர்தி ஆயின் நீயும்அவனை நினைத்து அவனிடம் சென்றால், நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவலஎம்மையும் நினைத்துப்பார்ப்பாயாக, முதிய வாய்மையே பேசும் இரவலனே! 
அமர் மேம்படூஉம்_காலை நின்”நீ போரில் சிறந்துவிளங்கும்போது உன்னுடைய
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவேபுகழைச் சிறப்பித்துக் கூறுபவனைக் கண்டோம்” என்று சொல்லி – (எம்மையும் நினைத்துப்பார்ப்பாயாக)
  
# 49 பொய்கையார்# 49 பொய்கையார்
நாடன் என்கோ ஊரன் என்கோகுறிஞ்சி நிலத்து நாடன் என்பதா?, மருத நிலத்து ஊரன் என்பதா?
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோஓசையிடும் குளிர்ந்த கடலை உடைய சேர்ப்பன் என்பதா?
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையைஎப்படி அழைப்பேன் சிறந்த வாளையுடைய சேரமான் கோதைமார்பனை?
புனவர் தட்டை புடைப்பின் அயலதுகுறிஞ்சித் தினைப்புனத்துள்ளோர் கிளிகளை விரட்ட தட்டை என்ற கருவியை முழக்கின், அருகிருக்கும்
இறங்கு கதிர் அலமரு கழனியும்                     5வளைந்த நெற்கதிர்கள் அசைந்தாடும் கழனிகளிலும்
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமேமிக்க நீரையுடைய கடற்கரையிலும் பறவைகள் ஒருமித்து எழுந்து பறக்கும்.
  
# 50 மோசிகீரனார்# 50 மோசிகீரனார்
மாசு அற விசித்த வார்பு_உறு வள்பின்குறைவில்லாமல் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட வாரையுடைய
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞைகருமரத்தால் செய்யப்பட்ட கருமையான பக்கங்கள் பொலிவுபெற மயிலின்
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார்தழைத்த நீண்ட தோகையால் தொடுக்கப்பட்ட பளிச்சென்ற பொறிகளையுடைய நீலமணி போன்ற மாலையை
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டிபொன்போன்ற தளிரையுடைய உழிஞை மலருடன் பொலிவுபெறச் சூட்டி
குருதி வேட்கை உரு கெழு முரசம்           5குருதிப்பலி கொள்ளும் வேட்கையையுடைய அச்சம் பொருந்திய போர்முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்நீராடிவர எடுத்துச்செல்லப்பட்டு, திரும்பக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர், எண்ணெயின்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கைநுரையை முகந்துவைத்ததைப் போன்ற மென்மையான பூக்கள் தூவிய கட்டிலில்
அறியாது ஏறிய என்னை தெறுவரஅது முரசுக்கட்டில் என்பதனை அறியாமல் ஏறிப் படுத்திருந்த என்னை, சினம் பெருக
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததைஇரண்டு துண்டங்களாக வெட்டிப்போடும் உன்னுடைய வாள் வெட்டாமல் விட்டுவிட்டது
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல்           10ஒன்றே போதும் நீ நல்ல தமிழை முழுதும் அறிந்திருக்கிறாய் என்பதைக் காட்டுவதற்கு,
அதனொடும் அமையாது அணுக வந்து நின்அத்துடன் நில்லாமல், என் அருகே வந்து உன்னுடைய 
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணெனவலிமையுடைய முழவு போன்ற தோளினை உயர்த்தி,
வீசியோயே வியல்_இடம் கமழசாமரத்தால் குளிர வீசினாயே, இந்த அகன்ற உலகம் பாராட்ட
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணதுஇங்குப் புகழ் உடையவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு அங்கிருக்கும்
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை         15மேலுலகத்தில் இடம் இல்லை என்பதை
விளங்க கேட்ட மாறு-கொல்தெளிவாகக் கேட்டு அறிந்ததனால்தானோ என்னவோ,
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலேவெற்றியையுடைய வேந்தனே! இங்கு இச் செயலை நீ செய்தது!