| |
# 21 செவ்வேள் – பாடியவர் : நல்லச்சுதனார் | # 21 செவ்வேள் |
பண் அமைத்தவர்
: கண்ணாகனார்- பண் : காந்தாரம் | |
| |
ஊர்ந்ததை எரி
புரை ஓடை இடை இமைக்கும் சென்னி | நீ ஊர்ந்த ஊர்தி,
நெருப்பைப்போன்ற நெற்றிப்பட்டம் இடையே கிடந்து ஒளிரும் நெற்றியையுடைய |
பொரு சமம்
கடந்த புகழ் சால் வேழம் | போரிடும்
போர்களிலெல்லாம் வெற்றிகண்ட புகழ் நிறைந்த யானை; |
தொட்டதை தைப்பு
அமை சருமத்தின் தாள் இயை தாமரை | நீ அணிந்துகொண்டது,
தைப்பதற்காக அமைந்த தோலினால், உன் திருவடிக்குப் பொருந்திய தாமரை மலர் போன்று
செய்யப்பட்டது; |
துப்பு அமை
துவர் நீர் துறை மறை அழுத்திய | செம்பவளம் போன்ற
துவர்நீர்த் துறையில் முழுதும் மறையும்படி அழுத்திப் பதனிடப்பட்டது; |
வெரிந தோலொடு
முழு மயிர் மிடைந்த | அதன் முதுகுப்பக்கத்
தோலோடு முழுதும் மயிர் செறிந்திருக்கும்; |
வரி மலி அர உரி
வள்பு கண்டு அன்ன | வரிகள் மிக்க பாம்பின்
தோலைக் கீறி எடுத்த வார் போன்ற |
புரி மென் பீலி
போழ் புனை அடையல் | விரும்புதற்குரிய
மென்மையான மயிற்பீலிப் பிளவுகளை வைத்து அழகுசெய்யப்பட்டது அந்த அடையலாகிய
செருப்பு; |
கையதை கொள்ளா
தெவ்வர் கொள் மா முதல் தடிந்து | உன் கையில் உள்ளது,
உன்னை ஏற்றுக்கொள்ளாத பகைவர் தமக்குத் தலைவனாகக் கொண்ட சூரபன்மாவினை அடியோடு
வீழ்த்தி, |
புள்ளொடு
பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் | கிரவுஞ்சம் என்னும்
பறவையின் பெயர்கொண்ட மலையினைப் பிளந்த வேல்; |
பூண்டதை சுருள்
உடை வள்ளி இடை இடுபு இழைத்த | நீ அணிந்துகொண்டது,
சுருளும்தன்மையுடைய வள்ளிப்பூவை இடையிடையே இட்டுத் தொடுத்த |
உருள் இணர்
கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் | தேருருள் போன்ற
பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை; |
அமர்ந்ததை
புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி | நீ
எழுந்தருளியிருப்பது, உயர்ந்தவரின் நாவினால் புகழப்படும் நன்மை நிறைந்து, |
நிரை ஏழ்
அடுக்கிய நீள் இலை பாலை | நிரைபட ஏழு ஏழாக
அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலைமரத்தினைக் கொண்ட |
அரை வரை மேகலை
அணி நீர் சூழி | இடைநிலமான
அம்பாரியையும், அழகிய அருவி நீராகிய முகபடாத்தையும் (கொண்டு யானை போல்
இருக்கும்) |
தரை விசும்பு
உகந்த தண் பரங்குன்றம் | தரையிலிருந்து வானுற
உயர்ந்த குளிர்ந்த திருப்பரங்குன்றம்; |
குன்றத்து
அடியுறை இயைக என பரவுதும் | உன்
திருப்பரங்குன்றத்தின் அடியிலே இருந்துவாழும் பேற்றினைத் தருக என்று
வேண்டிநின்றோம், |
வென்றி கொடி
அணி வெல்வ நின் தொழுது | வெற்றிக்கொடியால் அழகு
பெற்ற செல்வனே! உன்னைத் தொழுது; |
சுடு பொன்
ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப | சுட்ட பொன்னால்
செய்யப்பட்ட காற்சிலம்பின் முத்துப்பரல்கள் எங்கேயும் செல்லுமாறு மிக்கு ஒலிக்க, |
துடியின் அடி
பெயர்த்து தோள் அசைத்து தூக்கி | உடுக்கை
ஒலிக்கேற்றவாறு தன் கால்களை எடுத்துவைத்து, தன் தோள்களை அசைத்துத் தூக்கி |
அடு நறா மகிழ்
தட்ப ஆடுவாள் தகைமையின் | சமைக்கப்பட்ட கள்ளை
உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக, |
நுனை இலங்கு
எஃகு என சிவந்த நோக்கமொடு | நுனி ஒளிரும்
வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே, |
துணை அணை
கேள்வனை துனிப்பவள் நிலையும் | தனக்குத் துணையாக
அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும், |
நிழல்_காண்_மண்டிலம்
நோக்கி | தன் கைக்கண்ணாடியைப்
பார்த்து, |
அழல் புனை
அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் | தீயினை அணிந்துகொண்டது
போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும், |
பொதிர்த்த முலை
இடை பூசி சந்தனம் | பருத்தெழுந்த தன்
முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை |
உதிர்த்து பின்
உற ஊட்டுவாள் விருப்பும் | உதிர்த்துவிட்டு
மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும், |
பல் ஊழ் இவை
இவை நினைப்பின் வல்லோன் | பலமுறை நிகழும்
இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது, வரைவதில் வல்லவன் |
ஓவத்து எழுது
எழில் போலும் மா | எழுதிய ஓவியத்தின்
அழகுக் காட்சியைப் போன்றிருக்கின்றன, சூரபன்மாவை |
தடிந்திட்டோய்
நின் குன்றின் மிசை | அழித்தவனே! உன்
குன்றத்தின் மேல்; |
மிசை படு
சாந்தாற்றி போல எழிலி | மேலே
எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின் |
இசை படு பக்கம்
இரு பாலும் கோலி | முழக்கம் எழுகின்ற
திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு |
விடு பொறி
மஞ்ஞை பெயர்பு உடன் ஆட | ஒளிவிடும் புள்ளிகளைக்
கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட, |
விரல் செறி
தூம்பின் விடு துளைக்கு ஏற்ப | விரலால் மூடியும்
திறந்தும் குழலின் காற்றுவிடும் துளையினின்றும் எழும் இசையைப் போல |
முரல் குரல்
தும்பி அவிழ் மலர் ஊத | இசைபாடும் குரலையுடைய
தும்பி கட்டவிழ்கின்ற மலரின் மீது பாடிக்கொண்டு பறக்க, |
யாணர்
வண்டு_இனம் யாழ் இசை பிறக்க | புதுமலரைத் தேரும்
வண்டினங்கள் யாழிசையைப் பிறப்பிக்க, |
பாணி முழவு இசை
அருவி நீர் ததும்ப | தாளத்துடன் கூடிய
முழவின் இசையாக அருவிநீர் முழங்க, |
ஒருங்கு
பரந்தவை எல்லாம் ஒலிக்கும் | ஒன்றாகப்
பலவிடங்களிலிருந்தும் பரவிய இசைகள் எல்லாம் ஒலிக்கும் |
இரங்கு
முரசினான் குன்று | முழங்குகின்ற
முரசினையுடைய முருகனின் குன்றத்தில்; |
தாழ் நீர்
இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் | தாழ்ந்து விழும் நீர்
முழங்குகின்ற சுனையின் நடுவே மூழ்கிக் குளித்து அங்கே |
மீ நீர் நிவந்த
விறல்_இழை கேள்வனை | நீர் மேல் எழுந்த
மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை |
வேய் நீர்
அழுந்து தன் கையின் விடுக என | ஒரு மூங்கிற்கழியைப்
புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட, |
பூ நீர் பெய்
வட்டம் எறிய புணை பெறாது | அவன் மணமுள்ள சாயநீர்
நிரப்பிய வட்டமான பாத்திரத்தை எறிய, அதில் ஆதரவான மிதவையைப் பெறாமல் |
அரு நிலை
நீரின் அவள் துயர் கண்டு | நிலைகொள்ள அரிதான
ஆழத்தையுடைய நீரில் அவளின் துயரத்தைக் கண்டு, |
கொழுநன் மகிழ்
தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து | அந்தக் கணவன்
உள்ளத்தில் மகிழ்ச்சிநிலை மாறி, கொய்தற்குரிய பூக்களைக் கொண்ட நீருக்குள்
பாய்ந்து |
தழுவும் தகை
வகைத்து தண் பரங்குன்று | அவளைத்
தழுவிக்கொள்ளும் தன்மையினையுடையது குளிர்ந்த திருப்பரங்குன்றம்; |
வண்டு ஆர்
பிறங்கல் மைந்தர் நீவிய | வண்டுகள்
ஆரவாரிக்கின்ற ஒளிவிடும் பாறை போன்ற மார்பினையுடைய மைந்தர்கள் தம் மார்பில்
பூசிய |
தண் கமழ்
சாந்தம் தைஇய வளியும் | குளிர்ச்சி பொருந்திய
கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும், |
கயல் புரை
கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த | மீனைப் போன்ற
கண்களையுடைய மகளிர் நறுமணங்கமழும் துகள்களைச் சேர்த்த |
புயல் புரை
கதுப்பு_அகம் உளரிய வளியும் | மேகக்கூடத்தைப் போன்ற
கூந்தலினூடே புகுந்து அதைக் கோதிவிடும் காற்றையும், |
உருள் இணர்
கடம்பின் நெடுவேட்கு எடுத்த | தேருருள் போன்ற
பூங்கொத்துக்களையுடைய கடம்பமரத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு எடுத்த |
முருகு கமழ்
புகை நுழைந்த வளியும் | வெறியாட்டில் எழுந்த
கமழ்கின்ற புகைவழியே புகுந்துவந்த காற்றையும், |
அசும்பும்
அருவி அரு விடர் பரந்த | இடைவிடாமல்
ஒழுகிக்கொண்டிருக்கும் அருவிநீர் அரிய மலைப் பிளவுகளில் பரந்த |
பசும் பூண்
சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து | பைம்பொன்னால் செய்த
பூண்களை அணிந்த குமரனே! உன் குன்றம் மிகவும் உடையது; |
கண் ஒளிர்
திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் | கண் கவர ஒளிர்ந்து
விளங்கும் பொன் தகட்டினை, மேகத்தால் இடப்பட்ட ஒளி பரப்பும் மின்னல் கொடி போல, |
ஒண் நகை தகை
வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த | ஒள்ளிய நகையின்
கூறுபாடுகள் அனைத்தும் முறையுடன் விளங்க, இடையிடையே சேர்த்துக் கட்டிய |
செண்ணிகை கோதை
கதுப்போடு இயல | தலைக்கோலங்களாகிய மாலை
கூந்தலோடு அசைய, |
மணி மருள் தேன்
மகிழ் தட்ப ஒல்கி | மாணிக்கம் போன்ற
சிவந்த தேனாற்செய்த மதுவின் மகிழ்ச்சி தடுத்துநிற்க அசைந்து |
பிணி நெகிழ
பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர | அழகிய ஆடையின்
இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர, |
பூ கொடி போல
நுடங்குவாள் ஆங்கு தன் | பூங்கொடியைப் போல
வளைந்து ஆடுவாள், அங்கு தன் |
சீர் தகு
கேள்வன் உருட்டும் துடி சீரான் | அழகுக்கேற்ற கணவன்
இசைக்கும் உடுக்கையின் தாளத்திற்கேற்ப, |
கோடு அணிந்த
முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் | தன் முலையின் மேல்
கிடக்கும் முத்தாரங்கள் விலகிச் செல்ல, ஆடுபவளது அழகிய |
ஆடை அசைய அணி
அசைய தான் அசையும் | ஆடை அசையவும்,
அணிகலன்கள் அசையவும் தான் அசையும் |
வாடை உளர்
கொம்பர் போன்ம் | வாடையால்
நீவிவிடப்பட்ட பூங்கொம்பினைப் போன்றிருக்கும் அவளின் ஆட்டம்; |
வாளி புரள்பவை
போலும் துடி சீர்க்கு | அம்புகள் புரள்வது
போன்றிருக்கும், உடுக்கையின் தாளத்திற்கு |
தோள் ஊழ்
பெயர்ப்பவள் கண் | தோளை முறையாக
அசைப்பவளின் கண்கள்; |
மாறு அமர்
அட்டவை மற வேல் பெயர்ப்பவை | பகைவரைப் போரில்
அழித்தவனே! வீரவேலினைச் சுழற்றுபவனே! |
ஆறு_இரு தோளவை
அறு முகம் விரித்தவை | பன்னிரண்டு
தோள்களையுடையவனே! ஆறு திருமுகங்களையும் மலர்ச்சியாகக் கொண்டவனே! |
நன்று அமர்
ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை | பெரிதும் விரும்பும்
சுற்றத்தாரோடு, ஒன்றுசேர்ந்து உன் திருவடி நிழலில் தங்குதல் |
இன்று போல்
இயைக என பரவுதும் | இன்று போல் என்றும்
அமைவதாக என்று வேண்டுகிறோம், |
ஒன்றார்
தேய்த்த செல்வ நின் தொழுதே | உன்னுடன்
ஒன்றிப்போகாதோரை இல்லையாக்கிய செல்வனே! உன்னைத் தொழுது; |
| |
# 22 வையை – பாடியவர், பண் அமைத்தவர் : பெயர் தெரியவில்லை | # 22 வையை |
| |
ஒளிறு வாள்
பொருப்பன் உடல் சமத்து இறுத்த | ஒளிவீசும் வாளினையுடைய
பாண்டியன் சினந்து போரில் இறைப்பொருளாகப் பெற்ற |
களிறு
நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர | களிறுகளை நெருக்கமா
நிறுத்திவைத்தது போன்று மேகங்கள் நெருங்கியிருக்க, |
அரசு பட கடந்த
ஆனா சீற்றத்தவன் | பகையரசர்களைக் கொன்று
அவர்களை வென்ற குறையாத சீற்றத்தையுடைய அந்தப் பாண்டியனின் |
முரசு அதிர்பவை
போல் முழங்கு இடி பயிற்றி | முரசுகள் அதிர்வது போல
முழங்குகின்ற இடிகள் திரும்பத் திரும்ப ஒலிக்க, |
ஒடுங்கார்
உடன்றவன் தானை வில் விசை | தனக்கு அடங்காதோரின்
மீது சினங்கொண்ட மன்னவனின் படையினர் வில்லிலிருந்து விசையுடன் |
விடும் கணை
ஒப்பின் கதழ் உறை சிதறூஉ | விடுகின்ற அம்புகளைப்
போன்று மிக்க துளிகளை அந்த மேகம் பொழிய, |
கண் ஒளிர்
எஃகின் கடிய மின்னி அவன் | கண்களைக் கூசவைக்கும்
வேற்படையைப் போல மிகுதியாக மின்னி, அந்தப் பாண்டியனின் |
வண்மை போல்
வானம் பொழிந்த நீர் மண் மிசை | வள்ளல்தன்மை போல வானம்
பொழிந்த மழைநீர் மண்ணின் மேல் |
ஆனாது வந்து
தொகுபு ஈண்டி மற்று அவன் | குறையாமல் வந்து
திரண்டு பெருகி, அவன் |
தானையின் ஊழி
தா ஊக்கத்தின் | படையினரின்
படைமுறைமையோடு பரவிச்செல்லும் மனவெழுச்சியுடன் |
போன நிலம்
எல்லாம் போர் ஆர் வயல் புகுத | அந் நாட்டில் சென்ற
நிலம் எங்கும் நெற்போர் நிரம்பிய வயல்களில் புகுந்தது; |
| (அடிகள் சிதைவுற்றதால்
உரை இல்லை) |
————
—————-நீக்கி பபு——–
————- | ————
————– நீக்கி பபு———-
————– |
கான மலைத்தரை
கொன்று மணல பினறீ | கான மலைத்தரை கொன்று
மணல பினறீ |
வான மலைத்த
———— வ ———– ———– | வான மலைத்த ———–வ ————————- |
———–லைத்தவ
மண முரசு எறிதர | ———-லைத்தவ மண
முரசு எறிதர |
தானை தலைத்தலை
வந்து மைந்து உற்று | தானை தலைத்தலை வந்து
மைந்து உற்று |
பொறிவி
யாற்றுறி துவர் புகை சாந்தம் | பொறிவி யாற்றுறி
——- சாயப்பொருள்கள், புகைப்பொருள்கள், சாந்து வகைகள் |
எறிவன எக்குவ
ஈரணிக்கு ஏற்ற | வீசிஎறிவனவும்,
தெளிப்பனவும் ஆகிய நீர்விளையாட்டுக்கு ஏற்ற கருவிகளையும் |
நறவு அணி பூ
துகில் நன் பல ஏந்தி | கள்ளும்,
அணிகலன்களும், பூவேலைப்பாடமைந்த துகில்களும் ஆகிய மிகப்பலவற்றை எடுத்துக்கொண்டு |
பிற தொழின
பின்_பின் தொடர | பிற பணியினரும் பின்னே
தொடர்ந்து வர, |
செறி வினை
பொலிந்த செம் பூ கண்ணியர் | செறிவான
வேலைப்பாட்டால் பொலிவுற்ற சிவந்த மலர்மாலையத் தலையில் அணிந்த ஆடவரும், |
ஈர் அமை வெட்சி
இதழ் புனை கோதையர் | குளிர்ச்சி பொருந்திய
வெட்சி மலரால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய மகளிரும், |
தார் ஆர்
முடியர் தகை கெழு மார்பினர் | மாலை நிறைந்த
முடியினையுடையவரும், அழகு பொருந்திய மார்பினையுடையவரும், |
மாவும் களிறும்
மணி அணி வேசரி | குதிரைகளும்,
களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும் |
காவு நிறைய கரை
நெரிபு ஈண்டி | ஆற்றங்கரைச் சோலை
நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி |
வேல் ஆற்றும்
மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் | வேலினால் போர்
செய்யும் முருகனைப் போல, மணமுள்ள மலர்களை அம்பாகக் கொண்ட மன்மதனைப் |
போல் ஆற்று
முன்பின் புனை கழல் மைந்தரொடு | போல, முறையே போரிடும்
வலிமையினைக்கொண்டு வீரக்கழல் அணிந்த மைந்தரும், |
தார் அணி
மைந்தர் தவ பயன் சான்ம் என | மாலையினையும்
அழகினையும் கொண்ட மைந்தரும், செய்த தவத்தின் பயன் பெரிதென்று பிறர் கூற, |
கார் அணி
கூந்தல் கயல் கண் கவிர் இதழ் | முகிலின் அழகுடைய
கூந்தலினையும், கயல் போன்ற கண்ணினையும், செம்முருக்கம் பூவைப் போன்ற உதடுகளையும் |
வார் அணி
கொம்மை வகை அமை மேகலை | கச்சணிந்த இளம்
முலைகளையும், சிறப்பாக அமைந்த மேகலையையும், |
ஏர் அணி இலங்கு
எயிற்று இன் நகையவர் | அழகிய வரிசையாய்
ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும், |
சீர் அணி
வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் | இயற்கை அழகினையுடைய
வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின் |
நீர் அணி
நீத்தம் இவர்க்கு அணி-கொல் என | நீரால் அழகுற்ற
வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று |
தேருநர்
தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் | தெளிந்தறிய முயல்வோர்
எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும், |
தீரமும்
வையையும் சேர்கின்ற கண் கவின் | கரையிலும் வையையிலும்
சேர்கின்ற கண்ணுக்குப்புலனாகும் அழகு; |
மண் கணை
முழவின் இன் கண் இமிழ்விற்கு | மண்ணுதல் செய்யப்பட்ட
திரண்ட முழவின் இனிய கண்ணில் பிறக்கும் முழக்கத்திற்கு |
எதிர்வ பொருவி
ஏறு மாறு இமிழ்ப்ப | எதிர்த்துப்
போட்டிபோடுவது போன்று …………….. இடியின் முழக்கம் மாறாக முழங்க |
கவர் தொடை நல்
யாழ் இமிழ காவில் | உள்ளத்தைக் கவரும்
பாலைப்பண் கோவையையுடைய நல்ல யாழ் இசையெழுப்ப, அதற்கு மாறாகச் சோலையில் |
புகர் வரி
வண்டு_இனம் பூ சினை இமிர | புள்ளிகளையும்
வரிகளையும் உடைய வண்டுக் கூட்டம் பூத்த மரக்கொம்புகளில் ஒலியெழுப்ப, |
ஊது சீர் தீம்
குழல் இயம்ப மலர் மிசை | ஊதுதற்குரிய ஓசை
இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க, அதற்கு மாறாக, மலர்களின் மேல் |
தாது ஊது
தும்பி தவிர்பு அல இயம்ப | பூந்தாதுக்களை ஊதும்
தும்பிகள் நிற்காமல் ஒலிக்க, |
———-
துடி சீர் நடத்த வளி நடன் | ————
உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன் |
மெல் இணர் பூ
கொடி மேவர நுடங்க | மென்மையான
பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய, |
ஆங்கு அவை
தத்தம் தொழில் மாறு கொள்ளும் | அங்கே இந்தக் கலைகள்
தத்தம் தொழிலில் ஒன்றற்கொன்று மாறாக இயங்குகின்றன, |
தீம் புனல்
வையை திருமருத முன்துறையால் | இனிய நீரையுடைய
வையையின் திருமருத முன்துறையில்; |
கோடு உளர்
குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல் | மரக்கொம்பில் அசைகின்ற
பூங்கொத்துக்களால் பொலிவடைந்து தழைத்து அசைகின்ற கரிய கூந்தலையுடைய |
—————–
—————— புரை தீர் நெடு மென் | ……………………………
குற்றமற்ற நெடிய மெல்லிய |
தோள் தாழ்பு
தழை மலர் துவளா வல்லியின் | தோளில் தாழ்ந்து
தழைக்கும் மலரையுடைய துவள்கின்ற கொடிபோல |
நீள் தாழ்பு
தோக்கை நித்தில அரி சிலம்பு | நீண்டு தாழ்ந்த
தொங்கலுடன் முத்துப் பரலைக் கொண்ட சிலம்பு |
| |
# பரிபாடல்
முற்றிற்று | # பரிபாடல் முற்றிற்று |
| |
| |
| |
| |
# பரிபாடல்
திரட்டு | # பரிபாடல் திரட்டு |
| |
பரிபாடல்
எழுபது (70) பாடல்களைக் கொண்டது | பரிபாடல் எழுபது (70)
பாடல்களைக் கொண்டது |
என
அறியப்படுகிறது. | என அறியப்படுகிறது. |
இவற்றுள்
நமக்குக் கிடைத்தவை | இவற்றுள் நமக்குக்
கிடைத்தவை |
இருபத்திரண்டு
(22) பாடல்களே. | இருபத்திரண்டு (22)
பாடல்களே. |
| |
இவற்றைத் தவிர,
சில பாடல்கள் முழுமையாகவும், | இவற்றைத் தவிர, சில
பாடல்கள் முழுமையாகவும், |
சில பாடல்
வரிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. | சில பாடல் வரிகளும்
ஆங்காங்கே காணப்படுகின்றன. |
இவை பாடல்
எண்கள் 23 முதல் 35 வரை | இவை பாடல் எண்கள் 23
முதல் 35 வரை |
இங்கே
கொடுக்கப்பட்டுள்ளன. | இங்கே
கொடுக்கப்பட்டுள்ளன. |
| |
1.
தொல்காப்பியச் செய்யுளியலில் மேற்கோள்களாக | 1. தொல்காப்பியச்
செய்யுளியலில் மேற்கோள்களாக |
உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பட்டவை | உரையாசிரியர்களால்
எடுத்தாளப்பட்டவை |
| |
பாடல் (பாடல் வரி)கள் ஐந்து (5). | பாடல் (பாடல் வரி)கள் ஐந்து (5). |
| |
தொல். செய்யுளியல்-121 – பேராசிரியர் உரை –
பாடல் 23 | தொல். செய்யுளியல்-121 – பேராசிரியர் உரை –
பாடல் 23 |
தொல். செய்யுளியல்-118 – இளம்பூரணர் உரை –
பாடல் – 24 | தொல். செய்யுளியல்-118 – இளம்பூரணர் உரை –
பாடல் – 24 |
தொல். செய்யுளியல்-121 – பேரா, நச். உரை –
பாடல் — 25 | தொல். செய்யுளியல்-121 – பேரா, நச். உரை –
பாடல் — 25 |
தொல். செய்யுளியல்-120 – பேராசிரியர் உரை –
பாடல் 27 | தொல். செய்யுளியல்-120 – பேராசிரியர் உரை –
பாடல் 27 |
தொல். மெய்ப்பாட்டியல்-11 – இளம்பூரணர் உரை –
பாடல் 35 | தொல். மெய்ப்பாட்டியல்-11 – இளம்பூரணர் உரை –
பாடல் 35 |
| |
2. திருக்குறள்
– 23 – பரிமேலழகர் உரை – பாடல் 26 | 2. திருக்குறள் – 23 –
பரிமேலழகர் உரை – பாடல் 26 |
| |
3. நாற்கவிராச
நம்பி அகப்பொருள் நூலில் மேற்கோளாக | 3. நாற்கவிராச நம்பி
அகப்பொருள் நூலில் மேற்கோளாக |
எடுத்தாளப்பட்ட
பாடல் ஒன்று (1) – பாடல் 28 | எடுத்தாளப்பட்ட பாடல்
ஒன்று (1) – பாடல் 28 |
| |
4.
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ள | 4. புறத்திரட்டில்
நகர் என்னும் பகுதியில் உள்ள |
உறுப்புக்கள்
ஆறு (6). | உறுப்புக்கள் ஆறு (6). |
பாடல்கள் – 29, 30, 31, 32, 33, 34 | பாடல்கள் – 29, 30, 31, 32, 33, 34 |
| |
ஆக, இந்த 13
பாடல்களும் பரிபாடல் திரட்டு எனத் | ஆக, இந்த 13
பாடல்களும் பரிபாடல் திரட்டு எனத் |
தனியாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. | தனியாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. |
| |
# 23.1 திருமால் | # 23.1 திருமால் |
வான் ஆர் எழிலி
மழை வளம் நந்த | வானத்தில் நிறைந்த
மேகங்களினால் மழை வளம் பெருக, |
தேன் ஆர் சிமைய
மலையின் இழிதந்து | தேனிறால்கள் நிறைந்த
மலையுச்சியையுடைய மலையிலிருந்து இறங்கிவந்து |
நான்மாடக்கூடல்
எதிர்கொள்ள ஆனா | மதுரையின் மக்கள்
எதிர்கொள்ள, இன்றியமையாத |
மருந்து ஆகும்
தீம் நீர் மலி துறை மேய | ஆருயிர் மருந்தாகிய
இனிய நீர் பெருக்கெடுத்தோடும் நீர்த்துறையில் பொருந்திய |
இருந்தையூர்
அமர்ந்த செல்வ நின் | இருந்தையூர் என்ற
ஊரில் எழுந்தருளியுள்ள செல்வனே! உன் |
திருந்து அடி
தலை உற பரவுதும் தொழுது | திருத்தமான திருவடிகளை
எம் தலை மேல் கொண்டு வாழ்த்துகிறோம் தொழுது; |
ஒருசார் அணி
மலர் வேங்கை மராஅ மகிழம் | இவ்வூரின் ஒரு
பக்கத்தே, அழகிய மலர்களையுடைய வேங்கை, வெண்கடம்பு, மகிழம், |
பிணி நெகிழ்
பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி | அரும்புகள்
கட்டவிழ்ந்த அசோகம் ஆகியவை உயர்ந்து ஒன்றுகூடி வளர்ந்து |
மணி நிறம்
கொண்ட மலை | பச்சை மணியின் நிறம்
கொண்ட மலை; |
ஒருசார் தண்
நறும் தாமரை பூவின் இடையிடை | மற்றொரு பக்கம்,
குளிர்ந்த நறிய தாமரைப்பூவின் இடையிடையே |
வண்ண வரி இதழ்
போதின் வாய் வண்டு ஆர்ப்ப | நிறமும் வரியும்
அமைந்த, அன்றலரும் இதழ்களையுடைய மலர்நிலைப் பூக்களின் வாயில், வண்டுகள்
மிகுந்தொலிக்க, |
விண்
வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் | வானம், தன்னிடம்
நிலைகொண்டு மெல்லென ஒளிதரும் விண்மீன்களைக் கொண்டு விரிந்திருப்பதைப் போன்று, |
கண்
வீற்றிருக்கும் கயம் | விரிந்துகிடக்கும்
இடத்தையுடையனவாயிருக்கும் நீர்நிலைகள்; |
ஒருசார் சாறு
கொள் ஓதத்து இசையொடு மாறு_உற்று | ஒன்னொரு பக்கம்,
கருப்பஞ்சாற்றினைப் பிழிந்தெடுக்கும் ஆரவாரத்தின் ஒலியுடன் மாறுபட்டு, |
உழவின் ஓதை
பயின்று அறிவு இழந்து | உழவர்கள் உழும்போது
எழும் ஆரவாரம் மிகுந்தொலித்து, கள்ளுண்டு அறிவு மயங்கித் |
திரிநரும்
ஆர்த்து நடுநரும் ஈண்டி | திரிந்துகொண்டிருப்போரும்,
குரவை பாடி நாற்றுநடுவோரும் எழுப்பும் ஒலியும் ஆகிய இவை ஒன்றாகச் சேர்ந்தொலிக்க |
திரு நய_தக்க
வயல் | திருமகளும் விரும்பி
வீற்றிருக்கும் வயல்கள்; |
ஒருசார்
அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி | வேறோர் பக்கம்,
அறநெறியும், வேதங்களும் சேர்ந்த தவ ஒழுக்கத்தில் முதிர்வெய்தி, |
விறல் புகழ்
நிற்ப விளங்கிய கேள்வி | மிகச் சிறந்த புகழ்
நிலைத்து நிற்க, உயர்வான கேள்வித் |
திறத்தின்
திரிவு இல்லா அந்தணர் ஈண்டி | திறத்தால் சிறிதும்
பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால் |
அறத்தின்
திரியா பதி | அறவொழுக்கத்தில்
பிறழாத நகரம்; |
ஆங்கு ஒருசார்
உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை | அந்த நகரத்தில்,
ஒருபக்கம், உண்ணக்குடியவை, பூசிக்கொள்பவை, அணிந்துகொள்பவை, உடுத்திக்கொள்பவை |
மண்ணுவ மணி
பொன் மலைய கடல் | மஞ்சனமாடுதற்குரியவை,
மணி, பொன், மலையில் கிடைப்பவை, கடலில் |
பண்ணியம் மாசு
அறு பயம் தரு காருக | கிடைக்கும் பொருள்கள்,
குற்றமற்ற வகையில் பயன்தரக்கூடிய நெசவுப்பொருள்கள் ஆகியவற்றை வணிகம் செய்யும் |
புண்ணிய வணிகர்
புனை மறுகு ஒருசார் | அறவுணர்வுடைய
வணிகர்கள் முறையாக அமைந்த தெருக்கள்; ஒருபக்கம் |
விளைவதை வினை
எவன் மென்_புல வன்_புல | விளையும் பொருளை
விளைத்துத் தரும் தொழிலையுடைய, நன்செய், புன்செய் ஆகிய நிலங்களில் |
களமர் உழவர்
கடி மறுகு பிறசார் | தொழில்செய்வோர்,
வேளாளர் ஆகியோர் வாழும் காவலையுடைய தெருக்கள்; வேறு பக்கங்களில் |
ஆங்க அனையவை
நல்ல நனி கூடும் இன்பம் | அவ்வாறே; இவ்வாறு
அனைவரும் வாழ்வதால் நல்லனவாக நன்றாகப் பொருந்துகின்ற இன்பம் பலவும் |
இயல் கொள
நண்ணியவை | இயல்பாகவே
பொருந்தியிருப்பன: |
வண்டு பொரேரென
எழ | கைவளையல்கள் திடீரென
மேலே உயர்வதால் |
வண்டு பொரேரென
எழும் | வண்டுகள் திடுமென மேலே
எழும் – |
கடி புகு வேரி
கதவம் இல் தோட்டி | மணம் பொருந்திய தேன்
நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்) |
கடிப்பு இகு
காதில் கனம் குழை தொடர | கடிப்பு என்னும்
அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழையை அணிவதற்காக – |
மிளிர் மின்
வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் | மிளிருகின்ற
ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும், |
ஊர் களிற்று
அன்ன செம்மலோரும் | தாம் ஏறிச் செல்லும்
களிற்றினைப் போன்ற தலைமைப் பண்புடைய ஆடவரும், |
வாய் இருள்
பனிச்சை வரி சிலை புருவத்து | இருள் வாய்ந்த
கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும் |
ஒளி இழை
ஒதுங்கிய ஒள் நுதலோரும் | ஒளியையுடைய தலை
அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும், |
புலத்தோடு
அளவிய புகழ் அணிந்தோரும் | அறிவோடு கூடிய புகழை
அணிகலனாகக் கொண்டோரும், |
நலத்தோடு அளவிய
நாண் அணிந்தோரும் | கற்புடைமையோடு
பொருந்திய நாணத்தை அணிகலனாகக் கொண்டோரும், |
விடையோடு இகலிய
விறல் நடையோரும் | எருதுவின் நடையுடன்
மாறுபட்ட வெற்றியையுடைய பீடுநடையினரும், |
நடை மடம் மேவிய
நாண் அணிந்தோரும் | ஒழுக்கமும் மடமும்
பொருந்திய நாணத்தினை அணிகலனாகக் கொண்டோரும், |
கடல் நிரை
திரையின் கரு நரையோரும் | கடலில் வரிசையாக வரும்
அலைகளைப் போன்று கருமையும் நரையும் கலந்த தலைமயிர் உடையோரும், |
சுடர் மதி
கதிர் என தூ நரையோரும் | ஒளிரும் நிலவுக் கதிர்
என்று சொல்லுமாறு முழுதும் வெளுத்த முடியினை உடையோரும், |
மடையர் குடையர்
புகையர் பூ ஏந்தி | அவிப்பொருள்
கொணர்ந்தவர், குடையை ஏந்தியவர், நறுமணப் புகையை உடையவர் ஆகியோர் பூக்களை ஏந்தி, |
இடை ஒழிவு
இன்றி அடியுறையார் ஈண்டி | இடையறாமல் திருவடியின்
கீழ் வந்து நெருக்கமாய்க் கூடி நிற்க, |
விளைந்து ஆர்
வினையின் விழு பயன் துய்க்கும் | விளைந்து முதிர்ந்த
நல்வினையின் சிறந்த பயனைத் துய்ப்பதற்குரிய |
துளங்கா விழு
சீர் துறக்கம் புரையும் | நிலைகெடாத உயர்ந்த
சிறப்பினையுடைய மேலுலகத்தைப் போல் விளங்கியது, |
இரு கேழ் உத்தி
அணிந்த எருத்தின் | கரியநிறப்
படப்புள்ளிகள் அழகுடன் விளங்கும் கழுத்தையுடைவனாகிய |
வரை கெழு
செல்வன் நகர் | மலை போன்ற
மார்பினையுடைய செல்வனாகிய ஆதிசேடனின் கோயில்; |
வண்டொடு
தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப | வண்டுகளும்
தும்பிகளும் வளமையான நரம்புக்கட்டினையுடைய யாழிசை போல் ஒலியெழுப்ப, |
விண்ட கட கரி
மேகமொடு அதிர | பிளிறுகின்ற மதயானை
மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க, |
தண்டா
அருவியொடு இரு முழவு ஆர்ப்ப | குறையாமல் வீழ்கின்ற
அருவியின் முழக்கத்துடன் பெரிய முழவுகள் முழங்க, |
அரி உண்ட
கண்ணாரொடு ஆடவர் கூடி | செவ்வரி பாய்ந்த
மையுண்ட கண்களையுடைய மகளிரோடு ஆடவர் கூடிநிற்க, |
புரிவுண்ட
பாடலொடு ஆடலும் தோன்ற | யாவராலும்
விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற, |
சூடு நறவொடு
தாமம் முகிழ் விரிய | சூடியுள்ள நறவத்தின்
மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர, |
சூடா நறவொடு
காமம் விரும்ப | சூடாத நறவமாகிய
கள்ளோடு காம இன்பம் விரும்புதற்குரியதாக, |
இனைய பிறவும்
இவை போல்வனவும் | இதனைப் போன்ற பிறவும்,
இன்னும் இவை போன்றனவும், |
அனையவை எல்லாம்
இயையும் புனை இழை | அப்படிப்பட்டவை
எல்லாம் தம்முள் பொருந்திநிற்கும், ஒப்பனை செய்யப்பட்ட அணிகலன்களையும் |
பூ முடி நாகர்
நகர் | பூமகளையும் தன்
திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்; |
மணி மருள் தகை
வகை நெறி செறி ஒலி பொலி | நீலமணி போன்ற அழகுடன்,
ஐவகையாகப் பிரிக்கப்பட்டு அறல்பட்டுச் செறிந்து தழைத்துப் பொலிவுற்று |
அவிர் நிமிர்
புகழ் கூந்தல் | ஒளிரும் எழுச்சியினைக்
கொண்ட புகழ்வாய்ந்த கூந்தலினையும், |
பிணி நெகிழ்
துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி | பிணிப்பு
நெகிழ்ச்சியாக உள்ளவாறு துளையிடப்பட்ட, தெளிந்த ஒளி விளங்கும் சிலம்பினையும்,
ஆய்ந்து அரிக்கப்பட்ட |
மது மகிழ்பு
அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் | மதுவுண்ட
மகிழ்ச்சியால் செவ்வரி படர்ந்த மலர்ந்த மகிழ்ச்சியான மையுண்ட கண்களையும்,
ஒளியுள்ள நெற்றியையும் உடையோர் |
மணி மயில்
தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது | நீலமணி போன்ற நிறமுள்ள
மயிலுடன் தொழிலாலும் அழகாலும் மாறுபட்டு மிக்க ஒளியுடன் விளங்குமாறு, வேறு |
இகழ் கடும் கடா
களிற்று அண்ணலவரோடு | இகழ்ச்சியும்,
கடுமையும் மிகுந்த மதத்தினையுடைய ஆண்யானை போன்ற தலைமைத் தன்மையுள்ள தத்தம்
கணவர்களோடு |
அணி மிக வந்து
இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க | அழகு மிகும்படி வந்து
வணங்கி வேண்ட, இருளாகிய துன்பம் அகல, பிணிகள் நீங்க, |
நல்லவை எல்லாம்
இயைதரும் தொல் சீர் | நல்லன அனைத்தும் தாமே
வந்து பொருந்தி நிற்கிறது – தொன்மையான புகழையுடைய |
வரை வாய்
தழுவிய கல் சேர் கிடக்கை | மலையைச் சார்ந்த
பாறைகள் சேர்ந்து கிடக்கின்ற |
குளவாய்
அமர்ந்தான் நகர் | குளவாய் என்னும் ஊரில்
எழுந்தருளியுள்ள ஆதிசேடனின் கோயில்; |
திகழ் ஒளி
முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு | ஒளி திகழும்
பாற்கடலைக் கடைந்த பொழுது, மந்திரமலையைப் |
திகழ்பு எழ
வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி | பொலிவுடன் மேலே எழ
எடுத்து, தன் அழகிய முதுகின்மேல் அதனை ஏற்றிவைத்து, |
மகர மறி கடல்
வைத்து நிறுத்து | மகரமீனையுடைய
அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து, |
புகழ் சால்
சிறப்பின் இரு திறத்தோர்க்கும் | புகழ்மிக்க
சிறப்பினையுடைய தேவரும் அசுரரும் ஆகிய இருதிறத்தோரும் |
அமுது கடைய இரு
வயின் நாண் ஆகி | அமுது கடைய இரு
பக்கமும் நாணாக இருந்து, |
மிகாஅ இரு வடம்
ஆழியான் வாங்க | எஞ்சிய பெரிய நாணை
திருமாலே பற்றி இழுக்க, |
உகாஅ வலியின்
ஒரு தோழம் காலம் | தமது அழியாத ஆற்றலாலே,
ஒரு தோழம் என்னும் கால அளவுக்கு |
அறாஅது
அணிந்தாரும் தாம் | அற்றுப்போகாமல் நாணாகி
கிடந்து அழகுசெய்தவரும் ஆதிசேடனே! |
மிகாஅ மறலிய மே
வலி எல்லாம் | மேருமலையை மோதித்தாக்க
மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம் |
புகாஅ எதிர்
பூண்டாரும் தாம் | அந்த மலையில் புகாதபடி
எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே! |
மணி புரை மா
மலை ஞாறிய ஞாலம் | நீலமணி போன்ற பெரிய
மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தையே |
அணி போல்
பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர் | அணிகலன்களைத்
தாங்குவதுபோல் எளிதாகத் தாங்கியிருப்பவரும் ஆதிசேடனே! பிறரைப் பணிதல் இல்லாத
புகழையுடைய, |
செல் விடை
பாகன் திரிபுரம் செற்று_உழி | விரைந்து செல்லும்
எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது |
கல் உயர்
சென்னி இமய வில் நாண் ஆகி | மலைகளிலேயே உயர்ந்த
சிகரத்தையுடைய இமயத்தை வில்லாகக் கொள்ள, அதற்கு நாண் ஆகி |
தொல் புகழ்
தந்தாரும் தாம் | தொன்மையான புகழினைத்
தந்தவரும் ஆதிசேடனே! |
அணங்கு உடை
அரும் தலை ஆயிரம் விரித்த | அச்சமூட்டக்குடிய அரிய
தலைகள் ஆயிரத்தை விரித்த |
கணம்_கொள்
சுற்றத்து அண்ணலை வணங்கி | திரளான சுற்றத்தைக்
கொண்ட அந்த அண்ணலை வணங்கி, |
நல் அடி ஏத்தி
நின் பரவுதும் | உனது நல்ல
திருவடிகளைப் போற்றி உன்னை வாழ்த்துகிறோம், |
எல்லேம்
பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே | யாம் எல்லாரும்
எப்பொழுதும் உன் திருவடியைப் பிரியாமல் இருக்க, எம் சுற்றத்தாரோடு ஒன்று
சேர்ந்து. |
| |
# 24.2 வையை | # 24.2 வையை |
மா நிலம்
தோன்றாமை மலி பெயல் தலைஇ | இந்தப் பெரிய நிலமே
கண்ணுக்குத் தெரியாமல் மறையும்படி, மிகுந்த மழையைப் பொழிந்து |
ஏம நீர் எழில்
வானம் இகுத்தரும் பொழுதினான் | உலகுக்குப் பாதுகாவலான
நீரினை அழகிய மேகங்கள் கீழிறக்கும் பொழுதில், |
நாக நீள் மணி
வரை நறு மலர் பல விரைஇ | நாக மரங்கள் உயர்ந்த
நீலமணி போன்ற மலையில் நறிய மலர்கள் பல உதிர்ந்து மணங்கமழ, |
காமரு வையை
கடுகின்றே கூடல் | கண்டார் விரும்பும்
வையை விரைந்து வந்தது மதுரையை நோக்கி; |
நீர் அணி
கொண்டன்று வையை என விரும்பி | புதுநீரால் அழகு
பெற்றது வையை என விரும்பி |
தார் அணி கொண்ட
உவகை தலைக்கூடி | தூசிப்படையினரின்
விரைவை மேற்கொண்டு உவகையெல்லாம் ஒன்றுசேர, |
ஊர் அணி கோலம்
ஒருவர் ஒருவரின் | ஊர்மக்கள் தத்தம்
இயற்கையழகிற்கேற்ப ஒவ்வொருவரும் |
சேர் அணி
கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு | ஒப்பனைகளால் அழகு
சேர்த்துக்கொண்டு, நல்ல நிறம் பொருந்திய பல்வேறு வகையான |
நீர் அணி கொண்ட
நிறை அணி அங்காடி | நீராட்டுக்குரிய
அழகுப்பொருள்கள் கொண்ட நிறைந்த நீரங்காடியில் |
ஏர் அணி
கொண்டார் இயல் | தங்கள் இயற்கை அழகை,
அங்காடிப்பொருள்களால் அழகு செய்துகொண்டனர்; |
கை புனை
தாரினர் கண்ணியர் | (பெண்கள்)திறம்படக்
கையால் புனையப்பட்ட மாலை சூடியவராய், (ஆண்கள்)தலை மாலை சூடியவராய், |
ஐ எனும் ஆவியர்
ஆடையர் | (பெண்கள்)வியத்தகுவகையில்
நறுமணப்புகை ஊட்டிக்கொண்டவராய், (ஆண்கள்)வியத்தகு ஆடை அணிந்தவராய், |
நெய் அணி
கூந்தலர் பித்தையர் | (பெண்கள்)நெய்
பூசப்பெற்ற கூந்தலையுடையவராய், (ஆண்கள்)குடுமியில் நெய் பூசியவராய், |
மெய் அணி யானை
மிசையராய் ஒய்யென | உடலில் ஒப்பனை
செய்யப்பட்ட யானையின் மேல் அமர்ந்தவராய் விரைவாக |
தங்கா
சிறப்பின் தளிர் இயலார் செல்ல | தாழாத சிறப்பினையுடைய
மாந்தளிர் போன்ற பெண்கள் செல்ல, |
பொங்கு புரவி
புடை_போவோரும் பொங்கு சீர் | (ஆண்கள்)செருக்குள்ள
குதிரைகளில் அந்த யானைகளின் பக்கத்தே போவோரும், மிக்க அழகுடைய |
வையமும் தேரும்
அமைப்போரும் எ வாயும் | வண்டிகளும் தேர்களும்
அமைத்துக்கொண்டு செல்வோரும், எந்தவிடத்தும் |
பொய்யாம் போய்
என்னா புடை கூட்டி போவநர் | காணாமற்போகோம் என்று
சொல்லி மற்றவரை அருகருகே அழைத்துக்கொண்டு செல்வர்; |
மெய்யாப்பு
மெய் ஆர மூடுவார் வையத்துக்கு | மகளிர் தம்
மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார், வண்டிக்குள் இருக்கும் பெண்கள் தம்
கணவருடன் |
ஊடுவார் ஊடல்
ஒழிப்பார் உணர்குவார் | ஊடல் கொள்வார், கணவர்
ஊடலை ஒழிப்பார், அதனை உணர்ந்து ஊடல் தீர்வார், |
ஆடுவார்
பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு | சிலர் ஆடுவார், சிலர்
பாடுவார், சிலர் ஆராவரிப்பார், சிலர் வாய்விட்டுச் சிரிப்பார், சிரித்துக்கொண்டே |
ஓடுவார் ஓடி
தளர்வார் போய் உற்றவரை | சிலர் ஓடுவார், ஓடித்
தளர்வார், அங்குமிங்கும் போய் தமக்குரியவரைத் |
தேடுவார்
ஊர்க்கு திரிவார் இலர் ஆகி | தேடுவார் – இவர்களுள்
ஊருக்குள் திரும்பிச் செல்வார் யாரும் இல்லையாகி, |
கற்றாரும்
கல்லாதவரும் கயவரும் | கற்றாரும்,
கல்லாதவரும், கயவரும், |
பெற்றாரும்
பெற்றான் பிழையாத பெண்டிரும் | மக்களைப் பெற்றாரும்,
தம்மை மணந்த கணவன்மார் சொல்தட்டாத பெண்டிரும், |
பொன் தேரான்
தானும் பொலம் புரிசை கூடலும் | பொன்னாலான தேரினையுடைய
பாண்டியன்தானும், பொன் மதிலைக் கொண்ட மதுரை மக்களும், |
முற்று இன்று
வையை துறை | முற்றுகையிட்டனர்
வையைத் துறையை; |
துறை ஆடும்
காதலர் தோள் புணை ஆக | வையைத்துறையில்
புனலாடும் காதலரின் தோள்களே தெப்பமாக இருக்க, |
மறை ஆடுவாரை
அறியார் மயங்கி | மறைவாக நீராடும்
பரத்தையரை அறியாதவராக அந்தக் கணவர் மயங்குமாறு செய்து, |
பிறை ஏர்
நுதலியர் எல்லாரும் தம் முன் | பிறையின் அழகினைப்
போன்ற நெற்றியையுடைய மகளிர் எல்லாரும் தமக்கு முன்னால் |
நிகழும்
நிகழ்ச்சி எம்_பால் என்று ஆங்கே | நிகழ்கின்ற
நீர்விளையாடல் நிகழ்ச்சிகள் எவ்விடத்தில் நிகழ்கின்றன என்று |
இகல் பல
செல்வம் விளைத்து அவண் கண்டு இப்பால் | ஊடலாகிய பல செல்வத்தை
உண்டாக்குவது அங்கு காணத்தக்கது – இவ்வாறு |
அகல் அல்கும்
வையை துறை | அகன்றதானது
சுருங்கிக்காணப்பட்டது – இந்த வையையின் நீர்த்துறை; |
காதலான்
மார்பின் கமழ் தார் புனல் வாங்கி | ஒரு காதற்பரத்தையின்
காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை நீர்
இழுத்துச் செல்ல, |
ஏதிலாள்
கூந்தலிடை கண்டு மற்று அது | அவனது இல்பரத்தை அதனை
எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக் கண்டு,
அதனைக் |
தா தா
என்றாளுக்கு தானே புறன் தந்து | கொடு, கொடு என்று
கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து |
வேய்தந்தது
என்னை விளைந்தமை மற்று அது | என் கூந்தலில்
சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு
விளைந்ததற்கு |
நோதலே செய்யேன்
நுணங்கு இழையாய் இ செவ்வி | வருந்தமாட்டேன்,
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில் |
போதல்
உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது | நீ இங்கு இருப்பாய் என
அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது |
ஓஓ பெரிதும்
வியப்பு | ஓஓ இது பெரிதும்
வியப்பிற்குரியது” எனக் கூறி, |
கய தக்க பூ
பெய்த காம கிழமை | “தலைவனே! மென்மை
தங்கிய இந்தப் பூமாலையை நீ நீரிலே விட்டாய், அது காம நுகர்ச்சிக்குரிய |
நய_தகு நல்லாளை
கூடுமா கூடும் | விரும்பத்தகுந்த
அழகியையே சரியாகச் சென்று சேர்ந்தது; |
முயக்குக்கு
செவ்வி முலையும் முயக்கத்து | தழுவுதற்குச் சரியாக
அமைந்த அவள் முலைகளும் அவற்றைத் தழுவிச்செல்லும் |
நீரும் அவட்கு
துணை கண்ணி நீர் விட்டோய் | நீரும் அவளுக்குத்
துணையாக அமைந்தன; மாலையை நீரில் நழுவ விட்டவனே! |
நீயும் அவட்கு
துணை | நீயும் அவளுக்குத்
துணையாவாய்” என்றாள். |
பணிவு இல் உயர்
சிறப்பின் பஞ்சவன் கூடல் | பிறரைப் பணிதல் இல்லாத
உயர்ந்த சிறப்பினையுடைய பாண்டியனின் மதுரையில் வாழும் |
மணி எழில் மா
மேனி முத்த முறுவல் | மணி போன்ற அழகினையும்,
மாநிற மேனியையும், முத்துப்போன்ற பற்களையும் |
அணி பவள செம்
வாய் அறம் காவல் பெண்டிர் | அழகிய பவளம் போன்ற
சிவந்த வாயினையும் கொண்டு, கற்புடைமையைக் காத்துக்கொள்ளும் பெண்டிர் |
மணி அணிந்த தம்
உரிமை_மைந்தரோடு ஆடி | மணிகளால் செய்யப்பட்ட
அணிகலன்களை அணிந்த தம் கணவரோடு நீராட, |
தணிவு இன்று
வையை புனல் | குறையாமற் செல்கிறது
வையையின் புதுநீர்; |
புனல் ஊடுபோவது
ஓர் பூ மாலை கொண்டை | புனலோடு போகின்ற ஒரு
பூமாலை கொண்டையில் |
எனல் ஊழ் வகை
எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட | ஊழ்வகையால் வந்து
அடைந்தது என்று அதனை ஏற்றுக்கொண்டு, |
புனல் ஊடு நாடு
அறிய பூ மாலை அப்பி | நீராடியவரின் ஊரறிய
அந்தப் பூமாலையை அணிந்துகொண்டாள் என்ற செய்தி, |
நினைவாரை
நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் | நினைத்துப்பார்ப்பவரின்
நெஞ்சிற்குத் துன்பம் விளைவிக்கும்; கொதிப்புடன், |
கூடாமுன் ஊடல்
கொடிய திறம் கூடினால் | தலைவன் தலைவியிடம்
வந்து சேர்வதற்கு முன்னரே இந்தக் கொடுந்தன்மை தலைவியை வந்து சேர்ந்தால், |
ஊடாளோ ஊர்த்து
அலர் வந்து ஊர்ந்து | ஊடமாட்டாளோ? ஊரிலுள்ள
அலர் பேச்சு ஊர்ந்துவந்து அவளைச் சேர, |
என ஆங்கு | என்று கூறும்படி
புனலாட்டு நிகழ, |
ஈ பாய் அடு நறா
கொண்டது இ யாறு என | ஈக்கள் மொய்க்கும்
சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று |
பார்ப்பார்
ஒழிந்தார் படிவு | பார்ப்பனர்
தவிர்த்தார் நீராடுதலை; |
மைந்தர் மகளிர்
மண விரை தூவிற்று என்று | ஆடவரும் பெண்டிரும்
பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று |
அந்தணர் தோயலர்
ஆறு | அந்தணர்கள்
நீராடவில்லை ஆற்றில்; |
வையை தேம் மேவ
வழுவழுப்பு_உற்று என | வையையின் நீர் தேன்
கலந்து மழுமழுவென்றானது என்று |
ஐயர்
வாய்பூசுறார் ஆறு | ஐயர்
வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்; |
விரைபு இரை
விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் | விரைவான இரைச்சலுடன்
நறுமணமிக்க துறைகளின் கரைகள் அழியும்படியாக இழிந்து ஊர்ந்து ஊர்ந்து செல்லும்
புனல்; |
கரையொடு கடல்
இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை | கரையோரத்திலும்,
கடலில் கலக்குமிடத்திலும் மலையிலிருந்து கடல்வரை வரிசை வரிசையாக நீரானது நுரையை
எழுப்பும்; |
நுரையுடன்
மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் | மிக்க நுரையுடன்
மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்; அலைகள் புரளும்
கடலுக்குள் |
புகும்
அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை | சென்று புகும் வரை
மிகுந்து மேலும் மேலும் வந்து ஓசையுடன் கரைகளாகிய சிறைக்குள் அடங்காதவாய்
வெள்ளம் மிகும்; |
வரை பல புரை
உயர் கயிறு அணி பயில் தொழில் | பல மலைகளைப் போல
உயர்ந்த, கழுத்தில் கயிறிட்ட, நன்கு தொழில் பயின்ற, |
மணி அணி யானை
மிசை மைந்தரும் மடவாரும் | மணிகள் கட்டப்பட்ட
யானைகளின் மேல் வந்த மைந்தரும் மகளிரும், |
நிரை_நிரை
குழீஇயினர் உடன்சென்று | வரிசை வரிசையாக வந்து
கூடினர்; யாவரும் ஒன்று சேர்ந்து |
குரு மணி யானை
இயல் தேர் பொருநன் | நிறமிக்க மணிகள்
பூட்டிய யானைகளையும், அழகிய தேர்களையும் உடைய பாண்டியனின் |
திருமருத
முன்துறை முற்றம் குறுகி | திருமருத முன்துறையை
அணுக, |
தெரி மருதம்
பாடுப பிணி கொள் யாழ் பாணர் | தெரிந்தெடுத்த
மருதப்பண்ணினை, கேட்டோரைப் பிணிக்கும் யாழினையுடைய பாணர்கள் பாடினர், |
பாடி_பாடி பாய்
புனல் | மக்களும் தாமும்
பாடிப்பாடி புனலில் பாய்ந்து |
ஆடி_ஆடி
அருளியவர் | ஆடியாடி இன்புற்றனர்;
தமக்கு அருளியவரான கணவருடன் |
ஊடி_ஊடி
உணர்த்த புகன்று | மீண்டும் மீண்டும்
ஊடிக்கொண்டிருக்க, கணவர்கள் அவர்களைத் தெளிவித்து விருப்பத்துடன் |
கூடி_கூடி
மகிழ்பு மகிழ்பு | கூடிக்கூடி
மகிழ்ந்துகொண்டே இருப்பர்; |
தேடி_தேடி
சிதைபு சிதைபு | காணாமற்போனவர்களை
தேடித் தேடி மனம் மிகவும் சிதைந்திருப்பர்; |
சூடி_சூடி
தொழுது தொழுது | மணமிக்க மலர்களை
வெகுவாகச் சூடிக்கொண்டு வையையை மீண்டும் மீண்டும் தொழுவர்; |
மழுபொடு நின்ற
மலி புனல் வையை | சேற்றோடு கலங்கிய
மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில் |
விழு_தகை
நல்லாரும் மைந்தரும் ஆடி | சிறந்த அழகினையுடைய
மகளிரும் மைந்தரும் ஆடுதலால் |
இமிழ்வது
போன்றது இ நீர் குணக்கு சான்றீர் | உமிழ்ந்தது போலானது
இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே! |
முழுவதும்
மிச்சிலா உண்டு | முழுவதும்
எச்சிலாகும்படி பருகி; |
சாந்தும் கமழ்
தாரும் கோதையும் சுண்ணமும் | நீராடியோர்
அணிந்திருந்த சந்தனமும், மணங்கமழும் கழுத்து மாலைகளும், தலைமாலைகளும்,
நறுமணப்பொடிகளும், |
கூந்தலும்
பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் | மகளிர்
கூந்தலிலிருந்தும், மைந்தரின் குடுமியிலிருந்தும் நழுவி வீழ்ந்தன; அத்தகை
பூக்களின் நிறத்தைத் தவிர, |
சிறிதானும்
நீர் நிறம் | சிறிதளவும் நீரின்
நிறம் |
தான் தோன்றாது
இ வையை ஆறு | மட்டும் தோன்றாது இந்த
வையை ஆற்றில்; |
மழை நீர் அறு
குளத்து வாய்பூசி ஆடும் | மழைநீரானது வற்றிப்போன
குளங்களில் நிறைந்து, மக்கள் வாய்கொப்பளிக்கவும், நீராடவும் ஆகும், |
கழு நீர மஞ்சன
குங்கும கலங்கல் | கழுவப்படும்
தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து
கலங்கலாகி |
வழி நீர் விழு
நீர அன்று வையை | ஆற்றில் வழிகின்ற நீர்
தூயநீராக இல்லை வையையில்; |
வெரு வரு கொல்
யானை வீங்கு தோள் மாறன் | பார்த்தால் அச்சம்
வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்தெழுந்த தோள்களையும் உடைய
பாண்டியன் |
உரு கெழு
கூடலவரொடு வையை | அழகு பொருந்திய தன்
மதுரை மாந்தருடனே, வையையில் |
வரு புனல் ஆடிய
தன்மை பொருவும்_கால் | வருகின்ற நீரில்
புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால் |
இரு முந்நீர்
வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு | பெரிய கடலால்
சூழப்பட்ட நிலவுலகத்தில் தேடினால் என்ன பயன்? அதுதான் இந்த ஊருக்கு |
ஒரு நிலையும்
ஆற்ற இயையா அரு மரபின் | ஒரு வகையாலும்
முற்றிலும் பொருந்துவதில்லை; அரிய மரபின் |
அந்தர வான்
யாற்று ஆயிரம் கண்ணினான் | அந்தரத்திலே உள்ள
ஆகாயகங்கையில் ஆயிரம் கண்ணையுடையவனாகிய |
இந்திரன் ஆடும்
தகைத்து | இந்திரன் நீராடும்
தன்மையையுடையது. |