Select Page
# 1 திருமால் – பாடியவர், பண் அமைத்தவர் பெயர் தெரியவில்லை.# 1 திருமால்
  
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலைஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும்
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவரசினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல் கவித்துநிற்க,
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிதிருமகள் வீற்றிருக்கும் அகன்ற மார்பினைக்கொண்டும், குற்றமில்லாத வெண்மையான சங்கினைப் போன்ற மேனியுடனும்,
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்தியமிக உயர்ந்த மூங்கில் கோலின் உச்சியில் அழகிய யானைக்கொடியை உயர்த்தியபடியும்,
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை                      5கூர்மை செய்யப்பட்ட வளைந்த கலப்பைப் படையினைக் கொண்டும், ஒற்றைக் குழையை உடைய பலதேவனாகவும் விளங்குகிறாய்!
எரி மலர் சினைஇய கண்ணை பூவைஎரிகின்ற நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின்
விரி மலர் புரையும் மேனியை மேனிமலர்ந்த மலரைப் போன்ற மேனியினன்! அந்த மேனியில்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்திருமகள் நிறைந்து உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரைதெரிந்தெடுத்துத் தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்! நீல மலையைச் சூழ்ந்து
எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை                   10தீப்பிழம்பு சுற்றினாற் போன்ர பொன்னாற் செய்த ஆடையை அணிந்திருப்பவன்!
சேவல் அம் கொடியோய் நின் வல_வயின் நிறுத்தும்கருடச்சேவல் வரையப்பட்ட அழகிய கொடியினையுடையவனே! உன் வலப்பக்கத்தில் இருப்போர்கள்
ஏவல் உழந்தமை கூறும்ஓதுகின்ற உன் பெருமைகளைக் கூறுகின்றன,
நா வல் அந்தணர் அரு மறை பொருளேநாவன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்!
 (மூலம் சிதைந்துள்ளது – பொருள் தெளிவாக இல்லை)
இணை பிரி அணி துணி பணி எரி புரையஇணை பிரி அணி துணி பணி எரி புரைய
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்                       15விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகுநெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணிகடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்நெறி செறி வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில்                20எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில்
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்குதுணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணிமலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசைமணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை              25உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணைஉதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை
  
பொருவேம் என்றவர் மதம் தப கடந்துஉன்னோடு போரிடுவோம் என்று வந்த அவுணரின் வலிமை கெடும்படி அவரை வென்று,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்                                30போரில் மேன்மையடைந்த குற்றமற்ற அண்ணலே!
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்காமன், சாமன் ஆகிய இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே!
தெருள நின் வரவு அறிதல்விளக்கமாக உன் பிறப்பினை அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதேமயக்கம் தீர்ந்த தெளிவினையுடைய முனிவர்க்கும் அரிதேயாகும்!
அன்ன மரபின் அனையோய் நின்னைஅப்படிப்பட்ட மரபினைச் சேர்ந்த அத்தகையவனாகிய உன்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது                 35இன்ன தன்மையுடையவன் என்று சொல்வது எமக்கு எப்படி எளிதாகும்?
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்_வயின்உன் தகுதிகளின் அருமையை நன்றாக அறிந்திருப்பினும், உன் மேலிட்ட ஆர்வம்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவைமிக அதிகமாக இருப்பதால் வலிமையில்லாதனவாக நாம் இங்கே கூறுபவை
மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்சிறுமையுடையன் என்று வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும்திருமகளாகிய மறுவினை மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும்.
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும்                           40ஆற்றல் மிகுந்த மேன்மையான சிறப்பினைக் கொண்ட அந்தணர்கள் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீஅறமும், உன் அன்பர்களுக்கு அருள்கின்ற திருவருளும் நீ!
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கைதிறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீமறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும்அழகிய இடமான வானத்தில் அழகான நிலவொளியாய்த் திகழும்
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ                                        45திங்களும், சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய சூரியனும் நீ!
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல்ஐந்து தலைகளை உருவாக்கிக்கொண்டு, அச்சத்தைத்தரும் வெல்லமுடியாத திறமையும்
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீவலிமையும் உடைய ஒருவனாகிய ஈசனும், ஊழிக்காலத்தீயும் நீ!
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிநலம் என்று கூறப்படுவன அனைத்தும் பொருந்திய குற்றமற்ற அறிவைத் தரும்
புலமும் பூவனும் நாற்றமும் நீவேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும்                              50வலமாக உயர்ந்தெழும் மேகமும், மேலிடமாகிய விசும்பும்,
நிலனும் நீடிய இமயமும் நீஇந்த நிலவுலகும், அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ!
அதனால்அதனால்
இன்னோர் அனையை இனையையால் எனஇப்படிப்பட்டவரைப் போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக
அன்னோர் யாம் இவண் காணாமையின்அப்படிப்பட்டவரை நாம் இங்கு காணாததால்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய                                55பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்,
மன் உயிர் முதல்வனை ஆதலின்உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தேஉனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று –
நின் ஒக்கும் புகழ் நிழலவைஉன்னைப் போன்றே ஒளிவீசும் புகழினைக் கொண்டுள்ளாய்!
பொன் ஒக்கும் உடையவைபொன்னைப் போன்ற ஒளியுள்ள ஆடையினைக் கொண்டுள்ளாய்!
புள்ளின் கொடியவை புரி வளையினவை                          60கருடக்கொடியைக் கொண்டுள்ளாய்! வலப்பக்கம் முறுக்குண்ட சங்கினைக் கொண்டுள்ளாய்!
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவைஇகழும் பகைவரைச் சென்று அழித்த வலிமை மிக்க சக்கரத்தைக் கொண்டுள்ளாய்!
மண்_உறு மணி பாய் உருவினவைதூய்மை செய்யப்பட்ட நீலமணியின் ஒளி பாயும் உருவத்தைக் கொண்டுள்ளாய்!
எண் இறந்த புகழவை எழில் மார்பினவைஎண்ணிலடங்காப் புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்!
ஆங்குஅவ்விடத்தில்
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை                            65உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம்
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக எனயாமும் பொருந்தி ஒன்றுபட்டு ‘நாளும் சிறப்புற்றிருக்க’ என்று
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்இன்பம் நிறைந்த உள்ளத்தினராய்த் தொழுது போற்றுவோம்,
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதேவேதங்களை உரைத்தருளிய புலவனே! உன் காலடி நிழலைத் தொழுது –
  
# 2 திருமால் – பாடியவர்: கீரந்தையார்# 2 திருமால்
பண் அமைத்தவர் : நன்னாகனார்      பண் : பண்ணுப்பாலையாழ் 
  
தொன் முறை இயற்கையின் மதியொ ————தொன்றுதொட்டு வரும் இயற்கையின்படி ——- 
——————– ——————– —–    மரபிற்று ஆக——————– ——————– —–    மரபாகக் கொண்டு
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்படபசிய பொன்மயமான தேவருலகமும், இந்த மண்ணுலகமும் பாழாய்ப்போக,
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்லவானமும் இல்லாதுபோய், ஊழிக்காலம் இவ்வாறு தோன்றியும் ஒடுங்கியும் செல்ல,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி                         5அதன்பின், கரு வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும்பொருள்களை இயக்கும் காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும்,
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடுசிவந்த தீ தோன்றி ஒளிவிட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்றுகுளிர்ந்த மழை பெய்யத்தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள்
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு                               10பின்பு தொன்மையில் வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்மீண்டும் தம் சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்உள்ளீடாகிய பெரிய நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும்,
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலியகுற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை                               15குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்
கேழல் திகழ்வர கோலமொடு பெயரியபன்றியின் சிறப்பான கோலத்தின் பெயரைக் கொண்ட
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்குவராக கற்பம் என்னும் இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால், உனது பழைமைக்குள்ளான
ஊழி யாவரும் உணராஊழிகள் யாராலும் அறியப்படாதன;
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுதுசக்கரப்படையை உடைய முதல்வனே! உன்னைப் போற்றி வணங்குகிறோம்.
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன்                   20நீதான், சங்கின் நிறத்தைப் போன்ற வெண்மையான நிறமுடைய பலதேவனுக்கு, அவனுடைய
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும்இளையவன் என்று சொல்வோர்க்கு இளையவன் ஆகி இருப்பதுவும்,
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்குஎதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்தகுற்றமற்ற கொள்கையினையுடைய ஞானிகள் ஆராய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்                                25தீமை இல்லாத கேள்வியாகிய வேதத்தினுள் அவற்றின் நடுவான
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலைஇந்த நிலையிலான தெரிந்துள்ள உண்மைகளை ஆராய்ந்துபார்த்தால், இந்த நிலையெல்லாம்
நின் நிலை தோன்றும் நின் தொல் நிலை சிறப்பேஉன்னிடத்துத் தோன்றும் உன் தொன்மையான நிலையின் சிறப்பேயாகும்;
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்திலபலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன
நித்தில மதாணி அ தகு மதி மறு                                     30நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்எழுகின்ற அலைகளால் கழுவித் தூய்மையாக்கப்பட்ட, ஒளிவிடும் புள்ளிகளை நடுவிலே கொண்ட,
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்புகூரிய வெண்மையான கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து
புள்ளி நிலனும் புரைபடல் அரிது எனஒரு புள்ளி அளவு நிலம்கூட வருந்துவதில்லை என்று
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று                           35எண்ணிப்பார்த்து உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும்.
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்துவலிமைகெடாத உள்ளத்தோடு, சினங்கொண்டு, ஒருங்கே ஒன்று சேர்ந்து,
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்இடிக்கு எதிராய் முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின்
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபுகொடிகள் அற்று விழவும், செவிகள் செவிடாகிப் போகவும்,
முடிகள் அதிர படிநிலை தளரமணிமுடிகள் அதிரவும், அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு
நனி முரல் வளை முடி அழிபு இழிபு                          40மிகுந்து ஒலிக்கின்ற சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து,
தலை இறுபு தாரொடு புரளதலை அற்றனவாய் மாலையோடு புரளும்வகையில்,
நிலை தொலைபு வேர் தூர் மடல்தமது நிலை கெட்டு, வேரும் தூரும் மடலும்
குருகு பறியா நீள் இரும் பனை மிசைகுருத்தும் பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல்பல பதினாயிரம் குலைகள் நிலத்தில் உதிர்வது போல்
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி                                   45ஏதும் தத்தம் உடலின் மேல் நில்லாவண்ணம் ஒருமுறையிலேயே கொய்யப்பெற்று,
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபுஒருசேர, உருண்டு, பிளந்து, நொறுங்குண்டு, உருண்டோடிச் சிதறிக்
அளறு சொரிபு நிலம் சோரகுருதிச் சேற்றைச் சொரிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்க,
சேரார் இன் உயிர் செகுக்கும்உன்னைச் சேராதவராகிய அவுணரின் இனிய உயிரை அழிக்கும் வல்லமை படைத்தது,
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையேபோரில் பகைவரைக் கொல்லும் குரிசிலே! நீ ஏந்திய சக்கராயுதப்படை;
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே                             50பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது அந்த சக்கரப்படை;
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனேபொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் கொழுந்துதான் அதன் நிறம்;
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணிஉன்னுடைய பிரகாசிக்கும் ஒளி, சிறப்புடைய நீலத் திருமணியினுடையது;
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்கண்களோ, புகழ் பெற்ற தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்ததாகும்;
வாய்மை வயங்கிய வைகல் சிறந்தவாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும்                             55பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்; எல்லாருக்கும்
சாயல் நினது வான் நிறை என்னும்அருளும் உனது அருளோ நிறைந்த மேகம்; என்று கூறுகின்றது
நா வல் அந்தணர் அரு மறை பொருளேநாவன்மை கொண்ட அந்தணர்களின் வேதத்தின் பொருள்;
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்இங்குக் கூறிய அந்தப் பொருள்களையும், வேறு பிற பொருள்களையும் போன்றிருக்கின்றாய்; இவைகளுக்கிடையிலும்
எ வயினோயும் நீயேவேறு எந்த இடத்திலும் இருக்கிறாய் நீயே!
செ வாய் உவணத்து உயர் கொடியோயே                           60சிவந்த வாயையுடைய கருடனை உயர்த்திய கொடியில் வைத்திருப்பவனே!
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்வேதங்களில் தேர்ந்த ஆசானின் மந்திரமொழிகளும்,
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்படிப்படியாக உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டிபுகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும்
நின் உருபுடன் உண்டி                                             65முறையே, உன் உருவமும், உன் உணவும்,
பிறர் உடம்படுவாராபிறரும் ஏற்றுக்கொள்ளும்படியான
நின்னொடு புரையஉனது பெருமைக்குப் பொருந்தும்படி
அந்தணர் காணும் வரவுஅந்தணர்கள் போற்றிக் காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும்.
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தரதேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூவா மரபும் ஓவா நோன்மையும்                                      70மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும்,
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின்இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன; 
————— மரபினோய் நின் அடி————— மரபினை உடையவனே! உனது திருவடியினை,
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்தலை நிலத்தில் பட வணங்கினோம், பலமுறை யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்மனக்கலக்கம் இல்லாத நெஞ்சினேமாய், போற்றினோம், வாழ்த்தினோம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்                                75சுற்றத்தார் பலரோடும் புகழ்ந்து வேண்டுகிறோம் –
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவேபொய்யை மெய்யெனக்கொள்ளும் மயக்கத்தை அறியாமல் போவதாக எம் அறிவு என்று-
  
# 3 திருமால் – பாடியோர் ; கடுவன் இளவெயினனார்# 3 திருமால்
பண் அமைத்தவர் : பெட்டாகனார்             பண் ; பண்ணுப்பாலையாழ் 
  
மாஅயோயே மாஅயோயேதிருமாலே! திருமாலே!
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடிமீண்டும் பிறப்பதை ஒழிக்கின்ற மாசற்ற சிவந்த திருவடிகளையும்,
மணி திகழ் உருபின் மாஅயோயேநீல மணி போன்ற திருமேனியையும் உடைய திருமாலே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்நெருப்பு, காற்று, வானம், நிலம், நீர் ஆகிய ஐந்தும்
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்                                5ஞாயிறும், திங்களும், வேள்வி முதல்வனும், ஏனைய கோள்களான புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐவரும்,
திதியின் சிறாரும் விதியின் மக்களும்திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்,
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்மாசற்ற வசுக்கள் எட்டுப்பேரும், பதினொரு கபிலர் எனப்படும் உருத்திரர்களும்,
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும், 
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம்                             10மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
மாயா வாய்மொழி உரைதர வலந்துஅழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக, 
வாய்மொழி ஓடை மலர்ந்தவேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறைநீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்.
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்                  15அழகு விளங்கும் பூண்களைக் கொண்ட தேவரிடத்திலிருந்து கவர்ந்துகொள்ளப்பட்டு வந்த அமிழ்தத்தால்
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினைதன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனின்
நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின்சேவலை மிக ஓங்கி உயர்ந்த கொடியில் கொண்டுள்ளோய்! உன்
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள்சிவந்த அடிகளைத் தொழாதவரும் இருக்கின்றாரோ? அந்தச் சேவடிக்குள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை                           20கீழேயுள்ள ஏழு உலகங்களும் ஒரு பாதத்தை வைத்திருக்கிறாய்!
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்உலகத்தைத் தீய்த்து அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும்
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழுஊழிக் காலத்துக் கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை அச்சம்பொருந்திய
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்பன்றியாகிக் கொம்பால் உழுது மேலே எடுத்து வந்தவனே என்றும்,
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன                                25பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின்
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும்சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே என்றும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்துஇந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின்
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர்நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,
பாடும் வகையே எம் பாடல் தாம் அஅது அவரின் முன்னோர் பாடும் வகையே, எமது பாடல் தாமும் அப்படிப்
பாடுவார் பாடும் வகை                                             30பாடுவார் பாடும் வகையே!
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்கூந்தல்மா என்ற குதிரை வடிவத்தோடு வந்த கேசி என்பவனின்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கைஎரிகின்ற சினத்தைக் கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்;
நகை அச்சாக நல் அமிர்து கலந்தஅவுணர்களின் மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கைநடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை;
இரு கை மாஅல்                                            35இரு கைகளைக் கொண்ட மாலே!
மு கை முனிவ நால் கை அண்ணல்மூன்று கைகளைக் கொண்ட முனிவனே! நான்கு கைகளைக் கொண்ட அண்ணலே!
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள்ஐந்து கைகளைக் கொண்ட கணபதியே! ஆறு கைகளைக் கொண்ட நெடுவேளே!
எழு கையாள எண் கை ஏந்தல்ஏழு கைகளைக் கொண்டவனே! எட்டுக் கைகளைக் கொண்ட ஏந்தலே!
ஒன்பதிற்று தட கை மன் பேராளஒன்பது பெரிய கைகளைக் கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே!
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல்                               40பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ளஆயிரமாக விரித்த கைகளைக் கொண்ட மாயத்தில் வல்ல மள்ளனே!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வபதினாயிரம் கைகளைக் கொண்ட வேத முதல்வனே!
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்நூறாயிரம் கைகளைக் கொண்ட அறுவகை நெறிகளையும் அறிந்த கடவுளே!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்இவை அனைத்தும் மட்டும் அல்ல, பலவாக அடுக்கப்பட்ட ஆம்பல்களின் எண்ணிக்கையில் கைகளைக் கொண்டுள்ளாய்,
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை                    45இந்த அளவிளானது என்ற எண் வரம்பு அறியாத உடல்களைக் கொண்டுள்ளவனே!
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோஉனக்கு ஒப்பாக யாரையாவது நினைத்தால் அது நீ அல்லாமல் வேறு யாரையேனும் அறிவாயோ?
முன்னை மரபின் முதுமொழி முதல்வஅநாதிக் காலமாய் வரும் மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே!
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்உனக்காக விரிந்து அகன்ற ஆகமங்கள் அனைத்திலும்
வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம்ஆற்றலாலும், மனத்தாலும், உணர்வினாலும், இவை எல்லாம் சேர்ந்தும்
வனப்பு வரம்பு அறியா மரபினோயே                            50உன் வனப்பின் எல்லையைக் காணமுடியாதபடியான தன்மையினை உடையவனே!
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர்அழகிய குளிர்ச்சியோடு விளங்கும் ஒளியாகிய பதினாறு கலைகளாகிய இனிய கதிர்களையுடைய
பிறை வளர் நிறை மதி உண்டிபிறைகளாகி வளர்கின்ற நிறைத்திங்களான உணவினையும்,
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீஅழகிய மணிகளால் செய்த பசிய பூண்களையும் உடைய தேவர்களுக்கு முதல்வன் நீ!
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடிமண் செறிந்த உலகத்தை நீ அளந்த பொழுது மனம் மாறுபட்டு, மயங்கி இடம் பெயர்ந்து ஓடி,
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்            55உனக்கு அஞ்சிக் கடலுக்குள் தம்மை ஒளித்துக்கொண்ட, கட்டவிழ்ந்து மலர்ந்த குளிர்ந்த மாலையினையுடைய
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீஅப்படிப்பட்டவர் உட்பட எல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ!
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்அதனால், பகைவர் இவை, நண்பர் இவர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கேவேறுபாடு உண்டோ, உன் இயல்பினை அறிவோர்க்கு?
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்டஉயர்த்தப்பட்ட ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேடனாகிய பாம்பினைத் தன் வாயில் கொண்ட
சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல்                          60உன் ஊர்தியான கருடச் சேவலும், ‘சிவந்த கண்களையுடைய திருமாலே,
ஓ என கிளக்கும் கால_முதல்வனைஎனைக் காத்தருள்க’ என்று ‘ஓ’-வென்று கதறுகின்ற, காலங்களைக் கடந்து நிற்கும் முதல்வனே!
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்சாமவேதம் இப்படிப்பட்டவன் என்று கூறுவதால் அப்படி இருத்தலை நன்கு அறிந்தோம்;
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீதீயினுள் சுடுகின்ற கடுமை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ!
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீகற்களுக்குள் மாணிக்கக் கல் நீ! சொற்களுள் வாய்மை நீ!
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ                                65அறநெறிகளில் அன்பாக இருப்பவன் நீ! மறத்தினில் ஆற்றலாக இருப்பவன் நீ!
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீவேதங்களுள் மந்திரச் சொல் நீ! பூதங்களுள் முதன்மையான வானமும் நீ!
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீவெம்மையான சுடராகிய ஞாயிற்றின் ஒளியும் நீ! குளிர் திங்களின் குளிர்ச்சியும் நீ!
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்எல்லாப்பொருளும் நீ! அப் பொருள்களின் உட்பொருளாக இருப்பவனும் நீ! எனவே,
உறையும் உறைவதும் இலையே உண்மையும்நீ தங்குமிடம் என்பதுவும், உன்னிடத்துத் தங்குவது என்பதுவும் இல்லை! உனக்கு உள்ள தன்மையாக,
மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை                             70மறதியுடையார் உன்னைச் சிறப்பித்துக் கூறியவை பொய்யுரைகள், நீ அப்படிப்பட்டவன்!
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில்முதலிலும், இடையிலும், இறுதியிலும், முறையே படைப்பு, காத்தல், அழித்தல் என்ற தொழில்களைச் செய்யும்பொருட்டு
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையேநீ பிறவாத பிறப்பு இல்லை, உன்னைப் பிறப்பிக்கும்படி செய்தோரும் இல்லை;
பறவா பூவை பூவினோயேபறக்காத பூவாகிய காயாம்பூவின் நிறத்தவனே!
அருள் குடை ஆக அறம் கோல் ஆகஉன் திருவருளே வெண்கொற்றக்குடையாக, அறமே செங்கோலாக,
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும்                          75வேறு இரண்டாவதான குடைநிழல் படாதபடி, மூன்று கூறுகளான இருபத்தியொரு உலகங்களும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோஉனது ஒரு குடை நிழலின் கீழ் ஆக்கிய இனிய காவலினை உடையவன் நீ!
பாழ் என கால் என பாகு என ஒன்று எனபாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும், ஒன்றாவதான ஓசையும்,
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து எனஇரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும், ஐந்தாவதான நாற்றமும்,
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு எனஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை                            80நால்வகை ஊழியின்போதும், இந்த எண்களால் கூறப்படும் பெருமையினையுடையவனே!
செம் கண் காரி கரும் கண் வெள்ளைசிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே!
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல்பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!
இட வல குட அல கோவல காவலஆய்ச்சியர்க்கு இடமும் வலமும் ஆடியவனே! குடக் கூத்தாடுபவனே! கலப்பைப் படை உள்ளவனே! கோவலனே காவலனே!
காணா மரப நீயா நினைவகாணப்படாத இயல்பினனே! அன்பரின் நீங்காத நினைவிலுள்ளவனே!
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ                                        85அழியாத நிலைபேறுடையவனே! உலகினை ஆளும் மன்னவனே!
தொல் இயல் புலவ நல் யாழ் பாணதொன்மை இயல்புகளை அறிந்தவனே! நல்ல முறையில் யாழிசைக்கும் பாணனே!
மாலை செல்வ தோலா கோட்டதுளசி மாலை அணிந்த செல்வனே! தோல்வியினை அறியாத சங்கினை உடையவனே!
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ணபொன்னாற் செய்த ஆடையினையும், வலம்புரிச் சங்கைப் போன்ற நிறத்தையும் கொண்டவனே!
பருதி வலவ பொரு திறல் மல்லசக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே!
திருவின் கணவ பெரு விறல் மள்ள                            90திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!
மா நிலம் இயலா முதல் முறை அமையத்துஇந்தப் பெரிய உலகம் இயங்காத ஆதி ஊழியின் காலத்தின்
நாம வெள்ளத்து நடுவண் தோன்றியஅச்சந்தரும் அந்த வெள்ளத்து நடுவில் தோன்றிய,
வாய்மொழி மகனொடு மலர்ந்தவேதத்தை உரைக்கும் மகனாகிய பிரம்மனைக் கொண்டு மலர்ந்த,
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலேஉந்தித் தாமரைப் பொகுட்டை உடையவனே! உன் சக்கரப்படையே உலகுக்கு நிழல் ஆவது.
  
# 4 திருமால் – பாடியவர் : கடுவன் இளவெயினனார்# 4 திருமால்
பண் அமைத்தவர் : பெட்டாகனார்             பண் : பண்ணுப்பாலையாழ் 
  
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம்ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கமாகிய இருளை முற்றிலும் நீக்கி, நான்கு குணங்களால் உள்ளத்தைத் தூயதாக்கி, தம்மைத்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்திதியானமாகிய ஒரே நெறியில் செலுத்திய உன் அன்பர்கள் உன்னைத் தொழுது போற்றி
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்குஉன்னுடைய புகழை விரித்துக் கூறினர், சொல்லப்போனால் அவை உனக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும்பெருமகிழ்ச்சி தருவதாகாது என்பதனை நன்கு அறிவோம். ஆயினும்
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப                          5நீ சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற
திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர்அழகிய நீலமணி, அலைகளின் ஓசை அடங்கிய கடல்,
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய்பெய்யப்போகும் மழை கொண்டிருக்கும் கரிய முதிர்ந்த மேகம், ஆகிய மூன்றையும் போன்றது உன் கரிய மேனி;
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையைஅந்தக் கரிய மேனியோடு மாறுபட்ட பொன்னிற ஆடையை உடையவனே!
நோனார் உயிரொடு முரணிய நேமியைபகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே!
செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ                            10சினம் தீர்ந்த சிவந்த கண்ணையுடைய செல்வனே! பிரகலாதன் உன்னைப் புகழ,
புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்பொறாமைத் தீயால் புகைந்துபோன நெஞ்சினோடும், புலர்ந்த சந்தனத்தோடும்,
பிருங்கலாதன் பல_பல பிணி படஇரணியன் அந்தப் பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு
வலந்து_உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்துகட்டிப்போட்ட பொழுது, மிகுந்த துன்பமெய்தியதால் ஊக்கம் குன்றிய நடுக்கத்துடன்,
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்அந்த விரிந்த புகழையுடையவன், இவ்வாறு செய்பவன் தந்தை என்பதால்
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா                      15அவ்வாறு இகழ்பவனை இகழாத நெஞ்சினனாய் இருக்க, நீ இகழ்ந்து
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கிஉன்னுடன் நன்றாக நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்உன்னிடம் ஒன்றாத உறவுகொண்டவனின் பெரிய மலை போன்ற மார்பில்
படிமதம் சாம்ப ஒதுங்கிபடிந்திருந்த செருக்கு அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்பதுன்பத்தைக் காட்டும் தீயசகுனங்களுடன் இடியைப் போன்ற முரசு ஒலிக்க,
வெடி படா ஒடி தூண் தடியொடு                                       20வெடிபட்டு ஒடிந்துபோன தூணின் துண்டங்களோடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினைஇரணியனின் தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து விழும்படி அவனது மார்பினை வகிர்த்ந நகத்தினை உடையவனே!
புருவத்து கரு வல் கந்தரத்தால்முற்காலத்தில், உன்னுடைய கருமையான, வலிய கழுத்தால்
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்தாங்கிப் பிடித்து இந்த உலகத்தைக் கடலுக்குள்ளிருந்து வெளிக்கொணர்ந்து நீ நிலைநிறுத்தியது, உலகின் நடுவில்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்ஓங்கி உயர்ந்திருக்கும், பலரும் புகழும் மேருமலையைப் போன்ற சிறப்பினை உடையது
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள                          25அனைத்தையும் அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில் இருக்கின்றன;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உளஅனைவர்க்கும் அருளும் உன் குளிர்நோக்கும், மென்மையும் திங்களிடத்தில் இருக்கின்றன;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உளஅனைவர்க்கும் அருள்சுரக்கும் இயல்பும், கொடைத்தன்மையும் மழையினிடத்தில் இருக்கின்றன;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உளஅனைவரையும் காக்கும் இயல்பும், பொறுமையும் பூமியினிடத்தில் இருக்கின்றன;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உளஉன் மணமும் ஒளியும் பூவில் உள்ளன;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள                                30உனது வெளிப்பாடும், பரப்பும் கடலினிடத்தில் உள்ளன;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உளஉன் உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உளஉன் பிறப்பும், மறைதலும் காற்றினில் உள்ளன;
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்அதனால், இங்கிருப்பவையும், நடுவிலிருப்பவையும், அங்கிருப்பவையும், பிறவும்
ஏமம் ஆர்த்த நின் பிரிந்துதமக்குப் பாதுகாவலாக அமைந்த உன்னிடத்திலிருந்து பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்                                    35உன்னையே சார்ந்திருப்பன எல்லாமே!
சேவல் ஓங்கு உயர் கொடியோயேகருடச் சேவல் வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியினை உடையவனே!
சேவல் ஓங்கு உயர் கொடிகருடச் சேவல் வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியுடன்,
நின் ஒன்று உயர் கொடி பனைஉனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி பனைக்கொடி,
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்உனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி கலப்பைக்கொடி,
நின் ஒன்று உயர் கொடி யானை                                       40உனக்குரியதாக சிறந்துயர்ந்த கொடி யானைக்கொடி,
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்றுஉனக்கே சிறப்பாய் உயர்ந்த கொடியை மற்றக் கொடிகள் ஒத்தல் இல்லை,
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்,
அவன் மடி மேல் வலந்தது பாம்புஅவனது வயிற்றின் மேல் பட்டியும் பாம்பு,
பாம்பு தொடி பாம்பு முடி மேலனஅந்தப் பாம்பே அவனது தோள்வளையுமாகும், அந்தப் பாம்புகளே அவன் தலையின் திருமுடி மேல் உள்ளன,
பாம்பு பூண் பாம்பு தலை மேலது                                    45பாம்புகளே அவன் அணிந்திருக்கும் பூண்கள் எல்லாம், பாம்புதான் அவன் தலையின் மேல் அணியும் சூட்டு என்ற அணியும்,
பாம்பு சிறை தலையனபாம்புகளே அவன் சிறகுகளில் அணியப்படுவன,
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவைபாம்பின் பகையின் செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன்
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்புகொடியில் இருக்கும் கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே!
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்,
கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்                      50கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையும்
உள்_வழி உடையை இல்_வழி இலையேஉள்ளவரிடம் நீயும் அக் குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை இல்லாதவனாகவே இருக்கிறாய்,
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்உன்னைப் போற்றாதவரின் உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்குமுறையே மாற்றுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும்பகைவரும் இலர், நண்பரும் இலர் என்ற கூற்றில்
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே                             55முரண்பாடு இல்லை, அதனை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால்;
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையேஅன்பர்கள் மனத்திற்கொண்ட வடிவத்தைத்தவிர உனக்கென வடிவு வேறு இல்லை;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனிஎப்பொருளையும் மறைத்துக்கொள்ளும் இருளின் இருப்பிடம் போன்ற அழகிய நீலமணி போன்ற திருமேனியில்
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியைசிரித்து மலர்ந்த துளசியின் நறுமணம் கமழும் கொத்தாலான தலைமாலையை உடையவனே!
பொன்னின் தோன்றிய புனை மறு மார்பபொன்னைப் போல் தோன்றும் புகழ்பெற்ற மறுவையுடைய மார்பனே!
நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை                                60உன்னுடைய உந்தியில் தோன்றிய வரிசையான இதழ்களையுடைய தாமரையைப்
அன்ன நாட்டத்து அளப்ப அரியவைபோன்ற கண்களுடன் அளப்பதற்கு அரியவனாய் இருக்கிறாய்!
நின்னின் சிறந்த நின் தாள் இணையவைஉன்னிலும் சிறந்தவை உனது இரு தாளிரண்டும்!
நின்னில் சிறந்த நிறை கடவுளவைஉன்னிடத்தில் சிறந்த நிறைவான கடவுள்பண்பை உடையவன்!
அன்னோர் அல்லா வேறும் உள அவைஅத்தன்மை அல்லாத வேறு பண்புகளும் உன்னிடத்தில் உள்ளன; அவை
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை                         65உன்னையே ஒத்த உணர்வதர்கு அரிய அந்தணரின் அருமறைப் பொருளாக உள்ளன.
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினைதீக் கொழுந்தைப் போன்ற தளிரையும், மிகுதியான நிழலைத் தரும் பல கிளைகளையும் கொண்ட
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும்ஆலமரத்தின் கீழும், கடம்பமரத்திலும், நல்ல ஆற்றிடைக்குறையிலும்,
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும்காற்றின் போக்கைத் தடுத்து நிறுத்தும் உயந்த நிலையினையுடைய குன்றங்களிலும், பிற இடங்களிலும்,
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய்அந்தந்த இடங்களில் பொருந்திய வேறுவேறு பெயர்களையுடையவனே!
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர்                           70எந்த இடத்திலும் இருப்பவன் நீயே! உன் அன்பர்களின்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயேதொழுத கைகளின் நிலையில் அமர்ந்தவனும் நீயே!
அவரவர் ஏவலாளனும் நீயேஅவரவரின் வேண்டுதலைச் செய்யும் ஏவலாளனும் நீயே!
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயேஅவரவர் செய்கின்ற அறம் முதலிய பொருள்களுக்குக் காவலும் நீயே!
  
# 5 செவ்வேள் – பாடியவர் : கடுவன் இளவெயினனார்# 5 செவ்வேள்
பண் அமைத்தவர் : கண்ணாகனார்      பண் : பண்ணுப்பாலையாழ் 
  
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்குபரந்த பெரிய குளிர்ந்த கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கிமிகவும் உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து,
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்துநெருப்பின் கொழுந்து போல் ஆரவாரிக்குபடி உன் வேலைச் சுழற்றி விட்டெறிந்து,
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்துபிறரைத் துன்புறுத்தும் இயல்பினையுடைய அசைந்தாடும் சூரபத்மனாகிய மா மரத்தைனை அடியோடு சாய்த்து
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய                    5வெற்றியையுடைய புண்ணிய மக்கள், பாவ மக்கள் என்ற பெயர்களுள் புண்ணிய மக்கள் என்ற பெயரைப் பெற்ற
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகைபிற உயிர்களைக் கொன்று உண்பதற்கு அஞ்சாத கொடிய செயல்களையுடைய கொல்லக்கூடிய தகுதிபடைத்த
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல்மாயம் செய்வதில் வல்ல அவுணரின் குலம் அழியும்படியாகக் கெடுத்த வேலினால்,
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடைஇந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்துகிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை                                10அந்தமலையினில் வழிகளை அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே!
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள்ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியைஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே!
சால்வ தலைவ என பேஎ விழவினுள்சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே                                     15வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன;
அவை வாயும் அல்ல பொய்யும் அல்லஅவை உண்மையானவையும் அல்ல; பொய்யானவையும் அல்ல;
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின்உன்னையே வரம்பாகக் கொண்டது இந்த உலகம், எனவே
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவைசிறந்து விளங்குபவனே! இப் பண்புகள் உன் உண்மைப் புகழுக்குக் குறைவுள்ளதாதலால் அந்தச் சிறப்பினின்றும் நீ நீங்கிவிடுவாய்!
சிறப்பினுள் உயர்பு ஆகலும்சிறப்புகளில் உயர்ந்தவர் ஆகுவதும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும்                                        20பிறப்பினில் இழிந்த நிலை அடைதலும் உடைய
ஏனோர் நின் வலத்தினதேஉன்னை அல்லாத பிற உயிர்கள் உன் ஆணைக்குட்பட்டவை;
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவபிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த,
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்துவேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
நாகம் நாணா மலை வில் ஆகவாசுகி என்ற பாம்பினை நாணாகக் கொண்டு, மேரு மலையே வில்லாக,
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய                 25பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால் வேகும்படியும்,
மாதிரம் அழல எய்து அமரர் வேள்விதிக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின்
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள்உமாதேவியோடு புணர்ந்த காமநுகர்ச்சிக்கான திருமண நாளில்
அமையா புணர்ச்சி அமைய நெற்றிகைவிட முடியாத புணர்ச்சியை அடைய, நெற்றியில்
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு                         30இமைக்காத கண்ணையுடைய சிவபெருமானிடம், இந்திரன் ஒரு வரத்தைப் பெற்று
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன்‘உன் புணர்ச்சியால் உண்டான கருவை அழிப்பாயாக’ என்று வேண்ட, அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்ததுவிரிந்த கதிர்களையுடைய மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு, தான் கொடுத்த வரம்
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின்செய்வதற்கு அரியது என்று எண்ணி அதனை மாற்றாதவனாய், அவன் வாய்மையைப் போற்றுபவனாதலால்
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவுநெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தைப்
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள                                35பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக,
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கைஇந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்துஎதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
வசித்ததை கண்டம் ஆக மாதவர்பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்
சாலார் தானே தரிக்க என அவர் அவி                          40அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக,
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவிஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக்
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில்குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை,
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழியகடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்                             45அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
நிறை_வயின் வழாஅது நின் சூலினரேதம் கற்பில் குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்;
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனைஉயர்ந்து ஓங்கிய இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில்
பயந்தோர் என்ப பதுமத்து பாயல்உன்னைப் பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே                            50பெரிய புகழினை உடைய முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன்கிட்டுவதற்கு அரிய, பிறரும் விரும்பும் சிறப்பினை உடைய தேவர் கோமான்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து எனதீயை உமிழும் வச்சிரப்படையைக் கொண்டு, பகைமை கொண்டு வந்து வெட்டினானாக,
அறு வேறு துணியும் அறுவர் ஆகிமுன்னர் ஆறு வேறு துண்டுகளும் ஆறு வடிவம் ஆகி,
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்பின்னர் ஒரே உருவம் உடையவனானாய்! ஓங்குகின்ற வெற்றியை உடைய குமாரதெய்வமே!
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய                              55வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடையபோரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்துதுன்பமில்லாத தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்துவளப்பமான கோழிச் சேவலைக் கொடியாகக் கொடுத்தான், வானுலகத்தில்
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துவளம் பொருந்திய செல்வத்தையுடைய இந்திரன் தன் உடலிலிருந்து பிரித்து
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன்                            60ஒளிதிகழும் புள்ளிகளையுடைய தோகையால் அழகு பெற்ற மயிலாகக் கொடுத்தான்,
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்துதிருந்திய செங்கோலையுடைய இயமன் தன் உடம்பிலிருந்து பிரித்து
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்தஅவ்வாறு, அவர்களும், பிறரும் மகிழ்ந்து உனக்குப் படைகளாக அளித்த,
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும்வெள்ளாட்டுக் குட்டியும், மயிலும், கோழிச் சேவலும்,
பொறி வரி சாபமும் மரனும் வாளும்                          65இலச்சினையிடப்பட்ட வரிகளையுடைய வில்லும், தோமரமும், வாளும்,
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்செறிவான இலையைக் கொண்ட ஈட்டியும், கோடரியும், குந்தாலியும்
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும்சுடுகின்ற கதிர்களையுடைய மழுப்படையும், மாலையும், மணிகளும்,
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டுவேறுவேறு உருவினையுடைய இந்தப் பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்குற்றமற்ற வானுலகில் வாழும் தேவர் கோமானாகிய இந்திரனின் –
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்                       70தாமரைப் பூவின் புள்ளிகளையுடைய பொகுட்டுடனான இளம்பருவத்திலேயே – புகழின் எல்லையைக் கடந்தவனே!
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதைஉன் குணமாகிய அருளைத் தம்மிடம் ஏற்றிருப்பாராய், உன் அறத்தைத் தாமும் மேற்கொண்டோராய் இல்லாதவரும்
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதைநிலைபெற்ற நல்ல குணங்களையுடையோராய், பெரும் தவத்தினை மேற்கொண்டோராய், உன்னை வணங்குபவராய் இல்லாதவரும்
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும்கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்,
சேரா அறத்து சீர் இலோரும்அறநெறியில் சேராத சீர்மைகெட்டோரும்,
அழி தவ படிவத்து அயரியோரும்                                      75அழிந்துபோன தவ வடிவோடு உன்னை மறந்துபோனவர்களும்,
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்;
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர்உன் திருவடி நிழலை மேற்கூறியவரை அன்றி பிறர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவைசேர்வாராதலால், நாம் வேண்டிக்கேட்டுக்கொள்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால்பொருளும், பொன்னும், போகமும் அல்ல, உன்னிடம்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்                         80அருளும், அன்பும் அறனும் ஆகிய மூன்றனையுமே!
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயேஉருளாகப் பூக்கும் கொத்துக்களையுடைய கடம்பின் செழுமையான மாலையை அணிந்தவனே!