சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
அன்னாய் வாழி
வேண்டு அன்னை ஒள் நுதல் | ‘தாயே வாழ்க, (நான்
கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும் |
ஒலி மென்
கூந்தல் என் தோழி மேனி | செழித்து வளர்ந்த
மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள |
விறல் இழை
நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் | தனிச்சிறப்புக் கொண்ட
நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி) |
அகலுள் ஆங்கண்
அறியுநர் வினாயும் | அகன்ற
உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும், |
பரவியும்
தொழுதும் விரவு மலர் தூயும் 5 | (கடவுளரை)வாயால்
வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும், 5 |
வேறு பல்
உருவின் கடவுள் பேணி | வேறுபட்ட பல
வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி, |
நறையும்
விரையும் ஓச்சியும் அலவுற்று | நறுமணப்புகையும்
சந்தனமும் படைத்தும், மனம்கலங்கி, |
எய்யா மையலை
நீயும் வருந்துதி | குறையாத
மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்; |
நல் கவின்
தொலையவும் நறும் தோள் நெகிழவும் | (அவளுடைய)நல்ல அழகு
கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும், |
புள் பிறர்
அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் 10 | வளை (கழலுதலைப்)பிறர்
அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும், 10 |
உள் கரந்து
உறையும் உய்யா அரும் படர் | (தன்)மனத்துள்ளே
மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை, |
செப்பல்
வன்மையின் செறித்து யான் கடவலின் | (என்னுடைய)பேச்சுச்
சாதுரியத்தால் (அவளை)நெருக்கி விசாரிக்கையில் – |
முத்தினும்
மணியினும் பொன்னினும் அத்துணை | “முத்தாலும்,
மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த) |
நேர்வரும்
குரைய கலம் கெடின் புணரும் | நேர்த்தியாக அமைந்த
நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்; |
சால்பும்
வியப்பும் இயல்பும் குன்றின் 15 | (ஆனால்
தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும்
சீர்குலைந்தால், 15 |
மாசு அற கழீஇ
வயங்கு புகழ் நிறுத்தல் | கறை போகும்படி கழுவி
பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல், |
ஆசு அறு காட்சி
ஐயர்க்கும் அ நிலை | குற்றமற்ற அறிவையுடைய
பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை |
எளிய என்னார்
தொன் மருங்கு அறிஞர் | எளிய காரியம் என்னார்
தொன்மையான நூலை அறிந்தோர்; |
மாதரும் மடனும்
ஓராங்கு தணப்ப | (என்
பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக, |
நெடும் தேர்
எந்தை அரும் கடி நீவி 20 | நெடிய தேரையுடைய என்
தந்தையின் அரிய காவலை(யும்) மீறி, 20 |
இருவேம் ஆய்ந்த
மன்றல் இது என | தலைவனும் யானுமே
ஆய்ந்துசெய்த மணம் இது என்று |
நாம்
அறிவுறாலின் பழியும் உண்டோ | (நாம் என்
தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை) |
ஆற்றின் வாரார்
ஆயினும் ஆற்ற | (பெற்றோர் நம்)வழிக்கு
வரவில்லை என்றாலும் (இறக்குவரை)பொறுத்திருக்க, |
ஏனை உலகத்தும்
இயைவதால் நமக்கு என | மறு பிறப்பிலாவது
(எங்கள் மணம்)பொருந்திவரட்டும் நமக்கு” என்று கூறி, |
மான் அமர்
நோக்கம் கலங்கி கையற்று 25 | மான் போல் அமர்ந்த
பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி,
ஒன்றும் செய்ய இயலாமல், 25 |
ஆனா சிறுமையள்
இவளும் தேம்பும் | அளவற்ற
சிறுமையுணர்வால் இவளும் மெலிந்துபோனாள் – |
இகல் மீ கடவும்
இரு பெரு வேந்தர் | பகைமை மேற்கொண்டு
(ஒருவரோடொருவர்)மோத விரையும் இரு பெரிய அரசர்களின் |
வினை இடை நின்ற
சான்றோர் போல | செயல்களுக்கு நடுவே
நின்ற அறிவுடையோரைப் போல, |
இரு பேர்
அச்சமோடு யானும் ஆற்றலேன் | (உனக்கும் இவள்
வருத்தத்திற்கும் அஞ்சும்)இரண்டு பெரிய அச்சத்தாலே நானும் வருந்துகின்றேன்; |
கொடுப்பின்
நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் 30 | (நாமாக)மணந்தால் நன்கு
அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்,30 |
வண்ணமும்
துணையும் பொரீஇ எண்ணாது | (தலைவன்)இனத்தாரையும்
கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல், |
எமியேம்
துணிந்த ஏமம் சால் அரு வினை | நாங்களாக(வே)
துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல் |
நிகழ்ந்த
வண்ணம் நீ நனி உணர | (முன்பு)நடந்தவிதத்தை
நீ முழுதும் நன்றாகப் புரிந்துகொள்ளும்படியாக |
செப்பல்
ஆன்றிசின் சினவாதீமோ | சொல்லுதல்
மேற்கொண்டேன், (அது கேட்டுக்)கோபிக்கவேண்டாம் – |
நெல் கொள் நெடு
வெதிர்க்கு அணந்த யானை 35 | “நெல்லைக் கொண்ட நீண்ட
மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை, 35 |
முத்து ஆர்
மருப்பின் இறங்கு கை கடுப்ப | (தளர்வுற்று)முத்து
நிறைந்த (தன்)தந்தத்தின்மேல் இறக்கிப் போட்ட துதிக்கையைப் போன்ற, |
துய் தலை
வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் | மெல்லிய பஞ்சை
நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை |
நல் கோள் சிறு
தினை படு புள் ஓப்பி | நன்றாக(த்
தன்னிடத்தில்) கொள்ளுதலையுடைய சிறுதினை(ப்பயிர்களின்மேல்) வீழ்கின்ற கிளிகளை
ஓட்டி(விட்டு) |
எல் பட
வருதியர் என நீ விடுத்தலின் | பொழுது சாய
(நீர்)வருவீராக” என்று கூறி நீ (போக)விடுகையினால், |
கலி கெழு மரம்
மிசை சேணோன் இழைத்த 40 | (நெற்றுக்களின்)ஆரவாரம்
பொருந்தின மரத்தின் உச்சியில் உயரத்திலிருப்பவன் செய்த 40 |
புலி அஞ்சு
இதணம் ஏறி அவண | புலிகள் அஞ்சும்
பரணில் ஏறி, அவ்விடத்திலிருக்கும், |
சாரல் சூரல்
தகை பெற வலந்த | மலைச்சரிவில்(விளைந்த)
பிரம்பினால் அழகுபெறப் பின்னிய, |
தழலும்
தட்டையும் குளிரும் பிறவும் | கவணும், தட்டையும்,
குளிரும், ஏனையவும்(ஆகிய) |
கிளி கடி மரபின
ஊழூழ் வாங்கி | கிளிகளை விரட்டும்
இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து, |
உரவு கதிர்
தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து 45 | (சூரியனின்)கடுமையான
ஒளிக்கற்றைகள் சுட்டுப்பொசுக்கும் வெம்மை அனல்விடும் நேரத்தில் – 45 |
விசும்பு ஆடு
பறவை வீழ் பதி படர | வானத்தில் அலையும்
பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக, |
நிறை இரும்
பௌவம் குறைபட முகந்துகொண்டு | நிறைந்த கரிய கடல்
குறைவுறும்படி முகந்துகொண்டு, |
அகல் இரு
வானத்து வீசு வளி கலாவலின் | அகன்ற கரிய
ஆகாயத்திடத்தில் வீசுகின்ற காற்று ஒன்றுசேர்வதினால், |
முரசு
அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு | முரசு முழங்கினாற்
போன்ற இனிய குரலையுடைய இடியோடு, |
நிரை செலல்
நிவப்பின் கொண்மூ மயங்கி 50 | வரிசையாகச்
செல்லுதலையுடைய உயர்ச்சியைக்கொண்ட மேகம் கலங்கி, 50 |
இன் இசை
முரசின் சுடர் பூண் சேஎய் | இனிய ஓசை
(உடைய)முரசினையும், ஒளிவிடும் அணிகலன்(களையும் உடைய) முருகன் |
ஒன்னார்க்கு
ஏந்திய இலங்கு இலை எஃகின் | (தன்)பகைவர்க்காகத்
தூக்கிய ஒளிர்கின்ற இலை (போன்ற அமைப்புகொண்ட)வேல் போல, |
மின் மயங்கு
கருவிய கல் மிசை பொழிந்தென | மின்னல்கள்
நெருக்கமாய் மின்னும் தொகுதிகளையுடையவாய் மலை மேல் பெய்தவாக, |
அண்ணல் நெடும்
கோட்டு இழிதரு தெண் நீர் | தலைவனின் உயரமான மலைச்
சிகரத்திலிருந்து கீழிறங்கும் தெளிந்த நீரையுடைய — |
அவிர் துகில்
புரையும் அம் வெள் அருவி 55 | ஒளிவிடும்
(வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் — அழகிய வெண்ணிற அருவியில், 55 |
தவிர்வு இல்
வேட்கையேம் தண்டாது ஆடி | தணிதல் இல்லாத
விருப்பமுடையவராய் இடைவிடாமல் விளையாடி, |
பளிங்கு சொரிவு
அன்ன பாய் சுனை குடைவுழி | பளிங்கை (க்
கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது, |
நளி படு
சிலம்பில் பாயம் பாடி | அடர்த்தி மிக்க
மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி, |
பொன் எறி
மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் | தங்கத்தில்
பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம் |
பின் இரும்
கூந்தல் பிழிவனம் துவரி 60 | பின்னப்பட்ட கரிய
கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி, 60 |
உள்ளகம் சிவந்த
கண்ணேம் வள் இதழ் | உட்புறமெல்லாம் சிவந்த
கண்ணையுடையோமாய் – பெரிய இதழையுடைய |
ஒண் செம்
காந்தள் ஆம்பல் அனிச்சம் | ஒளிரும் சிவந்த
கோடற்பூ, ஆம்பல், அனிச்சம் |
தண் கயம் குவளை
குறிஞ்சி வெட்சி | குளிர்ந்த
குளத்து(ப்பூத்த) செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி, வெட்சி, |
செங்கொடுவேரி
தேமா மணிச்சிகை | செங்கொடுவேரி, தேமா,
செம்மணிப்பூ, |
உரிது நாறு
அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் 65 | (தனக்கே)உரித்தாக
மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ, 65 |
எரி புரை
எறுழம் சுள்ளி கூவிரம் | நெருப்பை ஒத்த
எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ, |
வடவனம் வாகை
வான் பூ குடசம் | வடவனம், வாகை,
வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ, |
எருவை செருவிளை
மணி பூ கருவிளை | பஞ்சாய்க்கோரை,
வெண்காக்கணம்பூ, (நீல)மணி(போலும்) பூக்களையுடைய கருவிளம்பூ, |
பயினி வானி பல்
இணர் குரவம் | பயினி, வானி, பல
இதழ்களையுடைய குரவம்பூ, |
பசும்பிடி
வகுளம் பல் இணர் காயா 70 | பச்சிலைப்பூ,
மகிழம்பூ, பல கொத்துக்களையுடைய காயாம்பூ, 70 |
விரி மலர்
ஆவிரை வேரல் சூரல் | விரிந்த பூக்களையுடைய
ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, |
குரீஇப்பூளை
குறுநறுங்கண்ணி | சிறுபூளை, குன்றிப்பூ, |
குருகிலை
மருதம் விரி பூ கோங்கம் | முருக்கிலை, மருதம்,
விரித்த பூக்களையுடைய கோங்கம்பூ, |
போங்கம் திலகம்
தேம் கமழ் பாதிரி | கோங்கப்பூ, மஞ்சாடி
மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ, |
செருந்தி
அதிரல் பெரும் தண் சண்பகம் 75 | செருந்திப்பூ,
புனலிப்பூ, பெரிய குளிர்ந்த சண்பகப்பூ,
75 |
கரந்தை குளவி
கடி கமழ் கலி மா | நாறுகரந்தை,
காட்டுமல்லிகைப்பூ, விரை கமழும் தழைத்த மாம்பூ, |
தில்லை பாலை
கல் இவர் முல்லை | தில்லப்பூ, பாலை,
கல்லிலே படர்ந்த முல்லைப்பூ, |
குல்லை பிடவம்
சிறுமாரோடம் | கஞ்சங்குல்லைப்பூ,
பிடவம், செங்கருங்காலிப்பூ, |
வாழை வள்ளி
நீள் நறு நெய்தல் | வாழைப்பூ, வள்ளிப்பூ,
நீண்ட நறிய நெய்தற்பூ, |
தாழை தளவம்
முள் தாள் தாமரை 80 | தெங்கின் பாளை,
செம்முல்லைப்பூ, முட்களைக்கொண்ட தண்டையுடைய தாமரைப்பூ, 80 |
ஞாழல் மௌவல்
நறும் தண் கொகுடி | ஞாழல், மௌவல், நறிய
குளிர்ந்த கொகுடிப்பூ, |
சேடல் செம்மல்
சிறுசெங்குரலி | பவழக்கான்
மல்லிகைப்பூ, சாதிப்பூ, கருந்தாமக்கொடிப்பூ, |
கோடல் கைதை
கொங்கு முதிர் நறு வழை | வெண்கோடற்பூ, தாழம்பூ,
தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ, |
காஞ்சி மணி
குலை கள் கமழ் நெய்தல் | காஞ்சிப்பூ,
நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேன் மணக்கும் கருங்குவளை, |
பாங்கர் மராஅம்
பல் பூ தணக்கம் 85 | ஓமை, மரவம்பூ, பல
பூக்களையுடைய தணக்கம்பூ,
85 |
ஈங்கை இலவம்
தூங்கு இணர் கொன்றை | இண்டம்பூ, இலவம்பூ,
தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ, |
அடும்பு அமர்
ஆத்தி நெடும் கொடி அவரை | அடும்பம்பூ, பொருந்தின
ஆத்திப்பூ, நீண்ட கொடியையுடைய அவரைப்பூ, |
பகன்றை பலாசம்
பல் பூ பிண்டி | பகன்றை, பலாசம், பல
பூக்களையுடைய அசோகப்பூ, |
வஞ்சி
பித்திகம் சிந்துவாரம் | வஞ்சி, பிச்சிப்பூ,
கருநொச்சிப்பூ, |
தும்பை துழாஅய்
சுடர் பூ தோன்றி 90 | தும்பை,
திருத்துழாய்ப்பூ, விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ, 90 |
நந்தி நறவம்
நறும் புன்னாகம் | நந்தியாவட்டை,
நறைக்கொடி, நறிய புன்னாகம், |
பாரம் பீரம்
பைம் குருக்கத்தி | பருத்திப்பூ,
பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ |
ஆரம் காழ்வை
கடி இரும் புன்னை | சந்தனப்பூ, அகிற்பூ,
மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ, |
நரந்தம் நாகம்
நல்லிருள்நாறி | நாரத்தம்பூ, நாகப்பூ,
இருவாட்சிப்பூ, |
மா இரும்
குருந்தும் வேங்கையும் பிறவும் 95 | கரிய பெரிய
குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும், 95 |
அரக்கு
விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் | சாதிலிங்கத்தைப்
பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன், |
மால் அங்கு
உடையம் மலிவனம் மறுகி | (எதைப்பறிப்பது
என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து), |
வான் கண் கழீஇய
அகல் அறை குவைஇ | மழை
(பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து, |
புள் ஆர் இயத்த
விலங்கு மலை சிலம்பின் | பறவைகளின் மிகுந்த
ஓசைகளையுடைய, (ஒன்றற்கொன்று)குறுக்கிட்டுக்கிடக்கின்ற மலைச்சரிவில், |
வள் உயிர் தெள்
விளி இடையிடை பயிற்றி 100 | பெருத்த ஓசையுடன்
தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி, 100 |
கிள்ளை
ஓப்பியும் கிளை இதழ் பறியா | கிளியை ஓட்டியும், புற
இதழ்களைக் களைந்து, |
பை விரி
அல்குல் கொய் தழை தைஇ | பாம்பின் படத்தைப் போல
பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி, |
பல் வேறு
உருவின் வனப்பு அமை கோதை எம் | பற்பல வேறுபட்ட
நிறத்தையுடைய அழகமைந்த மாலைகளை, எம்முடைய |
மெல் இரு
முச்சி கவின் பெற கட்டி | மெல்லிய கரிய
கொண்டைமுடியில் அழகுபெறச் சுற்றி, |
எரி அவிர்
உருவின் அம் குழை செயலை 105 | நெருப்பு ஒளிர்வது
(போன்ற)தோற்றமுள்ள அழகிய தளிரையுடைய அசோக மரத்தின் 105 |
தாது படு தண்
நிழல் இருந்தனம் ஆக | மகரந்தம் உதிர்ந்து
கிடக்கும் குளிர்ந்த நிழலில் இருந்தேமாக – |
எண்ணெய் நீவிய
சுரி வளர் நறும் காழ் | எண்ணெய் தேய்த்து
நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த — நல்ல கருநிறம் அமைந்த, |
தண் நறும்
தகரம் கமழ மண்ணி | குளிர்ந்த மணமுள்ள
மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி, |
ஈரம் புலர
விரல் உளர்ப்பு அவிழா | அந்த ஈரம் உலருமாறு
விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து, |
காழ் அகில் அம்
புகை கொளீஇ யாழ் இசை 110 | வயிரம்பாய்ந்த அகிலின்
அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று 110 |
அணி மிகு வரி
மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து | அழகு மிகுகின்ற
இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று |
மணி நிறம்
கொண்ட மா இரும் குஞ்சியின் | (நீல)மணியின்
நிறத்தைக் கொண்டுள்ள — கரிய பெரிய குடுமியின்கண், |
மலையவும்
நிலத்தவும் சினையவும் சுனையவும் | மலையிடத்தனவும்,
நிலத்திடத்தனவும், மரக்கிளைகளிற் பூத்தனவும், சுனைகளிற் பூத்தனவும் ஆகிய |
வண்ணவண்ணத்த
மலர் ஆய்பு விரைஇய | பல நிறங்களையுடைய
மலர்களை ஆராய்ந்து தொடுத்த |
தண் நறும்
தொடையல் வெண் போழ் கண்ணி 115 | தண்ணிய நறிய
மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும், 115 |
நலம் பெறு
சென்னி நாமுற மிலைச்சி | அழகு பெற்ற தலையில்,
(முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி, |
பைம் கால்
பித்திகத்து ஆய் இதழ் அலரி | பசிய காம்பையுடைய
பிச்சியின் அழகிய இதழ்களையுடைய பூவைத் தொடுத்த |
அம் தொடை ஒரு
காழ் வளைஇ செம் தீ | அழகிய தொடையாகிய ஒரு
வடத்தைச் சுற்றி, சிவந்த நெருப்பைப் போன்று |
ஒண் பூ பிண்டி
ஒரு காது செரீஇ | ஒளிரும் பூக்களையுடைய
அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி, |
அம் தளிர்
குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
120 | (அந்த)அழகிய தளிர்கள்
உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி, 120 |
மைந்து
இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து | வலிமை தங்கியிருக்கும்
அகன்று உயர்ந்த மார்பினில், |
தொன்றுபடு
நறும் தார் பூணொடு பொலிய | தொன்றுபட்டு வருகின்ற
பேரணிகலன்களோடே நறிய மாலை பொலிவு பெற, |
செம் பொறிக்கு
ஏற்ற வீங்கு இறை தட கையின் | செவ்விய இலக்கணமுடைய
கோடுகளுடன் பொருந்திய பூண் இறுகின முன்கையையுடைய பெரிய கையில் |
வண்ண வரி வில்
ஏந்தி அம்பு தெரிந்து | வண்ணத்தையுடைய வரிந்து
கட்டப்பட்ட வில்லை எடுத்து, அம்புகளைத் தெரிந்து பிடித்து |
நுண் வினை
கச்சை தயக்கு அற கட்டி 125 | நுண்ணிய வேலைப்பாடு
கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தளர்வு இன்றிக் கட்டி, 125 |
இயல் அணி
பொலிந்த ஈகை வான் கழல் | இயற்கையான அழகால்
பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல் |
துயல்வரும்தோறும்
திருந்து அடி கலாவ | (அடி
எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும்
அசைய |
முனை
பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் | -பகைவர் நாட்டைப்
பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய, |
பகை புறம்கண்ட
பல் வேல் இளைஞரின் | பகைவரின் புறமுதுகு
கண்ட பல வேல்களையுடைய வீரரைப்போல |
உரவு சினம்
செருக்கி துன்னுதொறும் வெகுளும்
130 | மிகுகின்ற சினத்தால்
செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும், 130 |
முளை வாள்
எயிற்ற வள் உகிர் ஞமலி | (மூங்கில்)முளை(போலும்)
கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய் |
திளையா கண்ண
வளைகுபு நெரிதர | இமையாத
கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால், |
நடுங்குவனம்
எழுந்து நல் அடி தளர்ந்து யாம் | அஞ்சிநடுங்கியவராய்
(இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள் |
இடும்பை கூர்
மனத்தேம் மருண்டு புலம் படர | வருத்தம் மிக்க
மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல – |
மாறு பொருது
ஓட்டிய புகல்வின் வேறு புலத்து 135 | (தன்னுடன்)மாறுபட்ட
காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய — (தானறியாத)வேறு நிலத்தில்135 |
ஆ காண்
விடையின் அணி பெற வந்து எம் | (புதிய)பசுவைக் காணும்
— காளையைப் போல அழகுபெற வந்து, எமது |
அலமரல் ஆயிடை
வெரூஉதல் அஞ்சி | கலக்கத்தினால் அப்போது
(நாங்கள்)மிரண்டுபோனதற்காகத் (தான்)அஞ்சி, |
மெல்லிய இனிய
மேவர கிளந்து எம் | மென்மையும்
இனிமையுமுடைய சொற்களை (எமக்குப்)பொருத்தமாக இயம்பி, எம் |
ஐம்பால் ஆய்
கவின் ஏத்தி ஒண் தொடி | ஐந்து பிரிப்புள்ள
பின்னலின் நுண்ணிய அழகைப் புகழ்ந்து, “ஒளிரும் வளையினையும், |
அசை மென் சாயல்
அம் வாங்கு உந்தி 140 | தளர்ந்த மென்மையான
சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும், 140 |
மட மதர் மழை
கண் இளையீர் இறந்த | கபடமற்ற மதர்த்த
குளிர்ந்த கண்களையும், உடைய இளம்பெண்களே, (இங்கு)தப்பி வந்த |
கெடுதியும்
உடையேன் என்றனன் அதன் எதிர் | இழப்பினையும் உடையேன்”
என்று கூறினான், அதற்கு மறுமொழியாக |
சொல்லேம்
ஆதலின் அல்லாந்து கலங்கி | (ஒன்றும்)சொல்லாதவராக
(நாங்கள்)இருந்ததினால், ஏமாற்றமடைந்து, “(மனம்)கலங்கி |
கெடுதியும்
விடீஇர் ஆயின் எம்மொடு | (நான்)காணாமற்போக்கியதைக்
காட்டித்தாரீராயின், எம்முடன் |
சொல்லலும்
பழியோ மெல்லியலீர் என 145 | (ஒரு
வார்த்தை)சொல்லுதலும் (உமக்குப்)பழியாமோ, மெல்லிய இயல்புடையீரே”, எனச் சொல்லி145 |
நைவளம் பழுநிய
பாலை வல்லோன் | நட்டராகம்
முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன் |
கை கவர்
நரம்பின் இம்மென இமிரும் | (தன்)கையால் வாசித்த
நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும் |
மாதர் வண்டொடு
சுரும்பு நயந்து இறுத்த | காதலையுடைய
வண்டினத்தோடு, ஆண் வண்டு (புணர்ச்சியை)விரும்பித் தங்கிய, |
தாது அவிழ்
அலரி தா சினை பிளந்து | தாது விரித்த
பூக்களையுடைய கெட்டியான கிளையை முறித்து, |
தாறு அடு
களிற்றின் வீறு பெற ஓச்சி
150 | (பாகன்)அங்குசம்
அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி, 150 |
கல்லென்
சுற்றம் கடும் குரல் அவித்து எம் | கல்லென்னும் ஓசைபடக்
கத்தும் நாய்களின் கடுமையான குரல்களை அடக்கி, எம்முடைய |
சொல்லல் பாணி
நின்றனனாக | பதில் சொல்லின்
காலத்தை எதிர்பார்த்து நின்றனனாக – |
இருவி வேய்ந்த
குறும் கால் குரம்பை | தினையின் அரிதாளால்
வேய்ந்த குட்டையான கால்களையுடைய குடிசையில் இருக்கும், |
பிணை ஏர்
நோக்கின் மனையோள் மடுப்ப | (மான்)பிணையைப் போன்ற
பார்வையினையுடைய மனைவி எடுத்துக்கொடுப்ப, |
தேம் பிழி
தேறல் மாந்தி மகிழ் சிறந்து
155 | தேனால் சமைந்த கள்
தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,
155 |
சேமம் மடிந்த
பொழுதின் வாய் மடுத்து | காவல்தொழிலில்
சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு) |
இரும் புனம்
நிழத்தலின் சிறுமை நோனாது | பெரிய புனத்தை
அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல், |
அரவு உறழ் அம்
சிலை கொளீஇ நோய் மிக்கு | பாம்பை ஒத்த அழகிய
வில்லினை நாணேற்றி, வருத்த மிகுதியால், |
உரவு சின
முன்பால் உடல் சினம் செருக்கி | மிகுகின்ற சினத்தின்
வலியோடே உடல் சினத்தால் நடுங்க, |
கணை விடு
புடையூ கானம் கல்லென 160 | அம்பை எய்து, தட்டையை
அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி, 160 |
மடி விடு
வீளையர் வெடி படுத்து எதிர | (வாயை)மடித்து
விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க, |
கார் பெயல்
உருமின் பிளிறி சீர் தக | கார்காலத்து மழையின்
இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக |
இரும் பிணர் தட
கை இரு நிலம் சேர்த்தி | கரிய சொரசொரப்பான
பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து, |
சினம் திகழ்
கடாஅம் செருக்கி மரம் கொல்பு | கோபம் விளங்கும்
மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து, |
மையல் வேழம்
மடங்கலின் எதிர்தர 165 | மதக்களிப்புடைய
(அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால், 165 |
உய்விடம்
அறியேம் ஆகி ஒய்யென | உயிர்பிழைப்பதற்குரிய
இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக, |
திருந்து கோல்
எல் வளை தெழிப்ப நாணு மறந்து | சீரான உருட்சியும்
பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு, |
விதுப்புறு
மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி | நடுக்கமுற்ற
மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று, |
சூருறு
மஞ்ஞையின் நடுங்க வார் கோல் | தெய்வமகளிரேறின(பேய்
பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க – நெடிய கோலையுடைய, |
உடு உறும் பகழி
வாங்கி கடு விசை 170 | இறகு சேர்ந்த அம்பினை
வலிந்திழுத்து, கடும் வேகத்துடன், 170 |
அண்ணல் யானை
அணி முகத்து அழுத்தலின் | தலைமை யானையின் அழகிய
முகத்தில் ஆழச்செலுத்துதலினால், |
புண் உமிழ்
குருதி முகம் பாய்ந்து இழிதர | (அப்)புண் உமிழ்ந்த
செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க, |
புள்ளி வரி
நுதல் சிதைய நில்லாது | புள்ளிபுள்ளியானதும்
வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல், |
அயர்ந்து
புறங்கொடுத்த பின்னர் நெடுவேள் | (அக் களிறு)தளர்ந்து
திரும்பி ஓடிய பின்னர் – முருகக்கடவுளான |
அணங்குறு
மகளிர் ஆடுகளம் கடுப்ப 175 | தெய்வம்தீண்டிய(சாமியாடும்)
மகளிர் வெறியாட்டயரும் களத்தைப்போன்று(அவ்விடம் தோன்றிநிற்க), 175 |
திணி நிலை
கடம்பின் திரள் அரை வளைஇய | உறுதியாக நிற்கும்
கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து |
துணை அறை
மாலையின் கை பிணி விடேஎம் | இறுக்கக் கட்டிச்
சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய், |
நுரை உடை கலுழி
பாய்தலின் உரவு திரை | நுரையையுடைய
(ஆற்றுப்)பெருக்கில் குதிப்பதினால், உயர்ந்தெழும் அலைகள் |
அடும் கரை
வாழையின் நடுங்க பெருந்தகை | மோதும் கரையின்
(நின்ற)வாழைபோலே நடுங்க, உயர்குணமுள்ள தலைவன் |
அஞ்சிலோதி
அசையல் யாவதும்
180 | “அழகிய நுண்மையான
கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட 180 |
அஞ்சல் ஓம்பு
நின் அணி நலம் நுகர்கு என | அஞ்சுவதை விலக்கவும்,
(நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி, |
மாசு அறு சுடர்
நுதல் நீவி நீடு நினைந்து | களங்கமில்லாமல்
ஒளிரும் (தலைவியின்)நெற்றியைத் துடைத்து, நீண்டநேரம் சிந்தித்து, |
என் முகம்
நோக்கி நக்கனன் அ நிலை | என் முகத்தைப்
பார்த்து முறுவல்பூத்தான் – அந்த நிலையில், |
நாணும் உட்கும்
நண்ணு வழி அடைதர | நாணமும் அச்சமும்
(எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால், |
ஒய்யென
பிரியவும் விடாஅன் கவைஇ 185 | சட்டென்று
(அவள்)விட்டுவிலகவும் விடாதானாய், (தன் கைகளால்)அணைத்து, 185 |
ஆகம் அடைய
முயங்கலின் அ வழி | (இவள்)மார்பு (தன்
மார்பில்)ஒடுங்குமாறு தழுவுதலினால், அப்பொழுது, |
பழு மிளகு உக்க
பாறை நெடும் சுனை | பழுத்த மிளகு
சிந்திக்கிடக்கின்ற கற்பாறை(சூழ்ந்த) நீண்ட சுனையில், |
முழு முதல்
கொக்கின் தீம் கனி உதிர்ந்தென | பருத்த
அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக, |
புள் எறி
பிரசமொடு ஈண்டி பலவின் | (அது கேட்ட)வண்டுகள்
(திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின் |
நெகிழ்ந்து உகு
நறும் பழம் விளைந்த தேறல் 190 | (நன்கு பழுத்து)கட்டு
விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை 190 |
நீர் செத்து
அயின்ற தோகை வியல் ஊர் | நீரென்று கருதிப்
பருகிய மயில் — அகன்ற ஊர்களில் |
சாறு கொள்
ஆங்கண் விழவுக்களம் நந்தி | விழாக் கொள்ளுதற்குரிய
அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக |
அரி கூட்டு இன்
இயம் கறங்க ஆடுமகள் | அரித்தெழும் ஓசையைக்
கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண் |
கயிறு ஊர்
பாணியின் தளரும் சாரல் | கயிற்றில் நடக்கும்
செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில் |
வரை அரமகளிரின்
சாஅய் விழைதக 195 | மலைவாழ்
தெய்வப்பெண்டிர் ஆடுதலால் தம் நலம் சிறிது கெட்டு, கண்டோர் விரும்பும்படி 195 |
விண் பொரும்
சென்னி கிளைஇய காந்தள் | விசும்பைத்
தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின் |
தண் கமழ் அலரி
தாஅய் நன் பல | குளிர்ந்த மணம்
கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல |
வம்பு விரி
களத்தின் கவின் பெற பொலிந்த | அரைக்கச்சை விரிந்த
களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற |
குன்று கெழு
நாடன் எம் விழைதரு பெரு விறல் | மலைபொருந்தியதுமான
நாட்டையுடையவன், எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியையுடையவன் – |
உள்ள தன்மை
உள்ளினன் கொண்டு 200 | (இவள்)உள்ளத்தின்
தன்மையை ஆய்ந்தவனாய் (அதனை)உட்கொண்டு, 200 |
சாறு அயர்ந்து
அன்ன மிடாஅ சொன்றி | “விழா கொண்டாடினால்
போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை |
வருநர்க்கு
வரையா வள நகர் பொற்ப | வருவார்க்கெல்லாம்
வரைவின்றிப் படைக்கும், செல்வத்தையுடைய இல்லம் பொலிவுபெற, |
மலர திறந்த
வாயில் பலர் உண | அகலத்
திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி, |
பைம் நிணம்
ஒழுகிய நெய் மலி அடிசில் | இளம் (மாமிசத்தைச்
சேர்ந்த)கொழுப்பு ஒழுகுகின்ற நெய் மிக்க சோற்றை |
வசை இல் வான்
திணை புரையோர் கடும்பொடு 205 | குற்றமில்லாத
உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு 205 |
விருந்து உண்டு
எஞ்சிய மிச்சில் பெருந்தகை | விருந்தினராக உண்டு
மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே, |
நின்னோடு
உண்டலும் புரைவது என்று ஆங்கு | உன்னோடு
(நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது |
அறம் புணை ஆக
தேற்றி பிறங்கு மலை | (சிறந்த)இல்லறமே
(நல்ல)வாழ்க்கைப் படகாகும் என்று தெளிவித்து, நெருக்கமான மலைகளில் |
மீமிசை கடவுள்
வாழ்த்தி கைதொழுது | மிக உயர்ந்த உச்சியின்
(உறைகின்ற)இறையை வாழ்த்தி, கைகளைக் குவித்துத் தொழுது, |
ஏமுறு வஞ்சினம்
வாய்மையின் தேற்றி 210 | (இவள்)இன்பமுறும்படி
உறுதிமொழிகளை உண்மையெனத் தெளிவித்து, 210 |
அம் தீம் தெள்
நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து | அழகிய இனிய தெளிந்த
அருவி நீரைக் குடித்ததினால், மனம் அமைதியடைந்து, |
அரு விடர்
அமைந்த களிறு தரு புணர்ச்சி | பயங்கரமான பிளவுகள்
நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு, |
வான் உரி
உறையுள் வயங்கியோர் அவாவும் | விசும்பில் தமக்குரிய
இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும் |
பூ மலி சோலை அ
பகல் கழிப்பி | பூக்கள் நிறைந்த
சோலையில் அன்றைய பகற்பொழுதைக் கழித்து |
எல்லை செல்ல
ஏழ் ஊர்பு இறைஞ்சி 215 | மாலைப் பொழுது
கழியும்படி, ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரைச் செலுத்தி
(மேற்றிசையில்)கீழிறக்கி 215 |
பல் கதிர்
மண்டிலம் கல் சேர்பு மறைய | பல கதிர்களையுடைய
ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய – |
மான் கணம் மர
முதல் தெவிட்ட ஆன் கணம் | மான் கூட்டம்
மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம் |
கன்று பயிர்
குரல மன்று நிறை புகுதர | (தம்)கன்றுகளை
அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய, |
ஏங்கு வயிர்
இசைய கொடு வாய் அன்றில் | ஊதுகின்ற
கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை |
ஓங்கு இரும்
பெண்ணை அக மடல் அகவ 220 | உயர்ந்த பெரிய
பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க 220, |
பாம்பு மணி
உமிழ பல் வயின் கோவலர் | பாம்பு தம் மணிகளை
உமிழ, பற்பல இடங்களிலுள்ள இடையர்கள் |
ஆம்பல் அம்
தீம் குழல் தெள் விளி பயிற்ற | ஆம்பல் எனும்
பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப, |
ஆம்பல் ஆய்
இதழ் கூம்புவிட வள மனை | ஆம்பல் மலரின் அழகிய
இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில் |
பூ தொடி மகளிர்
சுடர் தலை கொளுவி | பொலிவுள்ள வளையல்
அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி |
அந்தி அந்தணர்
அயர கானவர் 225 | அந்திக்கடனை
அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர் 225 |
விண் தோய் பணவை
மிசை ஞெகிழி பொத்த | வானத்தைத் தீண்டுகின்ற
(தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட, |
வானம் மா மலை
வாய் சூழ்பு கறுப்ப கானம் | மேகங்கள் பெரிய
மலையிடத்துச் சூழ்ந்து கறுப்ப, கானகம் |
கல்லென்று
இரட்ட புள் இனம் ஒலிப்ப | கல்லென்னுமாறு
மாறிமாறி ஒலியெழுப்ப, பறவையினங்கள் ஆரவாரிக்க, |
சினைஇய வேந்தன்
செல் சமம் கடுப்ப | சினங்கொண்ட மன்னன்
படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று |
துனைஇய மாலை
துன்னுதல் காணூஉ 230 | விரைந்துவரும் மாலை
நெருங்கிவருதலைக் கண்டு –
230 |
நேர் இறை
முன்கை பற்றி நுமர் தர | “நேர்த்தியாக
(தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார்
(எனக்குத்)தர |
நாடு அறி நன்
மணம் அயர்கம் சில் நாள் | நாட்டில் உள்ளார்
(எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில், |
கலங்கல்
ஓம்புமின் இலங்கு இழையீர் என | கலங்குவதை
விலக்குவாயாக, ஒளிவிடும் நகையுடையீர்”, என்று |
ஈர நன் மொழி
தீர கூறி | கனிவான நல்ல மொழிகளை
நிச்சயித்துக் கூறி, |
துணை புணர்
ஏற்றின் எம்மொடு வந்து
235 | துணையைச் சேர்ந்த
காளையைப் போல், எம்முடனே வந்து, 235 |
துஞ்சா முழவின்
மூதூர் வாயில் | செயலற்று
இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில், |
உண்துறை
நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு | (பலரும்)நீருண்ணும்
துறையில் (எம்மை)நிறுத்தி மீண்டு சென்றான் – அன்று தொடங்கி, |
அன்றை அன்ன
விருப்போடு என்றும் | அன்றைக்கு இருந்ததைப்
போன்ற காதலோடு, எந்நாளும் |
இர வரல்
மாலையனே வருதோறும் | இரவு வருதலைத் தனக்கு
இயல்பாகவுடையவன், வரும்போதெல்லாம், |
காவலர்
கடுகினும் கத நாய் குரைப்பினும்
240 | ஊர்க்காப்பாளர்
கடுமையாகக் காவல்செய்தாலும், சினமிக்க நாய்கள் குரைத்தாலும், 240 |
நீ துயில்
எழினும் நிலவு வெளிப்படினும் | நீ துயில்
நீங்கினாலும், திங்கள் வெளிவந்து ஒளிபரப்பினும், |
வேய் புரை மென்
தோள் இன் துயில் என்றும் | மூங்கிலைப் போன்ற
மென்மையான தோளிடத்துப் பெறும் இனிய துயிலை என்றும் |
பெறாஅன்
பெயரினும் முனியலுறாஅன் | பெறாதவனாய் (வறிதே)
திரும்பிச் சென்றாலும், (அதனால்) வெறுப்படையான், |
இளமையின்
இகந்தன்றும் இலனே வளமையின் | (தன்)இளமைப்பருவத்தால்
வரம்பு மீறியதும் இலன், (தன்)செல்வச்செருக்கால் |
தன் நிலை
தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர்
245 | தன் நிலையினின்றும்
நீங்கியதும் இலன், அச்சம்தரும் இவ்வூருக்கு 245 |
மாய வரவின்
இயல்பு நினைஇ தேற்றி | ஒளித்து வருகின்ற தன்
வரவின் தன்மையை எண்ணி, (அது நல்லதற்கே என்று தன்னைத்)தேற்றி, |
நீர் எறி
மலரின் சாஅய் இதழ் சோரா | பெரிய மழைத் துளிகள்
ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து, |
ஈரிய கலுழும்
இவள் பெரு மதர் மழை கண் | ஈரமுள்ளனவாய்
கலங்கிநின்றன – (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்), |
ஆகத்து அரி பனி
உறைப்ப நாளும் | மார்பினில்
(கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட, நாள்தோறும், |
வலை படு
மஞ்ஞையின் நலம் செல சாஅய்
250 | வலையினில் அகப்பட்ட
மயில் போல (தன்)நலம் போகும்படி மெலிந்து, 250 |
நினைதொறும்
கலுழுமால் இவளே கங்குல் | (அவனை)எண்ணுந்தோறும்
கலங்குகின்றாள் இவள் – இரவில், |
அளை செறி
உழுவையும் ஆளியும் உளியமும் | குகைகளில் தங்கும்
புலிகளும், யாளிகளும், கரடிகளும், |
புழல் கோட்டு
ஆமான் புகல்வியும் களிறும் | உள்ளீடற்ற கொம்பையுடைய
ஆமான் ஏறும், யானையும், |
வலியின்
தப்பும் வன்கண் வெம் சினத்து | வலிமையோடு
ஓங்கித்தாக்கும் இரக்கமற்ற,கடும் சினத்தையுடைய |
உருமும் சூரும்
இரை தேர் அரவமும் 255 | இடியும், பிசாசுகளும்,
இரை தேடித்திரியும் பாம்பும்,
255 |
ஒடுங்கு இரும்
குட்டத்து அரும் சுழி வழங்கும் | வாய்குறுகிய கரிய
ஆழமான நீர்நிலையில் போதற்கரிய சுழிகளில் திரியும் |
கொடும் தாள்
முதலையும் இடங்கரும் கராமும் | வளைந்த கால்
முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும், |
நூழிலும்
இழுக்கும் ஊழ் அடி முட்டமும் | (வழிப்பறி
செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள
முட்டுப்பாதைகளும் |
பழுவும்
பாந்தளும் உளப்பட பிறவும் | பேயும்,
மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும், |
வழுவின் வழாஅ
விழுமம் அவர் 260 | (நாம்
சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின் 260 |
குழு மலை
விடரகம் உடையவால் எனவே | கூட்டமான மலைகளில்
உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’ என்றாள் தோழி. |