#1 கடவுள் வாழ்த்து – மதுரை ஆசிரியர்
நல்லந்துவனார் | #1 கடவுள் வாழ்த்து – அடிநேர் உரை |
| |
ஆறு அறி
அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து | ஆறு அங்கங்களையும்
அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து, |
தேறு நீர் சடை
கரந்து திரிபுரம் தீமடுத்து | தெளிந்த நீரைக்கொண்ட
கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி, |
கூறாமல்
குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி | சொல்லாமலேயே மனத்தால்
நினைத்த எப்பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிய கூளியின் |
மாறா போர் மணி
மிடற்று எண் கையாய் கேள் இனி | புறமுதுகிடாத
போரினையும், நீலமணி போன்ற கழுத்தினையும், எட்டுக்கைகளையும் உடையவனே! கேட்பாயாக! |
படு பறை பல
இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ 5 | ஒலிக்கின்ற பறைகள் பல
முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ |
கொடுகொட்டி
ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் | கொடுங்கொட்டி என்னும்
கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும், |
கொடி புரை
நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ | கொடி போன்ற இடையும்
கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ? |
மண்டு அமர் பல
கடந்து மதுகையால் நீறு அணிந்து | மிக்குச் செல்கிற
போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து, |
பண்டரங்கம்
ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் | பாண்டரங்கம் என்னும்
கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும், |
வண்டு அரற்றும்
கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ 10 | வண்டுகள் ஒலிக்கும்
கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ? |
கொலை உழுவை
தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள | கொலைக்குணமுடைய
புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து, கொன்றை மாலை தோளில் அசைய, |
தலை அங்கை
கொண்டு நீ காபாலம் ஆடும்-கால் | அயன் தலையைக் கையில்
ஏந்திக்கொண்டு காபாலம் என்னும் கூத்தினை ஆடும்பொழுது, |
முலை அணிந்த
முறுவலாள் முன் பாணி தருவாளோ | முல்லையைப் போன்ற
முறுவலையுடைய இறைவி தாளத்தின் முதலில் அமையும் பாணியைத் தருவாளோ? |
என ஆங்கு | என்று சொல்லும்படியாக, |
பாணியும்
தூக்கும் சீரும் என்று இவை
15 | பாணி, தூக்கு, சீர்
என்ற இவற்றை |
மாண் இழை அரிவை
காப்ப | மாட்சிமை பொருந்திய
அணிகலன்களையுடைய இறைவி காக்க, |
ஆணம் இல்
பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி | அன்பற்ற பொருளான
எம்மிடத்தும் வந்து பொருந்தி நின்றாய்! |
| |
| |