| | |
| #251 பாலை
மாமூலனார் | #251 பாலை மாமூலனார் |
| தூதும் சென்றன
தோளும் செற்றும் | தூதும் சென்றன தோளும்
செற்றும் |
| ஓதி ஒண் நுதல்
பசலையும் மாயும் | ஓதி ஒண் நுதல்
பசலையும் மாயும் |
| வீங்கு இழை
நெகிழ சாஅய் செல்லலொடு | வீங்கு இழை நெகிழ
சாஅய் செல்லலொடு |
| நாம் படர்
கூரும் அரும் துயர் கேட்பின் | நாம் படர் கூரும்
அரும் துயர் கேட்பின் |
| நந்தன்
வெறுக்கை எய்தினும் மற்று அவண் | நந்தன் வெறுக்கை
எய்தினும் மற்று அவண் |
| தங்கலர் வாழி
தோழி வெல் கொடி | தங்கலர் வாழி தோழி
வெல் கொடி |
| துனை கால் அன்ன
புனை தேர் கோசர் | துனை கால் அன்ன புனை
தேர் கோசர் |
| தொன் மூதாலத்து
அரும் பணை பொதியில் | தொன் மூதாலத்து அரும்
பணை பொதியில் |
| இன் இசை முரசம்
கடிப்பு இகுத்து இரங்க | இன் இசை முரசம்
கடிப்பு இகுத்து இரங்க |
| தெம் முனை
சிதைத்த ஞான்றை மோகூர் | தெம் முனை சிதைத்த
ஞான்றை மோகூர் |
| பணியாமையின்
பகை தலைவந்த | பணியாமையின் பகை
தலைவந்த |
| மா கெழு தானை
வம்ப மோரியர் | மா கெழு தானை வம்ப
மோரியர் |
| புனை தேர் நேமி
உருளிய குறைத்த | புனை தேர் நேமி உருளிய
குறைத்த |
| இலங்கு வெள்
அருவிய அறை வாய் உம்பர் | இலங்கு வெள் அருவிய
அறை வாய் உம்பர் |
| மாசு இல் வெண்
கோட்டு அண்ணல் யானை | மாசு இல் வெண் கோட்டு
அண்ணல் யானை |
| வாயுள் தப்பிய
அரும் கேழ் வய புலி | வாயுள் தப்பிய அரும்
கேழ் வய புலி |
| மா நிலம் நெளிய
குத்தி புகலொடு | மா நிலம் நெளிய குத்தி
புகலொடு |
| காப்பு இல
வைகும் தேக்கு அமல் சோலை | காப்பு இல வைகும்
தேக்கு அமல் சோலை |
| நிரம்பா நீள்
இடை போகி | நிரம்பா நீள் இடை போகி |
| அரம் போழ் அம்
வளை நிலை நெகிழ்த்தோரே | அரம் போழ் அம் வளை
நிலை நெகிழ்த்தோரே |
| | |
| #252 குறிஞ்சி
நக்கண்ணையார் | #252 குறிஞ்சி
நக்கண்ணையார் |
| இடம் படுபு
அறியா வலம் படு வேட்டத்து | இடம் படுபு அறியா வலம்
படு வேட்டத்து |
| வாள் வரி
நடுங்க புகல்வந்து ஆளி | வாள் வரி நடுங்க
புகல்வந்து ஆளி |
| உயர் நுதல்
யானை புகர் முகத்து ஒற்றி | உயர் நுதல் யானை புகர்
முகத்து ஒற்றி |
| வெண் கோடு
புய்க்கும் தண் கமழ் சோலை | வெண் கோடு புய்க்கும்
தண் கமழ் சோலை |
| பெரு வரை
அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி | பெரு வரை அடுக்கத்து
ஒரு வேல் ஏந்தி |
| தனியன் வருதல்
அவனும் அஞ்சான் | தனியன் வருதல் அவனும்
அஞ்சான் |
| பனி வார்
கண்ணேன் ஆகி நோய் அட | பனி வார் கண்ணேன் ஆகி
நோய் அட |
| எமியேன்
இருத்தலை யானும் ஆற்றேன் | எமியேன் இருத்தலை
யானும் ஆற்றேன் |
| யாங்கு
செய்வாம்-கொல் தோழி ஈங்கை | யாங்கு செய்வாம்-கொல்
தோழி ஈங்கை |
| துய் அவிழ் பனி
மலர் உதிர வீசி | துய் அவிழ் பனி மலர்
உதிர வீசி |
| தொழில் மழை
பொழிந்த பானாள் கங்குல் | தொழில் மழை பொழிந்த
பானாள் கங்குல் |
| எறி திரை திவலை
தூஉம் சிறு கோட்டு | எறி திரை திவலை தூஉம்
சிறு கோட்டு |
| பெரும் குளம்
காவலன் போல | பெரும் குளம் காவலன்
போல |
| அரும் கடி
அன்னையும் துயில் மறந்தனளே | அரும் கடி அன்னையும்
துயில் மறந்தனளே |
| | |
| #253 பாலை
நக்கீரர் | #253 பாலை நக்கீரர் |
| வைகல்-தோறும்
பசலை பாய என் | வைகல்-தோறும் பசலை பாய
என் |
| மெய்யும்
பெரும்பிறிது ஆகின்று ஒய்யென | மெய்யும் பெரும்பிறிது
ஆகின்று ஒய்யென |
| அன்னையும் அமரா
முகத்தினள் அலரே | அன்னையும் அமரா
முகத்தினள் அலரே |
| வாடா பூவின்
கொங்கர் ஓட்டி | வாடா பூவின் கொங்கர்
ஓட்டி |
| நாடு பல தந்த
பசும் பூண் பாண்டியன் | நாடு பல தந்த பசும்
பூண் பாண்டியன் |
| பொன் மலி நெடு
நகர் கூடல் ஆடிய | பொன் மலி நெடு நகர்
கூடல் ஆடிய |
| இன் இசை
ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் | இன் இசை ஆர்ப்பினும்
பெரிதே ஈங்கு யான் |
| சில நாள்
உய்யலென் போன்ம் என பல நினைந்து | சில நாள் உய்யலென்
போன்ம் என பல நினைந்து |
| ஆழல் வாழி தோழி
வடாஅது | ஆழல் வாழி தோழி வடாஅது |
| ஆர் இருள்
நடுநாள் ஏர் ஆ ஒய்ய | ஆர் இருள் நடுநாள் ஏர்
ஆ ஒய்ய |
| பகை முனை
அறுத்து பல் இனம் சாஅய் | பகை முனை அறுத்து பல்
இனம் சாஅய் |
| கணம் சால்
கோவலர் நெடு விளி பயிர் அறிந்து | கணம் சால் கோவலர் நெடு
விளி பயிர் அறிந்து |
| இனம் தலை
தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று | இனம் தலை தரூஉம்
துளங்கு இமில் நல் ஏற்று |
| தழூஉ பிணர்
எருத்தம் தாழ பூட்டிய | தழூஉ பிணர் எருத்தம்
தாழ பூட்டிய |
| அம் தூம்பு
அகல் அமை கமம் செல பெய்த | அம் தூம்பு அகல் அமை
கமம் செல பெய்த |
| துறு காழ்
வல்சியர் தொழு அறை வௌவி | துறு காழ் வல்சியர்
தொழு அறை வௌவி |
| கன்று உடை பெரு
நிரை மன்று நிறை தரூஉம் | கன்று உடை பெரு நிரை
மன்று நிறை தரூஉம் |
| நேரா வன் தோள்
வடுகர் பெருமகன் | நேரா வன் தோள் வடுகர்
பெருமகன் |
| பேர் இசை எருமை
நன் நாட்டு உள்ளதை | பேர் இசை எருமை நன்
நாட்டு உள்ளதை |
| அயிரி யாறு
இறந்தனர் ஆயினும் மயர் இறந்து | அயிரி யாறு இறந்தனர்
ஆயினும் மயர் இறந்து |
| உள்ளுப தில்ல
தாமே பணை தோள் | உள்ளுப தில்ல தாமே பணை
தோள் |
| குரும்பை மென்
முலை அரும்பிய சுணங்கின் | குரும்பை மென் முலை
அரும்பிய சுணங்கின் |
| நுசுப்பு
அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் | நுசுப்பு அழித்து
ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் |
| மாக விசும்பின்
திலகமொடு பதித்த | மாக விசும்பின்
திலகமொடு பதித்த |
| திங்கள் அன்ன
நின் திரு முகத்து | திங்கள் அன்ன நின்
திரு முகத்து |
| ஒண் சூட்டு
அவிர் குழை மலைந்த நோக்கே | ஒண் சூட்டு அவிர் குழை
மலைந்த நோக்கே |
| | |
| #254 முல்லை
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | #254 முல்லை மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார் |
| நரை
விராவு_உற்ற நறு மென் கூந்தல் | நரை விராவு_உற்ற நறு
மென் கூந்தல் |
| செம் முது
செவிலியர் பல பாராட்ட | செம் முது செவிலியர்
பல பாராட்ட |
| பொலன் செய்
கிண்கிணி நலம் பெறு சேவடி | பொலன் செய் கிண்கிணி
நலம் பெறு சேவடி |
| மணல் மலி
முற்றத்து நிலம் வடு கொளாஅ | மணல் மலி முற்றத்து
நிலம் வடு கொளாஅ |
| மனை உறை
புறவின் செம் கால் சேவல் | மனை உறை புறவின் செம்
கால் சேவல் |
| துணையொடு
குறும் பறை பயிற்றி மேல் செல | துணையொடு குறும் பறை
பயிற்றி மேல் செல |
| விளையாடு
ஆயத்து இளையோர் காண்-தொறும் | விளையாடு ஆயத்து
இளையோர் காண்-தொறும் |
| நம் வயின்
நினையும் நன் நுதல் அரிவை | நம் வயின் நினையும்
நன் நுதல் அரிவை |
| புலம்பொடு
வதியும் கலங்கு அஞர் அகல | புலம்பொடு வதியும்
கலங்கு அஞர் அகல |
| வேந்து உறு
தொழிலொடு வேறு புலத்து அல்கி | வேந்து உறு தொழிலொடு
வேறு புலத்து அல்கி |
| வந்து வினை
முடித்தனம் ஆயின் நீயும் | வந்து வினை முடித்தனம்
ஆயின் நீயும் |
| பணை நிலை
முனைஇய வினை நவில் புரவி | பணை நிலை முனைஇய வினை
நவில் புரவி |
| இழை அணி நெடும்
தேர் ஆழி உறுப்ப | இழை அணி நெடும் தேர்
ஆழி உறுப்ப |
| நுண் கொடி
மின்னின் பைம் பயிர் துமிய | நுண் கொடி மின்னின்
பைம் பயிர் துமிய |
| தளவ முல்லையொடு
தலைஇ தண்ணென | தளவ முல்லையொடு தலைஇ
தண்ணென |
| வெறி கமழ்
கொண்ட வீ ததை புறவின் | வெறி கமழ் கொண்ட வீ
ததை புறவின் |
| நெடி இடை பின்
பட கடவு-மதி என்று யான் | நெடி இடை பின் பட
கடவு-மதி என்று யான் |
| சொல்லிய அளவை
நீடாது வல்லென | சொல்லிய அளவை நீடாது
வல்லென |
| தார் மணி மா
அறிவுறாஅ | தார் மணி மா அறிவுறாஅ |
| ஊர் நணி தந்தனை
உவகை யாம் பெறவே | ஊர் நணி தந்தனை உவகை
யாம் பெறவே |
| | |
| #255 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #255 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
| உலகு கிளர்ந்து
அன்ன உரு கெழு வங்கம் | உலகு கிளர்ந்து அன்ன
உரு கெழு வங்கம் |
| புலவு திரை
பெரும் கடல் நீர் இடை போழ | புலவு திரை பெரும்
கடல் நீர் இடை போழ |
| இரவும்
எல்லையும் அசைவு இன்று ஆகி | இரவும் எல்லையும்
அசைவு இன்று ஆகி |
| விரை செலல்
இயற்கை வங்கூழ் ஆட்ட | விரை செலல் இயற்கை
வங்கூழ் ஆட்ட |
| கோடு உயர் திணி
மணல் அகன் துறை நீகான் | கோடு உயர் திணி மணல்
அகன் துறை நீகான் |
| மாட ஒள் எரி
மருங்கு அறிந்து ஒய்ய | மாட ஒள் எரி மருங்கு
அறிந்து ஒய்ய |
| ஆள்வினை
பிரிந்த காதலர் நாள் பல | ஆள்வினை பிரிந்த
காதலர் நாள் பல |
| கழியாமையே அழி
படர் அகல | கழியாமையே அழி படர்
அகல |
| வருவர்-மன்னால்
தோழி தண் பணை | வருவர்-மன்னால் தோழி
தண் பணை |
| பொரு புனல்
வைப்பின் நம் ஊர் ஆங்கண் | பொரு புனல் வைப்பின்
நம் ஊர் ஆங்கண் |
| கருவிளை முரணிய
தண் புதல் பகன்றை | கருவிளை முரணிய தண்
புதல் பகன்றை |
| பெரு வளம் மலர
அல்லி தீண்டி | பெரு வளம் மலர அல்லி
தீண்டி |
| பலவு காய்
புறத்த பசும் பழ பாகல் | பலவு காய் புறத்த
பசும் பழ பாகல் |
| கூதள மூது இலை
கொடி நிரை தூங்க | கூதள மூது இலை கொடி
நிரை தூங்க |
| அறன் இன்று
அலைக்கும் ஆனா வாடை | அறன் இன்று அலைக்கும்
ஆனா வாடை |
| கடி மனை
மாடத்து கங்குல் வீச | கடி மனை மாடத்து
கங்குல் வீச |
| திருந்து இழை
நெகிழ்ந்து பெரும் கவின் சாய | திருந்து இழை
நெகிழ்ந்து பெரும் கவின் சாய |
| நிரை வளை ஊரும்
தோள் என | நிரை வளை ஊரும் தோள்
என |
| உரையொடு
செல்லும் அன்பினர் பெறினே | உரையொடு செல்லும்
அன்பினர் பெறினே |
| | |
| #256 மருதம்
மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் | #256 மருதம் மதுரை
தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
| பிணங்கு அரில்
வள்ளை நீடு இலை பொதும்பில | பிணங்கு அரில் வள்ளை
நீடு இலை பொதும்பில |
| மடி துயில்
முனைஇய வள் உகிர் யாமை | மடி துயில் முனைஇய வள்
உகிர் யாமை |
| நொடி விடு
கல்லின் போகி அகன் துறை | நொடி விடு கல்லின்
போகி அகன் துறை |
| பகு வாய் நிறைய
நுங்கின் கள்ளின் | பகு வாய் நிறைய
நுங்கின் கள்ளின் |
| நுகர்வார்
அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு | நுகர்வார் அருந்து
மகிழ்பு இயங்கு நடையொடு |
| தீம் பெரும்
பழனம் உழக்கி அயலது | தீம் பெரும் பழனம்
உழக்கி அயலது |
| ஆம்பல் மெல்
அடை ஒடுங்கும் ஊர | ஆம்பல் மெல் அடை
ஒடுங்கும் ஊர |
| பொய்யால்
அறிவென் நின் மாயம் அதுவே | பொய்யால் அறிவென் நின்
மாயம் அதுவே |
| கையகப்பட்டமை
அறியாய் நெருநை | கையகப்பட்டமை அறியாய்
நெருநை |
| மை எழில்
உண்கண் மடந்தையொடு வையை | மை எழில் உண்கண்
மடந்தையொடு வையை |
| ஏர் தரு புது
புனல் உரிதினின் நுகர்ந்து | ஏர் தரு புது புனல்
உரிதினின் நுகர்ந்து |
| பரத்தை ஆயம்
கரப்பவும் ஒல்லாது | பரத்தை ஆயம் கரப்பவும்
ஒல்லாது |
| கவ்வை
ஆகின்றால் பெரிதே காண்_தக | கவ்வை ஆகின்றால்
பெரிதே காண்_தக |
| தொல் புகழ்
நிறைந்த பல் பூ கழனி | தொல் புகழ் நிறைந்த
பல் பூ கழனி |
| கரும்பு அமல்
படப்பை பெரும் பெயர் கள்ளூர் | கரும்பு அமல் படப்பை
பெரும் பெயர் கள்ளூர் |
| திரு நுதல்
குறு_மகள் அணி நலம் வவ்விய | திரு நுதல் குறு_மகள்
அணி நலம் வவ்விய |
| அறன் இலாளன்
அறியேன் என்ற | அறன் இலாளன் அறியேன்
என்ற |
| திறன் இல் வெம்
சூள் அறி கரி கடாஅய் | திறன் இல் வெம் சூள்
அறி கரி கடாஅய் |
| முறி ஆர்
பெரும் கிளை செறிய பற்றி | முறி ஆர் பெரும் கிளை
செறிய பற்றி |
| நீறு
தலைப்பெய்த ஞான்றை | நீறு தலைப்பெய்த
ஞான்றை |
| வீறு சால்
அவையத்து ஆர்ப்பினும் பெரிதே | வீறு சால் அவையத்து
ஆர்ப்பினும் பெரிதே |
| | |
| #257 பாலை
உறையூர் மருத்துவன் தாமோதரனார் | #257 பாலை உறையூர்
மருத்துவன் தாமோதரனார் |
| வேனில் பாதிரி
கூனி மா மலர் | வேனில் பாதிரி கூனி மா
மலர் |
| நறை வாய் வாடல்
நாறும் நாள் சுரம் | நறை வாய் வாடல் நாறும்
நாள் சுரம் |
| அரி ஆர்
சிலம்பின் சீறடி சிவப்ப | அரி ஆர் சிலம்பின்
சீறடி சிவப்ப |
| எம்மொடு ஓர்
ஆறு படீஇயர் யாழ நின் | எம்மொடு ஓர் ஆறு
படீஇயர் யாழ நின் |
| பொம்மல் ஓதி
பொதுள வாரி | பொம்மல் ஓதி பொதுள
வாரி |
| அரும்பு அற
மலர்ந்த ஆய் பூ மராஅத்து | அரும்பு அற மலர்ந்த
ஆய் பூ மராஅத்து |
| சுரும்பு சூழ்
அலரி தைஇ வேய்ந்த நின் | சுரும்பு சூழ் அலரி
தைஇ வேய்ந்த நின் |
| தேம் பாய்
கூந்தல் குறும் பல மொசிக்கும் | தேம் பாய் கூந்தல்
குறும் பல மொசிக்கும் |
| வண்டு கடிந்து
ஓம்பல் தேற்றாய் அணி கொள | வண்டு கடிந்து ஓம்பல்
தேற்றாய் அணி கொள |
| நுண் கோல் எல்
வளை தெளிர்க்கும் முன்கை | நுண் கோல் எல் வளை
தெளிர்க்கும் முன்கை |
| மெல் இறை பணை
தோள் விளங்க வீசி | மெல் இறை பணை தோள்
விளங்க வீசி |
| வல்லுவை-மன்னால்
நடையே கள்வர் | வல்லுவை-மன்னால் நடையே
கள்வர் |
| பகை மிகு கவலை
செல் நெறி காண்-மார் | பகை மிகு கவலை செல்
நெறி காண்-மார் |
| மிசை மரம்
சேர்த்திய கவை முறி யாஅத்து | மிசை மரம் சேர்த்திய
கவை முறி யாஅத்து |
| நார் அரை
மருங்கின் நீர் வர பொளித்து | நார் அரை மருங்கின்
நீர் வர பொளித்து |
| களிறு
சுவைத்திட்ட கோது உடை ததரல் | களிறு சுவைத்திட்ட
கோது உடை ததரல் |
| கல்லா
உமணர்க்கு தீமூட்டு ஆகும் | கல்லா உமணர்க்கு
தீமூட்டு ஆகும் |
| துன்புறு தகுவன
ஆங்கண் புன் கோட்டு | துன்புறு தகுவன ஆங்கண்
புன் கோட்டு |
| அரில் இவர்
புற்றத்து அல்கு_இரை நசைஇ | அரில் இவர் புற்றத்து
அல்கு_இரை நசைஇ |
| வெள் அரா மிளிர
வாங்கும் | வெள் அரா மிளிர
வாங்கும் |
| பிள்ளை எண்கின்
மலை வயினானே | பிள்ளை எண்கின் மலை
வயினானே |
| | |
| #258 குறிஞ்சி
பரணர் | #258 குறிஞ்சி பரணர் |
| நன்னன் உதியன்
அரும் கடி பாழி | நன்னன் உதியன் அரும்
கடி பாழி |
| தொன் முதிர்
வேளிர் ஓம்பினர் வைத்த | தொன் முதிர் வேளிர்
ஓம்பினர் வைத்த |
| பொன்னினும்
அருமை நன்கு அறிந்தும் அன்னோள் | பொன்னினும் அருமை
நன்கு அறிந்தும் அன்னோள் |
| துன்னலம் மாதோ
எனினும் அஃது ஒல்லாய் | துன்னலம் மாதோ எனினும்
அஃது ஒல்லாய் |
| தண் மழை தவழும்
தாழ் நீர் நனம் தலை | தண் மழை தவழும் தாழ்
நீர் நனம் தலை |
| கடும் காற்று
எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து | கடும் காற்று
எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து |
| மாய இருள் அளை
மாய் கல் போல | மாய இருள் அளை மாய்
கல் போல |
| மாய்க தில்
வாழிய நெஞ்சே நாளும் | மாய்க தில் வாழிய
நெஞ்சே நாளும் |
| மெல் இயல்
குறு_மகள் நல் அகம் நசைஇ | மெல் இயல் குறு_மகள்
நல் அகம் நசைஇ |
| அரவு இரை
தேரும் அஞ்சுவரு சிறு நெறி | அரவு இரை தேரும்
அஞ்சுவரு சிறு நெறி |
| இரவின்
எய்தியும் பெறாஅய் அருள் வர | இரவின் எய்தியும்
பெறாஅய் அருள் வர |
| புல்லென் கண்ணை
புலம்பு கொண்டு உலகத்து | புல்லென் கண்ணை
புலம்பு கொண்டு உலகத்து |
| உள்ளோர்க்கு
எல்லாம் பெரு நகை ஆக | உள்ளோர்க்கு எல்லாம்
பெரு நகை ஆக |
| காமம் கைம்மிக
உறுதர | காமம் கைம்மிக உறுதர |
| ஆனா அரு படர்
தலைத்தந்தோயே | ஆனா அரு படர்
தலைத்தந்தோயே |
| | |
| #259 பாலை
கயமனார் | #259 பாலை கயமனார் |
| வேலும்
விளங்கின இளையரும் இயன்றனர் | வேலும் விளங்கின
இளையரும் இயன்றனர் |
| தாரும் தையின
தழையும் தொடுத்தன | தாரும் தையின தழையும்
தொடுத்தன |
| நிலம் நீர்
அற்ற வெம்மை நீங்க | நிலம் நீர் அற்ற
வெம்மை நீங்க |
| பெயல் நீர்
தலைஇ உலவை இலை நீத்து | பெயல் நீர் தலைஇ உலவை
இலை நீத்து |
| குறு முறி
ஈன்றன மரனே நறு மலர் | குறு முறி ஈன்றன மரனே
நறு மலர் |
| வேய்ந்தன போல
தோன்றி பல உடன் | வேய்ந்தன போல தோன்றி
பல உடன் |
| தேம் பட
பொதுளின பொழிலே கானமும் | தேம் பட பொதுளின
பொழிலே கானமும் |
| நனி நன்று ஆகிய
பனி நீங்கு வழி நாள் | நனி நன்று ஆகிய பனி
நீங்கு வழி நாள் |
| பால் என
பரத்தரும் நிலவின் மாலை | பால் என பரத்தரும்
நிலவின் மாலை |
| போது வந்தன்று
தூதே நீயும் | போது வந்தன்று தூதே
நீயும் |
| கலங்கா மனத்தை
ஆகி என் சொல் | கலங்கா மனத்தை ஆகி என்
சொல் |
| நயந்தனை கொண்மோ
நெஞ்சு அமர் தகுவி | நயந்தனை கொண்மோ நெஞ்சு
அமர் தகுவி |
| தெற்றி
உலறினும் வயலை வாடினும் | தெற்றி உலறினும் வயலை
வாடினும் |
| நொச்சி மென்
சினை வணர் குரல் சாயினும் | நொச்சி மென் சினை வணர்
குரல் சாயினும் |
| நின்னினும்
மடவள் நனி நின் நயந்த | நின்னினும் மடவள் நனி
நின் நயந்த |
| அன்னை அல்லல்
தாங்கி நின் ஐயர் | அன்னை அல்லல் தாங்கி
நின் ஐயர் |
| புலி மருள்
செம்மல் நோக்கி | புலி மருள் செம்மல்
நோக்கி |
| வலியாய்
இன்னும் தோய்க நின் முலையே | வலியாய் இன்னும் தோய்க
நின் முலையே |
| | |
| #260 நெய்தல்
மோசி கரையனார் | #260 நெய்தல் மோசி
கரையனார் |
| மண்டிலம் மழுக
மலை நிறம் கிளர | மண்டிலம் மழுக மலை
நிறம் கிளர |
| வண்டு_இனம்
மலர் பாய்ந்து ஊத மீமிசை | வண்டு_இனம் மலர்
பாய்ந்து ஊத மீமிசை |
| கண்டல் கானல்
குருகு_இனம் ஒலிப்ப | கண்டல் கானல்
குருகு_இனம் ஒலிப்ப |
| திரை பாடு அவிய
திமில் தொழில் மறப்ப | திரை பாடு அவிய திமில்
தொழில் மறப்ப |
| கரை ஆடு அலவன்
அளை_வயின் செறிய | கரை ஆடு அலவன்
அளை_வயின் செறிய |
| செக்கர் தோன்ற
துணை புணர் அன்றில் | செக்கர் தோன்ற துணை
புணர் அன்றில் |
| எக்கர் பெண்ணை
அக மடல் சேர | எக்கர் பெண்ணை அக மடல்
சேர |
| கழி மலர் கமழ்
முகம் கரப்ப பொழில் மனை | கழி மலர் கமழ் முகம்
கரப்ப பொழில் மனை |
| புன்னை நறு வீ
பொன் நிறம் கொளாஅ | புன்னை நறு வீ பொன்
நிறம் கொளாஅ |
| எல்லை பைப்பய
கழிப்பி எல் உற | எல்லை பைப்பய கழிப்பி
எல் உற |
| யாங்கு
ஆகுவல்-கொல் யானே நீங்காது | யாங்கு ஆகுவல்-கொல்
யானே நீங்காது |
| முது மரத்து
உறையும் முரவு வாய் முது புள் | முது மரத்து உறையும்
முரவு வாய் முது புள் |
| கதுமென குழறும்
கழுது வழங்கு அரைநாள் | கதுமென குழறும் கழுது
வழங்கு அரைநாள் |
| நெஞ்சு நெகிழ்
பருவரல் செய்த | நெஞ்சு நெகிழ் பருவரல்
செய்த |
| அன்பு இலாளன்
அறிவு நயந்தேனே | அன்பு இலாளன் அறிவு
நயந்தேனே |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| #261 பாலை பாலை
பாடிய பெருங்கடுங்கோ | #261 பாலை பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
| கான பாதிரி
கரும் தகட்டு ஒள் வீ | கான பாதிரி கரும்
தகட்டு ஒள் வீ |
| வேனில்
அதிரலொடு விரைஇ காண்வர | வேனில் அதிரலொடு விரைஇ
காண்வர |
| சில்
ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் | சில் ஐம்_கூந்தல்
அழுத்தி மெல் இணர் |
| தேம் பாய்
மராஅம் அடைச்சி வான் கோல் | தேம் பாய் மராஅம்
அடைச்சி வான் கோல் |
| இலங்கு வளை
தெளிர்ப்ப வீசி சிலம்பு நக | இலங்கு வளை தெளிர்ப்ப
வீசி சிலம்பு நக |
| சின் மெல்
ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் | சின் மெல் ஒதுக்கமொடு
மென்மெல இயலி நின் |
| அணி மாண்
சிறுபுறம் காண்கம் சிறு நனி | அணி மாண் சிறுபுறம்
காண்கம் சிறு நனி |
| ஏகு என ஏகல்
நாணி ஒய்யென | ஏகு என ஏகல் நாணி
ஒய்யென |
| மா கொள்
நோக்கமொடு மடம் கொள சாஅய் | மா கொள் நோக்கமொடு
மடம் கொள சாஅய் |
| நின்று தலை
இறைஞ்சியோளே அது கண்டு | நின்று தலை
இறைஞ்சியோளே அது கண்டு |
| யாம்
முந்துறுதல் செல்லேம் ஆயிடை | யாம் முந்துறுதல்
செல்லேம் ஆயிடை |
| அரும் சுரத்து
அல்கியேமே இரும் புலி | அரும் சுரத்து
அல்கியேமே இரும் புலி |
| களிறு அட்டு
குழுமும் ஓசையும் களி பட்டு | களிறு அட்டு குழுமும்
ஓசையும் களி பட்டு |
| வில்லோர்
குறும்பில் ததும்பும் | வில்லோர் குறும்பில்
ததும்பும் |
| வல் வாய் கடும்
துடி பாணியும் கேட்டே | வல் வாய் கடும் துடி
பாணியும் கேட்டே |
| | |
| #262 குறிஞ்சி
பரணர் | #262 குறிஞ்சி பரணர் |
| முதை படு பசும்
காட்டு அரில் பவர் மயக்கி | முதை படு பசும் காட்டு
அரில் பவர் மயக்கி |
| பகடு பல பூண்ட
உழவு_உறு செம் செய் | பகடு பல பூண்ட
உழவு_உறு செம் செய் |
| இடு முறை
நிரம்பி ஆகு வினை கலித்து | இடு முறை நிரம்பி ஆகு
வினை கலித்து |
| பாசிலை அமன்ற
பயறு ஆ புக்கு என | பாசிலை அமன்ற பயறு ஆ
புக்கு என |
| வாய்மொழி
தந்தையை கண் களைந்து அருளாது | வாய்மொழி தந்தையை கண்
களைந்து அருளாது |
| ஊர் முது கோசர்
நவைத்த சிறுமையின் | ஊர் முது கோசர் நவைத்த
சிறுமையின் |
| கலத்தும்
உண்ணாள் வாலிதும் உடாஅள் | கலத்தும் உண்ணாள்
வாலிதும் உடாஅள் |
| சினத்தின்
கொண்ட படிவம் மாறாள் | சினத்தின் கொண்ட
படிவம் மாறாள் |
| மறம் கெழு தானை
கொற்ற குறும்பியன் | மறம் கெழு தானை கொற்ற
குறும்பியன் |
| செரு இயல் நன்
மான் திதியற்கு உரைத்து அவர் | செரு இயல் நன் மான்
திதியற்கு உரைத்து அவர் |
| இன் உயிர்
செகுப்ப கண்டு சினம் மாறிய | இன் உயிர் செகுப்ப
கண்டு சினம் மாறிய |
| அன்னிமிஞிலி
போல மெய்ம் மலிந்து | அன்னிமிஞிலி போல
மெய்ம் மலிந்து |
| ஆனா உவகையேம்
ஆயினெம் பூ மலிந்து | ஆனா உவகையேம் ஆயினெம்
பூ மலிந்து |
| அருவி
ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் | அருவி ஆர்க்கும் அயம்
திகழ் சிலம்பின் |
| நுண் பல துவலை
புதல் மிசை நனைக்கும் | நுண் பல துவலை புதல்
மிசை நனைக்கும் |
| வண்டு படு
நறவின் வண் மகிழ் பேகன் | வண்டு படு நறவின் வண்
மகிழ் பேகன் |
| கொண்டல் மா மலை
நாறி | கொண்டல் மா மலை நாறி |
| அம் தீம் கிளவி
வந்த மாறே | அம் தீம் கிளவி வந்த
மாறே |
| | |
| #263 பாலை
கருவூர் கண்ணம்பாளனார் | #263 பாலை கருவூர்
கண்ணம்பாளனார் |
| தயங்கு திரை
பெரும் கடல் உலகு தொழ தோன்றி | தயங்கு திரை பெரும்
கடல் உலகு தொழ தோன்றி |
| வயங்கு கதிர்
விரிந்த உரு கெழு மண்டிலம் | வயங்கு கதிர் விரிந்த
உரு கெழு மண்டிலம் |
| கயம் கண் வறப்ப
பாஅய் நன் நிலம் | கயம் கண் வறப்ப பாஅய்
நன் நிலம் |
| பயம் கெட
திருகிய பைது அறு காலை | பயம் கெட திருகிய பைது
அறு காலை |
| வேறு பல் கவலைய
வெருவரு வியன் காட்டு | வேறு பல் கவலைய
வெருவரு வியன் காட்டு |
| ஆறு செல்
வம்பலர் வரு_திறம் காண்-மார் | ஆறு செல் வம்பலர்
வரு_திறம் காண்-மார் |
| வில் வல் ஆடவர்
மேல் ஆள் ஒற்றி | வில் வல் ஆடவர் மேல்
ஆள் ஒற்றி |
| நீடு நிலை
யாஅத்து கோடு கொள் அரும் சுரம் | நீடு நிலை யாஅத்து
கோடு கொள் அரும் சுரம் |
| கொண்டனன்
கழிந்த வன்கண் காளைக்கு | கொண்டனன் கழிந்த
வன்கண் காளைக்கு |
| அவள் துணிவு
அறிந்தனென் ஆயின் அன்னோ | அவள் துணிவு
அறிந்தனென் ஆயின் அன்னோ |
| ஒளிறு வேல்
கோதை ஓம்பி காக்கும் | ஒளிறு வேல் கோதை ஓம்பி
காக்கும் |
| வஞ்சி அன்ன என்
வள நகர் விளங்க | வஞ்சி அன்ன என் வள
நகர் விளங்க |
| இனிதினின்
புணர்க்குவென்-மன்னோ துனி இன்று | இனிதினின்
புணர்க்குவென்-மன்னோ துனி இன்று |
| திரு நுதல்
பொலிந்த என் பேதை | திரு நுதல் பொலிந்த
என் பேதை |
| வரு முலை
முற்றத்து ஏமுறு துயிலே | வரு முலை முற்றத்து
ஏமுறு துயிலே |
| | |
| #264 முல்லை
உம்ப காட்டு இளங்கண்ணனார் | #264 முல்லை உம்ப
காட்டு இளங்கண்ணனார் |
| மழை இல் வானம்
மீன் அணிந்து அன்ன | மழை இல் வானம் மீன்
அணிந்து அன்ன |
| குழை அமல்
முசுண்டை வாலிய மலர | குழை அமல் முசுண்டை
வாலிய மலர |
| வரி வெண் கோடல்
வாங்கு குலை வான் பூ | வரி வெண் கோடல் வாங்கு
குலை வான் பூ |
| பெரிய சூடிய
கவர் கோல் கோவலர் | பெரிய சூடிய கவர் கோல்
கோவலர் |
| எல்லு பெயல்
உழந்த பல் ஆன் நிரையொடு | எல்லு பெயல் உழந்த பல்
ஆன் நிரையொடு |
| நீர் திகழ்
கண்ணியர் ஊர்_வயின் பெயர்தர | நீர் திகழ் கண்ணியர்
ஊர்_வயின் பெயர்தர |
| நனி சேண்பட்ட
மாரி தளி சிறந்து | நனி சேண்பட்ட மாரி தளி
சிறந்து |
| ஏர் தரு கடு
நீர் தெருவு-தொறு ஒழுக | ஏர் தரு கடு நீர்
தெருவு-தொறு ஒழுக |
| பேர் இசை
முழக்கமொடு சிறந்து நனி மயங்கி | பேர் இசை முழக்கமொடு
சிறந்து நனி மயங்கி |
| கூதிர்
நின்றன்றால் பொழுதே காதலர் | கூதிர் நின்றன்றால்
பொழுதே காதலர் |
| நம் நிலை
அறியார் ஆயினும் தம் நிலை | நம் நிலை அறியார்
ஆயினும் தம் நிலை |
| அறிந்தனர்-கொல்லோ
தாமே ஓங்கு நடை | அறிந்தனர்-கொல்லோ தாமே
ஓங்கு நடை |
| காய் சின யானை
கங்குல் சூழ | காய் சின யானை கங்குல்
சூழ |
| அஞ்சுவர இறுத்த
தானை | அஞ்சுவர இறுத்த தானை |
| வெம் சின
வேந்தன் பாசறையோரே | வெம் சின வேந்தன்
பாசறையோரே |
| | |
| #265 பாலை
மாமூலனார் | #265 பாலை மாமூலனார் |
| புகையின்
பொங்கி வியல் விசும்பு உகந்து | புகையின் பொங்கி வியல்
விசும்பு உகந்து |
| பனி ஊர் அழல்
கொடி கடுப்ப தோன்றும் | பனி ஊர் அழல் கொடி
கடுப்ப தோன்றும் |
| இமய செம் வரை
மானும்-கொல்லோ | இமய செம் வரை
மானும்-கொல்லோ |
| பல் புகழ்
நிறைந்த வெல் போர் நந்தர் | பல் புகழ் நிறைந்த
வெல் போர் நந்தர் |
| சீர் மிகு
பாடலி குழீஇ கங்கை | சீர் மிகு பாடலி குழீஇ
கங்கை |
| நீர் முதல்
கரந்த நிதியம்-கொல்லோ | நீர் முதல் கரந்த
நிதியம்-கொல்லோ |
| எவன்-கொல் வாழி
தோழி வயங்கு ஒளி | எவன்-கொல் வாழி தோழி
வயங்கு ஒளி |
| நிழல்_பால்
அறலின் நெறித்த கூந்தல் | நிழல்_பால் அறலின்
நெறித்த கூந்தல் |
| குழல் குரல்
பாவை இரங்க நம் துறந்து | குழல் குரல் பாவை
இரங்க நம் துறந்து |
| ஒண் தொடி நெகிழ
சாஅய் செல்லலொடு | ஒண் தொடி நெகிழ சாஅய்
செல்லலொடு |
| கண் பனி
கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து | கண் பனி கலுழ்ந்து
யாம் ஒழிய பொறை அடைந்து |
| இன் சிலை எழில்
ஏறு கெண்டி புரைய | இன் சிலை எழில் ஏறு
கெண்டி புரைய |
| நிணம் பொதி
விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து | நிணம் பொதி விழு தடி
நெருப்பின் வைத்து எடுத்து |
| அணங்கு அரு
மரபின் பேஎய் போல | அணங்கு அரு மரபின்
பேஎய் போல |
| விளர் ஊன்
தின்ற வேட்கை நீங்க | விளர் ஊன் தின்ற
வேட்கை நீங்க |
| துகள் அற
விளைந்த தோப்பி பருகி | துகள் அற விளைந்த
தோப்பி பருகி |
| குலாஅ வல் வில்
கொடு நோக்கு ஆடவர் | குலாஅ வல் வில் கொடு
நோக்கு ஆடவர் |
| புலாஅல் கையர்
பூசா வாயர் | புலாஅல் கையர் பூசா
வாயர் |
| ஒராஅ உருட்டும்
குடுமி குராலொடு | ஒராஅ உருட்டும் குடுமி
குராலொடு |
| மரா அம் சீறூர்
மருங்கில் தூங்கும் | மரா அம் சீறூர்
மருங்கில் தூங்கும் |
| செம் நுதல்
யானை வேங்கடம் தழீஇ | செம் நுதல் யானை
வேங்கடம் தழீஇ |
| வெம் முனை
அரும் சுரம் இறந்தோர் | வெம் முனை அரும் சுரம்
இறந்தோர் |
| நம்மினும்
வலிதா தூக்கிய பொருளே | நம்மினும் வலிதா
தூக்கிய பொருளே |
| | |
| #266 மருதம்
பரணர் | #266 மருதம் பரணர் |
| கோடு உற நிவந்த
நீடு இரும் பரப்பின் | கோடு உற நிவந்த நீடு
இரும் பரப்பின் |
| அந்தி பராஅய
புது புனல் நெருநை | அந்தி பராஅய புது
புனல் நெருநை |
| மைந்து மலி
களிற்றின் தலை புணை தழீஇ | மைந்து மலி களிற்றின்
தலை புணை தழீஇ |
| நரந்தம் நாறும்
குவை இரும் கூந்தல் | நரந்தம் நாறும் குவை
இரும் கூந்தல் |
| இளம் துணை
மகளிரொடு ஈர் அணி கலைஇ | இளம் துணை மகளிரொடு
ஈர் அணி கலைஇ |
| நீர் பெயர்ந்து
ஆடிய ஏந்து எழில் மழை கண் | நீர் பெயர்ந்து ஆடிய
ஏந்து எழில் மழை கண் |
| நோக்கு-தொறும்
நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி | நோக்கு-தொறும்
நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி |
| காமம் கைம்மிக
சிறத்தலின் நாண் இழந்து | காமம் கைம்மிக
சிறத்தலின் நாண் இழந்து |
| ஆடினை என்ப
மகிழ்ந அதுவே | ஆடினை என்ப மகிழ்ந
அதுவே |
| யாழ் இசை
மறுகின் நீடூர் கிழவோன் | யாழ் இசை மறுகின்
நீடூர் கிழவோன் |
| வாய் வாள்
எவ்வி ஏவல் மேவார் | வாய் வாள் எவ்வி ஏவல்
மேவார் |
| நெடு மிடல்
சாய்த்த பசும் பூண் பொருந்தலர் | நெடு மிடல் சாய்த்த
பசும் பூண் பொருந்தலர் |
| அரிமணவாயில்
உறத்தூர் ஆங்கண் | அரிமணவாயில் உறத்தூர்
ஆங்கண் |
| கள் உடை பெரும்
சோற்று எல் இமிழ் அன்ன | கள் உடை பெரும் சோற்று
எல் இமிழ் அன்ன |
| கவ்வை
ஆகின்றால் பெரிதே இனி அஃது | கவ்வை ஆகின்றால்
பெரிதே இனி அஃது |
| அவலம்
அன்று-மன் எமக்கே அயல | அவலம் அன்று-மன்
எமக்கே அயல |
| கழனி உழவர் கலி
சிறந்து எடுத்த | கழனி உழவர் கலி
சிறந்து எடுத்த |
| கறங்கு இசை
வெரீஇ பறந்த தோகை | கறங்கு இசை வெரீஇ
பறந்த தோகை |
| அணங்கு உடை
வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் | அணங்கு உடை
வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் |
| திரு மணி
விளக்கின் அலைவாய் | திரு மணி விளக்கின்
அலைவாய் |
| செரு மிகு
சேஎயொடு உற்ற சூளே | செரு மிகு சேஎயொடு
உற்ற சூளே |
| | |
| #267 பாலை பாலை
பாடிய பெருங்கடுங்கோ | #267 பாலை பாலை பாடிய
பெருங்கடுங்கோ |
| நெஞ்சு
நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து | நெஞ்சு நெகிழ்_தகுந
கூறி அன்பு கலந்து |
| அறாஅ வஞ்சினம்
செய்தோர் வினை புரிந்து | அறாஅ வஞ்சினம்
செய்தோர் வினை புரிந்து |
| திறம் வேறு
ஆகல் எற்று என்று ஒற்றி | திறம் வேறு ஆகல் எற்று
என்று ஒற்றி |
| இனைதல்
ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து | இனைதல் ஆன்றிசின் நீயே
சினை பாய்ந்து |
| உதிர்த்த கோடை
உட்கு வரு கடத்து இடை | உதிர்த்த கோடை உட்கு
வரு கடத்து இடை |
| வெருக்கு அடி
அன்ன குவி முகிழ் இருப்பை | வெருக்கு அடி அன்ன
குவி முகிழ் இருப்பை |
| மருப்பு
கடைந்து அன்ன கொள்ளை வான் பூ | மருப்பு கடைந்து அன்ன
கொள்ளை வான் பூ |
| மயிர் கால்
எண்கின் ஈர் இனம் கவர | மயிர் கால் எண்கின்
ஈர் இனம் கவர |
| மை பட்டு அன்ன
மா முக முசு இனம் | மை பட்டு அன்ன மா முக
முசு இனம் |
| பைது அறு
நெடும் கழை பாய்தலின் ஒய்யென | பைது அறு நெடும் கழை
பாய்தலின் ஒய்யென |
| வெதிர் படு
வெண்ணெல் வெ அறை தாஅய் | வெதிர் படு வெண்ணெல்
வெ அறை தாஅய் |
| உகிர் நெரி
ஓசையின் பொங்குவன பொரியும் | உகிர் நெரி ஓசையின்
பொங்குவன பொரியும் |
| ஓங்கல்
வெற்பின் சுரம் பல இறந்தோர் | ஓங்கல் வெற்பின் சுரம்
பல இறந்தோர் |
| தாம் பழி
உடையர் அல்லர் நாளும் | தாம் பழி உடையர்
அல்லர் நாளும் |
| நயந்தோர்
பிணித்தல் தேற்றா வயங்கு வினை | நயந்தோர் பிணித்தல்
தேற்றா வயங்கு வினை |
| வாள் ஏர் எல்
வளை நெகிழ்த்த | வாள் ஏர் எல் வளை
நெகிழ்த்த |
| தோளே தோழி தவறு
உடையவ்வே | தோளே தோழி தவறு
உடையவ்வே |
| | |
| #268 குறிஞ்சி
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | #268 குறிஞ்சி வடம
வண்ணக்கன் பேரி சாத்தனார் |
| அறியாய் வாழி
தோழி பொறி வரி | அறியாய் வாழி தோழி
பொறி வரி |
| பூ நுதல்
யானையொடு புலி பொர குழைந்த | பூ நுதல் யானையொடு
புலி பொர குழைந்த |
| குருதி செம்
களம் புலவு அற வேங்கை | குருதி செம் களம்
புலவு அற வேங்கை |
| உரு கெழு
நாற்றம் குளவியொடு விலங்கும் | உரு கெழு நாற்றம்
குளவியொடு விலங்கும் |
| மா மலை நாடனொடு
மறு இன்று ஆகிய | மா மலை நாடனொடு மறு
இன்று ஆகிய |
| காமம் கலந்த
காதல் உண்டு எனின் | காமம் கலந்த காதல்
உண்டு எனின் |
| நன்று-மன் அது
நீ நாடாய் கூறுதி | நன்று-மன் அது நீ
நாடாய் கூறுதி |
| நாணும் நட்பும்
இல்லோர் தேரின் | நாணும் நட்பும்
இல்லோர் தேரின் |
| யான் அலது
இல்லை இ உலகத்தானே | யான் அலது இல்லை இ
உலகத்தானே |
| இன் உயிர் அன்ன
நின்னொடும் சூழாது | இன் உயிர் அன்ன
நின்னொடும் சூழாது |
| முளை அணி
மூங்கிலின் கிளையொடு பொலிந்த | முளை அணி மூங்கிலின்
கிளையொடு பொலிந்த |
| பெரும் பெயர்
எந்தை அரும் கடி நீவி | பெரும் பெயர் எந்தை
அரும் கடி நீவி |
| செய்து பின்
இரங்கா வினையொடு | செய்து பின் இரங்கா
வினையொடு |
| மெய் அல்
பெரும் பழி எய்தினென் யானே | மெய் அல் பெரும் பழி
எய்தினென் யானே |
| | |
| #269 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #269 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
| தொடி தோள்
இவர்க எவ்வமும் தீர்க | தொடி தோள் இவர்க
எவ்வமும் தீர்க |
| நெறி இரும்
கதுப்பின் கோதையும் புனைக | நெறி இரும் கதுப்பின்
கோதையும் புனைக |
| ஏறு உடை இன
நிரை பெயர பெயராது | ஏறு உடை இன நிரை பெயர
பெயராது |
| செறி சுரை வெள்
வேல் மழவர் தாங்கிய | செறி சுரை வெள் வேல்
மழவர் தாங்கிய |
| தறுகணாளர் நல்
இசை நிறும்-மார் | தறுகணாளர் நல் இசை
நிறும்-மார் |
| பிடி மடிந்து
அன்ன குறும் பொறை மருங்கின் | பிடி மடிந்து அன்ன
குறும் பொறை மருங்கின் |
| நட்ட போலும்
நடாஅ நெடும் கல் | நட்ட போலும் நடாஅ
நெடும் கல் |
| அகல் இடம்
குயின்ற பல் பெயர் மண்ணி | அகல் இடம் குயின்ற பல்
பெயர் மண்ணி |
| நறு விரை
மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய | நறு விரை மஞ்சள் ஈர்ம்
புறம் பொலிய |
| அம்பு கொண்டு
அறுத்த ஆர் நார் உரிவையின் | அம்பு கொண்டு அறுத்த
ஆர் நார் உரிவையின் |
| செம் பூ கரந்தை
புனைந்த கண்ணி | செம் பூ கரந்தை
புனைந்த கண்ணி |
| வரி வண்டு
ஆர்ப்ப சூட்டி கழல் கால் | வரி வண்டு ஆர்ப்ப
சூட்டி கழல் கால் |
| இளையர் பதி
பெயரும் அரும் சுரம் இறந்தோர் | இளையர் பதி பெயரும்
அரும் சுரம் இறந்தோர் |
| தைஇ நின்ற தண்
பெயல் கடை நாள் | தைஇ நின்ற தண் பெயல்
கடை நாள் |
| பொலம் காசு
நிரைத்த கோடு ஏந்து அல்குல் | பொலம் காசு நிரைத்த
கோடு ஏந்து அல்குல் |
| நலம் கேழ் மா
குரல் குழையொடு துயல்வர | நலம் கேழ் மா குரல்
குழையொடு துயல்வர |
| பாடு ஊர்பு
எழுதரும் பகு வாய் மண்டிலத்து | பாடு ஊர்பு எழுதரும்
பகு வாய் மண்டிலத்து |
| வயிர்
இடைப்பட்ட தெள் விளி இயம்ப | வயிர் இடைப்பட்ட தெள்
விளி இயம்ப |
| வண்டல் பாவை
உண்துறை தரீஇ | வண்டல் பாவை உண்துறை
தரீஇ |
| திரு நுதல்
மகளிர் குரவை அயரும் | திரு நுதல் மகளிர்
குரவை அயரும் |
| பெரு_நீர்
கானல் தழீஇய இருக்கை | பெரு_நீர் கானல் தழீஇய
இருக்கை |
| வாணன் சிறுகுடி
வணங்கு கதிர் நெல்லின் | வாணன் சிறுகுடி வணங்கு
கதிர் நெல்லின் |
| யாணர் தண் பணை
போது வாய் அவிழ்ந்த | யாணர் தண் பணை போது
வாய் அவிழ்ந்த |
| ஒண்
செங்கழுநீர் அன்ன நின் | ஒண் செங்கழுநீர் அன்ன
நின் |
| கண் பனி
துடை-மார் வந்தனர் விரைந்தே | கண் பனி துடை-மார்
வந்தனர் விரைந்தே |
| | |
| #270 நெய்தல்
சாகலாசனார் | #270 நெய்தல்
சாகலாசனார் |
| இரும் கழி
மலர்ந்த வள் இதழ் நீலம் | இரும் கழி மலர்ந்த வள்
இதழ் நீலம் |
| புலாஅல்
மறுகின் சிறுகுடி பாக்கத்து | புலாஅல் மறுகின்
சிறுகுடி பாக்கத்து |
| இன மீன்
வேட்டுவர் ஞாழலொடு மிலையும் | இன மீன் வேட்டுவர்
ஞாழலொடு மிலையும் |
| மெல்லம்புலம்ப
நெகிழ்ந்தன தோளே | மெல்லம்புலம்ப
நெகிழ்ந்தன தோளே |
| சே இறா துழந்த
நுரை பிதிர் படு திரை | சே இறா துழந்த நுரை
பிதிர் படு திரை |
| பராஅரை புன்னை
வாங்கு சினை தோயும் | பராஅரை புன்னை வாங்கு
சினை தோயும் |
| கானல் அம்
பெரும் துறை நோக்கி இவளே | கானல் அம் பெரும் துறை
நோக்கி இவளே |
| கொய் சுவல்
புரவி கைவண் கோமான் | கொய் சுவல் புரவி
கைவண் கோமான் |
| நல் தேர்
குட்டுவன் கழுமலத்து அன்ன | நல் தேர் குட்டுவன்
கழுமலத்து அன்ன |
| அம் மா மேனி
தொல் நலம் தொலைய | அம் மா மேனி தொல் நலம்
தொலைய |
| துஞ்சா கண்ணள்
அலமரும் நீயே | துஞ்சா கண்ணள் அலமரும்
நீயே |
| கடவுள் மரத்த
முள் மிடை குடம்பை | கடவுள் மரத்த முள்
மிடை குடம்பை |
| சேவலொடு புணரா
சிறு கரும் பேடை | சேவலொடு புணரா சிறு
கரும் பேடை |
| இன்னாது
உயங்கும் கங்குலும் | இன்னாது உயங்கும்
கங்குலும் |
| நும் ஊர்
உள்ளுவை நோகோ யானே | நும் ஊர் உள்ளுவை நோகோ
யானே |
| | |
| | |
| | |
| | |
| | |
| #271 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் | #271 பாலை
காவிரிப்பூம்பட்டினத்து செங்கண்ணனார் |
| பொறி வரி
புறவின் செம் கால் சேவல் | பொறி வரி புறவின் செம்
கால் சேவல் |
| சிறு புன்
பெடையொடு சேண் புலம் போகி | சிறு புன் பெடையொடு
சேண் புலம் போகி |
| அரி மணல்
இயவில் பரல் தேர்ந்து உண்டு | அரி மணல் இயவில் பரல்
தேர்ந்து உண்டு |
| வரி மரல் வாடிய
வான் நீங்கு நனம் தலை | வரி மரல் வாடிய வான்
நீங்கு நனம் தலை |
| குறும் பொறை
மருங்கின் கோள் சுரம் நீந்தி | குறும் பொறை மருங்கின்
கோள் சுரம் நீந்தி |
| நெடும் சேண்
வந்த நீர் நசை வம்பலர் | நெடும் சேண் வந்த நீர்
நசை வம்பலர் |
| செல் உயிர்
நிறுத்த சுவை காய் நெல்லி | செல் உயிர் நிறுத்த
சுவை காய் நெல்லி |
| பல் காய் அம்
சினை அகவும் அத்தம் | பல் காய் அம் சினை
அகவும் அத்தம் |
| சென்று நீர்
அவணிர் ஆகி நின்று தரு | சென்று நீர் அவணிர்
ஆகி நின்று தரு |
| நிலை அரும்
பொருள்_பிணி நினைந்தனிர் எனினே | நிலை அரும்
பொருள்_பிணி நினைந்தனிர் எனினே |
| வல்வது ஆக நும்
செய்_வினை இவட்கே | வல்வது ஆக நும்
செய்_வினை இவட்கே |
| களி மலி
கள்ளின் நல் தேர் அவியன் | களி மலி கள்ளின் நல்
தேர் அவியன் |
| ஆடு இயல் இள
மழை சூடி தோன்றும் | ஆடு இயல் இள மழை சூடி
தோன்றும் |
| பழம் தூங்கு
விடர்_அகத்து எழுந்த காம்பின் | பழம் தூங்கு
விடர்_அகத்து எழுந்த காம்பின் |
| கண் இடை
புரையும் நெடு மென் பணை தோள் | கண் இடை புரையும் நெடு
மென் பணை தோள் |
| திருந்து கோல்
ஆய் தொடி ஞெகிழின் | திருந்து கோல் ஆய்
தொடி ஞெகிழின் |
| மருந்தும்
உண்டோ பிரிந்து உறை நாட்டே | மருந்தும் உண்டோ
பிரிந்து உறை நாட்டே |
| | |
| #272 குறிஞ்சி
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | #272 குறிஞ்சி மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார் |
| இரும் புலி
தொலைத்த பெரும் கை வேழத்து | இரும் புலி தொலைத்த
பெரும் கை வேழத்து |
| புலவு நாறு
புகர் நுதல் கழுவ கங்குல் | புலவு நாறு புகர்
நுதல் கழுவ கங்குல் |
| அருவி தந்த
அணங்கு உடை நெடும் கோட்டு | அருவி தந்த அணங்கு உடை
நெடும் கோட்டு |
| அஞ்சு வரு
விடர் முகை ஆர் இருள் அகற்றி | அஞ்சு வரு விடர் முகை
ஆர் இருள் அகற்றி |
| மின் ஒளிர்
எஃகம் செல் நெறி விளக்க | மின் ஒளிர் எஃகம் செல்
நெறி விளக்க |
| தனியன் வந்து
பனி அலை முனியான் | தனியன் வந்து பனி அலை
முனியான் |
| நீர் இழி
மருங்கின் ஆர் இடத்து அமன்ற | நீர் இழி மருங்கின்
ஆர் இடத்து அமன்ற |
| குளவியொடு
மிடைந்த கூதளம் கண்ணி | குளவியொடு மிடைந்த
கூதளம் கண்ணி |
| அசையா நாற்றம்
அசை வளி பகர | அசையா நாற்றம் அசை வளி
பகர |
| துறு கல்
நண்ணிய கறி இவர் படப்பை | துறு கல் நண்ணிய கறி
இவர் படப்பை |
| குறி இறை
குரம்பை நம் மனை_வயின் புகுதரும் | குறி இறை குரம்பை நம்
மனை_வயின் புகுதரும் |
| மெய் மலி
உவகையன் அ நிலை கண்டு | மெய் மலி உவகையன் அ
நிலை கண்டு |
| முருகு என
உணர்ந்து முகமன் கூறி | முருகு என உணர்ந்து
முகமன் கூறி |
| உருவ செந்தினை
நீரொடு தூஉய் | உருவ செந்தினை நீரொடு
தூஉய் |
| நெடுவேள்
பரவும் அன்னை அன்னோ | நெடுவேள் பரவும் அன்னை
அன்னோ |
| என் ஆவது-கொல்
தானே பொன் என | என் ஆவது-கொல் தானே
பொன் என |
| மலர்ந்த வேங்கை
அலங்கு சினை பொலிய | மலர்ந்த வேங்கை அலங்கு
சினை பொலிய |
| மணி நிற மஞ்ஞை
அகவும் | மணி நிற மஞ்ஞை அகவும் |
| அணி மலை
நாடனொடு அமைந்த நம் தொடர்பே | அணி மலை நாடனொடு
அமைந்த நம் தொடர்பே |
| | |
| #273 பாலை
ஔவையார் | #273 பாலை ஔவையார் |
| விசும்பு
விசைத்து எழுந்த கூதளம் கோதையின் | விசும்பு விசைத்து
எழுந்த கூதளம் கோதையின் |
| பசும் கால்
வெண்_குருகு வா பறை வளைஇ | பசும் கால்
வெண்_குருகு வா பறை வளைஇ |
| ஆர்கலி
வள_வயின் போதொடு பரப்ப | ஆர்கலி வள_வயின்
போதொடு பரப்ப |
| புலம் புனிறு
தீர்ந்த புது வரல் அற்சிரம் | புலம் புனிறு தீர்ந்த
புது வரல் அற்சிரம் |
| நலம் கவர் பசலை
நலியவும் நம் துயர் | நலம் கவர் பசலை
நலியவும் நம் துயர் |
| அறியார்-கொல்லோ
தாமே அறியினும் | அறியார்-கொல்லோ தாமே
அறியினும் |
| நம் மனத்து
அன்ன மென்மை இன்மையின் | நம் மனத்து அன்ன
மென்மை இன்மையின் |
| நம் உடை உலகம்
உள்ளார்-கொல்லோ | நம் உடை உலகம்
உள்ளார்-கொல்லோ |
| யாங்கு என
உணர்கோ யானே வீங்குபு | யாங்கு என உணர்கோ யானே
வீங்குபு |
| தலை வரம்பு
அறியா தகை வரல் வாடையொடு | தலை வரம்பு அறியா தகை
வரல் வாடையொடு |
| முலை இடை
தோன்றிய நோய் வளர் இள முளை | முலை இடை தோன்றிய நோய்
வளர் இள முளை |
| அசைவு உடை
நெஞ்சத்து உயவு திரள் நீடி | அசைவு உடை நெஞ்சத்து
உயவு திரள் நீடி |
| ஊரோர் எடுத்த
அம்பல் அம் சினை | ஊரோர் எடுத்த அம்பல்
அம் சினை |
| ஆரா காதல்
அவிர் தளிர் பரப்பி | ஆரா காதல் அவிர் தளிர்
பரப்பி |
| புலவர்
புகழ்ந்த நாண் இல் பெரு மரம் | புலவர் புகழ்ந்த நாண்
இல் பெரு மரம் |
| நில வரை
எல்லாம் நிழற்றி | நில வரை எல்லாம்
நிழற்றி |
| அலர் அரும்பு
ஊழ்ப்பவும் வாராதோரே | அலர் அரும்பு
ஊழ்ப்பவும் வாராதோரே |
| | |
| #274 முல்லை
இடை காடனார் | #274 முல்லை இடை
காடனார் |
| இரு விசும்பு
அதிர முழங்கி அர நலிந்து | இரு விசும்பு அதிர
முழங்கி அர நலிந்து |
| இகு பெயல் அழி
துளி தலைஇ வானம் | இகு பெயல் அழி துளி
தலைஇ வானம் |
| பருவம் செய்த
பானாள் கங்குல் | பருவம் செய்த பானாள்
கங்குல் |
| ஆடு தலை
துருவின் தோடு ஏமார்ப்ப | ஆடு தலை துருவின் தோடு
ஏமார்ப்ப |
| கடை_கோல் சிறு
தீ அடைய மாட்டி | கடை_கோல் சிறு தீ அடைய
மாட்டி |
| திண் கால்
உறியன் பானையன் அதளன் | திண் கால் உறியன்
பானையன் அதளன் |
| நுண் பல் துவலை
ஒரு திறம் நனைப்ப | நுண் பல் துவலை ஒரு
திறம் நனைப்ப |
| தண்டு கால்
ஊன்றிய தனி நிலை இடையன் | தண்டு கால் ஊன்றிய தனி
நிலை இடையன் |
| மடி விடு வீளை
கடிது சென்று இசைப்ப | மடி விடு வீளை கடிது
சென்று இசைப்ப |
| தெறி மறி
பார்க்கும் குறுநரி வெரீஇ | தெறி மறி பார்க்கும்
குறுநரி வெரீஇ |
| முள் உடை
குறும் தூறு இரிய போகும் | முள் உடை குறும் தூறு
இரிய போகும் |
| தண் நறு
புறவினதுவே நறு மலர் | தண் நறு புறவினதுவே
நறு மலர் |
| முல்லை சான்ற
கற்பின் | முல்லை சான்ற கற்பின் |
| மெல் இயல்
குறு_மகள் உறைவு இன் ஊரே | மெல் இயல் குறு_மகள்
உறைவு இன் ஊரே |
| | |
| #275 பாலை
கயமனார் | #275 பாலை கயமனார் |
| ஓங்கு நிலை
தாழி மல்க சார்த்தி | ஓங்கு நிலை தாழி மல்க
சார்த்தி |
| குடை அடை
நீரின் மடையினள் எடுத்த | குடை அடை நீரின்
மடையினள் எடுத்த |
| பந்தர் வயலை
பந்து எறிந்து ஆடி | பந்தர் வயலை பந்து
எறிந்து ஆடி |
| இளமை தகைமையை
வள மனை கிழத்தி | இளமை தகைமையை வள மனை
கிழத்தி |
| பிதிர்வை நீரை
வெண் நீறு ஆக என | பிதிர்வை நீரை வெண்
நீறு ஆக என |
| யாம் தன்
கழறும்_காலை தான் தன் | யாம் தன் கழறும்_காலை
தான் தன் |
| மழலை இன் சொல்
கழறல் இன்றி | மழலை இன் சொல் கழறல்
இன்றி |
| இன் உயிர்
கலப்ப கூறி நன்_நுதல் | இன் உயிர் கலப்ப கூறி
நன்_நுதல் |
| பெரும் சோற்று
இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் | பெரும் சோற்று
இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் |
| ஏதிலாளன் காதல்
நம்பி | ஏதிலாளன் காதல் நம்பி |
| திரள் அரை
இருப்பை தொள்ளை வான் பூ | திரள் அரை இருப்பை
தொள்ளை வான் பூ |
| குருளை எண்கின்
இரும் கிளை கவரும் | குருளை எண்கின் இரும்
கிளை கவரும் |
| வெம் மலை அரும்
சுரம் நம் இவண் ஒழிய | வெம் மலை அரும் சுரம்
நம் இவண் ஒழிய |
| இரு நிலன்
உயிர்க்கும் இன்னா கானம் | இரு நிலன் உயிர்க்கும்
இன்னா கானம் |
| நெருநை போகிய
பெரு மட தகுவி | நெருநை போகிய பெரு மட
தகுவி |
| ஐது அகல்
அல்குல் தழை அணி கூட்டும் | ஐது அகல் அல்குல் தழை
அணி கூட்டும் |
| கூழை நொச்சி
கீழது என் மகள் | கூழை நொச்சி கீழது என்
மகள் |
| செம் புடை சிறு
விரல் வரித்த | செம் புடை சிறு விரல்
வரித்த |
| வண்டலும்
காண்டிரோ கண் உடையீரே | வண்டலும் காண்டிரோ கண்
உடையீரே |
| | |