Select Page

கட்டுருபன்கள்


சோடாய் (1)

சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திட துறவு கண்டே வேடுவன் – குமரேச:87/1
மேல்

சோடு (1)

தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
மேல்

சோணாட்டு (1)

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மேல்

சோணாடு (2)

மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
மேல்

சோதரம் (1)

தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
மேல்

சோதரர்கள் (1)

கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும் – குமரேச:98/1
மேல்

சோதரன் (1)

சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன்
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/4,5
மேல்

சோதரா (1)

வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:93/7,8
மேல்

சோபிதம் (1)

பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மேல்

சோம்பல் (1)

சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்

சோம்பலொடு (1)

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/5
மேல்

சோமவாரம் (1)

தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம்
தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/1,2
மேல்

சோமுகன் (1)

பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
மேல்

சோர்வு (1)

சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மேல்

சோர்வுபடல் (1)

தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/4
மேல்

சோர (1)

சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதக பெண்கள் நிழலில் – குமரேச:38/1
மேல்

சோரருக்கு (1)

பயில் சோரருக்கு பிறந்திட தாம் பெற்ற பாலன் என்று உட்கருதியே – குமரேச:94/3
மேல்

சோலை (1)

சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
மேல்

சோலையில் (1)

மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் – குமரேச:85/1
மேல்

சோறு (1)

விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
மேல்