Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்கா 1
கங்காசலம்-தன்னில் 1
கங்காதரன் 1
கங்காளன் 1
கங்கை 2
கஞ்ச 1
கஞ்சன் 1
கட்செவி 1
கட்டார்கள் 1
கட்டி 1
கட்டிடில் 1
கட்டில் 1
கட்டிவைத்திடு 1
கட்டிவைத்து 1
கட்டிவைத்துளோர் 1
கட்டினும் 1
கட்டுவது 1
கட 1
கடக்கின்ற 1
கடத்துவித்தான் 1
கடந்திட்ட 1
கடப்ப 3
கடம்பு 1
கடல் 4
கடலில் 1
கடலுக்குள் 1
கடலும் 1
கடவுள் 2
கடவுளது 1
கடவுளை 1
கடன் 2
கடனிட்டு 1
கடா 3
கடாக்ஷம் 2
கடிதான 1
கடிமணம் 1
கடு 1
கடுகடுக்கின்ற 1
கடுகடுத்து 1
கடும் 2
கடுவையும் 1
கடைந்த 1
கடையும் 1
கண் 5
கண்டம் 1
கண்டவர்கள் 1
கண்டவுடன் 1
கண்டாய் 9
கண்டிடில் 1
கண்டு 10
கண்டே 1
கண்ணால் 1
கண்ணி 2
கணக்கில் 1
கணபதிக்கு 1
கணவருடை 1
கணவனே 2
கணவா 4
கணிகையானவள் 1
கணை 1
கதம் 1
கதி 1
கதித்திடு 1
கதிரவன் 1
கதை 3
கப்பல் 1
கப்பலில் 1
கப்பலும் 1
கம்ப 1
கம்பீரனே 1
கமரில் 1
கமல 2
கமலாசனம்-தன்னிலும் 1
கயவர் 2
கயவர்கள் 1
கயற்காக 1
கயிறா 1
கர்ப்பூர 1
கரடிமயிர்தான் 1
கரத்தில் 1
கரம் 1
கரி 3
கரிக்கு 1
கருடனால் 1
கருணீகர் 1
கருணையுடனே 1
கருணையொடு 1
கருத்தில் 1
கருத்தொடு 1
கருதலர்களால் 1
கருதிய 3
கருது 1
கருதும் 1
கருதுவது 1
கரும் 1
கரும்பும் 2
கருமங்கள் 1
கருமம் 1
கருவேல் 1
கரை 1
கரைகள் 1
கரைத்த 1
கல் 3
கல்யாணி 1
கல்லாது 1
கல்லினால் 1
கல்லை 1
கல்வி 6
கல்வியும் 2
கல்வியொடு 1
கலக்கி 1
கலகம் 1
கலவி 1
கலி 1
கலிகாலம் 1
கலை 1
கலைகள் 1
கலைமான் 1
கலையும் 1
கவர் 1
கவரிமான் 1
கவளம் 1
கவி 1
கவிக்கு 1
கவிஞர் 1
கவிஞனாம் 1
கவிதை 2
கவியே 1
கவியையும் 1
கவிவாணர் 1
கவிழ்த்திட்ட 1
கழுத்தில் 1
கழுதை 2
கழுதையும் 1
கழுதையை 1
களர் 1
களவான 1
களவில் 1
களவிலே 1
களவுசெய்யும் 1
களி 1
களிக்கும் 1
களித்து 1
களேபரம் 1
களை 2
களைதல் 1
களையை 1
கற்பவர்க்கு 1
கற்பான 1
கற்பினில் 2
கற்புடைமை 1
கற்புடைய 3
கற்பே 1
கற்ற 2
கற்று 2
கற்றும் 1
கற்றூண் 1
கற்றோர்கள் 1
கறி 2
கன்று 4
கன்னல் 1
கன்னன் 1
கன்னிகை 1
கன்னியர்-தமக்கு 1
கன 10
கனக 2
கனதை 4
கனதையும் 1
கனம் 2
கனமுற 1
கனவு 1
கனி 3

கங்கா (1)

கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும் – குமரேச:37/1
மேல்

கங்காசலம்-தன்னில் (1)

கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:48/3
மேல்

கங்காதரன் (1)

மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா – குமரேச:46/7
மேல்

கங்காளன் (1)

மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மேல்

கங்கை (2)

தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம் – குமரேச:26/1
கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

கஞ்ச (1)

மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
மேல்

கஞ்சன் (1)

சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும் – குமரேச:49/1
மேல்

கட்செவி (1)

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன் – குமரேச:81/2
மேல்

கட்டார்கள் (1)

சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
மேல்

கட்டி (1)

கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
மேல்

கட்டிடில் (1)

ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
மேல்

கட்டில் (1)

பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை – குமரேச:58/2
மேல்

கட்டிவைத்திடு (1)

கல்லாது புத்தகம்-தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு கல்வியும் – குமரேச:52/1
மேல்

கட்டிவைத்து (1)

கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/2
மேல்

கட்டிவைத்துளோர் (1)

அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர் – குமரேச:33/2
மேல்

கட்டினும் (1)

குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/4
மேல்

கட்டுவது (1)

மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மேல்

கட (1)

கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும் – குமரேச:37/1
மேல்

கடக்கின்ற (1)

கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

கடத்துவித்தான் (1)

அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான்
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/1,2
மேல்

கடந்திட்ட (1)

நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்

கடப்ப (3)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

கடம்பு (1)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
மேல்

கடல் (4)

தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும் – குமரேச:95/4
மேல்

கடலில் (1)

தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
மேல்

கடலுக்குள் (1)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
மேல்

கடலும் (1)

வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்

கடவுள் (2)

வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான் – குமரேச:102/4
மேல்

கடவுளது (1)

சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
மேல்

கடவுளை (1)

சற்குருவை நிந்தைசெய் காலம் மெய் கடவுளை சற்றும் எண்ணாத காலம் – குமரேச:59/2
மேல்

கடன் (2)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/3
கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் – குமரேச:25/1
மேல்

கடனிட்டு (1)

கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/3
மேல்

கடா (3)

கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில் – குமரேச:38/3
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா
சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் – குமரேச:42/5,6
மேல்

கடாக்ஷம் (2)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
மேல்

கடிதான (1)

கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை – குமரேச:14/4
மேல்

கடிமணம் (1)

கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
மேல்

கடு (1)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மேல்

கடுகடுக்கின்ற (1)

கடன் உதவுவோர் வந்து கேட்கும் வேளையில் முகம் கடுகடுக்கின்ற பேயும் – குமரேச:25/1
மேல்

கடுகடுத்து (1)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
மேல்

கடும் (2)

காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில் – குமரேச:38/4
மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
மேல்

கடுவையும் (1)

வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
மேல்

கடைந்த (1)

மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்

கடையும் (1)

மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

கண் (5)

இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ – குமரேச:39/5
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண் – குமரேச:91/1
தேவாலயம் சுற்றிடாத கால் என்ன கால் தெரிசியா கண் என்ன கண்
தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை – குமரேச:91/1,2
மேல்

கண்டம் (1)

தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/2
மேல்

கண்டவர்கள் (1)

கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
மேல்

கண்டவுடன் (1)

புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார் – குமரேச:36/4
மேல்

கண்டாய் (9)

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:34/7,8
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய்
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/6,7
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய்
மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/6,7
நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய்
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/6,7
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய்
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/6,7
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய்
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/6,7
தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய்
மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/6,7
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய்
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/6,7
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய்
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/6,7
மேல்

கண்டிடில் (1)

கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
மேல்

கண்டு (10)

தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/5
மேல்

கண்டே (1)

சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திட துறவு கண்டே வேடுவன் – குமரேச:87/1
மேல்

கண்ணால் (1)

மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மேல்

கண்ணி (2)

மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே – குமரேச:14/7
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
மேல்

கணக்கில் (1)

கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்

கணபதிக்கு (1)

கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான் – குமரேச:102/4
மேல்

கணவருடை (1)

கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
மேல்

கணவனே (2)

காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
மேல்

கணவா (4)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:57/7,8
வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:60/7,8
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:100/7,8
மேல்

கணிகையானவள் (1)

கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
மேல்

கணை (1)

தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
மேல்

கதம் (1)

கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
மேல்

கதி (1)

கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/2
மேல்

கதித்திடு (1)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
மேல்

கதிரவன் (1)

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
மேல்

கதை (3)

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
மேல்

கப்பல் (1)

தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல்
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/1,2
மேல்

கப்பலில் (1)

அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
மேல்

கப்பலும் (1)

சொல்லரிய காட்டுக்கு எரித்த நிலவும் கடல் சுழிக்குளே விடு கப்பலும்
விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/4,5
மேல்

கம்ப (1)

காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகர – குமரேச:1/3
மேல்

கம்பீரனே (1)

மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/7
மேல்

கமரில் (1)

அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

கமல (2)

சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை – குமரேச:91/2
மேல்

கமலாசனம்-தன்னிலும் (1)

கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/1,2
மேல்

கயவர் (2)

மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ – குமரேச:41/7
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மேல்

கயவர்கள் (1)

பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
மேல்

கயற்காக (1)

அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/2
மேல்

கயிறா (1)

மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ – குமரேச:41/7
மேல்

கர்ப்பூர (1)

உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
மேல்

கரடிமயிர்தான் (1)

திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/5,6
மேல்

கரத்தில் (1)

வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மேல்

கரம் (1)

இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
மேல்

கரி (3)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

கரிக்கு (1)

மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:மேல்

கருடனால் (1)

விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்

கருணீகர் (1)

அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
மேல்

கருணையுடனே (1)

கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/4
மேல்

கருணையொடு (1)

கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/3
மேல்

கருத்தில் (1)

கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்

கருத்தொடு (1)

கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
மேல்

கருதலர்களால் (1)

கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மேல்

கருதிய (3)

கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை – குமரேச:14/4
கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால் – குமரேச:32/1
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில் – குமரேச:38/3
மேல்

கருது (1)

கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேல்

கருதும் (1)

கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்

கருதுவது (1)

காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
மேல்

கரும் (1)

மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்

கரும்பும் (2)

பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும்
கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/2,3
ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/1,2
மேல்

கருமங்கள் (1)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
மேல்

கருமம் (1)

சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/5
மேல்

கருவேல் (1)

கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
மேல்

கரை (1)

தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்

கரைகள் (1)

ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
மேல்

கரைத்த (1)

அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும் – குமரேச:95/1
மேல்

கல் (3)

கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல்
அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/5,6
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்

கல்யாணி (1)

மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/7
மேல்

கல்லாது (1)

கல்லாது புத்தகம்-தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு கல்வியும் – குமரேச:52/1
மேல்

கல்லினால் (1)

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால் – குமரேச:32/1
மேல்

கல்லை (1)

அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்

கல்வி (6)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
சான்றவர்க்கு பொறுமையே பலம் புலவோர்-தமக்கு நிறை கல்வி பலமாம் – குமரேச:27/6
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம் – குமரேச:40/4
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
மேல்

கல்வியும் (2)

காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும்
விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/4,5
கல்லாது புத்தகம்-தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு கல்வியும்
காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/1,2
மேல்

கல்வியொடு (1)

கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம் – குமரேச:60/1
மேல்

கலக்கி (1)

ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
மேல்

கலகம் (1)

விடவிட பேசுவர் தாய் கலகம் மூட்டியே விட்டு துரத்திவிடுவார் – குமரேச:77/6
மேல்

கலவி (1)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
மேல்

கலி (1)

கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
மேல்

கலிகாலம் (1)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
மேல்

கலை (1)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
மேல்

கலைகள் (1)

தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
மேல்

கலைமான் (1)

நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

கலையும் (1)

நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
மேல்

கவர் (1)

மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
மேல்

கவரிமான் (1)

வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

கவளம் (1)

கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
மேல்

கவி (1)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
மேல்

கவிக்கு (1)

கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
மேல்

கவிஞர் (1)

கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர்
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/5,6
மேல்

கவிஞனாம் (1)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம்
ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/4,5
மேல்

கவிதை (2)

கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
மேல்

கவியே (1)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/4
மேல்

கவியையும் (1)

சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
மேல்

கவிவாணர் (1)

உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
மேல்

கவிழ்த்திட்ட (1)

அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

கழுத்தில் (1)

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்

கழுதை (2)

அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டி கடா – குமரேச:42/4,5
மேல்

கழுதையும் (1)

கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/3
மேல்

கழுதையை (1)

கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/2
மேல்

களர் (1)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
மேல்

களவான (1)

கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்

களவில் (1)

வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மேல்

களவிலே (1)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
மேல்

களவுசெய்யும் (1)

கைக்கு இனிய தொழிலாளியை கொண்ட அடிமையை களவுசெய்யும் திருடரை – குமரேச:14/3
மேல்

களி (1)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
மேல்

களிக்கும் (1)

பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
மேல்

களித்து (1)

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
மேல்

களேபரம் (1)

சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம் சுடு புகையில் நீசர் நிழலில் – குமரேச:38/2
மேல்

களை (2)

மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
மேல்

களைதல் (1)

பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல்
துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/4,5
மேல்

களையை (1)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை
அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/1,2
மேல்

கற்பவர்க்கு (1)

தானம் மிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை-தனில் நினைவு கற்பவர்க்கு
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/5,6
மேல்

கற்பான (1)

கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
மேல்

கற்பினில் (2)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
மேல்

கற்புடைமை (1)

கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
மேல்

கற்புடைய (3)

காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

கற்பே (1)

மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மேல்

கற்ற (2)

கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
மேல்

கற்று (2)

காலமது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் – குமரேச:51/4
கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
மேல்

கற்றும் (1)

கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/5
மேல்

கற்றூண் (1)

கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது – குமரேச:68/1
மேல்

கற்றோர்கள் (1)

சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/6
மேல்

கறி (2)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
மேல்

கன்று (4)

அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/3
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மேல்

கன்னல் (1)

கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

கன்னன் (1)

தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன்
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/4,5
மேல்

கன்னிகை (1)

மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
மேல்

கன்னியர்-தமக்கு (1)

கன்னியர்-தமக்கு உறுதி கற்புடைமை சொற்கு உறுதி கண்டிடில் சத்ய வசனம் – குமரேச:78/2
மேல்

கன (10)

காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார் – குமரேச:6/6
மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/5
பதராகிலும் கன விபூதி விளைவிக்கும் பழைமை பெறு சுவராகிலும் – குமரேச:35/1
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது – குமரேச:68/1
கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மேல்

கனக (2)

காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

கனதை (4)

சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
மேல்

கனதையும் (1)

ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் – குமரேச:49/5
மேல்

கனம் (2)

கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
மேல்

கனமுற (1)

கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம் – குமரேச:60/1
மேல்

கனவு (1)

மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மேல்

கனி (3)

கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும் – குமரேச:18/3
கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா – குமரேச:93/7
மேல்