Select Page

கட்டுருபன்கள்


ஐந்தில் (2)

இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/2
மேல்

ஐந்திலக்கணத்தில் (1)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
மேல்

ஐந்து (6)

மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும் – குசேலோ:1 46/2
கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீ குலவ – குசேலோ:2 370/4
மேல்

ஐந்தும் (6)

கற்ற தவம் போல் அவமே பெருக்குவது ஞானம் அன்று கந்தம் ஐந்தும்
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/2,3
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/4
வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும்
பொருவு_இல் ஆனந்தம் எய்த பொலி கட தீபம் போன்றான் – குசேலோ:2 413/3,4
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும்
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/3,4
சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும்
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/3,4
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
மேல்

ஐந்நூற்று (1)

மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று
காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/3,4
மேல்

ஐந்நூறு (1)

கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/3
மேல்

ஐம் (1)

துலங்குற விரும்பி சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி – குசேலோ:3 699/4
மேல்

ஐம்படை (3)

தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலா சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும் – குசேலோ:1 149/2
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
ஏண் உடை பரசிராம ஐம்படை கை இறையவ நின் அடி போற்றி – குசேலோ:3 667/4
மேல்

ஐம்புலன் (1)

துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
மேல்

ஐம்புலன்களையும் (1)

உடல் முன் பொறிகள் தமக்கு உரிய ஊறு முதல் ஐம்புலன்களையும்
அடல் நல் தொழில் அ புலன் நிமித்தம் ஆக படைத்த அனைத்தினையும் – குசேலோ:3 644/1,2
மேல்

ஐய (14)

அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும் – குசேலோ:1 159/3
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
ஐய நுண் இடை அயில் அலைத்து அமர்த்திடும் அரி கண் – குசேலோ:2 354/1
ஐய செம் மணி படி ஒளி கதிர்த்தலால் அல்லும் – குசேலோ:2 363/2
ஆதி நாள் ஐய நின்னோடு அரும் கலை கற்றுளானாம் – குசேலோ:2 383/1
பன்ன அரும் களிப்பை யாமோ பகர்ந்திட வல்லம் ஐய
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/2,3
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை – குசேலோ:2 434/1
ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி – குசேலோ:2 482/3
ஐய அதனுக்கு உளம் நடுங்கி அஞ்சி காத்தல் அறிஞர் தொழில் – குசேலோ:3 655/4
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/4
ஆதலால் ஐய இந்த அநித்திய செல்வம் வேண்டேன் – குசேலோ:3 730/1
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய
உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணராநிற்கும் – குசேலோ:3 732/2,3
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
மேல்

ஐயம் (2)

அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
அளவையே எல்லா பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால் – குசேலோ:1 91/2
மேல்

ஐயர் (1)

தம் ஐயர் தாயர் என்று ஏதிலர் தழீஇ பிறப்பர் அன்றே – குசேலோ:1 123/4
மேல்

ஐயவி (1)

அறையை நேர் ததி ஐயவி அளாவிய கறியும் – குசேலோ:3 635/1
மேல்

ஐயன் (8)

எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
வேதம் முற்று உணர்ந்த ஐயன் விரைதர நடக்கலுற்றான் – குசேலோ:2 392/4
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன்
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும் – குசேலோ:2 398/1,2
திலகம் மண் தோய ஐயன் திருவடி வணங்கி பின்னர் – குசேலோ:2 404/1
சித்தம் விட்டு அகலாது ஐயன் திருவுரு தியானம்செய்து – குசேலோ:2 411/3
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல் – குசேலோ:2 475/3
அல் படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ – குசேலோ:3 543/4
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில் – குசேலோ:3 545/3
மேல்

ஐயன்-தன்னையும் (1)

தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான் – குசேலோ:2 414/4
மேல்

ஐயனே (1)

அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர் – குசேலோ:0 4/3
மேல்

ஐயைந்தில் (1)

செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/4
மேல்

ஐயோ (1)

ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என – குசேலோ:2 467/3
மேல்

ஐவரால் (1)

திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
மேல்