Select Page

கட்டுருபன்கள்


ஓங்கு (1)

உடையாள் அகிலேசர்க்கு ஓங்கு முலை கோட்டின் – காசி:2 2/1
மேல்

ஓசை (1)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/1,2
மேல்

ஓட்டினில் (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
மேல்

ஓட்டினையும் (1)

ஓட்டினையும் பொன் ஆக்கினோம் – காசி:8 36/4
மேல்

ஓட்டெடுப்ப (1)

உண் நஞ்சு அனத்துக்கும் அஞ்சவைத்தார் உம்பர் ஓட்டெடுப்ப
பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/2,3
மேல்

ஓட (1)

கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/3,4
மேல்

ஓடி (4)

பொருப்பாளர் ஓடி திரிவது அல்லால் இ புவனங்களை – காசி:4 8/2
வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
தான் என்றவர் முன் ஒளித்து ஓடி தன்னை இழந்தவர் முன் – காசி:17 83/1
மேல்

ஓடியோடி (1)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி
பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/3,4
மேல்

ஓடு (2)

உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
முத்திக்கு வேட்டவர் மோட்டு உடல் பாரம் முடை தலை ஓடு
அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால் – காசி:17 81/1,2
மேல்

ஓடும் (1)

கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
மேல்

ஓத (1)

எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத
துண்ணென்று வருவர் என துணிந்தனளோ அறியேன் இ தோகைதானே – காசி:4 9/3,4
மேல்

ஓதியோதி (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

ஓதீர் (1)

காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
மேல்

ஓம்பினரால் (1)

அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால் – காசி:17 81/2
மேல்

ஓம்புக (1)

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்

ஓயிலே (1)

கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
மேல்

ஓர் (18)

ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/4
ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/14
எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை – காசி:2 1/35
எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே – காசி:2 1/56
விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே – காசி:2 1/58
அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும் – காசி:4 8/3
உருகும் பசும்பொன்னுக்கு ஓர் மாற்று உண்டேல் உரையாய் தொடுத்து – காசி:6 25/2
ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும் – காசி:8 37/33
ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
முத்தாடி மடித்தலத்து ஓர் இளம் சேயை உலகு ஈன்ற முதல்வியோடும் – காசி:16 71/1
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர்
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/3,4
மேல்

ஓர்கிலார் (1)

சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார்
தோட்டு இளம் கொன்றை சூடி பொன் அம்பலத்து – காசி:15 65/2,3
மேல்

ஓலம் (2)

இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
மேல்

ஓலமிட்டு (1)

இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/4
மேல்

ஓலமிட (2)

இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
மேல்