Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 2
ஆக்கி 2
ஆக்கினோம் 1
ஆக்கும் 1
ஆகத்து 1
ஆகம் 3
ஆகமே 1
ஆகி 1
ஆங்கு 4
ஆசை 1
ஆட்கொண்ட 1
ஆட்கொள 1
ஆட்டு 1
ஆட 4
ஆடக 1
ஆடகம் 1
ஆடல்செய்திடும் 1
ஆடிய 1
ஆடினும் 1
ஆடு 2
ஆடுக 2
ஆடும் 8
ஆடுவீர் 4
ஆடை 1
ஆண்ட 4
ஆண்டகையார் 1
ஆண்டு 2
ஆண்மை 1
ஆணொடு 1
ஆதி 1
ஆதியார் 1
ஆம் 7
ஆம்பி 1
ஆமாகில் 1
ஆமோ 2
ஆயினான் 1
ஆயினேம் 1
ஆயினை 2
ஆர் 11
ஆர்க்கும் 2
ஆர்த்து 1
ஆர்த்துநின்று 1
ஆலயம் 1
ஆலயமே 1
ஆவது 1
ஆவதும் 2
ஆவி 4
ஆழியும் 1
ஆள் 1
ஆளும் 1
ஆற்றாது 1
ஆறு 2
ஆறே 2
ஆன் 1
ஆன 1
ஆனதால் 2
ஆனந்த 9
ஆனந்தம் 1
ஆனந்தவன 1
ஆனந்தவனத்தில் 1
ஆனந்தவனத்து 2
ஆனந்தவனத்தே 1
ஆனார் 2
ஆனால் 1
ஆனை 1

ஆ (2)

வாகை முடித்திடவும் வல்லனே ஆ கெடுவீர் – காசி:4 10/2
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
மேல்

ஆக்கி (2)

ஆடகம் ஆக்கி கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல் – காசி:8 36/2
காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்

ஆக்கினோம் (1)

ஓட்டினையும் பொன் ஆக்கினோம் – காசி:8 36/4
மேல்

ஆக்கும் (1)

அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
மேல்

ஆகத்து (1)

அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/2
மேல்

ஆகம் (3)

இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம்
சகம் ஏழும் ஈன்றெடுத்த தாயே மிக மேவும் – காசி:6 32/1,2
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம்
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/1,2
மேல்

ஆகமே (1)

வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே
மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/3,4
மேல்

ஆகி (1)

சில பகல் யானும் நின் நிலைமையன் ஆகி
நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப – காசி:15 57/8,9
மேல்

ஆங்கு (4)

என ஆங்கு – காசி:2 1/61
குரை புனல் கங்கை கரை வழி சென்று ஆங்கு
தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில் – காசி:15 57/23,24
வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள் – காசி:18 100/2
அம் செவி மடுத்து ஆங்கு அளித்தனன் அதனால் – காசி:18 100/22
மேல்

ஆசை (1)

பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
மேல்

ஆட்கொண்ட (1)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
மேல்

ஆட்கொள (1)

அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
மேல்

ஆட்டு (1)

ஆட்டு உவந்த அவிமுத்த_வாணரே – காசி:15 65/4
மேல்

ஆட (4)

வழங்கு பரமானந்த மா கடலில் திளைத்து ஆட
உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை – காசி:2 1/10,11
பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
மேல்

ஆடக (1)

அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
மேல்

ஆடகம் (1)

ஆடகம் ஆக்கி கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல் – காசி:8 36/2
மேல்

ஆடல்செய்திடும் (1)

ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
மேல்

ஆடிய (1)

முழை கரும் புற்று அரவு ஆட நின்று ஆடிய முக்கணனே – காசி:17 74/4
மேல்

ஆடினும் (1)

பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயொடு ஆடினும் ஆட பெறுதுமே – காசி:5 16/4
மேல்

ஆடு (2)

கொத்து ஆடு சடையொடும் ஆனந்தவனத்தே குறும் தாள் நெடும் பூதத்தோடு – காசி:16 71/3
ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/2
மேல்

ஆடுக (2)

அடங்காத உண்கணீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/4
அம் பொன் மலர் கொம்பு_அன்னீர் ஆடுக பொன் ஊசல் – காசி:14 51/5
மேல்

ஆடும் (8)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
கொழுத்த தமிழால் பாடி துளசி மணி தரித்து ஆடும் கொற்றியாரே – காசி:6 21/2
கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும்
மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/1,2
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
கொள்ள திளைத்து ஆடும் கூடாதேல் இ பிறவி – காசி:17 85/3
மேல்

ஆடுவீர் (4)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர்
வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர் – காசி:5 15/2,3
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
வெள்ளத்து இளைத்து ஆடுவீர் – காசி:17 85/4
மேல்

ஆடை (1)

நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான – காசி:2 1/1
மேல்

ஆண்ட (4)

வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த – காசி:12 48/2
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட – காசி:17 79/2
முகில் ஆண்ட சோலை அவிமுத்தா நகில் ஆண்ட
சின்னஇடைப்பாகா திரு நயனம் செங்கமலம் – காசி:17 79/2,3
மேல்

ஆண்டகையார் (1)

அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
மேல்

ஆண்டு (2)

பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
சில் ஆண்டு இருந்து சிவமாய் செலும் சிறு செந்துக்களே – காசி:12 48/4
மேல்

ஆண்மை (1)

மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

ஆணொடு (1)

ஆணொடு பெண் உரு அமைத்து நின்றனை – காசி:2 1/33
மேல்

ஆதி (1)

அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
மேல்

ஆதியார் (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

ஆம் (7)

தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம்
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற – காசி:4 7/2,3
நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம்
உகுமேல் உயிர் காசி உத்தமரை காண – காசி:14 54/2,3
உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம்
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/2,3
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம்
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/2,3
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/4
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம்
நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா – காசி:18 98/2,3
மேல்

ஆம்பி (1)

சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த – காசி:15 57/15
மேல்

ஆமாகில் (1)

சிலை மதனை கண் அழலால் செற்றனரே ஆமாகில்
மலை_மகட்கு பாகம் வழங்குவது ஏன் அம்மானை – காசி:7 33/3,4
மேல்

ஆமோ (2)

ஆமோ அவிமுத்தத்து ஐயரே பெண்பழி வீண் – காசி:14 55/1
போமோ வயிரவர்-தம் சாதனமும் பொய் ஆமோ
தேம் மோது கொன்றை செழும் தாமம் நல்கா நீர்தாமோ – காசி:14 55/2,3
மேல்

ஆயினான் (1)

மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/2
மேல்

ஆயினேம் (1)

முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/4
மேல்

ஆயினை (2)

ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை – காசி:2 1/52
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை – காசி:2 1/52
மேல்

ஆர் (11)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/3
புயல் ஆர் பொழில் காசி பூம் கோயில் மேய – காசி:4 5/1
கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/4
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர்
நிரை வளை கையார் நகைக்கு நேரா கரையில் – காசி:4 13/1,2
ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர்
வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/2,3
செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/2
அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர – காசி:5 19/3
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து – காசி:9 40/3
அண்ணல் ஆர் அவிமுத்தமே – காசி:16 70/4
மேல்

ஆர்க்கும் (2)

ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன – காசி:8 37/18
மேல்

ஆர்த்து (1)

பெரு மகிழ் சிறப்ப குரவையிட்டு ஆர்த்து
வெள் எயிறு இலங்க விரைவில் சிரித்து என – காசி:8 37/12,13
மேல்

ஆர்த்துநின்று (1)

பெண் அஞ்ச நச்சு அரவு ஆர்த்துநின்று ஆடும் அ பிஞ்ஞகரே – காசி:17 75/4
மேல்

ஆலயம் (1)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
மேல்

ஆலயமே (1)

தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே
அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/2,3
மேல்

ஆவது (1)

கோரம் என்பது கொண்டிருந்து ஆவது என் – காசி:17 86/2
மேல்

ஆவதும் (2)

சொல் ஆவதும் மறையே சொல்லுவது நல் அறமே – காசி:5 19/1
இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே – காசி:5 19/2
மேல்

ஆவி (4)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி
உய்ய துதியார் உதிப்பார் துதிப்பாரேல் – காசி:4 5/2,3
சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
கண்ணொடு ஆவி கருத்துமாய் – காசி:16 70/1
தொடுத்த வளையும் கைவளையும் துறந்தாள் ஆவி துறந்தாலும் – காசி:17 93/2
மேல்

ஆழியும் (1)

பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
மேல்

ஆள் (1)

ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
மேல்

ஆளும் (1)

சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசி திருநாடு ஆளும்
மறை விரிக்கும் சிலம்பு_அடியார் திரள் புயத்து புரளும் நறு மலர் பூம் கொன்றை – காசி:15 58/1,2
மேல்

ஆற்றாது (1)

கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது
உமிழ்தரு குருதி திரள் தெறித்தாங்கு – காசி:18 100/6,7
மேல்

ஆறு (2)

ஆறு அணிந்தனை மால் தணிந்தனை – காசி:2 1/46
அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக – காசி:15 57/19
மேல்

ஆறே (2)

தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே – காசி:15 60/4
மேல்

ஆன் (1)

குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்

ஆன (1)

அகிலாண்டமாய் அகண்டம் ஆன அகிலேசா – காசி:17 79/1
மேல்

ஆனதால் (2)

நகரமாய் மறை சிகரம் ஆனதால்
மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/1,2
நண்ணும் மா நகர் ஆனதால்
அண்ணல் ஆர் அவிமுத்தமே – காசி:16 70/3,4
மேல்

ஆனந்த (9)

அடிகள் அடியார்க்கு அளிப்பது ஆனந்த பெரு வாழ்வே – காசி:2 1/18
எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
ஆனந்த வல்லியுடன் ஆனந்த கானகத்தே – காசி:17 85/1
ஆனந்த வல்லியுடன் ஆனந்த கானகத்தே – காசி:17 85/1
ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/2
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்

ஆனந்தம் (1)

ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம்
கொள்ள திளைத்து ஆடும் கூடாதேல் இ பிறவி – காசி:17 85/2,3
மேல்

ஆனந்தவன (1)

உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
மேல்

ஆனந்தவனத்தில் (1)

வையம் முழுது ஒருங்கு ஈன்ற இடப்பாகர் ஆனந்தவனத்தில் வாழும் – காசி:11 44/1
மேல்

ஆனந்தவனத்து (2)

தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/2
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
மேல்

ஆனந்தவனத்தே (1)

கொத்து ஆடு சடையொடும் ஆனந்தவனத்தே குறும் தாள் நெடும் பூதத்தோடு – காசி:16 71/3
மேல்

ஆனார் (2)

ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார்
திரம் தாம் அத்தை என புகலீர் ஏந்திழையீரே – காசி:14 56/3,4
மேல்

ஆனால் (1)

வழங்காரோ அப்பாலும் மால் ஆனால் அம்மானை – காசி:7 33/5
மேல்

ஆனை (1)

ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/4
மேல்