கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேசுவது 1
பேணும் 1
பேதைமையினால் 1
பேய் 22
பேய்க்கு 8
பேய்க்கும் 1
பேய்கள் 5
பேய்களா 1
பேய்களின் 1
பேய்களை 1
பேய்காள் 1
பேய்த்தேர் 1
பேயின் 3
பேயினை 1
பேயும் 1
பேயை 4
பேர் 5
பேராறும் 1
பேறு 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
பேசுவது (1)
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ – கலிங்:391/1
பேணும் (1)
பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரை – கலிங்:65/1
பேதைமையினால் (1)
நின்னுடைய பேதைமையினால் உரைசெய்தாய் இது நினைப்பளவில் வெல்ல அரிதோ – கலிங்:392/2
பேய் (22)
நிலம் புடைபேர்ந்து ஓடாமே நெடு மோடி நிறுத்திய பேய்
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால் – கலிங்:88/1,2
வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல் – கலிங்:89/1
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே – கலிங்:113/2
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் – கலிங்:117/2
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் – கலிங்:144/1
கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/2
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை – கலிங்:154/1
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே – கலிங்:156/2
அ பேயின் ஒரு முது பேய் வந்து நின்று இங்கு அடியேனை விண்ணப்பம் செய்க என்றது – கலிங்:158/1
இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே – கலிங்:158/2
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் – கலிங்:167/2
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல் – கலிங்:168/1
கயிற்று உறி ஒப்பதொர் பேய் வறிதே உடல் கௌவினது ஒக்க விரைந்து – கலிங்:171/1
அன்று இமய வெற்பினிடை நின்ற வரும் அ பேய் – கலிங்:220/2
நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம் – கலிங்:226/2
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய்
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/1,2
கவந்தம் ஆட முன்பு தம் களிப்பொடு ஆடு பேய் இனம் – கலிங்:432/1
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற – கலிங்:567/1
ஊண் ஆதரிக்கும் கள்ள பேய் ஒளித்து கொண்ட கலம் தடவி – கலிங்:569/1
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/2
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:570/2
பேய்க்கு (8)
பவதி பிட்சாந்தேகி எனும் பனவ பேய்க்கு வாரீரே – கலிங்:565/2
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே – கலிங்:568/2
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே – கலிங்:571/2
எல்லாம் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே – கலிங்:572/2
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே – கலிங்:573/2
குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே – கலிங்:575/2
இரவு கனவு கண்ட பேய்க்கு இற்றைக்கு அன்றி நாளைக்கும் – கலிங்:576/1
பேய்க்கும் (1)
கணக்க பேய்க்கும் அகம் களிக்க கையால் எடுத்து வாரீரே – கலிங்:577/2
பேய்கள் (5)
கார் இரும்பின் மகர தோரணம் ஆக கரும் பேய்கள்
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே – கலிங்:105/1,2
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் – கலிங்:167/2
எயிற்றை அதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல் விழவே – கலிங்:171/2
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே – கலிங்:564/2
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண – கலிங்:566/1
பேய்களா (1)
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/2
பேய்களின் (1)
ஆடி வரு பேய்களின் அலந்தலை தவிர்த்து அடு பறந்தலை அறிந்து அதனின்-நின்று – கலிங்:311/1
பேய்களை (1)
சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே – கலிங்:308/2
பேய்காள் (1)
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே – கலிங்:584/2
பேய்த்தேர் (1)
விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர் அ நீர் – கலிங்:90/1
பேயின் (3)
கள போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிண கூழ் கள பேயின்
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் – கலிங்:75/1,2
அ பேயின் ஒரு முது பேய் வந்து நின்று இங்கு அடியேனை விண்ணப்பம் செய்க என்றது – கலிங்:158/1
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே – கலிங்:308/1
பேயினை (1)
கனா உரைத்த பேயினை கழுத்தினில் கொடு ஆடுமே – கலிங்:310/2
பேயும் (1)
பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ – கலிங்:120/2
பேயை (4)
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/1,2
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/2
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே – கலிங்:311/2
வரு கூழ் பரணி களம் கண்டு வந்த பேயை முன் ஊட்டி – கலிங்:575/1
பேர் (5)
பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க – கலிங்:7/1
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர்
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக – கலிங்:369/1,2
கலிங்கம் அவை ஏழினும் எழுந்தது ஒரு பேர் ஒலி கறங்கு கடல் ஏழும் உடனே – கலிங்:395/1
மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே – கலிங்:395/2
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின் – கலிங்:556/1
பேராறும் (1)
பெயல் ஆறு பரந்து நிறைந்து வரும் பேராறும் இழிந்தது பிற்படவே – கலிங்:368/2
பேறு (1)
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/2