Select Page

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


தெண் (1)

குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் – கலிங்:202/2

மேல்


தெய்வ (3)

செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் – கலிங்:15/1
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை – கலிங்:177/1
கடல் கலிங்கம் எறிந்து சயத்தம்பம் நாட்டி கட கரியும் குவி தனமும் கவர்ந்து தெய்வ
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே – கலிங்:471/1,2

மேல்


தெரிந்து (2)

பழகினார் தெரிந்து உரைத்த பழுது அறு நாள் பழுது அற்ற பொழுதத்து ஆங்கே – கலிங்:280/2
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத – கலிங்:591/1

மேல்


தெரிய (2)

தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/2
செறியும் அடவியிலோ கரந்தது தெரிய அரியது எனா அடங்கவே – கலிங்:449/2

மேல்


தெரிவித்தே (1)

தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/2

மேல்


தெரிவைமீர் (2)

திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:46/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:70/2

மேல்


தெலுங்கரேம் (1)

சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள் – கலிங்:469/1

மேல்


தெவ்வர் (2)

அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் – கலிங்:465/2
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலை ஆடிய வலி பாடீரே – கலிங்:532/2

மேல்


தெழி (1)

செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே – கலிங்:405/2

மேல்


தெழித்த (1)

தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/2

மேல்


தெழித்தது (1)

செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே – கலிங்:405/2

மேல்


தெளி (1)

சேனை மீதும் ஒரு சேனை வருகின்றது எனவே தெளி படைக்கலன் நிலா ஒளி படைத்து வரவே – கலிங்:288/2

மேல்


தெளித்து (2)

பரிவு இருத்தி அலகிட்டு பசும் குருதி நீர் தெளித்து நிண பூ சிந்தி – கலிங்:108/1
நீரும் தெளித்து கலம் வைக்க நிலமே சமைத்து கொள்ளீரே – கலிங்:557/2

மேல்


தெளிவு (1)

பண்டு வசுதேவன் மகன் ஆகி நில மாதின் படர் களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்த – கலிங்:240/1

மேல்


தெளிவுறாது (1)

நனவினில் சயதரன் புணரவே பெறினும் நீர் நனவு என தெளிவுறாது அதனையும் பழைய அ – கலிங்:35/1

மேல்


தெற்றி (1)

கயிறுகள் இவை என அ கரட கரி கரமொடு கரம் எதிர் தெற்றி வலிக்கவே – கலிங்:414/2

மேல்


தெறிக்க (1)

ஓடி தெறிக்க கரும் கொண்டல் செம் கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்-மின்களோ – கலிங்:485/2

மேல்


தெறித்த (1)

வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே – கலிங்:405/1

மேல்


தெறித்து (2)

குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் – கலிங்:147/2
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே – கலிங்:411/2

மேல்


தெறிப்ப (1)

வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் – கலிங்:93/1

மேல்


தென் (3)

சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே – கலிங்:152/1
தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் – கலிங்:257/2
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் – கலிங்:299/1

மேல்


தென்குட (1)

செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/2

மேல்


தென்றல் (1)

திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே – கலிங்:298/2

மேல்


தென்னர் (3)

முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் – கலிங்:95/1
தென்னர் ஆதி நராதிபர் ஆனவர் தேவிமார்கள் தன் சேடியர் ஆகவே – கலிங்:326/1
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே – கலிங்:529/2

மேல்


தென்னவர் (2)

பண்டு தென்னவர் சாய அதற்கு முன் பணி செய் பூத கணங்கள் அனைத்தையும் – கலிங்:150/1
தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே – கலிங்:329/1

மேல்