Select Page

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கூகை (1)

வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் – கலிங்:78/1

மேல்


கூட (1)

வாழ அபயம் புகுது சேரனொடு கூட மலைநாடு அடைய வந்தது எனவே – கலிங்:297/2

மேல்


கூடத்தே (1)

தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே
அனைத்து உலகும் கவித்தது என கவித்து நிற்கும் அருள் கவிகை கலி பகைஞன் வாழ்க என்றே – கலிங்:10/1,2

மேல்


கூடம் (1)

குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ – கலிங்:497/2

மேல்


கூடல் (2)

மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே – கலிங்:51/1
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை – கலிங்:206/1

மேல்


கூடலில் (1)

அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால் – கலிங்:32/1

மேல்


கூடலும் (1)

ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் – கலிங்:200/2

மேல்


கூடி (1)

கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ – கலிங்:230/2

மேல்


கூடிய (2)

கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது – கலிங்:24/1
கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2

மேல்


கூடு (1)

கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ – கலிங்:230/2

மேல்


கூடுதலின் (1)

ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை – கலிங்:70/1

மேல்


கூடும் (1)

கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக – கலிங்:62/1

மேல்


கூடை (1)

விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு – கலிங்:547/1

மேல்


கூத்தி (1)

குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2

மேல்


கூபகர் (1)

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே – கலிங்:329/1

மேல்


கூர் (2)

கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2
குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே – கலிங்:431/2

மேல்


கூர்தரு (1)

காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் – கலிங்:186/2

மேல்


கூர்ந்து (1)

நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் – கலிங்:482/2

மேல்


கூர (1)

தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் – கலிங்:83/1

மேல்


கூரெயிறீ (1)

குறு மோடீ நெடு நிணமாலாய் குடை கலதீ கூரெயிறீ நீலி – கலிங்:504/1

மேல்


கூழ் (18)

கள போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிண கூழ் கள பேயின் – கலிங்:75/1
கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன – கலிங்:137/2
குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் – கலிங்:147/2
ஆடி இரைத்து எழு கணங்கள் அணங்கே இ கலிங்க கூழ்
கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ – கலிங்:230/1,2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2
மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே – கலிங்:504/2
மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே – கலிங்:504/2
கள பரணி கூழ் பொங்கி வழியாமல் கை துடுப்பா – கலிங்:548/1
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே – கலிங்:553/2
இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ – கலிங்:554/2
பண்டு மிகுமோ பரணி கூழ் பாரகத்தில் அறியேமோ – கலிங்:555/1
கிடைக்க பொருது மணலூரில் கீழ்நாள் அட்ட பரணி கூழ்
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே – கலிங்:564/1,2
அவதி இல்லா சுவை கூழ் கண்டு அங்காந்து அங்காந்து அடிக்கடியும் – கலிங்:565/1
பையாப்போடு பசி காட்டி பதலை நிறைந்த கூழ் காட்டி – கலிங்:570/1
பொல்லா ஓட்டை கலத்து கூழ் புறத்தே ஒழுக மறித்து பார்த்து – கலிங்:572/1
தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன் – கலிங்:574/1
வரு கூழ் பரணி களம் கண்டு வந்த பேயை முன் ஊட்டி – கலிங்:575/1
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே – கலிங்:575/2

மேல்


கூழின் (2)

பற்றி பாரீர் இ கூழின் பதமும் சுவையும் பண்டு உண்ட – கலிங்:551/1
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே – கலிங்:551/2

மேல்


கூழினுக்கு (3)

அந்த நாள் அ களத்து அடு கூழினுக்கு ஆய்ந்த வெண் பல் அரிசி உரல் புக – கலிங்:146/1
கொலையினுள் படு கரி குழிசியுள் கூழினுக்கு
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ – கலிங்:520/1,2
சுவைக்கும் முடிவில் கூழினுக்கு சொரியும் அரிசி வரி எயிறா – கலிங்:525/1

மேல்


கூழை (9)

வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும் – கலிங்:549/1
வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே – கலிங்:562/2
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே – கலிங்:566/2
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற – கலிங்:567/1
கொய்த இறைச்சி உறுப்பு அனைத்தும் கொள்ளும் கூழை வெள்ளாட்டின் – கலிங்:568/1
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/2
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:570/2
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே – கலிங்:573/2
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே – கலிங்:576/2

மேல்


கூழொடு (1)

உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் – கலிங்:148/2

மேல்


கூளிகள் (1)

என்று பல கூளிகள் இரைத்து உரைசெய் போதத்து – கலிங்:220/1

மேல்


கூளியை (1)

அருத்தியின் பிழை நினைத்த கூளியை அறுத்து அவன் தலை அவன் பெற – கலிங்:160/1

மேல்


கூற (1)

கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே – கலிங்:174/1

மேல்


கூறலும் (1)

என்று கூறலும் எங்கராயன் நான் – கலிங்:378/1

மேல்


கூறும் (1)

நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம் – கலிங்:226/2

மேல்


கூறுவன் (1)

ஒன்று கூறுவன் கேள் என்று உணர்த்துவான் – கலிங்:378/2

மேல்


கூறுவீர் (1)

கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:35/2

மேல்


கூன் (1)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2

மேல்