Select Page

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

-அதன் (1)

காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2

மேல்

-அதனிலே (2)

கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது – கலிங்:24/1
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2

மேல்

-அதனை (3)

அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் – கலிங்:129/1
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல – கலிங்:464/1
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2

மேல்

-அதனொடு (1)

வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/2

மேல்

-அது (1)

தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் – கலிங்:194/1

மேல்

-கண் (8)

கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண்
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே – கலிங்:16/1,2
தமருகங்கள் தருகின்ற சதியின்-கண் வருவார் – கலிங்:115/1
தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/2
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே – கலிங்:355/2
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே – கலிங்:355/2
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ – கலிங்:391/2
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை – கலிங்:526/1
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே – கலிங்:575/2

மேல்

-கணே (1)

கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/2

மேல்

-கொல் (13)

எனா உரை முடித்ததனை என்-கொல் விளைவு என்றே – கலிங்:225/1
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும் – கலிங்:315/1
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும் – கலிங்:315/1
உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே – கலிங்:337/2
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய் – கலிங்:339/1
கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி – கலிங்:343/1
கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி – கலிங்:343/1
பிடர் ஒடித்தல்-கொல் படை நினைப்பு என பிரளயத்தினில் திரளவே – கலிங்:343/2
எது-கொல் இது இது மாயை ஒன்று-கொல் எரி-கொல் மறலி-கொல் ஊழியின் கடை – கலிங்:450/1

அது-கொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே – கலிங்:450/2

மேல்

-கொலோ (1)

இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே – கலிங்:158/2

மேல்

-தங்கள் (1)

வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர்-தங்கள் மணிமுடியும் – கலிங்:530/1

மேல்

-தம் (16)

ஆளும் கொழுநர் வரவு பார்த்து அவர்-தம் வரவு காணாமல் – கலிங்:38/1
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே – கலிங்:98/2
பணியாத வழுதியர்-தம் பாய் களிற்றின் செவி சுளகு பலவும் தூக்கி – கலிங்:107/1
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி – கலிங்:260/1
அது முதல் கொடி எடுத்தன அமரர்-தம் விழவு எடுக்கவே – கலிங்:266/2
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம்
திறையிட புறம் நின்றனர் என்றலும் செய்கை நோக்கி வந்து எய்தி இருக்கவே – கலிங்:328/1,2
அவை என பல வடு நிரை உடையவர் அடி புறக்கிடில் அமரர்-தம் உலகொடு இ – கலிங்:353/2
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே – கலிங்:402/1
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே – கலிங்:402/1
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை – கலிங்:440/1
புரசை மத மலை ஆயிரம் கொடு பொருவம் என வரும் ஏழ் கலிங்கர்-தம்
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே – கலிங்:448/1,2
இவை கவர்ந்த பின் எழு கலிங்கர்-தம் இறையையும் கொடு பெயர்தும் என்று – கலிங்:460/1
அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம்
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/1,2
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி – கலிங்:514/1
கல்லை கறித்து பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்-தம்
பல்லை தகர்த்து பழ அரிசி ஆக பண்ணிக்கொள்ளீரே – கலிங்:524/1,2

மேல்

-தமக்கு (1)

தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1

மேல்

-தமை (2)

வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி – கலிங்:466/1
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற – கலிங்:590/1

மேல்

-தம்மை (2)

கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே – கலிங்:262/2
ஒட்டு அற பட்ட போரில் ஊர்பவர்-தம்மை வீசி – கலிங்:457/1

மேல்

-தம்மையும் (1)

இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும் – கலிங்:199/2

மேல்

-தன் (8)

கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் – கலிங்:15/2
இலங்கை எறிந்த கருணாகரன்-தன் இகல் வெம் சிலையின் வலி கேட்பீர் – கலிங்:64/1
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ – கலிங்:64/2
அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை – கலிங்:218/1
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு – கலிங்:233/1
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே – கலிங்:236/2
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால் – கலிங்:297/1
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1

மேல்

-தனக்கு (1)

வினா உரை-தனக்கு எதிர் விளம்பினள் அணங்கே – கலிங்:225/2

மேல்

-தனை (6)

ஓராழி-தனை நடத்தும் ஒண் சுடரை பரவுதுமே – கலிங்:7/2
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே – கலிங்:8/2
கரம் எரி மடுத்து அரசர் கரம் எதிர் குவிப்பது ஒரு கடவரை-தனை கடவியே – கலிங்:252/2
ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:467/2
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே – கலிங்:526/2
கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு – கலிங்:582/1

மேல்

-தன்னுடைய (1)

வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே – கலிங்:210/1

மேல்

-தன்னை (4)

வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே – கலிங்:83/2
கடல் கலக்க எழும் இன் அமுது-தன்னை ஒருவன் கடவுள் வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும் – கலிங்:190/1
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும் – கலிங்:255/1
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1

மேல்

-தாமும் (2)

தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே – கலிங்:238/2
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் – கலிங்:322/1

மேல்

-தான் (1)

சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த – கலிங்:216/1

மேல்

-தொறு (1)

ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே – கலிங்:593/2

மேல்

-தொறும் (6)

புடைபட இள முலை வளர்-தொறும் பொறை அறிவுடையரும் நிலை தளர்ந்து – கலிங்:22/1
தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம் – கலிங்:144/1
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும் – கலிங்:255/1
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே – கலிங்:547/2

மேல்

-தோறும் (3)

வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே – கலிங்:564/2

மேல்

-நின்று (4)

இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என – கலிங்:163/1
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் – கலிங்:299/1
விட்ட அதிகை பதியில்-நின்று பயணம் பயணம் விட்டு விளையாடி அபயன் – கலிங்:300/1
ஆடி வரு பேய்களின் அலந்தலை தவிர்த்து அடு பறந்தலை அறிந்து அதனின்-நின்று
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே – கலிங்:311/1,2

மேல்

-நின்றும் (2)

பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் – கலிங்:499/1
அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பின்-நின்றும் இழிச்சீரே – கலிங்:552/2

மேல்

-பால் (6)

எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல – கலிங்:14/1
ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை – கலிங்:70/1
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி – கலிங்:206/2
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே – கலிங்:243/2
கதம் பெற்று ஆர்க்கும் செறுநர் விழி கனலும் நிணமும் அணங்கின்-பால்
பதம் பெற்றார்க்கு பகல் விளக்கும் பா ஆடையுமா கொள்ளீரே – கலிங்:561/1,2

மேல்

-மின் (48)

விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை – கலிங்:25/1
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை – கலிங்:25/1
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:25/2
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:27/2
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:27/2
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் – கலிங்:40/2
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் – கலிங்:41/2
குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/2
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் – கலிங்:47/2
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:51/2
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:51/2
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2
இரு பொழுதும் இரவி பசும் புரவி விசும்வு இயங்காதது இயம்ப கேள்-மின்
ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ – கலிங்:85/1,2
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் – கலிங்:232/2
காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே – கலிங்:292/2
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் – கலிங்:302/2
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின் – கலிங்:302/2
அளி அலம்பு மத மலைகள் கொண்டு அணை-மின் அவனையும் கொணர்-மின் எனலுமே – கலிங்:340/2
அளி அலம்பு மத மலைகள் கொண்டு அணை-மின் அவனையும் கொணர்-மின் எனலுமே – கலிங்:340/2
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் – கலிங்:477/2
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் – கலிங்:477/2
போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் – கலிங்:478/2
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/2
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் – கலிங்:481/2
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் – கலிங்:481/2
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் – கலிங்:482/2
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் – கலிங்:482/2
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/2
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/2
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் – கலிங்:484/2
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் – கலிங்:484/2
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் – கலிங்:499/2
வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின் – கலிங்:500/2
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின் – கலிங்:502/2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2
ஆகாய மேல்கட்டி அதன் கீழே அடுக்களை கொண்டு அடு-மின் அம்மா – கலிங்:516/2
அழி மதத்த மத்தகத்தை அடுப்பாக கடுப்பா கொண்டு அடு-மின் அம்மா – கலிங்:517/2
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2

மேல்

-மினோ (63)

காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ – கலிங்:21/2
இடை படுவது பட அருளுவீர் இடு கதவு உயர் கடை திற-மினோ – கலிங்:22/2
பரிபுரம் ஒலியெழ ஒலியெழ பனிமொழியவர் கடை திற-மினோ – கலிங்:23/2
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ – கலிங்:24/2
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:25/2
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:29/2
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:30/2
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:31/2
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ – கலிங்:32/2
கவசம் அற்று இள நகை களிவர களிவரும் கணவரை புணருவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:33/2
நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:34/2
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:35/2
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:36/2
ஆக அமளி மிசை துயில்வீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:37/2
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ – கலிங்:38/2
அந்தி கமலம் கொடுவருவீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:39/2
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:42/2
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:44/2
போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:45/2
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:46/2
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ – கலிங்:48/2
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:49/2
திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ – கலிங்:50/2
கருவிள நீர் பட ஊடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:52/2
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:53/2
அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ – கலிங்:54/2
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ – கலிங்:55/2
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ – கலிங்:56/2
அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ – கலிங்:57/2
அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:58/2
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:59/2
அளக பந்தி மிசை அளிகள் பந்தர் இடும் அரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:60/2
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ – கலிங்:61/2
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ – கலிங்:63/2
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ – கலிங்:64/2
காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ – கலிங்:65/2
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:66/2
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:67/2
அங்கும் இருக்க பயப்படுவீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:68/2
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ – கலிங்:69/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:70/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:70/2
கண் கொடு கொலைசெய அருளுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:71/2
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:72/2
அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:73/2
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:74/2
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/2
குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ – கலிங்:497/2
சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ – கலிங்:498/2
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ – கலிங்:520/2
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ – கலிங்:521/2
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ – கலிங்:522/2
இந்தனம் பல எடுத்து இடை மடுத்து எரி-மினோ – கலிங்:523/2

மேல்

-மின்களோ (7)

ஓடி தெறிக்க கரும் கொண்டல் செம் கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்-மின்களோ – கலிங்:485/2
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ – கலிங்:486/2
ஒக்க அடு செம் களம் பங்கய பொய்கை ஆமாறு காண்-மின்களோ – கலிங்:487/2
கயிற்றால் இழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:488/2
பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ – கலிங்:489/2
கரும் சேவகம் செய்து செஞ்சோறு அற செய்த கைம்மாறு காண்-மின்களோ – கலிங்:490/2
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:491/2

மேல்

-வயின் (1)

மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் – கலிங்:284/1

மேல்

-வழி (1)

களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் – கலிங்:195/2

மேல்

-வாய் (1)

வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும் – கலிங்:200/1

மேல்

-வாயின் (1)

தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் – கலிங்:83/1

மேல்