கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாண் 1
ஞாணால் 1
ஞாணினர் 1
ஞாணும் 1
ஞாதியார் 1
ஞாயில் 4
ஞாயிறு 4
ஞால் 1
ஞால 2
ஞாலங்கள் 1
ஞாலத்தின் 1
ஞாலத்து 3
ஞாலத்துள் 1
ஞாலம் 21
ஞாலம்_உடையாயை 2
ஞாலமும் 1
ஞாழல் 2
ஞாழலும் 1
ஞாள்களும் 1
ஞாற 1
ஞான்மை 1
ஞான்ற 2
ஞான்றே 1
ஞான 9
ஞானங்கள்-தாமும் 1
ஞானத்தாலும் 1
ஞானத்தான் 1
ஞானத்தில் 1
ஞானத்தின் 1
ஞானத்து 3
ஞானம் 9
ஞானம்-தன்னால் 2
ஞானம்-தன்னோடு 1
ஞானம்-தானும் 1
ஞானமும் 4
ஞானமொடு 1
ஞானவான் 1
ஞானி 3
ஞாண் (1)
அம் பொன் குரும்பை மென் முலை மேல் அணிந்த பொன் ஞாண் அருகு ஒடுக்கி – சூளாமணி:10 1753/3
மேல்
ஞாணால் (1)
வஞ்சி_அனையார் மணி தொடர்ந்த சுடர் ஞாணால்
அம் சில இரும் குழல் அசைத்து அயில் பிடித்தார் – சூளாமணி:10 1795/1,2
மேல்
ஞாணினர் (1)
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர் – சூளாமணி:3 87/3
மேல்
ஞாணும் (1)
வந்து ஆடும் தேனும் முரல் வரி வண்டும் ஆட மணி வடமும் பொன் ஞாணும் வார் முலை மேல் ஆட – சூளாமணி:10 1754/3
மேல்
ஞாதியார் (1)
ஞாதியார் என நாட்டிய கூட்டமும் – நீலகேசி:3 248/3
மேல்
ஞாயில் (4)
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார் – சூளாமணி:5 361/4
ஞாயில் முகத்த நகை திரள் முத்து அணி – சூளாமணி:7 658/3
கழு மணி கபாட வாயில் கதிர் நகை கனக ஞாயில்
செழும் மணி சிகர கோடி சித்திரகூடம் எல்லாம் – சூளாமணி:7 765/3,4
தொடர் ஒளி சுடர் ஞாயில் சூளிகை சூழும் நெற்றி – சூளாமணி:7 826/3
மேல்
ஞாயிறு (4)
நம்பி ஞாயிறு சேர் பெயராற்கு அணி – சூளாமணி:5 345/2
திங்களொடு ஞாயிறு திளைத்து இரு விசும்பின் – சூளாமணி:9 1289/3
ஊரின் ஊர்-தோறும் ஒவ்வா ஒளியிற்றே ஞாயிறு என்றும் – நீலகேசி:4 437/2
விளக்குமே ஞாயிறு ஒப்ப என்பது மேலும் சொன்னேற்கு – நீலகேசி:4 441/2
மேல்
ஞால் (1)
நாக கன்னியர் ஆடலின் ஞால் கை மா – சூளாமணி:4 128/2
மேல்
ஞால (2)
மாட வாயில் மாலை ஞால மாடம் ஏறு மாதரார் – சூளாமணி:6 478/3
மூரி தண் சுடர் வெண் முத்தின் பரூஉ திரள் முயங்கி ஞால
வேரி தண் துவலை கால மாலைகள் விசித்த அன்றே – சூளாமணி:8 848/3,4
மேல்
ஞாலங்கள் (1)
ஞாலங்கள் உடன் பரவும் நாதவன்-தன் குலவிளக்கு நகை வேல் நம்பி – சூளாமணி:10 1811/3
மேல்
ஞாலத்தின் (1)
நலம் கொண்ட ஞாலத்தின் நாடி உணர் நீ – சூளாமணி:11 1956/4
மேல்
ஞாலத்து (3)
அழுத கண்ணீர் அகல் ஞாலத்து அரசர் உருக அருவியாய் – சூளாமணி:9 1482/3
மண் உயர் ஞாலத்து மானுடராக வைத்து – சூளாமணி:11 1984/2
ஞாலத்து இயன்றன நல் உயிர் என்பது நாட்டுகின்றாய் – நீலகேசி:6 712/3
மேல்
ஞாலத்துள் (1)
வீழ உரைத்தேன் வியன் பெரு ஞாலத்துள்
ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய் – சூளாமணி:11 2020/3,4
மேல்
ஞாலம் (21)
ஞாலம் காக்கும் நர_பதி செப்பலும் – உதயணகுமார:1 42/2
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்தி – உதயணகுமார:6 360/2
அம் கண் மா ஞாலம் என்னும் தாமரை அலரின் அம் கேழ் – சூளாமணி:2 37/2
இங்கண் ஞாலம் எல்லை சென்று இலங்கு வெண்குடை நிழல் – சூளாமணி:4 138/1
அம் கண் ஞாலம் அமர்ந்து அடிமை தொழில் – சூளாமணி:4 159/2
அணி ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 182/4
அகல் ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 183/4
நடையவன் உவப்பின் ஞாலம் பிறர்-உழை நடப்பது என்றான் – சூளாமணி:5 300/4
அம் கண் மா ஞாலம் ஆளும் அரிகண்டன் அவனை விண் மேல் – சூளாமணி:5 323/3
ஞாலம் ஆளும் நம்பிமாரின் மாலும் ஆகி நண்ணினார் – சூளாமணி:6 486/4
திரை செல உரறி ஞாலம் தின்னிய கடல்கள் ஏழும் – சூளாமணி:9 1133/3
ஞாலம் மேல் திரிந்து நாளும் உயிர்களை நடுங்க பார்க்கும் – சூளாமணி:9 1153/1
அருள் ஆழி அற அரசன் அருளினால் அகல் ஞாலம் பரிவு தீர்த்தான் – சூளாமணி:10 1806/1
அருள் ஆழி முன் செல்ல பின் செல்வது என்னோ அடி படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ – சூளாமணி:11 1907/4
ஞாலம் அளி கொண்ட நளிர் தாமரை முகத்தான் – சூளாமணி:11 2028/2
கரு மால் கடல் வரைத்த கண் ஆர் ஞாலம் காக்கின்றான் – சூளாமணி:12 2128/4
மா ஞாலம் எல்லாம் மறம் மாற்றிய மாட்சியளா – நீலகேசி:0 4/4
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க – நீலகேசி:1 11/1
ஞாலம் அறி நன்மை உடை நாடு அது எனலானும் – நீலகேசி:1 20/1
ஞாலம் அறிய தவம்செய்தவன் நல் உயிர்-தான் – நீலகேசி:4 418/2
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன் – நீலகேசி:4 435/3
மேல்
ஞாலம்_உடையாயை (2)
அணி ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 182/4
அகல் ஞாலம்_உடையாயை அறிவாரோ அரியரே – சூளாமணி:4 183/4
மேல்
ஞாலமும் (1)
பால் படு செல்வமும் பரவை ஞாலமும்
கால் பொடி ஆகவும் கருதிற்று இன்மையால் – சூளாமணி:12 2108/1,2
மேல்
ஞாழல் (2)
விரை தழுவிய விழை தகையன வெறி மலர் விரி ஞாழல்
நிரை தழுவிய நெறி கழியிடை நிகர் அலரன நெய்தல் – நீலகேசி:1 14/3,4
நல்ல மல்லிகை நறவம் ஞாழல் தாழை புன்னாகம் – நீலகேசி:2 150/2
மேல்
ஞாழலும் (1)
பூ கொடி பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூ கடி கமழ்ந்து தான் துறக்கம் ஒக்குமே – சூளாமணி:1 35/3,4
மேல்
ஞாள்களும் (1)
இன்றை நாள் உள்ளுறுத்து ஈர்_ஐ ஞாள்களும்
மன்றல் அம் சுயவரம் வரைந்தது ஆதலால் – சூளாமணி:10 1766/1,2
மேல்
ஞாற (1)
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல் – சூளாமணி:4 172/3
மேல்
ஞான்மை (1)
வீங்கிய அனந்த ஞான்மை விழு நிதி முழுதும் கைக்கொண்டு – சூளாமணி:12 2119/3
மேல்
ஞான்ற (2)
கங்கை நீர் அன ஞான்ற கதிர் இளம் – சூளாமணி:4 151/1
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/4
மேல்
ஞான்றே (1)
வரை செறி சிங்க ஏறு மணி_வண்ணன் அழித்த ஞான்றே
விரை செறி பொழில் கொள் சோலை விஞ்சையர் உலகில் பட்டது – சூளாமணி:9 1134/2,3
மேல்
ஞான (9)
ஞான நல் குமரி-தன்னை நலம் முழுது உண்டு மாரன் – உதயணகுமார:5 255/1
ஞான ஒளி நகைசெய் குணம் நாளும் அணிகின்றான் – யசோதர:5 278/4
கரு மாலை வெவ்_வினைகள் கால் தளர நூறி கடை_இலா ஒண் ஞான கதிர் விரித்தாய் என்றும் – சூளாமணி:11 1904/1
கரு ஆர்ந்த பொருள் நிகழ்வும் காலங்கள் மூன்றும் கடை_இலா நல் ஞான கதிர் அகத்த ஆகி – சூளாமணி:11 1911/1
ஞான ஒழுக்கம் பெருகும் நலத்ததை – சூளாமணி:11 1996/3
நாற்படையோய் நல்ல ஞான நிகழ்வே – சூளாமணி:11 2014/4
இன் இயல் ஞான வேழத்து எழில் எருத்து தேறினானே – சூளாமணி:12 2113/4
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த – நீலகேசி:2 161/2
பொருள்_உடைமை தருக்கினும் புல் ஞான களிப்பினும் – நீலகேசி:4 283/2
மேல்
ஞானங்கள்-தாமும் (1)
வினையும் அ வினையின் ஆய விகல ஞானங்கள்-தாமும்
இனையவே கருவி என்றால் இங்கு நின் உள்ளம் வையாய் – நீலகேசி:4 431/1,2
மேல்
ஞானத்தாலும் (1)
பிறக்கும் தன் ஞானத்தாலும் பின்னும் தன் உண்மையாலும் – நீலகேசி:4 428/1
மேல்
ஞானத்தான் (1)
தன் நிலைக்கு அமைந்த தத்துவ ஞானத்தான்
துன்ன அரும் சூழ்ச்சி தோழன் வயந்தகன் – உதயணகுமார:2 148/1,2
மேல்
ஞானத்தில் (1)
திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை – உதயணகுமார:6 349/1
மேல்
ஞானத்தின் (1)
ஞானத்தின் நன்மை நனி கேட்குவையாயின் அக்கால் – நீலகேசி:1 117/2
மேல்
ஞானத்து (3)
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் – யசோதர:4 238/4
அலகு_இலா ஞானத்து அகத்து அடங்க நுங்கி – சூளாமணி:6 539/1
வினையின் நீங்கி விளங்கிய ஞானத்து ஓர் – நீலகேசி:10 862/1
மேல்
ஞானம் (9)
நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக – யசோதர:5 330/3
மெய்ப்பொருள் தெரிதல் மற்று அ பொருள் மிசை விரிந்த ஞானம்
அ பொருள் வழாத நூலின் அரும் தகை ஒழுக்கம் தாங்கி – சூளாமணி:4 201/1,2
உளர் ஒளி ஞானம் அஃது ஒன்றும் ஒழித்தே – சூளாமணி:11 1944/4
நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2
நல் நெறி நல் ஞானம் காட்சியும் நன்கு கொண்டு என் – நீலகேசி:3 264/2
வீடிற்கே எனின் ஞானம் வேண்டாதே முடியுமால் – நீலகேசி:4 272/1
ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும் – நீலகேசி:4 354/4
கருவி-தான் அகத்தின் ஆய கடை_இலா ஞானம் அன்றோ – நீலகேசி:4 430/3
கடை_இலா ஞானம் எய்தி கணங்கள் நான் மூன்றும் சூழ்ந்து – நீலகேசி:4 446/2
மேல்
ஞானம்-தன்னால் (2)
மருவிய ஞானம்-தன்னால் அறியும் எம் இறைவன் என்பாய் – நீலகேசி:4 430/2
நின்றதன் ஞானம்-தன்னால் நிருமலன் உணரும் என்றால் – நீலகேசி:4 443/3
மேல்
ஞானம்-தன்னோடு (1)
நன்றாய காட்சியுடன் ஆகிய ஞானம்-தன்னோடு
ஒன்றாகி உள்ளத்து ஒழியாமை ஒழுக்கம் என்ப – நீலகேசி:1 124/1,2
மேல்
ஞானம்-தானும் (1)
கொள எலா ஞானம்-தானும் கொள்ளுமாறு எவன்-கொல் என்றான் – நீலகேசி:4 438/4
மேல்
ஞானமும் (4)
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்தி – உதயணகுமார:6 360/2
மருள்_இல் தவமும் வாலிய ஞானமும்
இருள்_அறு தியான நிகழ்வும் என்று ஏழே – சூளாமணி:11 2008/3,4
காட்சியும் ஞானமும் கதிர்த்து தன் பொறி – சூளாமணி:12 2072/1
அ தன்மை ஞானமும் என்னாய் அவனுக்கு – நீலகேசி:7 780/3
மேல்
ஞானமொடு (1)
ஞானமொடு செய் வினைகள் நைய முயல்வாரும் – நீலகேசி:1 18/4
மேல்
ஞானவான் (1)
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன் – நீலகேசி:4 435/3
மேல்
ஞானி (3)
இறுதியில் அவதி ஞானி யசோதரன் என்னும் பேர – சூளாமணி:5 352/3
ஓதி ஞானி போல் உணர்ந்த பின் அது – சூளாமணி:7 576/3
ஓதி ஞானி இது ஆயின் உரை அழகு ஈது என மொழிந்தான் – நீலகேசி:1 66/4