Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உகமே 1
உகிர் 2
உச்சம் 1
உச்சமது 1
உச்சிட்டம் 1
உச்சிப்பொழுது 1
உடம்பாம் 1
உடம்பிடி 1
உடல் 3
உடலும் 1
உடு 1
உடுபதி 1
உடும்பு 1
உடை 1
உடைதல் 1
உண்டாக்கல் 1
உண்டி 1
உண்டையோடு 1
உண்மை 1
உணர் 1
உணர்வார் 1
உணர்வு 1
உணரார் 1
உணல் 1
உணவு 1
உணா 1
உத்தமாங்கம் 1
உத்தரமே 1
உத்திரட்டாதியுடன் 1
உத்திரமாய் 1
உதகம் 2
உதட்டின் 1
உததி 3
உதயன் 1
உதரம் 1
உதள் 1
உதாசனனே 1
உதாரண 1
உதானன் 1
உதும்பரம் 2
உதைத்த 1
உந்தி 1
உப்பு 3
உப்பே 1
உபசாரம் 1
உபயசத்தம் 1
உம்பல் 1
உமாபதி 1
உமிழ் 1
உமை 1
உமையாளை 1
உய்ந்திட 1
உயர் 2
உயர்ச்சி 1
உயர்ந்தோர் 1
உயரம் 2
உயரும் 1
உயிர் 1
உயிர்ப்பு 1
உரகமே 1
உரகர் 1
உரம் 3
உரமே 1
உரல் 1
உரவோன் 1
உரற்றல் 1
உராய்ப்போதல் 1
உரிச்சொல் 2
உரிஞ்சல் 1
உரித்து 1
உரியன் 1
உரியும் 1
உரு 1
உருத்தல் 1
உருத்திடும் 1
உருத்திரன் 1
உருத்திரை 1
உருமு 1
உருவம் 1
உருளை 1
உரை 6
உரைக்கும் 1
உரைத்த 1
உரைத்தார் 2
உரைப்பர் 2
உரைப்பின் 1
உரையும் 1
உரோகணியோடு 1
உலகம் 1
உலகளந்தான் 1
உலகின் 1
உலகு 3
உலையா 1
உலோகிதம் 1
உலோபம் 1
உவந்து 1
உவமைக்கான 1
உவர் 2
உவரி 1
உவா 1
உழவு 1
உழுந்து 1
உழுவை 1
உழுவைத்தோலுடுத்தவன் 1
உழை 2
உள்ளல் 1
உள்ளுதல் 1
உளதாம் 1
உளம் 1
உளியம் 1
உளை 1
உளையே 1
உற்குரோசத்தினொடு 1
உற்றதொரு 1
உற்றார் 1
உறவு 1
உறழ்தலே 2
உறி 1
உறு 2
உறுதி 1
உறுதிச்சொல் 1
உறுப்பு 2
உறும் 2
உறை 1
உன்னம் 1
உனல் 1

உகமே (1)

உகமே மகி பொறை கோவே விபுலை – 5.இடப்பெயர்:5 2/3
மேல்

உகிர் (2)

விரல் அங்குலியாம் உகிர் நகம் ஆகும் – 2.மக்கட்பெயர்:2 21/1
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்

உச்சம் (1)

நேரும் சிகரம் நிமிர்தல் நிவப்பு உச்சம்
சீர் கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 6/3,4
மேல்

உச்சமது (1)

ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
மேல்

உச்சிட்டம் (1)

எச்சில் உச்சிட்டம் எனலாம் – 9.செயல்பற்றியபெயர்:9 5/4
மேல்

உச்சிப்பொழுது (1)

உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3
மேல்

உடம்பாம் (1)

காத்திரம் மெய் காயம் உடம்பாம் – 2.மக்கட்பெயர்:2 15/4
மேல்

உடம்பிடி (1)

ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
மேல்

உடல் (3)

குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம் – 2.மக்கட்பெயர்:2 15/2
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
மேல்

உடலும் (1)

நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
மேல்

உடு (1)

ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம் – 1.தேவப்பெயர்:1 39/2
மேல்

உடுபதி (1)

இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி
சந்திரன் சோமன் சசி – 1.தேவப்பெயர்:1 33/3,4
மேல்

உடும்பு (1)

உரம் மிகு கோதா உடும்பு – 3.விலங்கின்பெயர்:3 7/4
மேல்

உடை (1)

பட்டு உடை சீலை என பார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
மேல்

உடைதல் (1)

ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்

உண்டாக்கல் (1)

சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல்
ஒட்டலுடன் படைத்தல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/3,4
மேல்

உண்டி (1)

உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி
எச்சம் மகன் யாகம் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3,4
மேல்

உண்டையோடு (1)

உண்டையோடு ஒட்டு யூகம் படைவகுப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/3
மேல்

உண்மை (1)

மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 8.பண்புப்பெயர்:8 19/1
மேல்

உணர் (1)

ஆறுமுகத்தான் அமரர்க்காய் சீற உணர்
போர்தடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான் – 1.தேவப்பெயர்:1 11/2,3
மேல்

உணர்வார் (1)

தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/4
மேல்

உணர்வு (1)

போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/3
மேல்

உணரார் (1)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/3
மேல்

உணல் (1)

மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 5/2
மேல்

உணவு (1)

நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 6/2
மேல்

உணா (1)

இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 6/1
மேல்

உத்தமாங்கம் (1)

சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 17/1
மேல்

உத்தரமே (1)

வினாவல் கடாவல் விடை உத்தரமே
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/1,2
மேல்

உத்திரட்டாதியுடன் (1)

உத்திரட்டாதியுடன் கடையாம் ரேபதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/1
மேல்

உத்திரமாய் (1)

கொண்ட எலி உத்திரமாய் கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/4
மேல்

உதகம் (2)

பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 26/3
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்

உதட்டின் (1)

உளதாம் உதட்டின் பெயர் – 2.மக்கட்பெயர்:2 21/4
மேல்

உததி (3)

தீபவதி சிந்து உததி துனி தடினி – 1.தேவப்பெயர்:1 25/1
சலநிதியே உததி சிந்து சலதி – 5.இடப்பெயர்:5 6/2
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
மேல்

உதயன் (1)

உதயன் ஆதித்தன் தினகரன் பானு – 1.தேவப்பெயர்:1 32/3
மேல்

உதரம் (1)

வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ் – 2.மக்கட்பெயர்:2 20/1
மேல்

உதள் (1)

ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை – 3.விலங்கின்பெயர்:3 14/3
மேல்

உதாசனனே (1)

சோதி உதாசனனே தூமகேது – 1.தேவப்பெயர்:1 28/2
மேல்

உதாரண (1)

இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2
மேல்

உதானன் (1)

விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
மேல்

உதும்பரம் (2)

அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்

உதைத்த (1)

குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு – 1.தேவப்பெயர்:1 23/2
மேல்

உந்தி (1)

வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ் – 2.மக்கட்பெயர்:2 20/1
மேல்

உப்பு (3)

சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு
சலநிதியே உததி சிந்து சலதி – 5.இடப்பெயர்:5 6/1,2
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1,2
மேல்

உப்பே (1)

உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
மேல்

உபசாரம் (1)

எல்லாம் உபசாரம் என் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/4
மேல்

உபயசத்தம் (1)

இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3
மேல்

உம்பல் (1)

உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
மேல்

உமாபதி (1)

உரியன் பினாகி உமாபதி மாதேவன் – 1.தேவப்பெயர்:1 4/3
மேல்

உமிழ் (1)

கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ்
கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி – 3.விலங்கின்பெயர்:3 16/2,3
மேல்

உமை (1)

வெல்லும் விமலை உமை – 1.தேவப்பெயர்:1 6/4
மேல்

உமையாளை (1)

உமையாளை பெற்ற உரவோன் சிமய – 5.இடப்பெயர்:5 10/2
மேல்

உய்ந்திட (1)

உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி – 1.தேவப்பெயர்:1 4/2
மேல்

உயர் (2)

முன்றில் உயர் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 18/4
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3
மேல்

உயர்ச்சி (1)

இறையென்னுமேவல் உயர்ச்சி குடியிறையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/2
மேல்

உயர்ந்தோர் (1)

வியன் உலகம் பூமி வியோமம் உயர்ந்தோர்
உயரும் கனம் நாடு திக்கே உலகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1,2
மேல்

உயரம் (2)

நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 11/3
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம்
நேரும் சிகரம் நிமிர்தல் நிவப்பு உச்சம் – 8.பண்புப்பெயர்:8 6/2,3
மேல்

உயரும் (1)

உயரும் கனம் நாடு திக்கே உலகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மேல்

உயிர் (1)

வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன் – 2.மக்கட்பெயர்:2 16/1
மேல்

உயிர்ப்பு (1)

ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன் – 1.தேவப்பெயர்:1 29/3
மேல்

உரகமே (1)

உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 17/3
மேல்

உரகர் (1)

ஒது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/2
மேல்

உரம் (3)

மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/3
உரம் மிகு கோதா உடும்பு – 3.விலங்கின்பெயர்:3 7/4
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் – 8.பண்புப்பெயர்:8 10/1
மேல்

உரமே (1)

உரமே வலி ஞானம் ஊக்கம் அகலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
மேல்

உரல் (1)

கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
மேல்

உரவோன் (1)

உமையாளை பெற்ற உரவோன் சிமய – 5.இடப்பெயர்:5 10/2
மேல்

உரற்றல் (1)

குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

உராய்ப்போதல் (1)

உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/4
மேல்

உரிச்சொல் (2)

அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல்
இன்று இசைக்க ஏகபரன் காப்பு – 0.காப்பு:0 1/3,4
உரிச்சொல் நிகண்டின் உறும் தொகுதி பன்னிரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/3
மேல்

உரிஞ்சல் (1)

உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 7/4
மேல்

உரித்து (1)

அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்

உரியன் (1)

உரியன் பினாகி உமாபதி மாதேவன் – 1.தேவப்பெயர்:1 4/3
மேல்

உரியும் (1)

பெயரும் வினையும் இடையும் உரியும்
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1,2
மேல்

உரு (1)

அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/3
மேல்

உருத்தல் (1)

தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல் – 8.பண்புப்பெயர்:8 22/2
மேல்

உருத்திடும் (1)

உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி – 1.தேவப்பெயர்:1 4/2
மேல்

உருத்திரன் (1)

வெற்பன் விடையன் விமலன் உருத்திரன்
நல் பன்னகப்பூணினான் – 1.தேவப்பெயர்:1 1/3,4
மேல்

உருத்திரை (1)

சிவை சாம்பவி மாதா உருத்திரை
வெல்லும் விமலை உமை – 1.தேவப்பெயர்:1 6/3,4
மேல்

உருமு (1)

வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய – 1.தேவப்பெயர்:1 41/1,2
மேல்

உருவம் (1)

குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம்
மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 15/2,3
மேல்

உருளை (1)

முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
மேல்

உரை (6)

திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை
காலோலமே அண்டங்காக்கை நிலாமுகி – 3.விலங்கின்பெயர்:3 11/2,3
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை
மேவு அசை என்றே விளம்புவார் பாவார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1,2
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
மேல்

உரைக்கும் (1)

ஆசறு தொன்னூல் உரைக்கும் ஆய்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/4
மேல்

உரைத்த (1)

கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் – 0.காப்பு:0 1/2
மேல்

உரைத்தார் (2)

அழிபின்று உரைத்தார் அறிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 22/4
மேலோர் உரைத்தார் வியந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/4
மேல்

உரைப்பர் (2)

ஆம் என்று உரைப்பர் அறிந்தோர் – 2.மக்கட்பெயர்:2 17/4
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
மேல்

உரைப்பின் (1)

வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின்
சல்லாபம் சொல் முகமன் சன்மானம் இன்னயம் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/2,3
மேல்

உரையும் (1)

சொல் உரையும் நெல்லும் துணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
மேல்

உரோகணியோடு (1)

அச்சுவினி பரணி ஆரல் உரோகணியோடு
இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/1,2
மேல்

உலகம் (1)

வியன் உலகம் பூமி வியோமம் உயர்ந்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1
மேல்

உலகளந்தான் (1)

மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 13/4
மேல்

உலகின் (1)

நன்னீர் செறி உலகின் நாட்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/4
மேல்

உலகு (3)

வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே – 5.இடப்பெயர்:5 2/1
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
உயரும் கனம் நாடு திக்கே உலகு
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2,3
மேல்

உலையா (1)

உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
மேல்

உலோகிதம் (1)

அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம் – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்

உலோபம் (1)

காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
மேல்

உவந்து (1)

ஓரா இசைத்தார் உவந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

உவமைக்கான (1)

மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான
பெயர் என்னலாம் – 8.பண்புப்பெயர்:8 9/3,4
மேல்

உவர் (2)

கரம்பே உவர் ஆம் களர் – 5.இடப்பெயர்:5 7/4
உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
மேல்

உவரி (1)

பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி
கார் ஆழி வாரி கடல் – 5.இடப்பெயர்:5 5/3,4
மேல்

உவா (1)

போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/3
மேல்

உழவு (1)

உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
மேல்

உழுந்து (1)

மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

உழுவை (1)

வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி – 3.விலங்கின்பெயர்:3 2/2
மேல்

உழுவைத்தோலுடுத்தவன் (1)

வரி உழுவைத்தோலுடுத்தவன் – 1.தேவப்பெயர்:1 3/4
மேல்

உழை (2)

அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
மருவும் உழை இசை ஏழாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/4
மேல்

உள்ளல் (1)

போகலே உள்ளல் படரே விழிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
மேல்

உள்ளுதல் (1)

உள்ளுதல் சிந்தித்தல் ஊழ்த்தல் நினைத்தல் உனல் – 8.பண்புப்பெயர்:8 10/3
மேல்

உளதாம் (1)

உளதாம் உதட்டின் பெயர் – 2.மக்கட்பெயர்:2 21/4
மேல்

உளம் (1)

சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம் – 2.மக்கட்பெயர்:2 16/2
மேல்

உளியம் (1)

வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு – 3.விலங்கின்பெயர்:3 8/1
மேல்

உளை (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

உளையே (1)

உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
மேல்

உற்குரோசத்தினொடு (1)

உன்னம் கிராமமாம் உற்குரோசத்தினொடு
கின்னரம் நீர்ப்பட்சி என கேள் – 3.விலங்கின்பெயர்:3 12/3,4
மேல்

உற்றதொரு (1)

உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்

உற்றார் (1)

உற்றார் கிளைஞர் உறவு – 2.மக்கட்பெயர்:2 11/4
மேல்

உறவு (1)

உற்றார் கிளைஞர் உறவு – 2.மக்கட்பெயர்:2 11/4
மேல்

உறழ்தலே (2)

மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 9/3
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே
தாலம் ஆம் பெண்ணை தலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3,4
மேல்

உறி (1)

திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி
தங்கு சிறை சீப்பும் தகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3,4
மேல்

உறு (2)

உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/2
மேல்

உறுதி (1)

ஊதியம் சால்பே உறுதி வித்தை விஞ்சை கலை – 10.ஒலிபற்றியபெயர்:10 16/1
மேல்

உறுதிச்சொல் (1)

கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்

உறுப்பு (2)

ஊன் பிண்டம்இல்லா உறுப்பு – 2.மக்கட்பெயர்:2 14/4
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
மேல்

உறும் (2)

ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
உரிச்சொல் நிகண்டின் உறும் தொகுதி பன்னிரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/3
மேல்

உறை (1)

உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு – 3.விலங்கின்பெயர்:3 22/2
மேல்

உன்னம் (1)

உன்னம் கிராமமாம் உற்குரோசத்தினொடு – 3.விலங்கின்பெயர்:3 12/3
மேல்

உனல் (1)

உள்ளுதல் சிந்தித்தல் ஊழ்த்தல் நினைத்தல் உனல்
கொள்ளும் தியானம் குறி – 8.பண்புப்பெயர்:8 10/3,4
மேல்