யோகர் (1)
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர் – 2.மக்கள்பெயர்:2 2/1
யோகி (2)
மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் – 1.தெய்வப்பெயர்:1 1/6
காரி ஆரியன் அறங்காப்பவன் யோகி பூரணை புட்கலை பெண் இருவர் – 1.தெய்வப்பெயர்:1 10/1
யோகிகள் (1)
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள்
உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர் – 2.மக்கள்பெயர்:2 1/2,3
யோகினி (1)
சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/2,3
யோசனையின் (1)
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4
யோனி (1)
கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறி பேர் – 2.மக்கள்பெயர்:2 46/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)