Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண்ணி 1
முக்கணன் 3
முக்கணன்மைந்தன் 1
முக்குலத்தவர் 1
முக்கூட்டு 1
முக்கோல் 1
முகடி 1
முகடு 1
முகத்தின் 1
முகபடாம் 1
முகலி 1
முகில் 1
முகிழ் 1
முகிள் 1
முகுடமே 1
முகுந்தன் 1
முகை 1
முகையொடு 1
முங்கிலொடு 1
முச்சந்தி 1
முச்சியர் 1
முசலி 3
முசிர் 1
முசு 1
முசுகுந்தன் 1
முசுடர் 1
முசுண்டர் 1
முட்டம் 1
முட்டாத 1
முட்பன்றி 1
முடக்கலும் 1
முடங்கல் 1
முடங்கலொடு 1
முடங்கு 1
முடங்குளை 1
முடம் 3
முடல் 1
முடலை 2
முடவன் 1
முடி 3
முடிக்கீழ் 1
முடிகம் 1
முடிகொள் 1
முடியவும் 1
முடிவின் 1
முடுக்கு 1
முடுவல் 2
முடுவலூர்தி 1
முடையே 1
முண்டகம் 4
முண்டம் 3
முண்மச்சம் 1
முத்தகமுடன் 1
முத்தம் 2
முத்தமிழ் 1
முத்தன் 2
முத்தி 1
முத்தின் 1
முத்தீ 1
முத்து 1
முத்தூழ் 1
முத்தை 1
முத்தொழில் 1
முத்தோர் 1
முதல் 10
முதல்வன் 3
முதல்வி 1
முதலில் 1
முதலைஆண் 1
முதறிவாளர் 1
முதிர் 4
முதிர்காய் 1
முதிர்வேனில் 1
முதிரை 1
முது 1
முதுகு 2
முதுமகன் 1
முதுமை 1
முதுவர் 3
முந்தானை 1
முந்து 4
முப்பத்தாறும் 1
முப்பத்திரண்டும் 1
முப்பத்துநான்கு 1
முப்பத்துமூன்று 1
முப்பத்துமூன்றும் 1
முப்பத்தெட்டாம் 1
முப்பத்தொன்று 1
முப்பதிநான்கு 1
முப்பதிற்றெட்டும் 1
முப்பதின்மூன்றும் 1
முப்பதுடன் 1
முப்பதேழ் 1
முப்புரிநூலினோர் 1
முப்பூவின் 1
முப்பெயரும் 3
முப்பெயருமே 3
முப்பேர் 3
மும்மடி 2
மும்மதன் 1
மும்மீன் 1
முயல் 1
முயற்கூடு 1
முயன்ற 1
முரசு 1
முரசுயர்த்தோன் 1
முரஞ்சு 1
முரணுதல் 1
முராரி 1
முருக்கம் 1
முருக்கு 1
முருகன் 3
முருகனை 1
முருகு 2
முருதும் 1
முருந்து 2
முல்லை 3
முல்லைமலர் 1
முலை 1
முலைக்கச்சு 1
முலைக்கண் 1
முலையின் 1
முலைவட 1
முழக்கோட்டுமாவோடு 1
முழங்கால் 1
முழங்கை 1
முழல் 1
முழுதும் 1
முழுமகன் 1
முழுவென்பு 1
முள் 2
முளரி 3
முளரிநண்பன் 1
முளரியும் 1
முளவுமா 1
முளியும் 1
முளை 2
முளையும் 1
முற்கம் 1
முற்கரம் 1
முற்குளமோடு 1
முற்கெழுங்கோல் 1
முற்றம் 1
முற்றிய 4
முற்றில் 1
முற்றும் 2
முறம் 1
முறி 1
முறுவல் 2
முறை 1
முறைசெலுத்தல் 1
முறைபெறு 1
முறைபெறும் 1
முறைமையும் 2
முறையிலார் 1
முன் 7
முன்கால் 1
முன்கோபம் 1
முன்தோன்றல் 1
முன்பனி 1
முன்பிறந்தாள் 1
முன்பிறந்தோன் 1
முன்றில் 1
முன்னமொடு 1
முன்னர் 1
முன்னவர் 1
முன்னவன் 1
முன்னிய 1
முன்னிலை 2
முன்னீர் 1
முன்னீரரசன் 1
முன்னுணறல் 1
முன்னைநாள் 1
முன்னோன் 3
முனவல் 1
முனவு 1
முனி 6
முனிவர் 1
முனிவிலாராதல் 1
முனிவு 2
முனிவோர் 1
முனிவோர்தமக்கு 1
முனை 2
முனைந்தோர் 1
முனையிடம் 1
முனையும் 1
முனைவர் 1

முக்கண்ணி (1)

சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3

மேல்

முக்கணன் (3)

முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி – 1.தெய்வப்பெயர்:1 2/4
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன் – 1.தெய்வப்பெயர்:1 8/1
அம்பிகைமகன் பத்திரைகேள்வன் முக்கணன் வில்லி அவிர் செக்கர்வான்நிறத்தன் – 1.தெய்வப்பெயர்:1 9/4

மேல்

முக்கணன்மைந்தன் (1)

முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 8/3

மேல்

முக்குலத்தவர் (1)

சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 16/3

மேல்

முக்கூட்டு (1)

தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு – 1.தெய்வப்பெயர்:1 32/3

மேல்

முக்கோல் (1)

தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் – 1.தெய்வப்பெயர்:1 35/5

மேல்

முகடி (1)

சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 16/8

மேல்

முகடு (1)

விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு – 5.இடப்பெயர்:5 14/1

மேல்

முகத்தின் (1)

ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/2

மேல்

முகபடாம் (1)

சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 5/4

மேல்

முகலி (1)

மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை – 4.மரப்பெயர்:4 5/1

மேல்

முகில் (1)

விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு – 1.தெய்வப்பெயர்:1 38/7

மேல்

முகிழ் (1)

முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 16/2

மேல்

முகிள் (1)

முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

மேல்

முகுடமே (1)

நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3

மேல்

முகுந்தன் (1)

கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன்
காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன் – 1.தெய்வப்பெயர்:1 3/1,2

மேல்

முகை (1)

முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1

மேல்

முகையொடு (1)

செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/2

மேல்

முங்கிலொடு (1)

முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/3

மேல்

முச்சந்தி (1)

அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று – 5.இடப்பெயர்:5 18/1

மேல்

முச்சியர் (1)

தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 19/4

மேல்

முசலி (3)

ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி
பலதேவனோடு அனந்தன் காமபாலன் பனந்தாமன் அச்சுதன்முனோன் – 1.தெய்வப்பெயர்:1 4/6,7
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா – 3.விலங்கின்பெயர்:3 12/5
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் – 3.விலங்கின்பெயர்:3 12/6

மேல்

முசிர் (1)

கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/3

மேல்

முசு (1)

கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 10/7

மேல்

முசுகுந்தன் (1)

கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன் – 2.மக்கள்பெயர்:2 13/2

மேல்

முசுடர் (1)

பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர் – 2.மக்கள்பெயர்:2 28/1

மேல்

முசுண்டர் (1)

புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் – 2.மக்கள்பெயர்:2 28/2

மேல்

முட்டம் (1)

பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை – 5.இடப்பெயர்:5 4/1

மேல்

முட்டாத (1)

முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/4

மேல்

முட்பன்றி (1)

சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் – 3.விலங்கின்பெயர்:3 9/3

மேல்

முடக்கலும் (1)

நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4

மேல்

முடங்கல் (1)

காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல்
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/1,2

மேல்

முடங்கலொடு (1)

மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை – 4.மரப்பெயர்:4 5/1

மேல்

முடங்கு (1)

முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/3

மேல்

முடங்குளை (1)

பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3

மேல்

முடம் (3)

சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி – 5.இடப்பெயர்:5 2/7

மேல்

முடல் (1)

தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6

மேல்

முடலை (2)

புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/5
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் – 8.பண்புப்பெயர்:8 8/2

மேல்

முடவன் (1)

உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/6

மேல்

முடி (3)

முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 14/6
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் – 2.மக்கள்பெயர்:2 50/1
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/7

மேல்

முடிக்கீழ் (1)

ஐந்து பெயரும் முடிக்கீழ் விட்ட தொங்கல் மயிர் அறையும் உரோமம் சிரோந்தம் – 2.மக்கள்பெயர்:2 52/3

மேல்

முடிகம் (1)

துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் முடிகம் துந்துரு விருந்துரும்பன் – 3.விலங்கின்பெயர்:3 14/7

மேல்

முடிகொள் (1)

முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் – 2.மக்கள்பெயர்:2 13/3

மேல்

முடியவும் (1)

சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் – 8.பண்புப்பெயர்:8 3/6

மேல்

முடிவின் (1)

ஊழியும் மடங்கலும் யுகம் முடிவின் அபிதானம் உறை ஆயுள் ஆயு வாழ்நாள் – 1.தெய்வப்பெயர்:1 41/6

மேல்

முடுக்கு (1)

முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/3

மேல்

முடுவல் (2)

சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4
ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/6

மேல்

முடுவலூர்தி (1)

முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 9/8

மேல்

முடையே (1)

உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே – 3.விலங்கின்பெயர்:3 22/8

மேல்

முண்டகம் (4)

பெற்றி உள முண்டகம் கண்டல் நீர்முள்ளியின் பெயர் விரிநீலியும் ஆமே – 4.மரப்பெயர்:4 4/8
மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை – 4.மரப்பெயர்:4 5/1
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு – 4.மரப்பெயர்:4 18/5
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி – 6.பொருள்பெயர்:6 6/3

மேல்

முண்டம் (3)

சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே – 2.மக்கள்பெயர்:2 50/4
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம்
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் – 8.பண்புப்பெயர்:8 1/5,6

மேல்

முண்மச்சம் (1)

காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே – 3.விலங்கின்பெயர்:3 9/2

மேல்

முத்தகமுடன் (1)

நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன்
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/1,2

மேல்

முத்தம் (2)

மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 17/8
வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/3

மேல்

முத்தமிழ் (1)

தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே – 8.பண்புப்பெயர்:8 13/8

மேல்

முத்தன் (2)

கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே – 1.தெய்வப்பெயர்:1 1/8
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7

மேல்

முத்தி (1)

சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1

மேல்

முத்தின் (1)

என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் – 3.விலங்கின்பெயர்:3 30/2

மேல்

முத்தீ (1)

திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது – 1.தெய்வப்பெயர்:1 19/5

மேல்

முத்து (1)

துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி – 6.பொருள்பெயர்:6 2/7

மேல்

முத்தூழ் (1)

காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1

மேல்

முத்தை (1)

சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/3,4

மேல்

முத்தொழில் (1)

வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர் – 2.மக்கள்பெயர்:2 15/2

மேல்

முத்தோர் (1)

உறை இறைவன் ஆசான் எனும் பத்தும் ஒன்றுமே ஒப்பரிய முத்தோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 3/6

மேல்

முதல் (10)

எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது – 8.பண்புப்பெயர்:0 2/1
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன – 1.தெய்வப்பெயர்:1 29/1
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/3
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி – 1.தெய்வப்பெயர்:1 29/5
செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் – 1.தெய்வப்பெயர்:1 29/6
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/3
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில் – 1.தெய்வப்பெயர்:1 37/5
கருதில் ஆவணி முதல் இரண்டிரண்டா திங்கள் காட்டு பருவத்தின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/2
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/8
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8

மேல்

முதல்வன் (3)

அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் – 2.மக்கள்பெயர்:2 3/1
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 10/2

மேல்

முதல்வி (1)

ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5

மேல்

முதலில் (1)

உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7

மேல்

முதலைஆண் (1)

கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம் – 3.விலங்கின்பெயர்:3 29/1

மேல்

முதறிவாளர் (1)

முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் – 2.மக்கள்பெயர்:2 37/1

மேல்

முதிர் (4)

முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே – 3.விலங்கின்பெயர்:3 13/8
முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே – 4.மரப்பெயர்:4 2/8
முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் – 4.மரப்பெயர்:4 8/3
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் – 8.பண்புப்பெயர்:8 11/4

மேல்

முதிர்காய் (1)

மொழி இராசீவம் இரு பெயர் அதன் இதழ் பெயர் முதிர்காய் வராடகம் பெயர் – 4.மரப்பெயர்:4 18/6

மேல்

முதிர்வேனில் (1)

கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1

மேல்

முதிரை (1)

மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் – 4.மரப்பெயர்:4 19/3

மேல்

முது (1)

ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம் – 1.தெய்வப்பெயர்:1 40/5

மேல்

முதுகு (2)

வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/1

மேல்

முதுமகன் (1)

உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/6

மேல்

முதுமை (1)

சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/5

மேல்

முதுவர் (3)

தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர் – 2.மக்கள்பெயர்:2 4/3
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/4
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் – 2.மக்கள்பெயர்:2 37/1

மேல்

முந்தானை (1)

கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/6

மேல்

முந்து (4)

முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 8/3
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/3
கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே – 2.மக்கள்பெயர்:2 44/8
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2

மேல்

முப்பத்தாறும் (1)

குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் – 5.இடப்பெயர்:5 23/5

மேல்

முப்பத்திரண்டும் (1)

முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர் – 6.பொருள்பெயர்:6 5/4

மேல்

முப்பத்துநான்கு (1)

தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/5

மேல்

முப்பத்துமூன்று (1)

உயர் அனந்தன் பிரமன் முப்பத்துமூன்று பெயர் உருவிலி அனங்கன் – 1.தெய்வப்பெயர்:1 5/6

மேல்

முப்பத்துமூன்றும் (1)

துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும்
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல் – 8.பண்புப்பெயர்:8 14/6,7

மேல்

முப்பத்தெட்டாம் (1)

அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம்
கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே – 4.மரப்பெயர்:4 11/4,5

மேல்

முப்பத்தொன்று (1)

ஓது பத்தொன்பது ஐயைந்து முப்பத்தொன்று உரைத்த நாற்பான் இயம்பும் – 2.மக்கள்பெயர்:2 31/3

மேல்

முப்பதிநான்கு (1)

படுமே உடம்பினது நாமம் முப்பதிநான்கு படலம் உருவம் சட்டகம் – 2.மக்கள்பெயர்:2 44/5

மேல்

முப்பதிற்றெட்டும் (1)

தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 12/3

மேல்

முப்பதின்மூன்றும் (1)

மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/5

மேல்

முப்பதுடன் (1)

என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் – 1.தெய்வப்பெயர்:1 25/6

மேல்

முப்பதேழ் (1)

உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ்
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா – 3.விலங்கின்பெயர்:3 6/5,6

மேல்

முப்புரிநூலினோர் (1)

அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர்
மெய்யர் அறுதொழிலாளர் செந்தீவளர்ப்பவர் வேதபாரகர் விப்பிரர் – 2.மக்கள்பெயர்:2 9/2,3

மேல்

முப்பூவின் (1)

கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/4

மேல்

முப்பெயரும் (3)

காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் – 4.மரப்பெயர்:4 17/2
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் – 4.மரப்பெயர்:4 20/3

மேல்

முப்பெயருமே (3)

என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் – 3.விலங்கின்பெயர்:3 30/2
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் – 4.மரப்பெயர்:4 10/7
தொங்கல் மதலிகை உத்தி என்று முப்பெயருமே தொடர்புடைய தூக்கம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 10/8

மேல்

முப்பேர் (3)

இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர்
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 22/5,6
ஆகுமே அம்பரம் கோசிகம் பாளிதம் அறைந்த பட்டாடை முப்பேர்
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/1,2

மேல்

மும்மடி (2)

கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம் – 2.மக்கள்பெயர்:2 43/2
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி – 2.மக்கள்பெயர்:2 43/4

மேல்

மும்மதன் (1)

மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் – 1.தெய்வப்பெயர்:1 8/2

மேல்

மும்மீன் (1)

இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட – 1.தெய்வப்பெயர்:1 33/1

மேல்

முயல் (1)

நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/2

மேல்

முயற்கூடு (1)

நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் – 1.தெய்வப்பெயர்:1 25/4

மேல்

முயன்ற (1)

மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் – 1.தெய்வப்பெயர்:1 33/4

மேல்

முரசு (1)

பெருகு பூரட்டாதி நாமம் மன்னவன் முரசு பிற்கொழுங்கோல் அறிவன்நாள் – 1.தெய்வப்பெயர்:1 36/1

மேல்

முரசுயர்த்தோன் (1)

விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல் – 2.மக்கள்பெயர்:2 5/3

மேல்

முரஞ்சு (1)

சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/6

மேல்

முரணுதல் (1)

கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் – 8.பண்புப்பெயர்:8 11/5

மேல்

முராரி (1)

பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி – 1.தெய்வப்பெயர்:1 3/5

மேல்

முருக்கம் (1)

வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 45/1

மேல்

முருக்கு (1)

மோது எலும்பிச்சை சம்பீரம் சதாபலம் முருக்கு அருணமோடு இலஞ்சம் – 4.மரப்பெயர்:4 2/7

மேல்

முருகன் (3)

முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி – 1.தெய்வப்பெயர்:1 8/4
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் – 2.மக்கள்பெயர்:2 41/4

மேல்

முருகனை (1)

கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே – 8.பண்புப்பெயர்:0 1/2

மேல்

முருகு (2)

வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை – 6.பொருள்பெயர்:6 6/1
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/2

மேல்

முருதும் (1)

வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன – 8.பண்புப்பெயர்:8 3/7

மேல்

முருந்து (2)

அனந்தரம் மயூரம் விரிசிகை ஆகும் இறகு அதனின் அடிமுள் முருந்து எனும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 23/4
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/3

மேல்

முல்லை (3)

கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 35/2
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே – 4.மரப்பெயர்:4 13/2
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் – 5.இடப்பெயர்:5 5/2

மேல்

முல்லைமலர் (1)

பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 6/7

மேல்

முலை (1)

கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 28/4

மேல்

முலைக்கச்சு (1)

வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் – 7.செயற்கைப்பெயர்:7 7/3

மேல்

முலைக்கண் (1)

சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் – 2.மக்கள்பெயர்:2 46/5

மேல்

முலையின் (1)

பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/4

மேல்

முலைவட (1)

பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர் – 7.செயற்கைப்பெயர்:7 9/6

மேல்

முழக்கோட்டுமாவோடு (1)

கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அ பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 9/1

மேல்

முழங்கால் (1)

கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே – 2.மக்கள்பெயர்:2 44/8

மேல்

முழங்கை (1)

மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு – 2.மக்கள்பெயர்:2 47/2

மேல்

முழல் (1)

கச்சூரமே கழல் பெயர் கழற்காயே களங்கு முழல் கழலும் ஆகும் – 4.மரப்பெயர்:4 7/5

மேல்

முழுதும் (1)

வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன – 8.பண்புப்பெயர்:8 3/7

மேல்

முழுமகன் (1)

தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/5

மேல்

முழுவென்பு (1)

கழியும் உடல் முழுவென்பு கங்காளம் ஆகும் களேபரம் உடல் எலும்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/5

மேல்

முள் (2)

சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் – 3.விலங்கின்பெயர்:3 9/3
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/3

மேல்

முளரி (3)

அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 22/7
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர் – 4.மரப்பெயர்:4 18/2
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு – 4.மரப்பெயர்:4 18/5

மேல்

முளரிநண்பன் (1)

அருணன் உதயன் பதங்கன் சுடரவன் மித்திரன் ஆதித்தன் முளரிநண்பன்
அருக்கன் மார்த்தாண்டன் விரோசனன் விருச்சிகன் ஆயிரம்கதிரோன் வெய்யோன் – 1.தெய்வப்பெயர்:1 24/1,2

மேல்

முளரியும் (1)

முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் – 8.பண்புப்பெயர்:8 2/3

மேல்

முளவுமா (1)

காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே – 3.விலங்கின்பெயர்:3 9/2

மேல்

முளியும் (1)

நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/7

மேல்

முளை (2)

பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/5
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 11/1

மேல்

முளையும் (1)

நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 20/7

மேல்

முற்கம் (1)

மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் – 4.மரப்பெயர்:4 19/3

மேல்

முற்கரம் (1)

படைக்கலம் சாதனம் முற்கரம் கொலைசெய்யப்படும் ஆயுதப்பொது பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/4

மேல்

முற்குளமோடு (1)

ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/3

மேல்

முற்கெழுங்கோல் (1)

கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே – 1.தெய்வப்பெயர்:1 35/8

மேல்

முற்றம் (1)

முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/3

மேல்

முற்றிய (4)

முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் – 2.மக்கள்பெயர்:2 37/1
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/4
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் – 4.மரப்பெயர்:4 15/1
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் – 8.பண்புப்பெயர்:8 2/4

மேல்

முற்றில் (1)

பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7

மேல்

முற்றும் (2)

முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய் திரட்டி – 8.பண்புப்பெயர்:0 1/4
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன – 8.பண்புப்பெயர்:8 3/7

மேல்

முறம் (1)

பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் – 1.தெய்வப்பெயர்:1 34/7

மேல்

முறி (1)

பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/4,5

மேல்

முறுவல் (2)

சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 48/6

மேல்

முறை (1)

இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் – 8.பண்புப்பெயர்:0 1/6

மேல்

முறைசெலுத்தல் (1)

தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல்
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற – 2.மக்கள்பெயர்:2 12/1,2

மேல்

முறைபெறு (1)

முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய் திரட்டி – 8.பண்புப்பெயர்:0 1/4

மேல்

முறைபெறும் (1)

முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே – 4.மரப்பெயர்:4 13/8

மேல்

முறைமையும் (2)

இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் – 8.பண்புப்பெயர்:0 1/6
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே – 8.பண்புப்பெயர்:0 3/8

மேல்

முறையிலார் (1)

குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/4

மேல்

முன் (7)

முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் – 8.பண்புப்பெயர்:0 1/3
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன்
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/2,3
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன்
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 10/7,8
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 14/8

மேல்

முன்கால் (1)

கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் – 3.விலங்கின்பெயர்:3 4/3

மேல்

முன்கோபம் (1)

கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் – 8.பண்புப்பெயர்:8 11/5

மேல்

முன்தோன்றல் (1)

திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4

மேல்

முன்பனி (1)

கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் – 1.தெய்வப்பெயர்:1 40/1

மேல்

முன்பிறந்தாள் (1)

உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் – 2.மக்கள்பெயர்:2 39/3

மேல்

முன்பிறந்தோன் (1)

தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன்
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/3,4

மேல்

முன்றில் (1)

முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் – 5.இடப்பெயர்:5 14/3

மேல்

முன்னமொடு (1)

முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/4

மேல்

முன்னர் (1)

விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8

மேல்

முன்னவர் (1)

மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/4

மேல்

முன்னவன் (1)

தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் – 2.மக்கள்பெயர்:2 38/3

மேல்

முன்னிய (1)

முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

முன்னிலை (2)

செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/3
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள் – 2.மக்கள்பெயர்:2 27/5

மேல்

முன்னீர் (1)

பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் – 5.இடப்பெயர்:5 6/1

மேல்

முன்னீரரசன் (1)

வியன் கடல் சலபதி முன்னீரரசன் சலநதி விரும்பு கேள்வன் வருணனே – 5.இடப்பெயர்:5 6/8

மேல்

முன்னுணறல் (1)

முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன – 8.பண்புப்பெயர்:8 11/3

மேல்

முன்னைநாள் (1)

பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3

மேல்

முன்னோன் (3)

கருணாலயன் கொன்றைசூடி முன்னோன் அந்தகாரி அழலேந்தி ஒளி – 1.தெய்வப்பெயர்:1 2/3
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் – 1.தெய்வப்பெயர்:1 8/2
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் – 2.மக்கள்பெயர்:2 38/3

மேல்

முனவல் (1)

கடிகி வெய்துறல் உளரல் முனவல் பகைத்தலொடு கரு தீவிரம் விடைத்தல் – 8.பண்புப்பெயர்:8 11/6

மேல்

முனவு (1)

முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன – 8.பண்புப்பெயர்:8 11/3

மேல்

முனி (6)

வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 46/8
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 3/2
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே – 4.மரப்பெயர்:4 13/8
இனிதுடன் வீற்றிருக்கின்ற முனி தமிழினான் இத்திறம் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 21/8
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே – 7.செயற்கைப்பெயர்:7 2/2
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே – 8.பண்புப்பெயர்:8 13/8

மேல்

முனிவர் (1)

அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர் – 2.மக்கள்பெயர்:2 9/2

மேல்

முனிவிலாராதல் (1)

என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் – 2.மக்கள்பெயர்:2 15/7

மேல்

முனிவு (2)

முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன – 8.பண்புப்பெயர்:8 11/3
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8

மேல்

முனிவோர் (1)

கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6

மேல்

முனிவோர்தமக்கு (1)

ஒழியாத இருபத்துமூன்று முனிவோர்தமக்கு உரிய பெயர் கும்பயோனி – 2.மக்கள்பெயர்:2 1/4

மேல்

முனை (2)

முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/2
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 4/7

மேல்

முனைந்தோர் (1)

அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் – 2.மக்கள்பெயர்:2 22/6

மேல்

முனையிடம் (1)

நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம்
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/4,5

மேல்

முனையும் (1)

வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 4/8

மேல்

முனைவர் (1)

அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர் – 2.மக்கள்பெயர்:2 1/1

மேல்