கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போக்கு 1
போகி 2
போகில் 2
போத்திரி 1
போத்து 2
போத்துடன் 1
போத்தையொடு 1
போதகம் 4
போதல் 1
போதலே 1
போதன் 1
போதி 1
போது 2
போந்த 2
போந்தை 3
போர் 1
போர்க்களந்தன்னில் 1
போர்க்களம் 1
போர்புரிதல் 1
போர்வை 1
போரில் 1
போருடன் 1
போல் 4
போற்றி 1
போற்றிய 1
போற்று 6
போற்றும் 4
போனகம் 1
போக்கு (1)
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு
கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை – 8.பண்புப்பெயர்:8 12/1,2
போகி (2)
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி – 1.தெய்வப்பெயர்:1 11/3
பவனாசனம் கூடபதம் மாசுணம் போகி பரவு காலிலி சக்கிரி – 3.விலங்கின்பெயர்:3 13/2
போகில் (2)
சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி – 2.மக்கள்பெயர்:2 45/6
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் – 4.மரப்பெயர்:4 16/1
போத்திரி (1)
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
போத்து (2)
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே – 3.விலங்கின்பெயர்:3 18/3,4
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
போத்துடன் (1)
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/4
போத்தையொடு (1)
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலி பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர் – 3.விலங்கின்பெயர்:3 28/6
போதகம் (4)
உம்பல் கரி கயம் ஆம்பல் வாரணம் மதாவளம் ஒருத்தல் வேழம் போதகம்
உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 2/1,2
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் – 3.விலங்கின்பெயர்:3 3/2
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் – 4.மரப்பெயர்:4 15/5
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை – 8.பண்புப்பெயர்:8 7/2
போதல் (1)
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8
போதலே (1)
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன – 8.பண்புப்பெயர்:8 10/4
போதன் (1)
போதன் சதானந்தன் நான்முகன் மான்மகன் பூமகன் பரமேட்டி – 1.தெய்வப்பெயர்:1 5/3
போதி (1)
மரப்பெயர் நியக்குரோதம் அத்துடன் எட்டாம் மராமரம் போதி கணவம் – 4.மரப்பெயர்:4 9/2
போது (2)
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி – 1.தெய்வப்பெயர்:1 31/4
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் – 4.மரப்பெயர்:4 16/3
போந்த (2)
போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் – 1.தெய்வப்பெயர்:1 28/6
புகல் ஆழி அருகல் செறிதல் கஞறல் அறுகலொடு போந்த எழுநான்கு இரண்டும் – 8.பண்புப்பெயர்:8 13/6
போந்தை (3)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 34/8
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம் – 4.மரப்பெயர்:4 9/6
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம் – 4.மரப்பெயர்:4 9/6
போர் (1)
போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர் – 2.மக்கள்பெயர்:2 19/5
போர்க்களந்தன்னில் (1)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/7
போர்க்களம் (1)
அமர்க்களம் செங்களம் பொருகளம் போர்க்களம் அலைத்திடும் செருக்களம் உடன் – 5.இடப்பெயர்:5 17/2
போர்புரிதல் (1)
பரிவினொடு பார் புரந்திடல் படைக்கலம் அவை பயிற்றல் போர்புரிதல் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 10/5
போர்வை (1)
கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம் – 3.விலங்கின்பெயர்:3 21/6
போரில் (1)
என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில்
எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன் – 2.மக்கள்பெயர்:2 6/3,4
போருடன் (1)
கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/7
போல் (4)
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல்
மண்ணுளோர் அறிய பகுத்தனன் கைலையான் வடிவெடுத்து ஐந்தெழுத்தின் – 8.பண்புப்பெயர்:0 2/4,5
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல்
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிற கருடனுக்கு – 8.பண்புப்பெயர்:0 3/2,3
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம் – 8.பண்புப்பெயர்:0 3/4
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும் – 8.பண்புப்பெயர்:0 3/6
போற்றி (1)
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/2
போற்றிய (1)
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் – 8.பண்புப்பெயர்:8 1/6
போற்று (6)
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/4
போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும் – 2.மக்கள்பெயர்:2 19/6
பொருவிலா காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ – 2.மக்கள்பெயர்:2 30/1
பொருந்திய மழைக்குயில் தலையிலாக்குருவி ஆம் போற்று சண்டம் கலிங்கம் – 3.விலங்கின்பெயர்:3 26/7
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர் – 4.மரப்பெயர்:4 14/7
பூண் அணி புலன் கலன் அணிகலம் பூடணம் போற்று கலனே பன்னொன்றும் – 7.செயற்கைப்பெயர்:7 11/5
போற்றும் (4)
போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே – 1.தெய்வப்பெயர்:1 6/8
மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன் – 1.தெய்வப்பெயர்:1 9/6
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியை போற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 18/6
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/5
போனகம் (1)
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல் – 6.பொருள்பெயர்:6 5/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)