Select Page

பேகன் (1)

பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/8

மேல்

பேச (1)

பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி – 1.தெய்வப்பெயர்:1 2/2

மேல்

பேசரிய (2)

பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி – 1.தெய்வப்பெயர்:1 27/1
பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/3

மேல்

பேசிடில் (2)

பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/8
ஆகுமே சரை பலிதம் இரண்டுமே பேசிடில் பின்னரிய நரையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/6

மேல்

பேசிய (1)

பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 5/4

மேல்

பேசில் (2)

மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலை பெயர் பேசில் வங்கணமும் ஆகும் – 4.மரப்பெயர்:4 4/7
பேசில் இறை உயவு அனுக்கம் சமழம் பிறங்கிய நொசிவு அழுங்கல் ஆய்வு – 8.பண்புப்பெயர்:8 12/7

மேல்

பேசினர் (1)

பெரும் செல்வம் நீங்கா குபேரன் அபிதானமாய் பேசினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 10/8

மேல்

பேசு (10)

பேர் ஆன மட்பகைஞர் குயவர் சக்கிரியும் ஆம் பேசு சக்கிரி நந்திகள் – 2.மக்கள்பெயர்:2 16/5
பீரு ஓர் ஆறுமே அச்சமுடையோன் பெயர் பேசு இடங்கழி பல்லவர் – 2.மக்கள்பெயர்:2 26/6
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
பேசு நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குருக்கண் – 2.மக்கள்பெயர்:2 46/3
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/4
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம் – 3.விலங்கின்பெயர்:3 16/2
பெருகு சவலே புரவியின் கரு பகிரண்ணல் பேசு சினை மற்று அ கரு – 3.விலங்கின்பெயர்:3 30/6
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 15/8
பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் – 6.பொருள்பெயர்:6 1/7
பேசு பட்டு ஏடகம் வேதிகம் கத்திகை பெருகு ஒலியல் இடையல் விரியல் – 7.செயற்கைப்பெயர்:7 5/7

மேல்

பேசும் (2)

பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/4
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி – 2.மக்கள்பெயர்:2 43/4

மேல்

பேட்டார் (1)

நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே – 2.மக்கள்பெயர்:2 23/4

மேல்

பேடி (1)

அந்தகன் சிதடன் உடன் தரிசனமூடன் குருடன் ஆம் பேடி பெண்டகனுடன் – 2.மக்கள்பெயர்:2 26/3

மேல்

பேடு (1)

பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம் – 5.இடப்பெயர்:5 4/2

மேல்

பேணரும் (2)

பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன் – 2.மக்கள்பெயர்:2 16/6
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் – 7.செயற்கைப்பெயர்:7 11/3

மேல்

பேதம்இல் (1)

பேதம்இல் இளவல் அனுசன் கனிட்டன் பின்பிறந்தோன் பொருந்து இளையவன் – 2.மக்கள்பெயர்:2 38/5

மேல்

பேதை (4)

தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை – 2.மக்கள்பெயர்:2 24/5
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
பேதை பெதும்பையுடன் மங்கை மடந்தை பிரி அரிவை தெரிவை மற்று அ – 2.மக்கள்பெயர்:2 31/1
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும் – 8.பண்புப்பெயர்:8 6/7

மேல்

பேதையர் (3)

பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர் – 2.மக்கள்பெயர்:2 28/1
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர்
ஓரும் இன்மையர் இலம்பாட்டோர் இல்லோர் ஏழையோர் நல்கூர்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 28/6,7
செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார் – 2.மக்கள்பெயர்:2 34/5

மேல்

பேயின் (1)

நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 18/3

மேல்

பேயொடுஆடி (1)

சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி
அங்கணன் பசுபதி அரன் சிவன் உருத்திரன் அழலாடி பாண்டரங்கன் – 1.தெய்வப்பெயர்:1 1/2,3

மேல்

பேர் (101)

அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர்
கமழ் பனுவலாட்டி பாரதி வாணி பூர்வாகினி இசைமடந்தை காயத்திரி – 1.தெய்வப்பெயர்:1 13/6,7
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர்
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/7,8
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர்
வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு – 1.தெய்வப்பெயர்:1 16/5,6
விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினி பேர்
விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம் – 1.தெய்வப்பெயர்:1 19/3,4
கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர்
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3,4
செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர்
மங்கா சிகண்டிசன் அமைச்சன் அரசன் தேவமந்திரி ஆண்டளப்பான் – 1.தெய்வப்பெயர்:1 26/6,7
அரி தீவிரம் கரம் பரிதி கதிர் கிரணம் விசயம் கோவொடு இருநான்கு பேர்
ஆம் பரிதிவட்டம் ஊர்கோள் மூடு வட்டம் மூன்று ஆன பரிவட்ட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/1,2
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அ பொழுது ஐந்து பேர்
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/6,7
உருள் விமானம் கோணம் உற்று அறியும் ஊற்றால் உரோணியே உரோகிணி பேர்
ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே – 1.தெய்வப்பெயர்:1 32/7,8
பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர்
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/2,3
பங்குனியுடன் கடையெழும் சனி பாற்குனி பரிதிநாள் உத்திர பேர்
பரவிய கெளத்துவம் களிறு கைம்மீன் நவ்வி பழுதுஇலா காமரத்தொடு – 1.தெய்வப்பெயர்:1 34/1,2
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதி பேர்
இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 36/3,4
விரவும் இந்திரவில்லு வான்இடும்வில் என விளம்பிடும் வானவில் பேர்
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/5,6
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர்
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரை பொழுது ஆகுமே – 1.தெய்வப்பெயர்:1 37/7,8
பேர் உள கனோபலம் சுரை ஆலி கரகம் பெருத்த ஆலங்கட்டி ஆம் – 1.தெய்வப்பெயர்:1 39/5
ஊன்று தேசிகன் ஈசன் ஆசான் பணிக்கன் உவாத்தி ஆசிரியன் பேர்
ஓதும் மாணாக்கனே கற்போன் என பெயர் உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 4/7,8
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர்
தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே – 2.மக்கள்பெயர்:2 6/7,8
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர்
படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 13/4,5
பேர் ஆன மட்பகைஞர் குயவர் சக்கிரியும் ஆம் பேசு சக்கிரி நந்திகள் – 2.மக்கள்பெயர்:2 16/5
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர்
ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர் – 2.மக்கள்பெயர்:2 21/2,3
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர்
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி – 2.மக்கள்பெயர்:2 27/3,4
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர்
வாடியே நூல் இழந்தாளொடு கலன்கழிமடந்தையே கயினி கைம்மை – 2.மக்கள்பெயர்:2 33/4,5
தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர்
செப்பு மன்பதை பஞ்ஞீல் எனும் இரண்டே மக்கள்திரளினுக்கு உரிய பெயரே – 2.மக்கள்பெயர்:2 36/7,8
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர்
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 37/1,2
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர்
பேதம்இல் இளவல் அனுசன் கனிட்டன் பின்பிறந்தோன் பொருந்து இளையவன் – 2.மக்கள்பெயர்:2 38/4,5
சீறிய புறங்கடை வழித்தோன்றல் மருகன் சிறப்புடைய பேர் அது ஆமே – 2.மக்கள்பெயர்:2 40/8
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர்
சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே – 2.மக்கள்பெயர்:2 42/3,4
வலிய தொடையின் பெயர் கடிதடம் நிதம்பமே வாய்த்த அகல் அல்குலின் பேர்
ஆம் அரை நுசுப்பு நடு மத்திமம் ஆங்கு அத்துடன் அழகிய மருங்குல் ஒக்கம் – 2.மக்கள்பெயர்:2 45/2,3
கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறி பேர்
கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 46/1,2
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர்
தேர்ந்த கீழ்வாய் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/6,7
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர்
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/2,3
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர்
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை – 2.மக்கள்பெயர்:2 51/6,7
உந்திய உரோமம் உளை கேசம் மராட்டம் ஓர் ஆறுமே பிறமயிர் பேர்
ஆகுமே சரை பலிதம் இரண்டுமே பேசிடில் பின்னரிய நரையின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 52/5,6
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
புழைக்கை அறுகு ஆளியொடு பூட்கை ஒரு நான்குமே புனர் ஆளியானையின் பேர்
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் – 3.விலங்கின்பெயர்:3 1/4,5
பருமம் மாக்கருவி படை பண் பல்லணம் ஐந்துமே பகர் கலணை பரவும் பேர்
படி கச்சம் ஓர் இரண்டு அங்கவடி நாமம் மருங்கு அணியும் நெடுமயிர் உளை – 3.விலங்கின்பெயர்:3 7/3,4
கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அ பன்றியின் பேர்
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே – 3.விலங்கின்பெயர்:3 9/1,2
உலவிடும் கவரி சாமரை சவரி மூன்றுமே உறு கவரிமான் மயிர் பேர்
உன்னு கானக்குதிரை ஆவிதம் இரண்டுமே ஒளியாத மரையின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 10/1,2
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர்
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/2,3
ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர்
கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும் – 3.விலங்கின்பெயர்:3 11/6,7
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர்
இராசமுடன் அந்தம் ஆம் கருவழலையின் பெயர் இயம்பு மண்டலி கோளகம் – 3.விலங்கின்பெயர்:3 13/5,6
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர்
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை – 3.விலங்கின்பெயர்:3 14/5,6
குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசு பேர்
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/3,4
உற்ற தேனு கபிலை தெய்வப்பசு பெயர் ஆங்கு பாலுளபசு பேர்
ஒப்பரிய பாசல் ஆம் மருவு பத்திரை என்ப ஒன்று நற்பசு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 16/7,8
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர்
நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/7,8
அனந்தரம் மயூரம் விரிசிகை ஆகும் இறகு அதனின் அடிமுள் முருந்து எனும் பேர்
தொகு கலாபம் கூழை சந்திராங்கம் தூவி தோகை சரணம் சிகண்டம் – 3.விலங்கின்பெயர்:3 23/4,5
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/8
வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர்
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/1,2
கரும்புறவின் நாமமே பாராவதத்தொடு கபோதம் மாடப்புறா பேர்
காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 26/1,2
காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொது பேர்
திருந்து காடை பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம் – 3.விலங்கின்பெயர்:3 26/2,3
பன்னரும் பூகதம் பாகதம் பாக்கம் பசும் கமுகு இருமூன்று பேர்
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும் – 4.மரப்பெயர்:4 1/3,4
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர்
கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி – 4.மரப்பெயர்:4 3/2,3
சந்தனமர பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமர பேர்
அந்த வகிளத்துடன் இலஞ்சி கேசரம் மூன்றும் ஆகும் மகிழின் பெயர் – 4.மரப்பெயர்:4 3/6,7
ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர்
உருவாருகம் வெள்ளரி பெயர் வாலுங்கி ஒன்றுமே கக்கரி பேர் – 4.மரப்பெயர்:4 4/4,5
உருவாருகம் வெள்ளரி பெயர் வாலுங்கி ஒன்றுமே கக்கரி பேர்
உன்மத்து உமத்தை மதமத்தையே ஊமத்தை உழிஞை சிறுபூளை பெயர் – 4.மரப்பெயர்:4 4/5,6
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர்
இயம்பு மந்தாரமே செம்பரத்தை பெயர் எண்ணிய உலவை ஒட்டை – 4.மரப்பெயர்:4 6/3,4
கள்ளியே அரலையொடு குமரி கற்றாழை ஆம் கண்டூரி காஞ்சொறி பேர்
நச்சிய சீவந்தி சீவனி பறலி பட்டிகை நான்குமே பாலை பெயர் – 4.மரப்பெயர்:4 7/6,7
முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர்
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் – 4.மரப்பெயர்:4 8/3,4
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர்
அதிரா மராமரம் சாலமா ஆ சுள்ளி ஆச்சாமரத்தின் பெயர் – 4.மரப்பெயர்:4 8/4,5
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம் – 4.மரப்பெயர்:4 9/6
இதம்பெறு வேங்கை அரிதகி பத்தியம் கடு எனப்படும் கடுமர பேர்
இதழி தாமம் கடுக்கையுடன் மதலையும் இயம்பரிய கொன்றையின் பேர் – 4.மரப்பெயர்:4 10/5,6
இதழி தாமம் கடுக்கையுடன் மதலையும் இயம்பரிய கொன்றையின் பேர்
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் – 4.மரப்பெயர்:4 10/6,7
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர்
மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/7,8
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர்
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் – 4.மரப்பெயர்:4 12/2,3
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர்
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/3,4
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர்
பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர் – 4.மரப்பெயர்:4 12/5,6
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பக பேர்
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சி பேர் – 4.மரப்பெயர்:4 13/3,4
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சி பேர்
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சி பெயர் – 4.மரப்பெயர்:4 13/4,5
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர்
புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 14/7,8
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர்
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் – 4.மரப்பெயர்:4 15/1,2
இனிய பூந்தேன் பெயர் அல்லி அகஇதழ் ஆகும் இசை புல்லி புறஇதழ் பேர்
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 16/6,7
தேடு சோள பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினை பேர்
செப்பிய பசுந்தினையும் ஏனலாம் இறடியும் சேந்த கங்கும் கறங்கும் – 4.மரப்பெயர்:4 19/5,6
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர்
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே – 4.மரப்பெயர்:4 21/3,4
உலவு பாராவாரம் வேலை இரண்டுமே ஓங்கிய கடற்கரை பேர்
காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம் – 5.இடப்பெயர்:5 7/2,3
கலுழியுடன் ஒலியலே உலவையே உயவை ஆம் கன்னியே குமரியின் பேர்
வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர் – 5.இடப்பெயர்:5 7/4,5
வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர்
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் – 5.இடப்பெயர்:5 7/5,6
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர்
கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை – 5.இடப்பெயர்:5 7/6,7
செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர்
அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் – 5.இடப்பெயர்:5 10/2,3
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர்
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் – 5.இடப்பெயர்:5 13/3,4
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரை பேர்
அழுவமே குன்று கெம்பீரம் கயம் அத்துடன் ஆழநீர் நான்கே பெயர் – 5.இடப்பெயர்:5 15/3,4
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர்
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் – 5.இடப்பெயர்:5 17/5,6
ஆகும் சிருங்காடகம் அத்தொடு சதுக்கமே ஆகும் நாற்சந்தியின் பேர்
சந்தும் சதுக்கம் ஆம் பாங்கு பரிவொடு கலவி தளம் மச்சின் அபிதானம் ஆம் – 5.இடப்பெயர்:5 18/2,3
வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர்
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/5,6
பட்டம் என வந்த பத்தொன்பதும் கழறிடில் பரவு கண்துயில் இட பேர்
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று – 5.இடப்பெயர்:5 19/3,4
ஓட்டிய இ ஒன்பதும் விலங்கு துயிலிடம் உறைவி ஒன்றும் உலைக்கள பேர்
ஓமகுண்டம் தித்தி வேள்வி ஆகும் தொடுப்பு உழவர்தம் தொழில் வளைப்பு ஆம் – 5.இடப்பெயர்:5 19/5,6
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர்
வேண்டிய பிறப்பிடம் உறைவிடம் ஆகரம் விளம்பும் இருப்பிட பேர் – 5.இடப்பெயர்:5 22/2,3
வேண்டிய பிறப்பிடம் உறைவிடம் ஆகரம் விளம்பும் இருப்பிட பேர்
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர் – 5.இடப்பெயர்:5 22/3,4
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிட பேர்
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/4,5
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர்
புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/5,6
புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/6
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர்
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/7,8
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர்
தோற்றிய நிதானம் ஆம் சந்திரன் ஒளியில் தண்ணீர் சொரியும் மணி சந்திரகாந்தம் – 6.பொருள்பெயர்:6 3/2,3
தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர்
செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே – 6.பொருள்பெயர்:6 4/7,8
சூடிகை வகுத்த ஒன்பதும் மணிமுடி பெயர் தொகுத்த சிரமாலையின் பேர்
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/2,3
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர்
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டல பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை – 7.செயற்கைப்பெயர்:7 1/4,5
மண்டிய பெருஞ்சவளம் வல்லை அப்பெயர் கழுமுள் வைக்கும் கழுக்கடை பேர்
வளம் மேவு கப்பணம் தோமரம் இரண்டுமே மன்னு கைவேலின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 3/5,6
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றி சலாகை நாராசமும் பேர்
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/7,8
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறை பேர்
கைவிட்டபடை அத்திரம் பெயர் சத்திரம் கைவிடாப்படையின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 4/5,6
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணி பேர்
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/7,8
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர்
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை – 7.செயற்கைப்பெயர்:7 9/6,7
பொன்னினும் மணியினும் செய்யும் ஆபரணப்பொது பேர் கடிப்பம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 11/6

மேல்

பேரணி (1)

தங்கு பேரணி பின்னணி பெயர் ஊக்கமுடன் ஆக்கமே படையெழுச்சி – 2.மக்கள்பெயர்:2 42/6

மேல்

பேரழகு (1)

அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 6/8

மேல்

பேராம் (1)

விளம்பிய மலர்க்கணை அவத்தையின் பேராம் விதித்த சுப்பிரயோகமே – 1.தெய்வப்பெயர்:1 7/4

மேல்

பேராயம் (1)

வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 11/6

மேல்

பேராளன் (2)

இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட – 1.தெய்வப்பெயர்:1 33/1
ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன் – 2.மக்கள்பெயர்:2 3/3

மேல்

பேரிளம்பெண் (1)

பேரிளம்பெண் ஏழுபருவம் ஆண்டு ஏழுடன் பின்பு பன்னொன்று பன்மூன்று – 2.மக்கள்பெயர்:2 31/2

மேல்

பேரும் (1)

கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும்
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/3,4

மேல்

பேருலவு (1)

பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 10/7

மேல்

பேர்எருது (1)

வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன் – 3.விலங்கின்பெயர்:3 17/5

மேல்

பேரே (1)

ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழு பேரே
இந்திரகோபம் உதையம் சோனம் இயானம் இவை நான்கு கிருமி கீடம் – 3.விலங்கின்பெயர்:3 15/6,7

மேல்

பேறுடைய (1)

பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம் – 1.தெய்வப்பெயர்:1 7/7

மேல்

பேனம் (1)

ஊரும் அதர் அயிர் எக்கர் அகிர் நான்கும் நுண்மணல் உரைத்த பேனம் கம்பலம் – 5.இடப்பெயர்:5 8/7

மேல்