கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞாங்கர் 2
ஞாங்கரே 1
ஞாதிகள் 1
ஞாயில் 1
ஞாயிறு 1
ஞாலம் 1
ஞாழல் 1
ஞாளி 2
ஞானப்பிரகாச 1
ஞானமூர்த்தி 2
ஞானி 1
ஞாங்கர் (2)
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர்
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன் – 8.பண்புப்பெயர்:8 10/6,7
ஞாங்கரே (1)
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
ஞாதிகள் (1)
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள்
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் – 2.மக்கள்பெயர்:2 25/4,5
ஞாயில் (1)
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில்
கோசம் விதப்பு பதப்பாடு தோணி பொறி குறைபடா மதிலுறுப்பு – 5.இடப்பெயர்:5 12/5,6
ஞாயிறு (1)
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/7,8
ஞாலம் (1)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை – 5.இடப்பெயர்:5 1/3
ஞாழல் (1)
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன் – 4.மரப்பெயர்:4 6/1
ஞாளி (2)
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5
ஞானப்பிரகாச (1)
மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன் – 8.பண்புப்பெயர்:0 2/6
ஞானமூர்த்தி (2)
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி
கருணாலயன் கொன்றைசூடி முன்னோன் அந்தகாரி அழலேந்தி ஒளி – 1.தெய்வப்பெயர்:1 2/2,3
ஞானமூர்த்தி நாமகள் உலகமாதா கலைச்சி வாக்கின்செல்வியே – 1.தெய்வப்பெயர்:1 13/8
ஞானி (1)
மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 5/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)