Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகரம் 1
சூசுகம் 1
சூட்டு 5
சூட்டும் 1
சூடகம் 1
சூடி 1
சூடிகை 2
சூடுவேன் 1
சூத்திரர் 1
சூதம் 2
சூதமலர் 1
சூதமொடு 1
சூதர் 2
சூதன் 1
சூதின் 1
சூம் 1
சூர் 2
சூர்பகை 1
சூர்மகள் 1
சூரர் 1
சூரல் 1
சூரன் 3
சூரி 3
சூரியகாந்தம் 1
சூரியன் 3
சூல் 2
சூலபாணி 1
சூலம் 1
சூலி 2
சூழ் 3
சூழ்தல் 1
சூழ்ந்த 1
சூழ்ந்திட 1
சூழ்ந்திடும் 1
சூழ்வோர் 1
சூழல் 1
சூழி 4
சூழும் 2
சூழுற 1
சூளி 1
சூளிகை 1
சூளிகையும் 1
சூளை 1
சூளையே 1
சூறையின் 1
சூறைவளி 1
சூனம் 1
சூனர் 1

சூகரம் (1)

வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7

மேல்

சூசுகம் (1)

சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் – 2.மக்கள்பெயர்:2 46/5

மேல்

சூட்டு (5)

சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம் – 4.மரப்பெயர்:4 21/2
இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும் – 4.மரப்பெயர்:4 21/5
மருவு புல்லகம் உடன் இலம்பகம் சூட்டு வந்திகை நான்கும் ஆகும் இப்பால் – 7.செயற்கைப்பெயர்:7 9/3
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர் – 7.செயற்கைப்பெயர்:7 9/6
சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/7

மேல்

சூட்டும் (1)

சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7

மேல்

சூடகம் (1)

சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே – 7.செயற்கைப்பெயர்:7 9/8

மேல்

சூடி (1)

தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை – 7.செயற்கைப்பெயர்:7 5/1

மேல்

சூடிகை (2)

மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/7,8
சூடிகை வகுத்த ஒன்பதும் மணிமுடி பெயர் தொகுத்த சிரமாலையின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/2

மேல்

சூடுவேன் (1)

மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன்
வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் – 8.பண்புப்பெயர்:0 2/6,7

மேல்

சூத்திரர் (1)

காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர் – 2.மக்கள்பெயர்:2 16/1

மேல்

சூதம் (2)

சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் – 2.மக்கள்பெயர்:2 46/5
மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே – 4.மரப்பெயர்:4 2/1

மேல்

சூதமலர் (1)

காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான் – 1.தெய்வப்பெயர்:1 6/6

மேல்

சூதமொடு (1)

சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர் – 4.மரப்பெயர்:4 2/3

மேல்

சூதர் (2)

தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர்
சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர் – 2.மக்கள்பெயர்:2 21/5,6
பயிலும் வேதாளிகர் சூதர் வந்திகரொடு படிப்பவர் புகழ்வோர்களே – 2.மக்கள்பெயர்:2 21/8

மேல்

சூதன் (1)

ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர் – 2.மக்கள்பெயர்:2 14/5

மேல்

சூதின் (1)

திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6

மேல்

சூம் (1)

சூம் அசும்பு அங்கணம் பொல்லாத நிலமும் ஆம் தோன்று அசும்பு உறவி அஃகி – 5.இடப்பெயர்:5 16/4

மேல்

சூர் (2)

அரமகள் அரம்பை சுரர்மகள் அமரர்மாதர் பெயர் ஆம் சூர் அணங்கு இரண்டும் – 1.தெய்வப்பெயர்:1 12/5
அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 17/1

மேல்

சூர்பகை (1)

வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை
தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன் – 1.தெய்வப்பெயர்:1 8/6,7

மேல்

சூர்மகள் (1)

ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினி பெயர் சன்மினி – 1.தெய்வப்பெயர்:1 15/6

மேல்

சூரர் (1)

வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர் – 2.மக்கள்பெயர்:2 25/1

மேல்

சூரல் (1)

சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர் – 4.மரப்பெயர்:4 4/2

மேல்

சூரன் (3)

திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/4
பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி – 3.விலங்கின்பெயர்:3 15/2

மேல்

சூரி (3)

வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி
கருதில் ஏழும் காடுகாள் பெயர் இயக்கி மரகதவல்லி அருகனை – 1.தெய்வப்பெயர்:1 14/4,5
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் – 2.மக்கள்பெயர்:2 4/4

மேல்

சூரியகாந்தம் (1)

சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த – 6.பொருள்பெயர்:6 3/4

மேல்

சூரியன் (3)

திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே – 1.தெய்வப்பெயர்:1 24/8
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 7/6
சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த – 6.பொருள்பெயர்:6 3/4

மேல்

சூல் (2)

ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் – 3.விலங்கின்பெயர்:3 22/7
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6

மேல்

சூலபாணி (1)

பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி – 1.தெய்வப்பெயர்:1 2/6

மேல்

சூலம் (1)

பெரும் உத்திரட்டாதி நான்கு பெயர் சூலம் பெருந்தோணி பஃறி நாவாய் – 1.தெய்வப்பெயர்:1 36/2

மேல்

சூலி (2)

சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/3

மேல்

சூழ் (3)

மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/7
மலையுடன் ஆறு சூழ் ஊர் கருவடம் வீதி மதில் கோபுரங்கள் மன்னர் – 5.இடப்பெயர்:5 5/1
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா – 7.செயற்கைப்பெயர்:7 2/5

மேல்

சூழ்தல் (1)

துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4

மேல்

சூழ்ந்த (1)

சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 11/8

மேல்

சூழ்ந்திட (1)

பெறு சலஞ்சலம் ஆயிரத்தினை சூழ்ந்திட பெற்றதே பாஞ்சசன்னியம் – 3.விலங்கின்பெயர்:3 30/5

மேல்

சூழ்ந்திடும் (1)

தொழுத்தையே அசதி உடன் உவதி ஈரெட்டு ஆண்டு சூழ்ந்திடும் பெண் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 27/8

மேல்

சூழ்வோர் (1)

வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர்
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/3,4

மேல்

சூழல் (1)

தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை – 5.இடப்பெயர்:5 20/1

மேல்

சூழி (4)

சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 5/4
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே – 4.மரப்பெயர்:4 1/8
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி
பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு – 5.இடப்பெயர்:5 23/1,2
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் – 8.பண்புப்பெயர்:8 1/4

மேல்

சூழும் (2)

சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே – 2.மக்கள்பெயர்:2 42/4
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் – 5.இடப்பெயர்:5 17/6

மேல்

சூழுற (1)

சூழுற வீற்றிருக்கன்றதே இடம்புரி இடம்புரி ஓர் ஆயிரம் நெருங்கி – 3.விலங்கின்பெயர்:3 30/3

மேல்

சூளி (1)

வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8

மேல்

சூளிகை (1)

கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 4/4

மேல்

சூளிகையும் (1)

கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 51/6

மேல்

சூளை (1)

நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடக கணிகை கூத்தி – 2.மக்கள்பெயர்:2 33/3

மேல்

சூளையே (1)

புக்கிடம் புகுமிட பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம் – 5.இடப்பெயர்:5 22/6

மேல்

சூறையின் (1)

ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/8

மேல்

சூறைவளி (1)

ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை – 1.தெய்வப்பெயர்:1 20/7

மேல்

சூனம் (1)

நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம் – 3.விலங்கின்பெயர்:3 9/5

மேல்

சூனர் (1)

நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 19/7

மேல்