Select Page

கேகயப்புள் (1)

செவிப்புள் இசையறிபறவை கேகயப்புள் இவை சிறந்த அசுணப்புள் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 25/8

மேல்

கேகயம் (1)

சிகண்டி கேகயம் மஞ்ஞை உகரம் கலாபம் மயில் செப்பு பன்மூன்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/2

மேல்

கேசம் (2)

குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு – 2.மக்கள்பெயர்:2 51/5
உந்திய உரோமம் உளை கேசம் மராட்டம் ஓர் ஆறுமே பிறமயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 52/5

மேல்

கேசரம் (2)

அந்த வகிளத்துடன் இலஞ்சி கேசரம் மூன்றும் ஆகும் மகிழின் பெயர் – 4.மரப்பெயர்:4 3/7
புகல் கொங்கு கோசரம் கேசரம் சீதரம் இவை பூந்தாதின் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 16/8

மேல்

கேசரர் (1)

வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர்
வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர் – 1.தெய்வப்பெயர்:1 17/5,6

மேல்

கேசரி (1)

அறுகு கண்டீரவம் கேசரி மடங்கல் பஞ்சானனம் பூட்கை சீயம் – 3.விலங்கின்பெயர்:3 1/2

மேல்

கேசவன் (1)

கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன் – 1.தெய்வப்பெயர்:1 3/1

மேல்

கேசவனும் (1)

இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 7/8

மேல்

கேட்டை (1)

சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம் – 1.தெய்வப்பெயர்:1 35/1

மேல்

கேடகம் (1)

பயின்ற சிற்றூர் பெயர் மலை செறிந்திடும் ஊர் பகர்ந்திடில் கேடகம் ஆமே – 5.இடப்பெயர்:5 4/8

மேல்

கேடுஇல் (1)

கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5

மேல்

கேண்மை (1)

விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் – 2.மக்கள்பெயர்:2 22/3

மேல்

கேணி (2)

பரிகம் கிடங்கு அகழி உடு ஓடை கேணி பாம்புரி அகப்பா சிக்கிரி – 5.இடப்பெயர்:5 13/1
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி – 5.இடப்பெயர்:5 23/1

மேல்

கேத்திரபாலன் (1)

மகத்தை பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன் – 1.தெய்வப்பெயர்:1 9/6

மேல்

கேதகை (1)

மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை – 4.மரப்பெயர்:4 5/1

மேல்

கேது (1)

திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 27/8

மேல்

கேயூரம் (1)

பூணநூல் உபவீதம் ஆம் வாகுவலையம் புகழ்ந்த கேயூரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 8/2

மேல்

கேரளன் (1)

வில்லவன் கேரளன் பனைமாலைபுனைஅண்ணல் வில்கொடியினன் சேரலன் – 2.மக்கள்பெயர்:2 7/3

மேல்

கேவணம் (1)

பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண் – 7.செயற்கைப்பெயர்:7 11/4

மேல்

கேவலம் (1)

சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 9/1

மேல்

கேழ் (3)

கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் – 5.இடப்பெயர்:5 11/2
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 5/8
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி – 8.பண்புப்பெயர்:8 6/5

மேல்

கேழல் (2)

அவர் கொடி கேழல் பெரும் படைத்தலைவர் அபிதானமே பொருநர் என்றும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/2
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல் – 3.விலங்கின்பெயர்:3 8/7

மேல்

கேள் (1)

பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை – 2.மக்கள்பெயர்:2 22/2

மேல்

கேள்வன் (2)

மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி – 2.மக்கள்பெயர்:2 40/2
வியன் கடல் சலபதி முன்னீரரசன் சலநதி விரும்பு கேள்வன் வருணனே – 5.இடப்பெயர்:5 6/8

மேல்

கேள்வி (1)

குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 49/4

மேல்

கேள்வியில் (1)

ஆய்ந்திடும் கல்வி கேள்வியில் வெற்றிகொடு மவுலி அணிமாலை வாகை ஆமே – 4.மரப்பெயர்:4 21/8

மேல்