கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கீசகம் 1
கீசம் 1
கீடம் 1
கீதம் 1
கீரம் 3
கீரி 1
கீரை 1
கீல் 1
கீலாலம் 2
கீழ் 3
கீழ்க்காற்று 1
கீழ்த்திசை 2
கீழ்மக்கள் 1
கீழ்மகன் 1
கீழ்வாய் 1
கீழறுதல் 1
கீழ்உதட்டிற்கு 1
கீழுலகு 1
கீசகம் (1)
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2
கீசம் (1)
மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன் – 3.விலங்கின்பெயர்:3 10/4
கீடம் (1)
இந்திரகோபம் உதையம் சோனம் இயானம் இவை நான்கு கிருமி கீடம்
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/7,8
கீதம் (1)
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர் – 2.மக்கள்பெயர்:2 42/3
கீரம் (3)
அமுதம் பயம் பயசு கீரம் இ நான்குமே அன்புடைய பாலின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/1
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 27/4
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே – 3.விலங்கின்பெயர்:3 27/5
கீரி (1)
கலை அவற்று ஒன்றாம் தீர்வை நகுலத்துடன் காத்திரம் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 10/8
கீரை (1)
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம் – 4.மரப்பெயர்:4 12/4
கீல் (1)
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் – 1.தெய்வப்பெயர்:1 23/5
கீலாலம் (2)
பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம் – 1.தெய்வப்பெயர்:1 23/4
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/4
கீழ் (3)
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/6
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/3
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/6
கீழ்க்காற்று (1)
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் – 1.தெய்வப்பெயர்:1 20/4
கீழ்த்திசை (2)
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/3
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5
கீழ்மக்கள் (1)
குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/4
கீழ்மகன் (1)
கூறு பதினான்குமே வெள்ளியின் பெயர் ஆம் கொடும் கதிர்மகன் கீழ்மகன்
ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன் – 1.தெய்வப்பெயர்:1 27/4,5
கீழ்வாய் (1)
தேர்ந்த கீழ்வாய் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/7
கீழறுதல் (1)
இயம்பும் அறைபடுதல் அறைபோதல் கீழறுதல் இவை ஏற்று படையறுதல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 42/8
கீழ்உதட்டிற்கு (1)
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/4
கீழுலகு (1)
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றி – 5.இடப்பெயர்:5 9/7

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)