Select Page


வௌவல்

(பெ) கவர்தல், கவ்வுதல், seizing, snatching

யாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/83,84

நாம் அறிந்தோம்,
ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைக் கவர்ந்துகொள்ளும் என்பதனை;

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50

நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13

முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றம் இழைத்திருந்தால் அவரின் உயிரைக் கவர்தல்

மேல்


வௌவு

(வி) 1. பறி, கைப்பற்று, seize, snatch
2. வழிப்பறி செய், கொள்ளையடி, rob

1

தெண் திரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/2,3

தெளிந்த அலைகள் மணற்பாவையை அடித்துச் செல்ல
மையுண்ட கண்கள் சிவந்துபோகுமாறு அழுதுகொண்டு நின்றிருந்தவளை

2

அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை
கொடியோர் – பெரும் 39-41

(வேறு ஊர்களுக்கான)வழியில் போவாரை (அவர்)கதறும்படி வெட்டி,
(அவர்)உடைமைகளைக் கொள்ளையடிக்கும் களவே உழவு (போலத் தொழிலாகவுடைய)வாழ்வாகக்கொண்ட
கொடியவர்

மேல்