கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நக்கா 1
நகர் 1
நகரில் 1
நகில் 1
நகு 1
நகை 4
நகையும் 1
நங்கை 2
நங்கையை 1
நச்சு 1
நட்டமிடு 1
நட்டு 1
நட்பு 1
நடக்கும் 1
நடத்தி 1
நடமிடு 1
நடமிடும் 1
நடவும் 1
நடவையில் 1
நடிக்கும் 1
நடு 1
நடுவண் 1
நடுவில் 1
நடை 2
நடைக்கு 1
நடைக்கோ 1
நடையும் 2
நத்தம் 1
நதிகள் 1
நதியா 1
நதியின் 1
நதியும் 2
நதியை 1
நதியொடு 1
நந்திபிரான் 1
நந்திபிரானோடே 1
நமக்கு 1
நயனம் 1
நரம்பு 1
நரை 1
நல் 6
நல்குகை 1
நலார் 2
நவ்விக்கு 1
நள் 3
நளின 3
நளினத்தொடும் 1
நளினி 1
நற்குணம் 1
நறவு 4
நறா 2
நறிய 1
நறு 1
நறும் 5
நறை 8
நறையும் 1
நனைத்து 1
நனைப்ப 1
நக்கா (1)
மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா
மை வைத்த செம் சிலையும் அம்புலியும் ஓட நெடு வான் மீன் மணந்து உகந்த வடவரை முகந்த நின் வய கொடி என பொலியும் மஞ்சு இவர் வளாக நொச்சி – மீனாட்சிபிள்ளை:5 48/2,3
நகர் (1)
முரசு அதிர் கடி நகர் மதுரையில் வளர் கிளி முத்தம் அளித்து அருளே முழுது உலகு உடையது ஒர் கவுரியர் குலமணி முத்தம் அளித்து அருளே – மீனாட்சிபிள்ளை:5 51/4
நகரில் (1)
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
நகில் (1)
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/3
நகு (1)
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2
நகை (4)
முக மதி ஊடு எழு நகை நிலவு ஆட முடி சூழியம் ஆட முரி புருவ கொடி நுதல் இடு சுட்டி முரிப்பொடு அசைந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 18/1
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
கைம் மலரில் பொலி கதிர் முத்து அம்மனை நகை முத்து ஒளி தோய கண்டவர் நிற்க பிறர் சிலர் செம் கை கமல சுடர் கதுவ – மீனாட்சிபிள்ளை:8 81/1
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய – மீனாட்சிபிள்ளை:9 84/1
நகையும் (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/5
நங்கை (2)
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2
நங்கையை (1)
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/2
நச்சு (1)
இமிழ் திரை முற்றத்து மேரு மத்து ஆர்த்து முள் எயிறு உகு நச்சு பணாடவி தாம்பு இசைத்து இறுக இறுக்கி துழாய் முடி தீர்த்தனொடு எவரும் மதித்து பராபவ தீ சுட – மீனாட்சிபிள்ளை:1 5/3
நட்டமிடு (1)
வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் – மீனாட்சிபிள்ளை:4 33/3
நட்டு (1)
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
நட்பு (1)
கமலன் முன்னிவிடும் அரச அன்னம் எழுகடலில் அன்னமுடன் நட்பு கை கூடவும் கரிய செம்மலொடும் இளைய செம்மல் விடு கருடன் மஞ்ஞையொடு ஒர் கட்சிக்குள் ஊடவும் – மீனாட்சிபிள்ளை:1 12/5
நடக்கும் (1)
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு – மீனாட்சிபிள்ளை:6 58/2
நடத்தி (1)
பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய – மீனாட்சிபிள்ளை:1 5/1
நடமிடு (1)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/4
நடமிடும் (1)
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3
நடவும் (1)
கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6
நடவையில் (1)
கணி கொண்ட தண் துழாய் காடு அலைத்து ஓடு தேம் கலுழி பாய்ந்து அளறுசெய்ய கழனி படு நடவையில் கமலத்து அணங்கு அரசு ஒர் கை அணை முகந்து செல்ல – மீனாட்சிபிள்ளை:1 2/3
நடிக்கும் (1)
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2
நடு (1)
சுற்று நெடு நேமி சுவர்க்கு இசைய எட்டு சுவர்க்கால் நிறுத்தி மேரு தூண் ஒன்று நடு நட்டு வெளி முகடு மூடி இரு சுடர் விளக்கு இட்டு முற்ற – மீனாட்சிபிள்ளை:2 15/1
நடுவண் (1)
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/2
நடுவில் (1)
தெள் அமுத கடல் நடுவில் தோன்று செழும் கமல குயில் போல் தெய்வ கங்கை திரையூடு எழும் ஒரு செம்பவள கொடி போல் – மீனாட்சிபிள்ளை:9 92/2
நடை (2)
மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:6 54/1
நடைக்கு (1)
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று – மீனாட்சிபிள்ளை:1 10/3
நடைக்கோ (1)
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் – மீனாட்சிபிள்ளை:6 53/2
நடையும் (2)
பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 9/4
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 87/2
நத்தம் (1)
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
நதிகள் (1)
குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3
நதியா (1)
வான் ஒழுகு துங்க தரங்க பெரும் கங்கை வாணி நதியா சிவபிரான் மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகத கொம்பு கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:6 57/2
நதியின் (1)
குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3
நதியும் (2)
கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க – மீனாட்சிபிள்ளை:6 58/3
கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க – மீனாட்சிபிள்ளை:6 58/3
நதியை (1)
வார் குன்று இரண்டு சுமந்து ஒசியும் மலர் கொம்பு_அனையார் குழல் துஞ்சும் மழலை சுரும்பர் புகுந்து உழக்க மலர் தாது உகுத்து வான் நதியை
தூர்க்கும் பொதும்பில் முயல் கலை மேல் துள்ளி உகளும் முசுக்கலையின் துழனிக்கு ஒதுங்கி கழினியின் நெல் சூட்டு படப்பை மேய்ந்து கதிர் – மீனாட்சிபிள்ளை:3 27/1,2
நதியொடு (1)
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2
நந்திபிரான் (1)
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியின் ஆளி என செரு மலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான்
நின்றிலன் ஓடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடும் கயிலை கிரியின் – மீனாட்சிபிள்ளை:4 40/1,2
நந்திபிரானோடே (1)
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 32/2
நமக்கு (1)
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 95/2
நயனம் (1)
மங்குல் படு கந்தர சுந்தர கடவுட்கு மழ கதிர் கற்றை சுற்றும் வாள் நயனம் மூன்றும் குளிர்ந்து அமுத கலை தலைமடுப்ப கடைக்கண் நோக்கும் – மீனாட்சிபிள்ளை:2 16/1
நரம்பு (1)
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/3
நரை (1)
மன் பெரும் குரவன் பிழைத்த பாவமும் மற்றை மா மடிகள் இடு சாபமும் வளர் இளம் பருவத்து நரை திரையும் முதிர் கூனும் மாற்றிடப்பெறுதி கண்டாய் – மீனாட்சிபிள்ளை:7 68/3
நல் (6)
குமரி பொன்னி வைகை பொருநை நல் நதிகள் குதிகொள் விண் நதியின் மிக்கு குலாவவும் குவடு தென்மலையின் நிகரதின்மை சுரர் குடிகொள் பொன்மலை துதித்து பராவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/3
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7
சிதைவுற்று அரசியல் நல் தருமம் குடிபோய் மாய்வாகாமே செழியர்க்கு அபயரும் ஒப்பு என நின்று உணராதார் ஓதாமே – மீனாட்சிபிள்ளை:3 31/3
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல்
விருந்தே வருக மும்முதற்கும் வித்தே வருக வித்து இன்றி விளைக்கும் பரமானந்தத்தின் விளைவே வருக பழ மறையின் – மீனாட்சிபிள்ளை:6 62/1,2
நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
நல்குகை (1)
திருவும் இமையவர் தருவும் அர ஒலி செய வலவர் கொள நல்குகை தீட்டினர் சிறிய எனது புன்மொழியும் வடி தமிழ் தெரியும் அவர் முது சொல் என சூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/2
நலார் (2)
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் – மீனாட்சிபிள்ளை:7 69/1
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/3
நவ்விக்கு (1)
கிள்ளைக்கு மழலை பசும் குதலை ஒழுகு தீம் கிளவியும் களி மயிற்கு கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும் விரி கிஞ்சுக சூட்டு அரசு அன – மீனாட்சிபிள்ளை:1 9/3
நள் (3)
நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட – மீனாட்சிபிள்ளை:4 33/1
ஒளி தூங்கு தெளி விசும்பினில் நின்னொடு ஒத்தவன் ஒருத்தன் கரத்தின் வாரி உண்டு ஒதுக்கிய மிச்சில் நள் இருளில் அள்ளி உண்டு ஓடுகின்றாய் என் செய்தாய் – மீனாட்சிபிள்ளை:7 70/3
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
நளின (3)
நாகத்து மீ சுடிகை நடுவண் கிடந்த மட நங்கையை பெற்று மற்று அ நாகணை துஞ்சு தன் தந்தைக்கு உவந்து உதவு நளின குழந்தை காக்க – மீனாட்சிபிள்ளை:1 6/2
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3
நளினத்தொடும் (1)
நாள வட்ட தளிம நளினத்தொடும் துத்தி நாகணையும் விட்டு ஒர் எட்டு நாட்டத்தனும் பரம வீட்டத்தனும் துஞ்சும் நள் இருளின் நாப்பண் அண்ட – மீனாட்சிபிள்ளை:4 33/1
நளினி (1)
கடவி விண்ணரசு நடவும் வெம் முனைய களிறு கைம்மலை செல் கொப்பத்து வீழவும் கனக மன்னு தட நளினி துன்னி இரு கமல மின்னும் ஒரு பத்மத்துள் மேவவும் – மீனாட்சிபிள்ளை:1 12/6
நற்குணம் (1)
நள் ஊறு மறு ஊறு அகற்று முக மதியில் வெண் நகை ஊறு நிலவு ஊறியும் நல் தரள அம்மனை ஒர் சிற்குணத்தினை மூன்று நற்குணம் கதுவல் காட்ட – மீனாட்சிபிள்ளை:8 75/2
நறவு (4)
இழியும் துணர் கற்பகத்தின் நறவு இதழ் தேன் குடித்து குமட்டி எதிர் எடுக்கு சிறை வண்டு உவட்டுற உண்டு இரைக்க கரைக்கும் மத கலுழி – மீனாட்சிபிள்ளை:1 7/3
வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி – மீனாட்சிபிள்ளை:9 92/3
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும் ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் – மீனாட்சிபிள்ளை:10 95/1
நறா (2)
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 11/4
தெள் நறா அருவி பாய் மதுரை மரகதவல்லி செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 17/4
நறிய (1)
குழல் இசை பழகி முழு பிரசத்து இரசத்தோடே குதிகொளும் நறிய கனி சுவை நெக்க பெருக்கே போல் – மீனாட்சிபிள்ளை:4 42/3
நறு (1)
வாடும் கொடி நுண் நுசுப்பு ஒசிய மடவ மகளிருடன் ஆடும் வண்டல் துறைக்கு வைத்து நெய்த்து மணம் தாழ் நறு மென் புகை படலம் – மீனாட்சிபிள்ளை:5 47/3
நறும் (5)
சீக்கும் சுடர் தூங்கு அழல் மணியின் செம் தீ மடுத்த சூட்டு அடுப்பில் செழும் தாள் பவள துவர் அடுக்கி தெளிக்கும் நறும் தண் தேறல் உலை – மீனாட்சிபிள்ளை:3 24/2
பூ மரு வெடிப்ப முகை விண்ட தண்டலை ஈன்ற புனை நறும் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம் பெய்து புழுதி விளையாட்டு அயர்ந்தும் – மீனாட்சிபிள்ளை:4 35/1
தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/2
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3
நறை (8)
பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2
பரு அரை முது பல அடியினில் நெடு நிலம் நெக்க குட கனியின் படு நறை படு நிறை கடம் உடை படுவ கடுப்ப உவட்டு எழவும் – மீனாட்சிபிள்ளை:5 51/1
விரி தலை முதலொடு விளைபுலம் உலைய உழக்கிய முள் சுறவின் விசையினின் வழி நறை மிடறு ஒடி கமுகின் விழு குலை நெக்கு உகவும் – மீனாட்சிபிள்ளை:5 51/2
தகர குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின் தட கை நாசி புழை மடுப்ப தளரும் சிறு நுண் மருங்குல் பெரும் – மீனாட்சிபிள்ளை:6 60/1
தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த துறை தீம் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தை கிழங்கை அகழ்ந்து – மீனாட்சிபிள்ளை:6 61/1
பெரும் தேன் இறைக்கும் நறை கூந்தல் பிடியே வருக முழு ஞான பெருக்கே வருக பிறை மௌலி பெம்மான் முக்கண் சுடர்க்கு இடு நல் – மீனாட்சிபிள்ளை:6 62/1
செம் கண் இளைஞர் களி காம தீ மூண்டிட கண்டு இளமகளிர் செழு மென் குழற்கு ஊட்டு அகில் புகையால் திரள் காய் கதலி பழுத்து நறை
பொங்கு மதுரை பெருமாட்டி புது நீர் ஆடி அருளுகவே பொருநை துறைவன் பொன் பாவாய் புது நீர் ஆடி அருளுகவே – மீனாட்சிபிள்ளை:9 88/3,4
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
நறையும் (1)
தகர குழலின் நறையும் நறை தரு தீம் புகையும் திசைக்களிற்றின் தட கை நாசி புழை மடுப்ப தளரும் சிறு நுண் மருங்குல் பெரும் – மீனாட்சிபிள்ளை:6 60/1
நனைத்து (1)
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 86/2
நனைப்ப (1)
பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை பால் அமுதம் ஊட்டி ஒரு நின் பால் நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல் தன் பட்டாடை மடி நனைப்ப
சீராட்டி வைத்து முத்தாடும் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே தென்னற்கும் அம் பொன்மலை மன்னற்கும் ஒரு செல்வி செங்கீரை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:2 13/3,4