கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சக்ரவாள 1
சகலமும் 1
சகோரமாய் 1
சங்கம் 3
சங்கு 4
சங்கும் 1
சங்கொடும் 1
சடை 5
சத்தியே 1
சததள 1
சததளமின் 1
சதுர்மறை 1
சந்தானம் 1
சப்பாணி 10
சப்பாணிகொட்டி 10
சபையில் 1
சமயத்து 1
சமயம் 1
சமர்த்தன் 1
சமரில் 2
சமைத்த 1
சமைத்து 1
சயிலத்து 1
சராசரம் 1
சராசரமும் 1
சரிந்திட 1
சரிந்து 1
சரிய 1
சருவி 1
சலராசி 1
சலாப 1
சலாமிடற்கு 1
சலிக்க 1
சவுந்தரி 4
சக்ரவாள (1)
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள
வட்டம் சுழல மட்டித்து நட்டமிடு மதுமத்தர் சுத்த நித்த வட்டத்தினுக்கு இசைய ஒற்றி கனத்த தன வட்டத்தை ஒத்திட்டது ஓர் – மீனாட்சிபிள்ளை:4 33/2,3
சகலமும் (1)
தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட – மீனாட்சிபிள்ளை:9 85/2
சகோரமாய் (1)
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1
சங்கம் (3)
தாரில் பொருதிடும் மதுரை துரைமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 28/4
தானை கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 29/4
சமரில் பொரு திருமகனை தரு மயில் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 30/4
சங்கு (4)
சங்கு கிடந்த தடம் கை நெடும் புயல் தங்காய் பங்காய் ஓர் தமனிய மலை படர் கொடி என வடிவு தழைந்தாய் எந்தாய் என்று – மீனாட்சிபிள்ளை:2 22/1
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் – மீனாட்சிபிள்ளை:4 37/2
சங்கு ஓலிடும் கடல் தானைக்கு வெந்இடு தராபதிகள் முன்றில் தூர்த்த தமனிய குப்பையும் திசை_முதல்வர் தட முடி தாமமும் தலைமயங்க – மீனாட்சிபிள்ளை:5 50/1
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் – மீனாட்சிபிள்ளை:9 83/1
சங்கும் (1)
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் – மீனாட்சிபிள்ளை:5 45/2
சங்கொடும் (1)
வளை ஆடு வண் கை பொலன் சங்கொடும் பொங்கு மறி திரை சங்கு ஓலிட மதர் அரி கண் கயல் வரி கயலொடும் புரள மகரந்தம் உண்டு வண்டின் – மீனாட்சிபிள்ளை:9 83/1
சடை (5)
பகரும் இசை திசை பரவ இருவர்கள் பயிலும் இயல் தெரி வெள் வளை தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நில விரி பவள வனம் அடர் பல் சடை காட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/3
செம் சூட்டு வெள் ஓதிமம் குடியிருக்கும் வளர் செம் சடை கரு மிடற்று தேவுக்கு முன் நின்ற தெய்வத்தை மும் முலை திருவை புரக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 8/4
வண்டு படு தெரியல் திரு தாதையார் மரபின் வழிமுதல் என குறித்தோ வளர் சடை முடிக்கு எந்தை தண் நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ – மீனாட்சிபிள்ளை:7 63/2
மண்டலம் புக்கனை இருத்தியெனின் ஒள் ஒளி மழுங்கிட அழுங்கிடுதி பொன் வளர் சடை காட்டு எந்தை வைத்திட பெறுதியேல் மாசுணம் சுற்ற அச்சம்கொண்டு – மீனாட்சிபிள்ளை:7 66/2
திங்கள்_கொழுந்தை கொழுந்துபடு படர் சடை செருகு திரு மணவாளன் மேல் செழு மண பந்தரில் எடுத்து எறியும் அமுத வெண் திரளையில் புரளும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:8 74/1
சத்தியே (1)
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/3
சததள (1)
ததை மலர் பொதுளிய களி அளி குமிறு குழல் திருவை தவள சததள முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மட பிடியே – மீனாட்சிபிள்ளை:5 52/2
சததளமின் (1)
தனமும் மனன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளி மட்டு ஊற்றிய தவள மலர் வரும் இளமின்னொடு சததளமின் வழிபடு தையலை தூ திரை – மீனாட்சிபிள்ளை:1 3/6
சதுர்மறை (1)
தண் நாறும் மல்லல் துறை சிறை அனம் களி தழைக்கும் கலா மஞ்ஞையாய் சகலமும் நின் திரு சொருபம் என்று ஓலிடும் சதுர்மறை பொருள் வெளியிட – மீனாட்சிபிள்ளை:9 85/2
சந்தானம் (1)
மருவிய பிணி கெட மலை தரும் அருமை மருந்தே சந்தானம் வளர் புவனமும் உணர்வு அரும் அரு மறையின் வரம்பே செம் போதில் – மீனாட்சிபிள்ளை:2 21/2
சப்பாணி (10)
கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 38/4
கூனல் சிலையின் நெடும் கணை தொட்டவள் கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 38/4
குமரி துறை என ஆடும் மட பிடி கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 39/4
குமரி துறை என ஆடும் மட பிடி கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 39/4
குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 40/4
குன்ற_விலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி குடை நிழலில் புவிமகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 40/4
மழை பொழி இமய மயில் பெடை கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 41/4
மழை பொழி இமய மயில் பெடை கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 41/4
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 42/4
மழலையின் அமுது உகு சொல் கிளி கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும் மட பிடி கொட்டுக சப்பாணி – மீனாட்சிபிள்ளை:4 42/4
சப்பாணிகொட்டி (10)
தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 33/4
தாள வட்டம் கொட்டு கைப்பாணி ஒப்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 33/4
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 34/4
தைவந்த நாணினொடு தவழ்தந்த செம் கை கொடு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 34/4
தாமரை பழுத்த கை தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 35/4
தாமரை பழுத்த கை தளிர் ஒளி துளும்ப ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 35/4
தண் அளி கமலம் சிவப்பூற அம்மை ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 36/4
தண் அளி கமலம் சிவப்பூற அம்மை ஒரு சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 36/4
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 37/4
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 37/4
சபையில் (1)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும் – மீனாட்சிபிள்ளை:1 3/4
சமயத்து (1)
தம் மனம் ஒப்ப உரைப்பன மற்றை சமயத்து அமைவு பெறார் தத்தமில் நின்று பிதற்றுவ பொருவ தனிமுதல் யாம் என்பார்க்கு – மீனாட்சிபிள்ளை:8 81/3
சமயம் (1)
தழைக்கும் துகில் கொடி முகில் கொடி திரைத்து மேல் தலம் வளர் நகில் கொடிகளை தாழ் குழலும் நீவி நுதல் வெயர்வும் துடைத்து அம்மை சமயம் இது என்று அலுவலிட்டு – மீனாட்சிபிள்ளை:7 71/3
சமர்த்தன் (1)
சிகர பொதிய மிசை தவழும் சிறுதேர் மேலே போய் ஓர் சிவனை பொருத சமர்த்தன் உகந்து அருள் சேல் போல் மாயாமே – மீனாட்சிபிள்ளை:3 32/3
சமரில் (2)
சமரில் பொரு திருமகனை தரு மயில் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன் கொடி தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 30/4
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும் எதிரிட்டு அமராட தண்டதரன் செல் கரும் பகடு இந்திரன் வெண் பகடோடு உடையா – மீனாட்சிபிள்ளை:4 39/1
சமைத்த (1)
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் – மீனாட்சிபிள்ளை:6 59/2
சமைத்து (1)
எற்று புனலில் கழுவு புவன பழம் கலம் எடுத்து அடுக்கி புது கூழ் இன் அமுதமும் சமைத்து அன்னை நீ பல் முறை இழைத்திட அழித்துஅழித்து ஓர் – மீனாட்சிபிள்ளை:2 15/2
சயிலத்து (1)
தகர கரிய குழல் சிறு பெண்பிள்ளை நீயோ தூயோன் வாழ் சயிலத்து எயிலை வளைப்பவள் என்று எதிர் சீறா வீறு ஓதா – மீனாட்சிபிள்ளை:3 32/1
சராசரம் (1)
அகில சராசரம் நிகிலமோடு ஆடிட ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை – மீனாட்சிபிள்ளை:2 18/4
சராசரமும் (1)
ஆர்க்கும் பணாடவி அசைப்ப சராசரமும் அசைகின்றது அம்மனை அசைந்து ஆடலால் அண்டமும் அகண்ட பகிரண்டமும் அசைந்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:10 97/2
சரிந்திட (1)
துகிலொடு சோர்தரு கொடி நுண் மருங்குல் துவண்டுதுவண்டு ஆட தொந்தி சரிந்திட உந்தி கரந்து ஒளிர் சூலுடை ஆல் அடை மற்று – மீனாட்சிபிள்ளை:2 18/3
சரிந்து (1)
பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறி ஒர் பச்சுடல் சொல்லவும் ஒர் பைம் கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்து ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/2
சரிய (1)
நிரை பொங்கிடும் செம் கை வெள் வளை கலிப்ப நகை நிலவு விரி பவளம் வெளிற நீல கருங்குவளை செங்குவளை பூப்ப அறல் நெறி குழல் கற்றை சரிய
திரை பொங்கு தண் அம் துறை குடைந்து ஆடுவ செழும் தரங்க கங்கை நுண் சிறு திவலையா பொங்கும் ஆனந்த மா கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 84/1,2
சருவி (1)
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/5
சலராசி (1)
தடம் பட்ட பொன் தாது சிந்துரம் கும்ப தலத்து அணிவது ஒப்ப அப்பி சலராசி ஏழும் தட கையில் முகந்து பின் தான நீரால் நிரப்பி – மீனாட்சிபிள்ளை:6 56/2
சலாப (1)
கோடும் குவடும் பொரு தரங்க குமரி துறையில் படு முத்தும் கொற்கை துறையில் துறைவாணர் குளிக்கும் சலாப குவால் முத்தும் – மீனாட்சிபிள்ளை:5 47/1
சலாமிடற்கு (1)
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/2
சலிக்க (1)
மஞ்சு ஊட்டு அகட்டு நெடு வான் முகடு துருவும் ஒரு மறை ஓதிமம் சலிக்க மறி திரை சிறை விரியும் ஆயிர முக கடவுள் மந்தாகினி பெயர்த்த – மீனாட்சிபிள்ளை:1 8/3
சவுந்தரி (4)
அத்தன் மனத்து எழுதிய உயிர் ஓவியம் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 79/4
அளி கனிய திருவருள் கனியும் கனி ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 80/4
அம்மனை ஆயவர்-தம் மனை ஆனவள் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 81/4
அள்ளல் வயல் துயில் மதுரை துரைமகள் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 82/4