Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மே (1)

மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி:26/35

TOP


மேகலை (1)

ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி:5/112,113

TOP


மேம்படீஇய (1)

பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி:1/2,3

TOP


மேய்ந்த (1)

குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி:5/130

TOP


மேரு (2)

நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி:6/193
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி:18/92

TOP

மேல் (16)

தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி:2/5
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி:4/80
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி:6/17,18
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி:7/13
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி:9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/3
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி:9/4
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி:12/32
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி:18/113
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி:22/146,147
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/138
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி:27/47
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி:27/123
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி:29/94
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/79
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி:30/252

TOP


மேலும் (2)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24

TOP


மேலை (1)

மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி:28/11

TOP


மேலோர் (3)

மேலோர் விழைய விழா கோள் எடுத்த – மணி:1/7
காழோர் கையற மேலோர் இன்றி – மணி:4/35
நீல யானை மேலோர் இன்றி – மணி:19/20

TOP


மேவி (1)

என்று இ ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி:27/153,154

TOP


மேவிய (5)

மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி:18/66
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி:20/64
மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி:24/140
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி:29/66
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி:30/81

TOP


மேவினேன் (1)

மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி:24/102

TOP


மேவுதல் (1)

வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி:30/89

TOP


மேற்கொள்ள (1)

கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி:5/136,137

TOP


மேற்சென்று (1)

மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே – மணி:19/37

TOP


மேற்றே (1)

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி:11/94

TOP


மேனி (7)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி:0/2
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி:2/15
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப – மணி:5/2
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி:18/81
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி:21/36
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி:23/62
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி:29/33

TOP


மேனியள் (2)

திருவில் இட்டு திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி:6/10,11
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி:13/72,73

TOP


மேனியன் (1)

மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி:3/91

TOP