கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீ 56
நீக்க 1
நீக்கி 5
நீக்கிய 1
நீக்குதல் 1
நீக்குவள் 1
நீங்க 5
நீங்கல் 2
நீங்கலும் 2
நீங்கா 5
நீங்காது 3
நீங்கார் 2
நீங்கான் 1
நீங்கி 23
நீங்கிடின் 1
நீங்கிய 9
நீங்கியது 1
நீங்கின் 1
நீங்கினர் 1
நீங்கினன் 1
நீங்கு 3
நீங்கும் 3
நீங்குவர் 1
நீங்கேன் 2
நீட்டி 1
நீட்டித்து 1
நீட்டும் 1
நீடலும் 1
நீடாது 1
நீடினும் 1
நீடு 3
நீடும் 1
நீத்த 3
நீத்ததும் 1
நீத்தம் 1
நீத்து 1
நீத்தோய் 1
நீத்தோர் 1
நீத்தோன் 2
நீந்தி 1
நீயிரும் 2
நீயும் 3
நீயே 2
நீயோ 3
நீர் 55
நீர்மை 1
நீர்மையை 1
நீராட்ட 1
நீராய் 1
நீரால் 1
நீரின் 1
நீரும் 8
நீரே 1
நீரேம் 1
நீல 4
நீலத்து 1
நீலபதி 1
நீலபதி-தன் 1
நீழல் 2
நீள் 9
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நீ (56)
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி:0/31
சித்திராபதிக்கும் செப்பு நீ என – மணி:2/71
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி:4/60
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி:6/36
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி:6/153
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி:6/161
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/167
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி:6/170
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி:7/32
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி:9/10
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி:9/31
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி:10/50
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி:10/85,86
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி:11/8
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி:11/9
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி:11/18
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி:11/119
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி:12/34
பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் – மணி:12/50
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி:13/43
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி:13/60
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி:13/62
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி:15/22,23
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி:15/80
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி:16/43
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி:16/65
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி:16/72
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார்-தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி:16/99,100
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி:16/105,106
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி:17/15
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/135
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி:19/143
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி:19/146
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/43,44
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி:20/51,52
ஆவ கணை கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி:20/63,64
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி:20/65,66
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி:21/30
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி:21/162
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி:22/16
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/26
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி:22/44
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி:22/56
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி:22/58
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி:22/92
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி:23/86
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி:24/143,144
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி:25/27
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி:25/106
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி:25/110
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி:25/112,113
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி:25/234
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி:25/236
நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி:27/167
பூத வாதியை புகல் நீ என்ன – மணி:27/263
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி:29/46,47
நீக்க (1)
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி:24/5,6
நீக்கி (5)
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி:4/69,70
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இ நகர் காண – மணி:7/16,17
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி – மணி:10/62,63
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி:10/63,64
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி:21/76
நீக்கிய (1)
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி:20/2
நீக்குதல் (1)
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி:6/160,161
நீக்குவள் (1)
காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி:21/81,82
நீங்க (5)
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி:5/66,67
தோன்றா துடவையின் இட்டனள் நீங்க
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி:13/10,11
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி:21/53
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி:21/147
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி:28/122
நீங்கல் (2)
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி:17/60
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி:25/235
நீங்கலும் (2)
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி:8/57
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி:27/161
நீங்கா (5)
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி:10/45
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் – மணி:12/94,95
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி:21/57
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி:21/127,128
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி:28/125
நீங்காது (3)
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி:3/72
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி:4/90
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி:22/154
நீங்கார் (2)
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:8/57,58
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி:22/175
நீங்கான் (1)
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி:22/185
நீங்கி (23)
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி:1/70,71
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி:5/26
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி:6/188,189
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி:7/2,3
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி:7/88
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி:9/27,28
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி:12/112,113
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி
ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி:14/65,66
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி:16/45,46
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி:16/62
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி:17/19
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி:17/20
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த – மணி:18/143,144
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி
உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி:20/38,39
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி:20/96,97
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி:20/114,115
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி:21/10,11
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி:21/187,188
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி:22/89
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் – மணி:22/145
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:24/136,137
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி:25/19,20
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி:30/77,78
நீங்கிடின் (1)
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி:16/97,98
நீங்கிய (9)
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் – மணி:1/39
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி:5/69
அந்தி மாலை நீங்கிய பின்னர் – மணி:6/1
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி:11/1
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி:12/12
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி:19/61
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி:20/15
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி:22/9,10
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி:25/56,57
நீங்கியது (1)
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி:10/93
நீங்கின் (1)
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி:4/114
நீங்கினர் (1)
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி:22/174
நீங்கினன் (1)
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி:3/41
நீங்கு (3)
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி:22/36
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி:26/40
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260
நீங்கும் (3)
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி:4/24
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி:12/95,96
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி:17/56
நீங்குவர் (1)
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி:17/40,41
நீங்கேன் (2)
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி:21/133
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169
நீட்டி (1)
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21
நீட்டித்து (1)
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி:22/120
நீட்டும் (1)
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி:5/108,109
நீடலும் (1)
நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி:3/113
நீடாது (1)
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி:25/84,85
நீடினும் (1)
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/24,25
நீடு (3)
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி:5/117
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி:19/146
நீடும் (1)
நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி:3/113
நீத்த (3)
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி:10/57
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி:26/59
நீத்ததும் (1)
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி:23/111,112
நீத்தம் (1)
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி:12/80
நீத்து (1)
நாணமும் உடையும் நன்கனம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி:3/88,89
நீத்தோய் (1)
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி:7/101,102
நீத்தோர் (1)
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி:25/164,165
நீத்தோன் (2)
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ-அதனை – மணி:15/16,17
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி:15/36,37
நீந்தி (1)
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி:26/40,41
நீயிரும் (2)
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி:10/70
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி:11/143
நீயும் (3)
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி:6/28
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி:21/170
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே – மணி:26/62,63
நீயே (2)
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி:3/15
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி:10/13
நீயோ (3)
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி:10/12
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் – மணி:14/69
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி:21/38
நீர் (55)
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி:0/14
ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி:0/16
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி:2/23
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி:2/45
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து – மணி:2/48
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி:3/9
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி:3/14
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி:3/22
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/55
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி:3/138
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி:4/7
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி:5/31
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி:5/53
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி:5/110
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி:6/26
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி:6/78
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/60
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி:7/64
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி:7/70
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி:8/3
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி:8/8
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி:8/33
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி:11/39
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி:12/67
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி:12/68
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/28
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி:14/84
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி:14/91
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி:15/28
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி:15/48
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி:18/92
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி:19/104
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி:19/104
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி:21/121
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி:22/40
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி:22/169
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி:23/112
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி:23/117
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி:23/138
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி:23/142
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி:25/125
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி:25/191
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி:25/207
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி:26/14
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி:26/17
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/116
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/122
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி:27/129
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/247
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி:28/65
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி:28/200
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி:28/202
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி:29/24
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி:30/199
நீர்மை (1)
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி:27/255
நீர்மையை (1)
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி:4/69
நீராட்ட (1)
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி:3/10,11
நீராய் (1)
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் – மணி:27/143
நீரால் (1)
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி:14/52
நீரின் (1)
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி:19/53
நீரும் (8)
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி:6/41
சுரும் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி:28/6,7
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள் – மணி:28/8,9
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி:28/10,11
சீல உபாகர் செம் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி:28/12,13
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி:28/14,15
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும்
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி:28/16,17
நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி:28/230
நீரே (1)
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி:28/17
நீரேம் (1)
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி:5/55,56
நீல (4)
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி:4/43
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி:8/17
நீல யானை மேலோர் இன்றி – மணி:19/20
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி:22/154
நீலத்து (1)
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி:3/21
நீலபதி (1)
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி:9/44
நீலபதி-தன் (1)
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி:23/67
நீழல் (2)
போதி நீழல் பொருந்தி தோன்றும் – மணி:11/73
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி:16/53,54
நீள் (9)
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி:3/124
நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி:6/74
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி:9/19
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி:14/51
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி:22/175
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி:25/96
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/225