Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகண்ட 1
நிகமனம் 3
நிகர் 1
நிகழ்ச்சி 5
நிகழ்ச்சியில் 1
நிகழ்ச்சியும் 2
நிகழ்தரும் 1
நிகழ்தல் 1
நிகழ்தலின் 2
நிகழ்தலும் 1
நிகழ்ந்த 2
நிகழ்ந்ததை 1
நிகழ்ந்து 6
நிகழ்வ 1
நிகழ்வது 1
நிகழ்வன 1
நிகழ்வு 2
நிகழ்வும் 1
நிகழ 1
நிகழாது 1
நிகழாமையானும் 1
நிகழின் 1
நிகழும் 2
நிச்சயித்து 1
நிச்சயியா 1
நிண 1
நிணம் 3
நித்த 3
நித்தத்தினுக்கு 1
நித்தத்து 1
நித்தத்துவம் 2
நித்தத்துவமும் 1
நித்தத்தை 1
நித்தத்தோடு 1
நித்தம் 23
நித்தமும் 6
நித்தமோ 1
நித்தியம் 5
நித்தியமா 1
நித்தியமாய் 1
நித்தில 2
நிதி 3
நிம்பத்து 1
நிம்பம் 1
நிமிர்ந்து 1
நிமிராது 1
நியமத்து 3
நிர் 1
நிரப்பு 1
நிரப்புநர் 1
நிரம்பி 2
நிரய 3
நிருத்தம் 1
நிரை 4
நிரைத்தன-கொல் 1
நில்லா 3
நில்லாது 2
நில 18
நிலத்தலை 1
நிலத்தில் 1
நிலத்து 1
நிலம் 19
நிலமும் 1
நிலனாய் 1
நிலனொடு 2
நிலா 2
நிலை 29
நிலை-தோறும் 1
நிலைபெற 1
நிலையா 2
நிலையாமையின் 1
நிலையும் 1
நிவந்து 1
நிழல் 5
நிழலொடு 1
நிற்க 1
நிற்கு 1
நிற்குநரும் 3
நிற்ப 3
நிற்பன 1
நிற்போர் 1
நிற்போனும் 1
நிற்றலின் 1
நிற்றலினால் 1
நிற்றலும் 4
நிற 3
நிறத்தாள் 1
நிறம் 4
நிறுத்த 1
நிறுத்தல் 1
நிறுத்தி 2
நிறுத்தும் 1
நிறுப்போர் 2
நிறை 10
நிறைத்து 1
நிறைதர 1
நிறைந்த 3
நிறைந்து 1
நிறையின் 1
நிறையும் 1
நின் 84
நின்-பால் 5
நின்மிதி 1
நின்ற 12
நின்றவற்றின் 1
நின்றன் 2
நின்றனன் 1
நின்றாய் 1
நின்றாற்கு 1
நின்றிடின் 1
நின்றீர் 1
நின்று 33
நின்றே 4
நின்றோள் 2
நின்னது 1
நின்னாங்கு 2
நின்னால் 3
நின்னை 3
நின்னையும் 3
நின்னொடு 1
நின்னொடும் 3
நின்னோடு 2
நினக்கு 7
நினக்கும் 1
நினக்கே 1
நினை 2
நினைத்தல் 1
நினைந்து 1
நினைப்பு 4
நினைஇ 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நிகண்ட (1)

நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி:27/167

TOP


நிகமனம் (3)

நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி:29/58
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி:29/63
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி:29/109

TOP


நிகர் (1)

நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி:3/15

TOP


நிகழ்ச்சி (5)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி:3/4
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி:9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி:21/160
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி:30/174

TOP


நிகழ்ச்சியில் (1)

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி:30/201

TOP


நிகழ்ச்சியும் (2)

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி:27/191,192
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி:27/192,193

TOP


நிகழ்தரும் (1)

நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி:27/232

TOP


நிகழ்தல் (1)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி:27/183

TOP


நிகழ்தலின் (2)

அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி:28/111,112
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் – மணி:29/401

TOP


நிகழ்தலும் (1)

சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி:27/260

TOP


நிகழ்ந்த (2)

ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி:12/106
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி:30/162

TOP


நிகழ்ந்ததை (1)

நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி:13/43

TOP


நிகழ்ந்து (6)

ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/223,224
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி:29/91
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி:29/239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி:29/249
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் – மணி:29/260
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி:29/263

TOP


நிகழ்வ (1)

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி:27/61

TOP


நிகழ்வது (1)

ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று – மணி:29/264

TOP


நிகழ்வன (1)

ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி:7/29

TOP


நிகழ்வு (2)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி:27/34
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி:27/204

TOP


நிகழ்வும் (1)

அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி:27/169

TOP


நிகழ (1)

நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி:28/42

TOP


நிகழாது (1)

நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி:27/75,76

TOP


நிகழாமையானும் (1)

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில் – மணி:29/261,262

TOP


நிகழின் (1)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி:27/138,139

TOP


நிகழும் (2)

பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி:28/199
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி:29/121

TOP


நிச்சயித்து (1)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி:27/34

TOP


நிச்சயியா (1)

ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ மகனோ என்றல் – மணி:27/65,66

TOP


நிண (1)

மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி:28/33

TOP


நிணம் (3)

நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி:5/49
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி:6/84
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி:6/90

TOP


நித்த (3)

அறனும் மறனும் அநித்தமும் நித்த
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி:25/3,4
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி:29/121
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் – மணி:29/220

TOP


நித்தத்தினுக்கு (1)

அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு
சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி:29/258,259

TOP


நித்தத்து (1)

ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி:29/222

TOP


நித்தத்துவம் (2)

சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி:29/347
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி:29/358

TOP


நித்தத்துவமும் (1)

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி:29/371,372

TOP


நித்தத்தை (1)

ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி:29/286

TOP


நித்தத்தோடு (1)

நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் – மணி:29/346

TOP


நித்தம் (23)

சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி:29/118
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/226
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி:29/257
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/272
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணப்படுவது – மணி:29/283,284
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/342
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி:29/343,344
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி:29/352
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்தி போல் என்றால் – மணி:29/353,354
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி:29/367
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாக – மணி:29/368,369
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி:29/383,384
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/406
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் – மணி:29/410
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி:29/412
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/416
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி:29/417
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி:29/433
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/434
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம்
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி:29/443,444
நித்தம் பண்ணப்படாமையால் என்றால் – மணி:29/453
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி:29/454
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி:29/462

TOP


நித்தமும் (6)

அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி:27/179
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி:29/407
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி:29/438
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள – மணி:29/439
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி:29/464
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி:29/467

TOP


நித்தமோ (1)

அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி:29/265,266

TOP


நித்தியம் (5)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி:27/183,184
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி:27/226
அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி:29/159
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி:29/166
சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி:29/422

TOP


நித்தியமா (1)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி:27/188,189

TOP


நித்தியமாய் (1)

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி:27/231,232

TOP


நித்தில (2)

திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி:18/46
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி:19/112

TOP


நிதி (3)

விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி:16/122
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி:22/116

TOP


நிம்பத்து (1)

நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி:27/184

TOP


நிம்பம் (1)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி:27/183

TOP


நிமிர்ந்து (1)

நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி:19/51

TOP


நிமிராது (1)

இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி:11/81,82

TOP


நியமத்து (3)

சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பல பீடிகை – மணி:13/106,107
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து
தேவி சிந்தாவிளக்கு தோன்றி – மணி:14/10,11
சிந்தாதேவி செழு கலை நியமத்து
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/17,18

TOP


நிர் (1)

சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள – மணி:29/299

TOP


நிரப்பு (1)

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி:14/51

TOP


நிரப்புநர் (1)

அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/133,134

TOP


நிரம்பி (2)

சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி:29/347,348
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி:29/358

TOP


நிரய (3)

நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/167
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி:20/2
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி:23/56

TOP


நிருத்தம் (1)

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி:27/101

TOP


நிரை (4)

நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி:15/45
நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி:20/49
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி:25/106
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி:30/7

TOP


நிரைத்தன-கொல் (1)

முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல்
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/100,101

TOP


நில்லா (3)

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி:22/135
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/135,136
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி:22/136,137

TOP


நில்லாது (2)

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் – மணி:11/113
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி:26/7

TOP


நில (18)

மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/6
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி:5/106
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி:8/54
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/18
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி:9/19
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி:9/23
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி:11/85
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி:13/51
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி:13/52
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி:22/122
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி:22/175
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி:23/4
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/80
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி:27/129
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137
நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி:27/218

TOP


நிலத்தலை (1)

நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி:6/113

TOP


நிலத்தில் (1)

நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி:24/46

TOP


நிலத்து (1)

சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி:19/118

TOP


நிலம் (19)

நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி:3/124
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி:8/45
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி:8/46
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி:9/6
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி:9/7
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி:10/17
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி:12/89
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி:14/51
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி:17/9
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/225
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/116
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி:27/120
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி:27/122
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி:27/234
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/248,249
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி:28/42
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி:28/195

TOP


நிலமும் (1)

நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி:28/230

TOP


நிலனாய் (1)

இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் – மணி:27/142,143

TOP


நிலனொடு (2)

நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி:4/43
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி:17/66

TOP


நிலா (2)

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி:8/11
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி:28/27

TOP


நிலை (29)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி:0/24
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/25
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி:1/34
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி:1/42
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி:3/127
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி:6/47
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி:6/59
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/8
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி:7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி:7/9
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:7/94
பணை நிலை புரவி பல எழுந்து ஆல – மணி:7/117
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி:7/118
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி:15/25
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி:15/33
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி:17/89
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி:19/15
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி:20/110
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி:21/1
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி:21/2
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி:21/7
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி:21/133
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி:22/2
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி:25/112
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி:25/113
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி:26/50
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி:28/28
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி:28/148
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி:30/30

TOP


நிலை-தோறும் (1)

நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி:28/27

TOP


நிலைபெற (1)

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி:28/99

TOP


நிலையா (2)

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி:28/99
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி:30/176,177

TOP


நிலையாமையின் (1)

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி:30/101

TOP


நிலையும் (1)

தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி:27/181

TOP


நிவந்து (1)

நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி:22/14

TOP


நிழல் (5)

கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி:16/71
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி:22/14
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி:22/185
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி:25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி:25/169

TOP


நிழலொடு (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி:3/113

TOP


நிற்க (1)

சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி:29/271,272

TOP


நிற்கு (1)

நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி:10/13

TOP


நிற்குநரும் (3)

கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி:3/115,116
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி:3/131,132
காண்-மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி:3/145,146

TOP


நிற்ப (3)

தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி:0/26
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி:13/99,100
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி:26/9,10

TOP


நிற்பன (1)

மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி:3/154,155

TOP


நிற்போர் (1)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி:19/90,91

TOP


நிற்போனும் (1)

கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி:27/91

TOP


நிற்றலின் (1)

தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி:29/294

TOP


நிற்றலினால் (1)

எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால் – மணி:29/292,293

TOP


நிற்றலும் (4)

கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/56,57
புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி:16/131,132
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி:27/259
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி:29/123

TOP


நிற (3)

தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி:8/31
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி:18/49

TOP


நிறத்தாள் (1)

பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி:6/145

TOP


நிறம் (4)

மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி:6/5
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி:16/32
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/249
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி:27/252

TOP


நிறுத்த (1)

நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/225

TOP


நிறுத்தல் (1)

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி:27/190

TOP


நிறுத்தி (2)

கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி:4/91,92
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி:6/184,185

TOP


நிறுத்தும் (1)

பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி:11/79,80

TOP


நிறுப்போர் (2)

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி:19/81,82
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் – மணி:19/83,84

TOP


நிறை (10)

கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி:5/55
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி:6/61
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி:7/60
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி:7/67
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி:9/26
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி:12/93
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி:19/23
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி:22/66
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி:22/174
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி:23/48

TOP


நிறைத்து (1)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி:26/45,46

TOP


நிறைதர (1)

அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி:16/133,134

TOP


நிறைந்த (3)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி:27/138
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி:28/14
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி:28/25,26

TOP


நிறைந்து (1)

அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி:5/64

TOP


நிறையின் (1)

நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி:18/100

TOP


நிறையும் (1)

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி:5/20

TOP


நின் (84)

நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி:0/31
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி:3/80
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி:4/19
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/12
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி:5/13,14
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி:5/28
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி:6/160
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி:7/21
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:7/107
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி:9/33
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி:9/47
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி:10/12
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி:10/36
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி:10/41
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின்
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி:10/50,51
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி:10/87
நறு மலர் கோதை நின் ஊர்-ஆங்கண் – மணி:11/51
மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி:11/61
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி:11/62
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி:11/63
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி:11/64
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி:11/65
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி:11/66
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி:11/67
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி:11/68
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி:11/69
உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி:11/70
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி:12/35
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி:13/76
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி:14/34
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி:16/43
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி:18/63
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/130
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி:19/134
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி:20/33
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி:21/11
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி:21/21
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி:21/44
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி:21/109
தையல் நின் பயந்தோர்-தம்மொடு போகி – மணி:21/152
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/156
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி:21/171
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி:21/174
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி:21/184
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி:22/69
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி:22/120
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி:22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி:22/134
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி:22/194
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி:23/18
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி:24/79
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி:24/81
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி:25/21
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி:25/110
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/123
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி:25/149
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி:25/163
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/164
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/172
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி:25/172
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி:25/208,209
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/222
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி:25/225
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி:25/235
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/236,237
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி:26/24
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி:27/4
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி:27/88
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி:27/109
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி:27/283,284
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி:28/93
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/138
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி:28/151
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி:28/161
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/193
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி:29/14
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி:29/31
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி:29/35
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி:29/36

TOP


நின்-பால் (5)

உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி:21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி:21/185
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி:22/33
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி:22/34
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி:22/74,75

TOP


நின்மிதி (1)

நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி:30/37

TOP


நின்ற (12)

நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி:4/90
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி:5/93
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி:6/47
நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி:6/193
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி:6/194
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி:22/2
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/15
நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி:27/87
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி:27/250
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி:29/169
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி:29/175,176
என்றால் என்று நின்ற இடத்து – மணி:29/463

TOP


நின்றவற்றின் (1)

நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/311

TOP


நின்றன் (2)

மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி:25/176
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி:25/223

TOP


நின்றனன் (1)

நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி:19/77

TOP


நின்றாய் (1)

ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96

TOP


நின்றாற்கு (1)

அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி:29/198,199

TOP


நின்றிடின் (1)

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி:3/25,26

TOP


நின்றீர் (1)

ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி:6/15

TOP


நின்று (33)

சாகை சம்பு-தன் கீழ் நின்று
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி:0/5,6
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி:1/5,6
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/143
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/8,9
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி:4/11
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி:4/16
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி:4/29
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி:5/117
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி:6/79
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி:7/66
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி:7/85
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி:9/19
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி:10/65
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி:11/112
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி:11/123
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி:13/33
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி:13/46
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி:18/51
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி:18/116
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி:19/46
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி:19/95
செம்மலர் செம் கை காட்டுபு நின்று
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி:19/99,100
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி:23/10
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி:24/48,49
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/174
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி:25/31
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி:26/6
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி:27/179,180
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி:27/232
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி:28/164
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219
தானம் தாங்கி சீலம் தலை நின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி:30/1,2

TOP


நின்றே (4)

போதல்-செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி:2/39,40
ஆவி பனி என ஐயுறா நின்றே
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி:29/205,206
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி:29/356,357
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் – மணி:29/421

TOP


நின்றோள் (2)

முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி:10/6
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி:18/124

TOP


நின்னது (1)

நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி:28/148

TOP


நின்னாங்கு (2)

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி:10/41
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி:11/47

TOP


நின்னால் (3)

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி:12/104
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி:27/167,168

TOP


நின்னை (3)

அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி:25/162
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/222
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/91

TOP


நின்னையும் (3)

அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி:20/126
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி:21/75
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி:21/81

TOP


நின்னொடு (1)

நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி:24/81

TOP


நின்னொடும் (3)

கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:10/74
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:12/18
மா பெரும் தானை மன்ன நின்னொடும்
தேவியர்-தமக்கும் தீது இன்றோ என – மணி:12/41,42

TOP


நின்னோடு (2)

ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி:12/110,111
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி:21/61,62

TOP


நினக்கு (7)

இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி:7/108
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி:9/54
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி:12/35
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி:21/21
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி:21/29
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி:22/17
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி:27/76

TOP


நினக்கும் (1)

நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி:10/45

TOP


நினக்கே (1)

மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி:26/65

TOP


நினை (2)

கன்று நினை குரல மன்று வழி படர – மணி:5/132
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி:29/31

TOP


நினைத்தல் (1)

புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி:27/74,75

TOP


நினைந்து (1)

பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/79,80

TOP


நினைப்பு (4)

நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி:3/72
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி:23/56
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி:27/61
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி:27/75

TOP


நினைஇ (1)

இ நகர் காப்போர் யார் என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/28,29

TOP