Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 18
நா_மிசை_பாவாய் 1
நாக 5
நாகநாடு 1
நாகபுரம் 1
நாகம் 4
நாகமும் 1
நாகர் 2
நாகனும் 1
நாட்டத்து 1
நாட்டப்படுவது 1
நாட்டிய 1
நாட்டு 11
நாட்டுக்கு 2
நாட்டுக 1
நாடக 5
நாடக_மகளிர்க்கு 1
நாடக_மடந்தையர் 1
நாடகம் 2
நாடவர் 1
நாடன் 1
நாடாது 1
நாடி 1
நாடியின் 1
நாடு 20
நாண் 5
நாணமும் 1
நாணாது 1
நாணாள் 1
நாணி 1
நாணினை 1
நாணு 2
நாதன் 6
நாப்பண் 3
நாம் 2
நாம 2
நாமம் 3
நாய் 4
நாரணன் 1
நாராச 1
நால் 19
நால்_நால் 1
நால்_ஏழ் 1
நாவல் 7
நாவலில் 1
நாவலொடு 1
நாவாய் 2
நாவால் 1
நாவான் 1
நாவிடை 1
நாவியின் 1
நாவிற்கு 1
நாவின் 2
நாவை 1
நாவொடு 1
நாவோய் 1
நாள் 69
நாள்-தொட்டு 1
நாள்-தொட்டும் 3
நாளால் 1
நாளிடை 1
நாளில் 5
நாளினும் 2
நாளும் 1
நாற்ற 1
நாற்றம் 2
நாற்றம்மே 1
நாற்றமும் 1
நாற்றமொடு 1
நாற்றனும் 1
நாற்று-மின் 1
நாறு 6
நான் 4
நான்காம் 1
நான்கால் 1
நான்கினும் 1
நான்கு 6
நான்கும் 4
நான்மறை 3
நானூறு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நா (18)

மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி:5/79
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி:5/105
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/108
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி:7/61
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி:10/34
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி:11/81
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி:13/26
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/18
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி:19/4
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி:21/140
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி:22/94
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி:22/104
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி:23/16
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி:23/52
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி:24/99
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி:25/51
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/151

TOP


நா_மிசை_பாவாய் (1)

நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி:14/18,19

TOP


நாக (5)

கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி:8/54
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி:9/21
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/58
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி:24/54
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/178

TOP


நாகநாடு (1)

வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி:29/3

TOP


நாகபுரம் (1)

நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி:24/169

TOP


நாகம் (4)

நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி:7/131
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி:20/98
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி:23/69
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி:25/195

TOP


நாகமும் (1)

நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் – மணி:3/162

TOP


நாகர் (2)

நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/39

TOP


நாகனும் (1)

என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி:16/106,107

TOP


நாட்டத்து (1)

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி:1/54

TOP


நாட்டப்படுவது (1)

பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி – மணி:29/119

TOP


நாட்டிய (1)

நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி:29/469

TOP


நாட்டு (11)

காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு
பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி:9/12,13
நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி:9/21
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/58
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி:10/52
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/74
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி:14/78
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி:23/104,105
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி:25/232
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி:25/232
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி:26/15,16
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி:28/160

TOP


நாட்டுக்கு (2)

யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி:14/42,43
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/42,43

TOP


நாட்டுக (1)

நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி:29/117

TOP


நாடக (5)

நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி:2/30
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/51
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி:19/80
நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி:24/23
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி:24/75

TOP


நாடக_மகளிர்க்கு (1)

நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி:2/30

TOP


நாடக_மடந்தையர் (1)

நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/51

TOP


நாடகம் (2)

நாடகம் விரும்ப நல் நலம் கவினி – மணி:18/58
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி:25/82

TOP


நாடவர் (1)

நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி:18/103

TOP


நாடன் (1)

நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி:29/24

TOP


நாடாது (1)

நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி:19/4

TOP


நாடி (1)

பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி:21/122,123

TOP


நாடியின் (1)

விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி:8/47

TOP


நாடு (20)

ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி:0/82
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/41
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி:8/54
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:14/13
பன்னீராண்டு பாண்டி நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி:14/55,56
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி:21/89
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி:24/54
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி:24/153
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி:25/101,102
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி:25/110
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி:25/144
நாக நல் நாடு ஆள்வோன்-தன் மகள் – மணி:25/178
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி:25/222
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி:25/237
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/80
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/80
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி:28/83
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி:28/156
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் – மணி:28/190
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி:30/199,200

TOP


நாண் (5)

நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/33
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி:2/36
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/133
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி:11/78
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி:18/105

TOP


நாணமும் (1)

நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி:3/88

TOP


நாணாது (1)

நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி:3/152

TOP


நாணாள் (1)

நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் – மணி:22/125

TOP


நாணி (1)

இளமை நாணி முதுமை எய்தி – மணி:4/107

TOP


நாணினை (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி:10/30

TOP


நாணு (2)

நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி:2/41
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி:23/16

TOP


நாதன் (6)

நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி:11/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி:12/102
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/93
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி:28/71
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி:28/89
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி:28/144

TOP


நாப்பண் (3)

குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண்
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/75,76
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி:22/125,126
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/145,146

TOP


நாம் (2)

நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி:22/127
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி:30/228

TOP


நாம (2)

நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி:6/37
நாம சாதி குணம் கிரியைகள் – மணி:29/50

TOP


நாமம் (3)

நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி:7/35
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி:22/38
கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி:27/23

TOP


நாய் (4)

கடகம் செறித்த கையை தீ நாய்
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி:6/114,115
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி:11/87
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி:29/104
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி:29/107

TOP


நாரணன் (1)

ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி:27/99

TOP


நாராச (1)

உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி:27/55

TOP


நால் (19)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி:1/37
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/67
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி:6/176
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி:6/195
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி:17/45
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால்
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி:25/100,101
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி:26/48
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி:26/94
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/116
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி:28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி:28/241
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி:30/36
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி:30/260

TOP


நால்_நால் (1)

நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி:6/177

TOP


நால்_ஏழ் (1)

நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/67

TOP


நாவல் (7)

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி:2/1
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி:9/17
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி:15/20
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி:17/30
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/29
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி:25/12
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி:28/180

TOP


நாவலில் (1)

சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி:17/37

TOP


நாவலொடு (1)

நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி:11/107

TOP


நாவாய் (2)

அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி:11/25
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி:16/17

TOP


நாவால் (1)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி:27/16,17

TOP


நாவான் (1)

நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி:13/13

TOP


நாவிடை (1)

நாவிடை நல்_நூல் நன்கனம் நவிற்றி – மணி:13/24

TOP


நாவியின் (1)

வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/85

TOP


நாவிற்கு (1)

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி:11/71,72

TOP


நாவின் (2)

நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி:12/3,4
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி:29/2

TOP


நாவை (1)

ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி:15/39

TOP


நாவொடு (1)

பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி:21/37

TOP


நாவோய் (1)

வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி:11/68

TOP


நாள் (69)

செம்மலர் முதியோன் செய்த அ நாள்
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி:0/29,30
தீவக சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி:1/35,36
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி:1/39,40
தீவக சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாரா – மணி:2/3,4
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது – மணி:3/47,48
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி:4/81,82
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/46,47
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி:5/119
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள்
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி:7/28,29
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி:7/35
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள்
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/59,60
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள்
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி:9/37,38
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி:9/54,55
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி:10/40
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி:10/78,79
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி:10/83
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி:10/83,84
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி:11/46
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி:11/129
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி:12/36
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி:12/88
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி:12/99
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி:13/14
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி:14/1
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/82
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/92
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி:14/96
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி:15/2
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி:17/41
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி:17/46
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி:17/47
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/48
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி:17/66
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி:17/69,70
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி:18/158
அடியில் படியை அடக்கிய அ நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி:19/52,53
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி:21/11,12
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி:21/102,103
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி:21/162,163
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி:22/39,40
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி:22/72
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/127,128
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி:23/24,25
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி:23/70,71
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி:24/16
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள்
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/43,44
பீலிவளை என்போள் பிறந்த அ நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி:24/57,58
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி:24/62
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி:24/144
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி:24/153
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி:25/47
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி:25/162
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி:25/163
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி:25/173
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி:25/210
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி:25/210
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி:26/12,13
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி:26/18,19
புவி காவலன்-தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி:28/9,10
விடர் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி:28/104,105
துன்பம் நீங்க சொரியும் அ நாள்
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/122,123
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி:28/129
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி:28/147
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி:28/153,154
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி:28/199
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி:29/8
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி:29/19
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி:30/206

TOP


நாள்-தொட்டு (1)

ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி:14/22,23

TOP


நாள்-தொட்டும் (3)

பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி:13/53
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி:24/70
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும்
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி:24/171,172

TOP


நாளால் (1)

பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி:22/78

TOP


நாளிடை (1)

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி:9/31,32

TOP


நாளில் (5)

இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி:7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி:7/106
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி:9/18
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி:9/48
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி:22/74

TOP


நாளினும் (2)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி:1/8
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி:1/67

TOP


நாளும் (1)

பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி:6/182

TOP


நாற்ற (1)

நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி:27/218

TOP


நாற்றம் (2)

மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி:3/3
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி:27/252

TOP


நாற்றம்மே (1)

உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி:27/236,237

TOP


நாற்றமும் (1)

கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி:16/66,67

TOP


நாற்றமொடு (1)

ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/249

TOP


நாற்றனும் (1)

நண்ணிய மூக்கால் நாற்றனும் நாவால் – மணி:27/16

TOP


நாற்று-மின் (1)

முத்து தாமம் முறையொடு நாற்று-மின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி:1/49,50

TOP


நாறு (6)

தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/44
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி:19/22
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி:22/130
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/31
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி:25/32

TOP


நான் (4)

மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி:17/45
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி:23/95
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி:27/278
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி:28/92

TOP


நான்காம் (1)

நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி:30/145

TOP


நான்கால் (1)

நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி – மணி:30/35

TOP


நான்கினும் (1)

இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி:30/193

TOP


நான்கு (6)

என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி:29/195
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி:29/280
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி:30/25
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி:30/188
நான்கு நயம் என தோன்றப்படுவன – மணி:30/217
வினா விடை நான்கு உள – மணி:30/235

TOP


நான்கும் (4)

சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:24/128,129
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி:27/250,251
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி:30/69,70
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினா விடை நான்கு உள – மணி:30/234,235

TOP


நான்மறை (3)

நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி:6/169
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி:13/69
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி:13/99

TOP


நானூறு (1)

நாக நல் நாட்டு நானூறு யோசனை – மணி:9/21

TOP